29 ஜனவரி, 2016

SADHAK MASLAHI SONGS - சதக் மஸ்லஹி பாடல்கள்மதீனத் தோட்ட மாளிகையில்..
MADHINA THOATTA MAALIGHAIYIL..


வள்ளல் இமாம் பூசிரியின் வாழ்ந்த கதை சொல்லவா?
VALLAL IMAM BUSIRIYIN VAALNTHA KATHAI..


தந்தை ஒருவரைப் பார்த்ததுமில்லை..
THANTHAI ORUVARAI..


புகழ் பாட வந்தோம் நாம் புவி மீதிலே..
PUGAZH PAADA VANTHOM..


அல்லாஹ்வின் தூதே..அருள் தீபமே..
ALLAHVIN THOOTHE..ARUL THEEBAME..


நெஞ்சமே நினைக்கையிலே...
NENJAME NINAIKKAIYILE..

25 ஜனவரி, 2016

மதீனத் தோட்ட மாளிகையில்..

மதீனத் தோட்ட மாளிகையில் மண்மடியில் மைந்தரைப் போல்
தூய நபி தூங்குகிறார் தாலேலோ
அவர் தோய்ந்து போன மார்க்கம் தனை தோள் கொடுத்து தூக்கிய பின்
ஓய்வெடுத்து தூங்குகிறார் ஆரீரோ ! -
                    ( மதீனத் தோட்ட மாளிகையில்)

செம்பவளக் கருத்தெடுத்து செந்தேனில் குழைத்தெடுத்து
நெஞ்சங்களில் சிந்திச் சென்றார் தாலேலோ - 2
அந்த மகிழ்ச்சியிலே அவர் உறங்க மயக்கத்திலே நாம் உறங்க
மண்ணகமே உறங்குதம்மா தாலேலோ
மண்ணகமே உறங்குதம்மா தாலேலோ
                  ( மதீனத் தோட்ட மாளிகையில்)

ஞானக் கடல் மீதில் அவர்  நாளும் அவர் மூழ்கியதில்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டோம் தாலேலோ -2
அவர் மௌன நிலை கூட ஒரு ஞான நிலை போலிருக்கும்
யார் அவரைத் தூங்க விட்டார் தாலேலோ
யார் அவரைத் தூங்க விட்டார் தாலேலோ
              ( மதீனத் தோட்ட மாளிகையில்)

மன்னரவர் தூங்கிவிட்டால் மண்ணகமே தூங்கிவிடும்
வின்னவரே துயிலெழுப்ப வாரீரோ -2
அவர் பொன் அழகை ரசிப்பதற்கும் மோட்ச நிலை பெறுவதற்கும்
தோழர்களே தோழியரே வாரீரோ
தோழர்களே தோழியரே வாரீரோ
                      ( மதீனத் தோட்ட மாளிகையில்)

வள்ளல் இமாம் பூசிரியின் வாழ்ந்த கதை சொல்லவா?
வள்ளல் இமாம் பூசிரியின் வாழ்ந்த கதை சொல்லவா?
நாயகத்தை நேசம் கொண்ட நல்ல மனம் அல்லவா?

22 ஜனவரி, 2016

15 ஜனவரி, 2016

நியாயம் நேர்மை வேண்டும்

மலேசிய மின்னல் பண்பலையில் வெள்ளிதோறும் ஒளிபரப்பான வாழ்வியல் வசந்தம்...

04 ஜனவரி, 2016

குகையிலிருந்து மீண்ட மூவர்!


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் (சென்ற காலத்தில்) இருந்தவர்களில் மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, (திடீரென) மழை பிடித்தது. எனவே, அவர்கள் ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். உடனே, அந்தக் குகை (வாசலை மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை மூடி) அவர்களை அடைத்தது. அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நம்மை (நம்முடைய) வாய்மையான செயல் தான் காப்பாற்ற முடியும். எனவே, நம்மில் ஒவ்வொருவரும், தான் வாய்மையுடன் நடந்ததாக நம்புகிற விஷயத்தைக் கொண்டு (அல்லாஹ்விடம்) பிரார்த்திக்கட்டும்" என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

நன்றி மறவாதீர்!
தொழுநோயாளி, குருடர், வழுக்கைத் தலையர் ஆகியோர் தொடர்பான நிகழ்ச்சி.
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். 

அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான்.