31 ஜனவரி, 2014

30 ஜனவரி, 2014

மனிதனை மதிக்கும் மகத்தான மார்க்கம்

  • இஸ்லாத்தில் மனித மரியாதைப் போற்றப்படுவதைப் போல மற்ற மதங்களில், இசங்களில் இல்லை என்பதுதான் நிதர்சனம்.
  • பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் பரிசுத்தமானவனாக இம்மார்க்கத்தில் மதிக்கப்படுகிறான்.
  • உதாரணமாக, ஒரு முஃமின் இறந்துவிட்டால் நாம் அவரை நல்ல முறையில் குளிப்பாட்டி கஃபனிட்டு நறுமணம் தெளித்து அலுங்காமல் குலுங்காமல் பத்திரமாக தோளில் தாங்கித் தூக்கி வருகிறோம். புனித பள்ளிவாசலுக்கு- இறைவனை வணங்கும் ஆலயத்திற்கு- கொண்டு வந்து வைத்து தொழுது அவருக்காகப் பிரார்த்தித்து அழகிய முறையில் அடக்கம் செய்கிறோம்.
  • பல மதங்களில் இந்த மரியாதை  இல்லை. அங்கே யாரவது இறந்துவிட்டால் அவரை ஆலயத்திற்கு கொண்டு வரமாட்டார்கள். அப்படிக் கொண்டு வந்தால் ஆலயம் தீட்டுப் பட்டுவிடும் என்றும் ,
  • இறந்த பிரேதம் என்பது ஆலயத்திற்கு கொண்டு வரத் தகுதியற்றது என்றும்,
  • அவ்வாறு பிரேதம் ஆலயத்திற்குள் கொண்டு வரப்பட்டால் ஆலயத்தின் விக்கிரகங்கள் தனது  சக்தியை  இழந்துவிடும் என்றும் அழுத்தமாக நம்புகிறார்கள்.
இது கற்பனை அல்ல.. நம் தமிழகத்தின் பிரபல்யமான திருச்சி நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் நடைபெற்ற ஒரு விறுவிறுப்பான  நிகழ்வு இதற்கு சான்று. அது என்ன .. இந்த ஆடியோவைக் கேளுங்களேன்....

உத்தம நபி (ஸல்) உதயம்


  • முன் வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட்ட முத்தான நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்.
  • அவர்களின் வருகை குறித்து முன்னறிவிப்பு செய்யாத எந்த நபியும் இல்லை. எந்த வேதமும் இல்லை.
  • அவர்களை அவர்களின் அருமைத் தோழர்கள் வர்ணித்த விதத்தை ஹதீஸ்களில் படித்தால் மெய்சிலிர்த்துப் போகிறோம்.

23 ஜனவரி, 2014

பெற்றோரைப் பேணுவோம் -2


அல்லாஹ் தஆலா  அவனது வணக்கத்திற்கு அடுத்த படியாக அடிக்கடி கூறுவது பெற்றோருக்குப் பணிவிடை செய்வதைப் பற்றித்தான்.1

நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களும் இறை வணக்கத்திற்கு அடுத்தபடியாக வலியுறுத்திக் கூறுவது பெற்றோர் நலம் பேணுவதைத் தான்:

அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ ல்லம் அவர்களிடம் வினவினேன்:

19 ஜனவரி, 2014

வறுமை வந்தால் வாடாதே! வசதி வந்தால் ஆடாதே!!

قال أبو حازم: من عرف الدنيا لم يفرح فيها برخاء ولم يحزن على بلوى.

இந்த துன்யாவின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டவர் செழுமையின் போது (அதிகம்) சிரிக்கவும் மாட்டார்; வறுமையின் போது வாடவும் மாட்டார்.                      - அறிஞர் அபூ ஹாஸிம் (ரஹ்)

வலிகள் கோமான் முஹ்யித்தீன் அப்துல் கதிர் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் தங்கள் கப்பல் மூழ்கிவிட்டது என்று கூறப்பட்டபோதும் கலங்கவில்லை. அமைதியாக அல்ஹம்து லில்லாஹ் என்றார்கள். சிறிது நேரம் கழித்து

18 ஜனவரி, 2014

ஊனிலும் உணர்விலும் கலந்த உத்தம நபி (ஸல்)


மவ்லானா அல்ஹாஜ் எஸ்.எஸ். அஹ்மது பாகவி ஹழ்ரத் கிப்லா அவர்களின் ஜூம்ஆ உரை 17-01-2014 (மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா)

ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் எளிமை

மவ்லானா எஸ். எஸ். அஹ்மது பாகவி ஹழ்ரத் கிப்லா ஜும்ஆ உரை 
      (10-01-2014)