ஜோக்ஸ்

முல்லா கதைகள் :


முல்லாவின் புகழ் நாளுக்கு நாள் பெருகி வந்த காலகட்டம் அது.

இதன் காரணமாக அவருக்குப் பல சீடர்கள் சேர்ந்தனர். முல்லாவின் புகழ் மக்களிடையே அதிகரித்ததும் மன்னர் செவியிலும் முல்லாவின் புகழ் பற்றிய செய்தி விழுந்தது. உடனே மன்னர் முல்லாவை அழைத்து அவருக்கு உரிய பதவியைக் கொடுத்தார்.

ஒரு நாள் முல்லாவின் நண்பர் ஒருவர், ''முல்லா! தங்களிடம் நீண்ட நாட்களாக ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்,” என்றார்.

''அப்படியா! அது என்ன விஷயம்?” என்று கேட்டார் முல்லா.

ஒன்றுமில்லை முல்லா! உங்களை எல்லாரும் அறிஞர்  என்றும், தத்துவஞானி  என்றும் புகழ்கின்றனர். அரசர் உம்மை மதித்து உங்களுக்கு உயரிய பதவி அளித்துள்ளார். எப்படி இந்த அளவுக்கு தாங்கள் உயர்வு பெற்றீர்கள்?  இதன் ரகசியத்தை என்னிடம் கூறுவீர்களா?” என்று கேட்டார்.
                                                                                                           
                                                                                                மேலும் படிக்க }}}}}

முல்லா ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்; குறித்த நேரத்தில் விருந்துக்கு சென்றார். எளிமையான உடையில் இருந்ததால் வாட்ச்மேன் உள்ளே விடவில்லை. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அனுமதிக்கவில்லை.
 முல்லா திரும்பி சென்றார்; கடைக்குச் சென்று ஒரு அழகான டிப்டாப்பான உடையை வாடகைக்கு வாங்கி அணிந்துகொண்டு மீண்டும் விருந்துக்கு வந்தார்.இப்பொழுது வாட்ச்மேன் வாயெல்லாம் பல்லாக வாங்க வாங்க என்று வரவேற்றான்.....
                                           
                                           மேலும் படிக்க }}}}}

  • கப்பலில் வேலை :

முல்லா நஸ்ருதின் கப்பலில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார் .அவர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார் .அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார் “புயல் வருமானால் என்ன செய்வீர் ?என்று .
அவர் சொன்னார் “நங்கூரத்தை நாட்டுவேன் “என்று “முன்னைவிட பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது அப்போது நீர் என்ன செய்வீர் ?”
“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “என்றார் அவர் .இப்படி அது சென்று கொண்டு இருந்தது .
“…பத்தாவது புயல் !”
நஸ்ருதின் சொன்னார் “நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “
அந்த மனிதர் கேட்டார் .”ஆனால் இத்தனை நங்கூரத்தை நீர் எங்கிருந்து பெறுவீர் ?”என்று
அதற்கு நஸ்ருதின் சொன்னார் .”தாங்கள் எங்கிருந்து புயல்களை பெறுவீர்களோ அங்கிருந்துதான் “

இன்னும் சில முல்லா கதைகள் :


முல்லா கதைகள் வீடியோக்களாக பார்க்கவேண்டுமா? இதோ
இங்கே...

அரபு நாட்டு சிரிப்பு கதைகள்:
மற்றவை: