12 ஆகஸ்ட், 2013

எல்லா நேரமும் அல்லாஹ்வை நினையுங்கள்      பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1)எதையும் செய்ய ஆரம்பிக்கும் போது என்ன ஓத வேண்டும்?
    பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருநாமத்தால்)

2)எதையும் செய்ய நினைக்கும் போது என்ன ஓத வேண்டும்?
    இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்)

3)எதுவும் புகழப்படும் போது என்ன ஓத வேண்டும்?
   சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)

4)துன்பத்தில் உழலும் போது என்ன ஓத வேண்டும்?
    யா அல்லாஹ் (அல்லாஹ்வே)

5) எதையும் பாராட்டும் போது என்ன ஓத வேண்டும்?
மாஷா அல்லாஹ் (எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே)

6) யாருக்கும் நன்றி கூறும் போது என்ன ஓத வேண்டும்?
ஜஸாக்கல்லாஹூ (அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக)

7) தும்மும் போது என்ன ஓத வேண்டும்?
    அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)

8) பிறர் தும்மும் போது என்ன ஓத வேண்டும்?
    யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் அருள் பாலிப்பானாக)

9) தவறை எண்ணி வருந்தும்போது என்ன ஓத வேண்டும்?    
   அஸ்தஃகு பிருல்லாஹ் (அல்லாஹ் பிழை பொறுப்பானாக)

10) உறுதி மொழி எடுக்கும் போது என்ன ஓத வேண்டும்?
  வல்லாஹிபில்லாஹ் (அல்லாஹ் மீது ஆணையாக)

11) தருமம் செய்யும் போது என்ன ஓத வேண்டும்?
   fபீ ஸபீலில்லாஹ் (அல்லாஹ்வின் பாதையில்

12) யார் மீதும் அன்பு பாராட்டும் போது என்ன ஓத வேண்டும்?
  லி ஹூப்பில்லாஹ் (அல்லாஹ்வின் அன்பிற்காக)

13) யாரிடமிருந்தும் விடைபெறும் போது என்ன ஓத    வேண்டும்?
   fபீ அமானில்லாஹ்(அல்லாஹ்வின் அடைக்கலத்தில்)

14) பிரச்சனைகள் எழும் போது என்ன ஓத வேண்டும்?
தவக்கல்து அலல்லாஹ் (அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தேன்)

15) விரும்பியவை நடக்கும் போது என்ன ஓத வேண்டும்?
    fபதபாரகல்லாஹ் (அல்லாஹ் உயர்வானவன்)

16) விரும்பாதவை நடக்கும் போது என்ன ஓத வேண்டும்?
     நஊதுபில்லாஹ் (அல்லாஹ்விடம் காவல் தேடுகிறோம்)

17) திடுக்கிடும் செய்திகேள்வியுறும் போது என்ன ஓத வேண்டும்?
  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன் (அல்லாஹ்விடமிருந்து வந்தோம் மேலும் அவனிடமே திரும்பிவருபவர்களாக உள்ளோம்.