23 ஜனவரி, 2014

பெற்றோரைப் பேணுவோம் -2


அல்லாஹ் தஆலா  அவனது வணக்கத்திற்கு அடுத்த படியாக அடிக்கடி கூறுவது பெற்றோருக்குப் பணிவிடை செய்வதைப் பற்றித்தான்.1

நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களும் இறை வணக்கத்திற்கு அடுத்தபடியாக வலியுறுத்திக் கூறுவது பெற்றோர் நலம் பேணுவதைத் தான்:

அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ ல்லம் அவர்களிடம் வினவினேன்:
நாயகமே! அமல்களில் சிறந்தது எது? என்று.
 "உரிய நேரத்தில் தொழுவது" என்றார்கள். அடுத்து எது" என்று கேட்டேன். "பெற்றோருக்குப் பணிவிடை செய்தல் " 2

ஒரு மனிதர் கேட்டார்: அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகம் யாரிடத்தில் நட்புறவு கொள்வது?"
"உன் தாய்"
"பிறகு யாரிடத்தில்?"
"உன் தாய்"
"பிறகு யாரிடத்தில்?"
"உன் தாய்"
"பிறகு யாரிடத்தில்?"
"உன் தந்தை! என்றார்கள். 3

முதல் மூன்று பரிசுகளும் தாய்க்குத்தான்! நான்காவது பரிசுதான் தந்தைக்கு.

காரணம் ஒரு குழந்தையின் மீது தாய்க்குள்ள  பாசம் அளப்பரியது. ஈடு இணை இல்லாதது

ஒருமுறை இரண்டு பெண்கள் ஒரு குழந்தையோடு நபி தாவூது அலைஹிஸ் ஸலாம்  அவர்களிடம் வந்தனர்
வழக்கை எடுத்து வைத்தனர் இருவரில் ஒருத்தியின் குழந்தையை ஓநாய் பிடித்து சென்றுவிட்டது இருக்கின்ற ஒரு குழந்தைக்கு இருவருமே உரிமை கொண்டாடுகின்றனர். தாவூது அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மூத்தவளுக்குத்தான் சொந்தம் என்று தீர்ப்புக் கூறிவிட்டனர். அவர்கள் திரும்பி வரும்போது சுலைமான் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் என்ன வழக்கு என்று கேட்டனர் அந்தப் பெண்கள் வழக்கைக் கூறினர் இந்தக் குழந்தை யாருக்கு சொந்தம் என்பதற்கு யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை. எனவே ஒரு கத்தியை எடுத்து இந்த குழந்தையை இரண்டு துண்டாக அறுத்து உங்கள் இருவருக்கும் பங்கிட்டுத் தரப் போகிறேன். என்றார்கள் உடனே இளையவள் பதறினாள். வேண்டாம் என் குழந்தையை அறுக்காதீர்கள். பரவாயில்லை இந்தக் குழந்தை என் அக்காவிடமே இருக்கட்டும் உடனே சுலைமான் நபி தீர்ப்புக் கூறினார்கள்: உறுதியாக இந்தக் குழந்தை இளையவளுடையதுதான். பெற்ற பாசம் துடிக்கிறது. என்றார்கள்.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்:புஹாரி, முஸ்லிம்) 4
தாய், தந்தை இருவருமே போற்றுதலுக்குரியவர்கள்.
பனூ சாயிதா குடும்பத்து மனிதர் ஒருவர் நபியிடத்தில் வந்து வினவினார் :
நாயகமே என் தாய் தந்தை இருவருமே இறந்து விட்டனர். அவர்களது மரணத்திற்குப் பின்னரும் அவர்களுக்கு நான் நான் ஏதாவது நன்மை செய்யமுடியுமா? (கவனிக்க: இக்காலத்தில் பெற்றோர் உயிரோடு இருக்கும்போதே அவர்களை  அரவணைப்பதில்லை  பலர்.)
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் ஆம்! நான்கு விசயங்களின் மூலம் அது முடியும் என்றார்கள்

  • அவர்களுக்காக தொழுது துஆ செய்வது; பாவமன்னிப்புத் தேடுவது.
  • அவர்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்களின் மரணத்திற்குப் பின் நிறைவேற்றுவது. 
  • அவர்களின் தோழர்களை கண்ணியப் படுத்துவது.
  • அவர்கள் சொந்தங்களைச்  சேர்ந்து வாழ்வது. 5
அதனால்தான் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்  தந்தையின் தோழமைக்கு கூட தக்க மரியாதை தந்தார்கள்.
 அவர்கள் வரலாற்றில் ஒரு அருமையான தகவல்.

மக்காவின் வழியில் ஒரு கிராமவாசியை சந்திக்க நேர்ந்தது. உடனே அவர்கள் அவருக்கு சலாம் கூறி அவரை தன வாகனத்தில் அமரவைத்து தன தலையில் இருந்த தலைப்பாகையைக் கழற்றி அவரது தலையில் வைத்து அழகு பார்த்தார்கள் 
அவர்களிடம் பிறகு கேட்கப்பட்டது: அவரோ ஒரு கிராமவாசி. ஒரு திர்ஹம் இரு திர்ஹம் கொடுத்தாலே திருப்தி அடைவார். அப்படியுள்ள அவருக்குப் போய் இவ்வளவு மரியாதை தேவைதானா? 
அதற்கு இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள்: அவருடைய தந்தை என் தந்தையின் உற்ற தோழராக இருந்தார். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் நவில நான் கேட்டிருக்கிறேன்: நன்மையில் சிறந்த நன்மை ஒருவர் தன்  தந்தையின் தோழருடைய குடும்பத்தினரிடம் நட்புறவுடன் சேர்ந்து வாழ்வதுதான். ஆகவே அவருக்கு தக்க மரியாதை தந்தேன்" என்றார்கள். 6நம் முன்னோர்களான நல்லவர்கள் பெற்றோரை எந்தளவு பேணுதலாகப் போற்றினர் என்பதை எமது பழைய பதிவில் வாசிக்கலாமே!
----------------------------------------------------


அடிக் குறிப்புகள்:
1 وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاَهُمَا فَلاَ تَقُل لَّهُمَآ أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلاً كَرِيمًا>!

سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم : أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ ؟ قَالَ : الصَّلاةُ لِوَقْتِهَا ، قُلْتُ ، ثُمَّ أَيٌّ ؟ قَالَ : بِرُّ الْوَالِدَيْنِ ، قُلْتُ : ثُمَّ أَيٌّ ؟ قَالَ : الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ ،

3 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَجُلٌ : يَا رَسُولَ اللَّهِ ، مَنْ أَحَقُّ مِنِّي بِحُسْنِ الصُّحْبَةِ ؟ قَالَ : أُمُّكَ ، قَالَ : ثُمَّ مَنْ ؟ قَالَ : ثُمَّ أُمُّكَ ، قَالَ : ثُمَّ مَنْ ؟ قَالَ : ثُمَّ أَبُوكَ وَرَوَاهُ وُهَيْبُ بْنُ خَالِدٍ ، عَنِ ابْنِ شُبْرُمَةَ ، وَقَالَ فِي الْحَدِيثِ : يَا نَبِيَّ اللَّهِ ، مَنْ أَبَرُّ ؟ قَالَ : أُمَّكَ قَالَ : ثُمَّ مَنْ ؟ قَالَ : أُمَّكَ ، قَالَ : ثُمَّ مَنْ ؟ قَالَ : أُمَّكَ ، قَالَ : ثُمَّ مَنْ ؟ قَالَ : أَبَاكَ

4 عن أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلّم أنه قال خرجت امرأتان ومعهما صبيان فعدا الذئب على أحدهما فأخذتا يختصمان في الصبي الباقي فاختصما إلى داود عليه الصلاة والسلام فقضى به للكبرى منهما فمرتا على سليمان عليه السلام فقال ما أمركما فقصتا عليه القصة فقال ائتوني بالسكين اشق الغلام بينكما فقالت الصغرى اشتقه قال نعم قالت لا تفعل حظي منه لها فقال هو ابنك فقضى به لها أخرجاه في الصحيحين

5 عَنْ أَبِي أَسِيدٍ السَّاعِدِيِّ ، قَالَ : جَاءَ رَجُلٌ مِنْ بَنِي سَاعِدَةَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ، قَالَ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّ أَبَوَيَّ قَدْ هَلَكَا ، فَهَلْ بَقِيَ مِنْ بِرِّهِمَا شَيْءٌ أَصِلُهُمَا بِهِ بَعْدَ مَوْتِهِمَا ؟ قَالَ : نَعَمْ ، بِأَرْبَعَةِ أَشْيَاءَ : الصَّلاةُ عَلَيْهِمَا ، وَالاسْتِغْفَارُ لَهُمَا ، وَإِنْفَاذُ عَهْدِهِمَا مِنْ بَعْدِ مَوْتِهِمَا ، وَإِكْرَامُ صَدِيقِهِمَا ، وَصِلَةُ رَحِمِهِمَا الَّتِي لا رَحِمَ لَكَ إِلاَّ مِنْ قِبَلِهِمَا قَالَ : مَا أَكْثَرَ هَذَا وَأَطْيَبَهُ يَا رَسُولَ اللَّهِ ، قَالَ : فَاعْمَلْ بِهِ ، فَإِنَّهُ يَصِلُ إِلَيْهِمَا

6 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، أَنَّ رَجُلا مِنَ الأَعْرَابِ لَقِيَهُ بِطَرِيقِ مَكَّةَ فَسَلَّمَ عَلَيْهِ عَبْدُ اللَّهِ ، وَحَمَلَهُ عَلَى حِمَارٍ كَانَ يَرْكَبُهُ ، وَأَعْطَاهُ عِمَامَةً كَانَتْ عَلَى رَأْسِهِ ، فَقَالَ ابْنُ دِينَارٍ : فَقُلْنَا لَهُ : أَصْلَحَكَ اللَّهُ ، إِنَّهُمُ الأَعْرَابُ يَرْضَوْنَ بِالْيَسِيرِ ، فَقَالَ عَبْدُ اللَّهِ : إِنَّ أَبَا هَذَا كَانَ وُدًّا لِعُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ، يَقُولُ : إِنَّ أَبَرَّ الْبِرِّ صِلَةُ الْوَلَدِ أَهْلَ وُدِّ أَبِيهِ ،
 وَحُكِيَ أَنَّ الأَعْرَابِيَّ كَانَ صَدِيقًا لِعُمَرَ بْنِ الْخَطَّابِ ، ثُمَّ قَالَ : قَالَ ابْنُ عُمَرَ : إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ : احْفَظْ وُدَّ أَبِيكَ ، وَلا تَقْطَعْهُ فَيُطْفِئُ اللَّهُ نُورَكَ