30 ஜனவரி, 2014

மனிதனை மதிக்கும் மகத்தான மார்க்கம்

  • இஸ்லாத்தில் மனித மரியாதைப் போற்றப்படுவதைப் போல மற்ற மதங்களில், இசங்களில் இல்லை என்பதுதான் நிதர்சனம்.
  • பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் பரிசுத்தமானவனாக இம்மார்க்கத்தில் மதிக்கப்படுகிறான்.
  • உதாரணமாக, ஒரு முஃமின் இறந்துவிட்டால் நாம் அவரை நல்ல முறையில் குளிப்பாட்டி கஃபனிட்டு நறுமணம் தெளித்து அலுங்காமல் குலுங்காமல் பத்திரமாக தோளில் தாங்கித் தூக்கி வருகிறோம். புனித பள்ளிவாசலுக்கு- இறைவனை வணங்கும் ஆலயத்திற்கு- கொண்டு வந்து வைத்து தொழுது அவருக்காகப் பிரார்த்தித்து அழகிய முறையில் அடக்கம் செய்கிறோம்.
  • பல மதங்களில் இந்த மரியாதை  இல்லை. அங்கே யாரவது இறந்துவிட்டால் அவரை ஆலயத்திற்கு கொண்டு வரமாட்டார்கள். அப்படிக் கொண்டு வந்தால் ஆலயம் தீட்டுப் பட்டுவிடும் என்றும் ,
  • இறந்த பிரேதம் என்பது ஆலயத்திற்கு கொண்டு வரத் தகுதியற்றது என்றும்,
  • அவ்வாறு பிரேதம் ஆலயத்திற்குள் கொண்டு வரப்பட்டால் ஆலயத்தின் விக்கிரகங்கள் தனது  சக்தியை  இழந்துவிடும் என்றும் அழுத்தமாக நம்புகிறார்கள்.
இது கற்பனை அல்ல.. நம் தமிழகத்தின் பிரபல்யமான திருச்சி நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் நடைபெற்ற ஒரு விறுவிறுப்பான  நிகழ்வு இதற்கு சான்று. அது என்ன .. இந்த ஆடியோவைக் கேளுங்களேன்....