25 ஜனவரி, 2016

மதீனத் தோட்ட மாளிகையில்..

மதீனத் தோட்ட மாளிகையில் மண்மடியில் மைந்தரைப் போல்
தூய நபி தூங்குகிறார் தாலேலோ
அவர் தோய்ந்து போன மார்க்கம் தனை தோள் கொடுத்து தூக்கிய பின்
ஓய்வெடுத்து தூங்குகிறார் ஆரீரோ ! -
                    ( மதீனத் தோட்ட மாளிகையில்)

செம்பவளக் கருத்தெடுத்து செந்தேனில் குழைத்தெடுத்து
நெஞ்சங்களில் சிந்திச் சென்றார் தாலேலோ - 2
அந்த மகிழ்ச்சியிலே அவர் உறங்க மயக்கத்திலே நாம் உறங்க
மண்ணகமே உறங்குதம்மா தாலேலோ
மண்ணகமே உறங்குதம்மா தாலேலோ
                  ( மதீனத் தோட்ட மாளிகையில்)

ஞானக் கடல் மீதில் அவர்  நாளும் அவர் மூழ்கியதில்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டோம் தாலேலோ -2
அவர் மௌன நிலை கூட ஒரு ஞான நிலை போலிருக்கும்
யார் அவரைத் தூங்க விட்டார் தாலேலோ
யார் அவரைத் தூங்க விட்டார் தாலேலோ
              ( மதீனத் தோட்ட மாளிகையில்)

மன்னரவர் தூங்கிவிட்டால் மண்ணகமே தூங்கிவிடும்
வின்னவரே துயிலெழுப்ப வாரீரோ -2
அவர் பொன் அழகை ரசிப்பதற்கும் மோட்ச நிலை பெறுவதற்கும்
தோழர்களே தோழியரே வாரீரோ
தோழர்களே தோழியரே வாரீரோ
                      ( மதீனத் தோட்ட மாளிகையில்)