15 அக்டோபர், 2013

மன ஓர்மையும் மகத்தான வெற்றியும்

மன ஓர்மை இருந்தால் வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் மகத்தான வெற்றி பெறலாம்.
வாழ்வின் இறுதிவரை இமாலய வெற்றி கிடைக்கும் .
அப்படி வெற்றி பெற்ற மாமனிதர்களின் வரலாற்றுத் துணுக்குகள்...
மகாத்மா காந்தியின் மன ஓர்மை ...
இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி புத்தகத்தில் காட்டிய மன ஓர்மை...
யூசுப் நபி யின் அழகிய வரலாற்றின் சிறு துணுக்கு..
மரண நேரத்தில் கூட வேதனை இன்றி எளிமையாக உயிர் பிரிய என்ன வழி?
இன்னும் இத்தியாதி.....
கேட்க ..பதிவிறக்கம் செய்ய...


09 அக்டோபர், 2013

அரஃபா பற்றிய அறிமுகக் குறிப்புகள்

(குறிப்பு: இனிய நெஞ்சங்களே! ஆலிம்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் இந்த வலைப் பதிவை வாசிப்பதால் பலரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழ் மொழிபெயர்ப்பு முழுதும் முதலில் பதிந்துவிட்டு அதற்கான அரபி மூலாதாரங்களை பதிவின் கீழே பட்டியலிட்டுள்ளேன். எண் வரிசைப் படி அடிக் குறிப்பிட்டுள்ளேன்)

அல்லாஹ் அருள்மறைக் குர்ஆனில் சத்தியமிட்டு சிலாகித்துக் கூறும்
அற்புத நாள் அரஃபா.

வாக்களிக்கப்பட்ட நாளின் மீதும் சாட்சியின் மீதும் சாட்சி சொல்லவேண்டிய நாளின் மீதும் சத்தியமாக!’’ (அல்குர்ஆன் 82: 2,3)

இந்த வசனத்தில் வரும் முதலாவது நாள் மறுமை நாள். இரண்டாவது கூறப்பட்டது வெள்ளிக் கிழமை மூன்றாவது சத்தியம் செய்து கூறப்பட்ட நாள் அரஃபா நாளாகும். (திர்மிதி)*1