31 ஆகஸ்ட், 2015

புகழ் பாட வந்தோம் நாம் புவி வாழ்விலே!புகழ் பாட வந்தோம் நாம் புவி வாழ்விலே-எம்
பெருமானார் இறைத் தூதர் நபி மீதிலே 
புகழ் அனைத்தும் இறைவனுக்கே எனச் சொல்லியே \
அந்த இறைத்தூதர் புகழுக்கு ஈடு இணையில்லையே

தென்றலை நான் புகழ்கின்றேன் சுகம் தந்ததா- எழில் 
மென் மலரைப் புகழ்கின்றேன் மணம் வந்ததா?
எம் அருமை நபி தந்த சுகம் கொஞ்சமா?
நான் எதைச் சொல்லிப் புகழ்ந்திடுவேன் இறை யாஅல்லாஹ் 

வானுலகம் வலம் வந்த விதம் கூறவா?- உயர் 
மாமக்கம் வென்றடைந்த நயம் கூறவா?
தீன் நபி வாழ் மாமதினா எழில் கூறவா?-2
நான் எதைச் சொல்லிப் புகழ்ந்திடுவேன் இறை யாஅல்லாஹ் 

நேர்வழியை எமக்களித்த அருள் கூறவா?  வலி- 
-மார் வழியைத் துயரவைத்த பொருள் கூறவா?
ஓரிறையை உணர வைத்த முறை கூறவா?
நான் எதைக் கூறி இரசூலைப் புகழ்வேன் அல்லாஹ்!

எமக்காக இடர்பட்ட துயர் கூறவா?
அவர் தமக்காக வாழவில்லை மெய் சொல்லவா?
இறைக்காக எழுந்து வந்த முறை சொல்லவா?
நான் எதைச் சொல்லிப் புகழ்ந்திடுவேன் இறை யாஅல்லாஹ்! 

கார்மேகம் குடை பிடித்த கதை சொல்லவா? -அவர் 
போர்முனையில் துயர் கண்ட நிலை சொல்லவா
யார் நமக்கு மஹ்ஷரிலே துணை... சொல்லவா?
நான் எதைச் சொல்லிப் புகழ் பாட வந்தேன் அல்லாஹ்!


இக வாழ்வை எளிதாக்கித் தரும் மாநபி- பெரும்
சுக வாழ்வை மறுவாழ்வில் தரும் மாநபி
அகம் புறமும் அலங்கரிக்கும் ஒளி மாநபி 
நான் எதைச் சொல்லிப் புகழ்ப் பாடி முடிப்பேன் அல்லாஹ்!

அகிலத்தை ரஹ்மத்தால் சூழ்ந்தார் நபி - தம்
உம்மத்தை ஒருபோதும் மறவா நபி 
புகழ் பாடி முடியாத புகழ் மாநபி-அந்த
நபி மீது சலவாத்தைப் பொழிவாய் அல்லாஹ்! 

28 ஆகஸ்ட், 2015

பாதுகாப்புக் கவசம்.. வேணும் கைவசம்!


  • பாவையரின் பாதுகாப்புக் கவசம் பர்தா!
  • உண்மையான உத்தமிகளின் உடலில் பர்தாவும் உள்ளத்தில் உறுதியான ஈமானும் இருந்தால் அவர்களைக் காக்க கருவிகள் தேவையில்லை; ‘லேடீஸ் சேஃப்டி ஷாக்கர்’ அவசியமில்லை. 
  • பர்தாவே அவர்களுக்கு பாதுகாப்புக் கவசம்தான்.
  • சமீபத்தில் லண்டன் மாநகரில் நடந்த நிகழ்வு ..
  • இன்னும் பல அரிய தகவல்கள்.. 
  • மலேசிய மின்னல் பண்பலையில் வெள்ளி தோறும் வலம் வரும் வாழ்வியல் வசந்தம்.. 
  • கேட்க... பதிவிறக்கம் செய்ய...

27 ஆகஸ்ட், 2015

மறைந்தும் மறையாமல்...

அருமையான வெண்கலக்குரலில் வேந்தர் நபி பற்றி பாடல்!
 கேட்க... பதிவிறக்கம் செய்ய...


மறைந்தும் மறையாமல் மறைந்து மதீனாவில் வாழும் மஹ்மூதரே
என்றும் மறையா மறை தந்து மறையா புகழ் கண்டு மறைந்த மா மன்னரே

மனிதகுலம் வாழ மனிதராய் பிறந்த மனிதரில் புனிதரே
மன்னில் மடைமை இருள் அகற்றி மார்க்கஒளி ஏற்றி மகிழ்ந்த நபிநாதரே
                                                         (மறைந்தும் மறையாமல்)

வானில் ஒளி வீசும் மதியின் அழகு உந்தன்
அழகிற்கு இனையாகுமோ -நபி
அழகிற்கு இனையாகுமோ

வார்த்தை முழுதும் நான் வார்த்து தொகுத்தாலும்
வாழ்த்து நிறைவாகுமோ- நபி
வாழ்த்து நிறைவாகுமோ

நபிகள் எல்லோரும் நபியே உன் வரவை
நவின்று சென்றார்களே-அன்று
நாயன் ரஹ்மானை நபியே உன் பின்னே
நின்று தொழுதார்களே.
                                               (மறைந்தும் மறையாமல்)

கனவில் எனை கண்டோர் எனையே கண்டார்கள்
என்று உரைத்தீர்களே -நபி
அன்று உரைத்தீர்களே

கருனை முகமதுவை கனவில் நான் கான
இன்று வருவீர்களே நபி
இன்று வருவீர்களே

உம்மி நபி உங்கள் உம்மத்தான என்னை அன்று சுவனத்திலே
உங்கள் அருகில் அமரவைத்து உவகை கண்டிடவே உதவி செய்வீர்களே
                                                     (மறைந்தும் மறையாமல்)

உலாவும் தென்றல் காற்றலையே...உலாவும் தென்றல் காற்றலையே..
சலாத்தை ஏந்திச் செல்வாய் நீ
நபியின் பாத மலரடிக்கே..
தவழ்ந்தே போகும் மேகங்களே..
என் தூதை கொண்டு செல்வீரே..
நபியின் பாத மலரடிக்கே..

நபியைக் காண என் இதயம் துடிக்கும் ஓசை கேட்பீரே..
விடும் என் மூச்சுக் காற்றினிலே நபியின் நாமம் கேட்பீரே..
மதீனா காண ஏங்கி நிற்கும் என் ஆவலை ஏந்திச் செல்வீரே-2
நபியின் பாத மலரடிக்கே..

ரசூலுல்லாஹ் என் கண்மணியாம்!  ஹபீபுல்லாஹ் என் அக ஒளியாம்!!
அண்ணல் மஹ்மூதைக் காணாமல் என் கண்கள் இருந்தென்ன லாபம்?
நபியுல்லாஹ்வின் சமூகத்திலே என் ஆவலை ஏந்திச் செல்வீரே!-2
நபியின் பாத மலரடிக்கே..

நான் உலகில் வாழும் காலமெல்லாம் நபியின் காதல் வாழ்த்திடுவேன்
நான் செய்த பாக்கியம்தானே நபியின் உம்மத்தாய்ப் பிறந்தேன்
ரசூலுல்லாஹ்வின் சபைதனிலே என் ஆவலை ஏந்திச் செல்வீரே!
நபியின் பாத மலரடிக்கே..