22 பிப்ரவரி, 2014

கண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே

 قدم محمد عليه الصلاة والسلامகண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே
 திங்கள் இரசூலே உங்கள் அன்பை மனம் நாடுதே
கண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே

மக்க நகர் மண்ணாய்ப் பிறந்தேனா நானும் 
மஹ்மூதர் பாதம் தொடர்ந்தேனா நானும்-2
 என்றுலகில் காண்பேன் எங்கள் நபி நாதர்
 இனிதான தோற்றம் கண்டாலே ஏற்றம்-2

                                                                 (கண்கள் இரண்டும்)

மதினாவிலே ஓர் மரமாகினேனா
 மாநபிக்குத் தென்றல் காற்றும் தந்தேனா-2
அவர் கையில் ஏந்தும் வாளாகினேனா
 அன்னல் நபி அன்புக்கு ஆளாகினேனா-2

                                                                (கண்கள் இரண்டும்)

கஃபாவிலே ஓர் கல்லாகினேனா
 காப்பவனின் வீட்டில் உள்ளாகினேனா-2
 கடும்பசி தாங்கி கருணை நபி வயிற்றில் 
கட்டிய கல்லில் இடமாகினேனா-2

                                                          (கண்கள் இரண்டும்)

ஒட்டகமாய் உலகில் பிறந்தேனா நானும்
 உத்தம நபியை சுமந்தேனா நானும்
 பேரித்தங்கனியாய் கனிந்தேனா நானும்
பெருமானின் உமிழ் நீரில் கலந்தேனும் நானும்

                                                     (கண்கள் இரண்டும்)20 பிப்ரவரி, 2014

பழைய பதிவுகளைப் பார்வையிடுவது எப்படி?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரிய சகோதரர்கள் பலரும் அடிக்கடி கருத்துரையிலும் மின்னஞ்சலிலும் முன்வைக்கிற முக்கிய கேள்வி:
இந்த வலைப்பதிவில் பழைய பதிவுகளைப் பார்வையிடுவது எப்படி?
கடந்த கால ஜும்ஆ உரைகளைத்  தேடுவது எவ்வாறு?
 இதற்கு சுலபமான வழி இதுதான்:

14 பிப்ரவரி, 2014

அர்த்தமுள்ள காதலும் ஆகாத அனாச்சாரங்களும்(காதலர் தினக் கண்டன உரை)இந்த உரை ..

  • காதலர் தினத்தின் கண்றாவிகளைக்  கண்டிக்கிறது.
  • அர்த்தமுள்ள காதல் எது ? என அடையாளம் காட்டுகிறது.
  • காமத்துடன் நின்றுவிடாமல் , காமம் காதலாகி, காதல் பக்தியாகிற பக்குவத்தைப்  பறை சாற்றுகிறது.வீடியோ :

09 பிப்ரவரி, 2014

யோகா..ஆகா! (யோகா குறித்த ஓர் இஸ்லாமியப் பார்வை)

யோகா.. என்றதும் ஆகா ஓகோ என்று அங்கலாய்ப்பவர்கள் அநேகர்.
ஆனால் அதன் ஆணிவேர் எது? அதன் மூலம் விளையும் விபரீதங்கள் என்ன? என்று அலசும் அட்டகாசமான உரை...

ஆடியோ :


வீடியோ :
சூபிகள் எனும் ஞானிகள் இறைதியானத்துடன் கூடிய அருமையான மூச்சுப் பயிற்சி முறையை தொன்று தொட்டு வழங்கி வந்திருக்கும்போது நாம் ஏன் ஷிர்க் கலந்த யோகா முறையைப் பின்பற்றவேண்டும்?

   

வலிமார்கள் வாழ்வினிலே-3

இந்தோனேசியா வில் இஸ்லாம் பரவிய வரலாறு 
உமர் (ரலி) அவர்களின் துண்டுச் சீட்டால் வறண்டு கிடந்த நைல் நதி ஒரே இரவில் 16 முளம் ஆழத்திற்கு பெருக்கெடுத்து ஓடிய வரலாறு இன்னும் பல அற்புதங்கள் ....


02 பிப்ரவரி, 2014

வலிமார்கள் வாழ்வினிலே..1-2

குர்ஆன் கூறும் வலிமார்கள், அல்குர்ஆனில் அவ்லியாக்களின் அற்புதங்கள்,
அன்னை மர்யம் அலை அவர்களுக்கு கிடைத்த அரிய கனிகள், அன்னை சாரா (அலை)அவர்களுக்கு தள்ளாத வயதிலும் கிடைத்த குழந்தைச் செல்வம், இன்னாரின் தோட்டத்தில் மழை பொழியட்டும் என்று ஆகாயத்தில் அறிவிக்கப்பட்ட அற்புதமான மனிதர், இன்னும் பல ..

அலா இப்னு ஹழ்ரமீ(ரலி),
உசைத் இப்னு ஹுளைர் (ரலி),
உப்பாத் இப்னு பிஷ்ர்( ரலி) போன்ற
அருமைத் தோழர்களுக்கு நடந்த அற்புதமான நிகழ்வுகள்