28 ஜூலை, 2014

23 ஜூலை, 2014

நடுவர் தீர்ப்பு (மனிதநேயம்)

மாஷா அல்லாஹ். மனிதநேயத்தைப் பத்தி விலாவாரியா விளாசித் தள்ளிட்டாங்க இரண்டுபேரும். இப்ப தீர்ப்பு சொல்லணும். 
பொதுவாப் பார்த்தீங்கன்னா இன்னைக்கு மனிதநேயம் முற்றிலும் மாய்ந்துவிட்டதா என்றால் இல்லை. சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

மனிதநேயம் வீழ்கிறதே- இரண்டாம் சுற்று

                  - உஸ்தாத் முஹம்மது ஷாஃபிஈ வாஹிதி
ஆகஸ்ட் 19 ம் தேதி மனித நேயம் தினம் அனுசரிக்கப்படுதுன்னு சொன்னாங்க. மனித நேயம் குறைஞ்சி போச்சி அத கொஞ்சமாக வளர்த்துக்கோங்க அப்டின்னு சொல்றதுக்காகத்தான் அந்த தினமே அனுசரிக்கப்படுது என்பதை உஸ்தாது அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து சுனாமியைப் பத்தி சொன்னாங்க.

மனிதநேயம் வாழ்கிறது - இரண்டாம் சுற்று

                   - உஸ்தாத் காதிர் மீரான் மஸ்லஹி
இங்கு எனக்கு முன்னால் பேசிய உஸ்தாத் ஷாபி அவர்கள் மனிதநேயம் வீழ்ந்துவிட்டது என்றும் அநியாங்கள் மலிந்து விட்டது என்றும் மிகுந்த வேதனையோடு கூறினார். இந்த வேதனை படும் பண்பு மனிதநேயமுள்ளவருக்கு தான் இருக்குமே தவிர இல்லாதவருக்கு இருக்காது.

நடுவர் தொகுப்புரை-2

சும்மா வெளுத்து வாங்கிட்டார் நம்ம உஸ்தாத் ஷாஃபி. இன்று மனிதநேயமில்லாத மருத்துவர்கள் பெருகிவிட்டனர் என்றார். சமீபத்தில் படித்த ஒரு விஷயம். நமக்கு ஏதாவது வியாதின்னு மருத்துவர்ட்ட போனா அவர் மருந்து எழுதித் தருவார். அதை வாங்கிக் கொண்டு அவருக்கு காசு கொடுக்கவேண்டும். அப்பத்தான் அவர் பொழைக்க முடியும்; அந்த சீட்டை எடுத்துகிட்டு மெடிக்கல் போனா அவங்க மருந்து தருவாங்க. அதை வாங்கிக்கொண்டு அவங்களுக்கு காசு கொடுக்கணும் அப்பத்தான் அவங்க பொழைக்க முடியும்; வாங்குன அந்த மருந்தை... குப்பையில வீசணும். அப்பத்தான் நாம பொழைக்க முடியும். இது காமெடிக்காக சொல்லப்பட்டாலும் பல நேரங்களில் இதுதான் நிதர்சனம்.
இரண்டாம் சுற்று

இப்ப மறுபடியும் “மனித நேயம் வாழ்கிறதே” என்று ஆணித்தரமாய் ஆதாரங்களை அடுக்க வருகிறார் உஸ்தாத் காதிர் மீரான் மஸ்லஹி.

மனித நேயம் வீழ்கிறதே- 1

                          - உஸ்தாத் முஹம்மது ஷாஃபிஈ வாஹிதி
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகிறேன்.அன்பான மின்னல் fm நேயர்களே ! ஆரம்பமாக ஈகைத்திருநாள் வாழ்த்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆனந்தம் அடைகிறேன். 
இன்றைய நவீன காலத்தில் மனித நேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா? என்ற அருமையான தலைப்பில் இங்கே   பட்டிமன்றம் அறங்கேறிக் கொண்டிருக்கிறது.
இன்றைய கால கட்டத்தில் மனித நேயம் அதிகம் வீழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்ற கருத்தை மையப்படுத்தி ஒரு சில தகவல்களை உங்களது சிந்தனையில் பதிய வைக்க விரும்புகிறேன்.

நடுவர் தொகுப்புரை-1

அடேங்கப்பா..அஞ்சு நிமிஷத்துல சும்மா அட்டகாசமா அடுக்கிட்டுப் போயிருக்காரு.
மலேசியா விமானம் “mh370” மாயமாய் மறைந்தபோது மதவேறுபாடின்றி எல்லா மக்களும் பிரார்த்தித்தோமே.. இது மனிதநேயம் இல்லையா?.. கேட்டாரு. உண்மைதான். ஏன்னா இன்னைக்கு சிலபேர் எப்படி இருக்காங்க தெரியுமா?
ஒரு ஊருல ஒரு பண்ணையார் ஹெலிகாப்டர் வாங்கினார். அந்த ஊரு மக்கள்லாம் அந்த ஹெலிகாப்டரில் ஏறிப் பயணிக்க ஆசைப்பட்டாங்க.

மனித நேயம் வாழ்கிறது-1

                           -உஸ்தாத் காதிர் மீரான் மஸ்லஹி 
ஆரம்பமாக மின்னல் F.M நேயர்களாகிய உங்கள் அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மிகவும் மகிழ்சியடைகிறேன்.
இந்த உலகத்தில் மனித நேயம் வாழ்கிறதா.... அல்லது வீழ்கிறதா என்றால் வாழ்கிறது என்பது தான் உண்மையான தெளிந்த சிந்தனையுடைய ஒரு பதிலாக இருக்கிறது.

மனித நேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா?- நடுவர் முன்னுரை

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அல்ஹம்து லில்லாஹ். நஹ்மதுஹு வநுசல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃது.
இந்நிகழ்ச்சியை அவதானித்துக் கொண்டிருக்கும் அன்பு நேயர்களே!
யாருக்கும் இன்னல் தராத மின்னல் FM நேயர்களே! மனித நேயர்களே!!
ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
இன்று ஒரு அருமையான பட்டிமன்றம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மனித நேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா?
மனிதநேயம் என்றால் என்ன?

17 ஜூலை, 2014

நோன்பின் மாண்பு-1


கடும் வெயிலிலும் நோன்பு 
عن ابن عباس رضي الله عنهما: أن رسول الله - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بعث أبا موسى على سرية في البحر، فبينما هم كذلك، قد رفعوا الشراع (3) في ليلة مظلمة، إذا هاتف فوقهم يهتف: يا أهل السفينة! قفوا أخبركم بقضاء قضاه الله على نفسه، فقال أبو موسى: أخبرنا إن كنت مخبراً، قال: إن الله تبارك وتعالى قضى على نفسه أنه من أعطش نفسه له في يوم صائف، سقاه الله يوم العطش (رواه البزار بإسناد حسن إن شاء الله، وحسنه الألباني في "صحيح الترغيب" (1/412)
அபூமூஸா ரலி அவர்கள் தலைமையில் ஒரு படையை அண்ணல் நபிகளார் ஸல் அனுப்பி வைத்தார்கள். கடலைக் கடந்து பயணம். கப்பல் புறப்படத் தயாரான போது மேலிருந்து ஒரு அசரீரி சப்தம்.
கப்பல் பயணிகளே.. கொஞ்சம் நில்லுங்கள்! அல்லாஹ் தன் மீது விதித்துக் கொண்ட ஒரு சட்டவிதியைக் கூறுகிறேன் கேளுங்கள் :
கடும் வெயில் காலத்திலும் அல்லாஹ்விற்காக நோன்பு வைத்து தாகத்தைத் தாங்கிக் கொண்டால் அந்த நோன்பாளிக்கு மறுமையில் எல்லோரும் தாகத்துடன் தண்ணீருக்காக அலைகிறபோது அல்லாஹ் இவருக்கு விஷேசமாக தண்ணீர் அருந்தச் செய்வான்.

قال ابن رجب: "عن بعض السلف قال: بلغنا أنه يوضع للصوّام مائدة يأكلون عليها والناس في الحساب فيقولون: يا رب نحن نحاسب وهم يأكلون، فيقال: إنهم طالما صاموا وأفطرتم وقاموا ونمتم".

மறுமையில் நோன்பாளிகளுக்கு விஷேசமான உணவுத் தட்டு இருக்கும் அதில் அவர்கள் சாப்ப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். வேறு சிலருக்கோ இன்னும் விசாரணையே முடிந்திருக்காது . அதனால் அவர்கள் முறையிடுவார்கள். இறைவா.. எங்களுக்கோ இன்னும் விசாரணையே முடிந்தபாடில்லை. ஆனால் அவர்களோ (எந்தக் கவலையுமின்றி ) ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களே.. 
அவர்களுக்கு சொல்லப்படும்: ஆமாம்.. அவர்கள் உலகில் நோன்பு வைத்திருந்தார்கள்; நீங்களோ உண்டு கொழுத்தீர்கள். அவர்கள் இரவு வணங்கினார்கள்; நீங்களோ உறங்கினீர்கள் .