12 ஆகஸ்ட், 2013

திருக்குர்ஆன் வினாடி வினா 41-80

(திருக்குர்ஆன் வினாடி-வினா -1 வை வாசிக்க இங்கே சொடுக்கவும்!)


41) திருக்குர்ஆனில் உள்ள ஒரு மாதத்தின் பெயர் என்ன?
    ரமலான் மாதம்

42) திருக்குர்ஆனில் உள்ள ஒரே வார்த்தைக் கொண்ட ஆயத்து எது?
    முத்ஹாம்மதான்

43) திருக்குர்ஆனில் இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளில் ஒரு கடமையின் பெயரில் உள்ள சூரா எது?
    சூரா அல்ஹஜ்

44) திருக்குர்ஆனில் மதீனாவிற்கு கூறப்பட்ட மற்றொரு பெயர்?
    யஸ்ரிப்

45) திருக்குர்ஆனில் 'சூரத்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் இடம் பெறுகிறது.?
   7 இடங்களில்

46) திருக்குர்ஆனில் 'குல்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் இடம் பெறுகிறது?
    232 இடங்களில்

47) திருக்குர்ஆனில் உதாரணம் காட்டப்படும் இரண்டு சிறிய உயிரினம் எது?
    1.ஈ (22:73)                2. சிலந்தி (29:41)

48) திருக்குர்ஆனில் முதல் சூரா எது? கடைசி எது?
    முதல் சூரா ஃபாத்திஹா       கடைசி சூரா நாஸ்

49) திருக்குர்ஆனில் எத்தனை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உள்ளன?
     114 உள்ளன

50) திருக்குர்ஆனில் 'ஸகர்' என்ற நரகத்தின் காவலாளிகள் எத்தனை பேர் என குர்ஆன் கூறுகிறது?.
    19 பேர்

51) திருக்குர்ஆனின் கடைசி 'ஸஜ்தா'எந்த சூராவில் உள்ளது?
     சூரத்துல் 'அலக்' என்ற அத்தியாயத்தில் உள்ளது.
  
52) திருக்குர்ஆனில் 'ஜின்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வந்துள்ளது?
    22 இடங்களில்

53) திருக்குர்ஆனில் உள்ள ஜபர் (என்ற அகரம்) எத்தனை?
     53,223 இடங்களில் வருகிறது

54) திருக்குர்ஆனில் உள்ள ஜேர் (என்ற இகரம்); எத்தனை?
     39,582 இடங்களில் வருகிறது

55) திருக்குர்ஆனில் உள்ள பேஷ் (என்ற உகரம்;) எத்தனை?
     8804 இடங்களில் வருகிறது

56) திருக்குர்ஆனில் 'மத்து' என்ற நீட்டல் குறி எத்தனை?
     1771 இடங்களில் வருகிறது

57) திருக்குர்ஆனில் 'ஷத்து'என்ற அழுத்தல் எத்தனை?
     1274 இடங்களில் வருகிறது

58) திருக்குர்ஆனில் 'நுக்தா' (புள்ளி)க்கள் எத்தனை?
     1,05,684 எழுத்துக்கள்

59) திருக்குர்ஆன் கூறும் அழியாமல் பாதுகாக்கப்பட்டு பின்வரும் சமுதாயத்திற்கு அத்தாட்சியாக  உள்ள மனித உடல் எது?
    ஃபிர்அவ்னின் உடல்

60) திருக்குர்ஆன் கூறும் மூஸா நபியின் எதிரி யார்?
   ஃ பிர்அவ்ன்

61) திருக்குர்ஆன் கூறும் இப்ராஹீ நபியின் எதிரி யார்?
    ஃநம்ரூத்

62) திருக்குர்ஆன் கூறும்  ஈஸா நபியின் எதிரி யார்?
   யூத சமுதாயம்

63) திருக்குர்ஆனில் நன்மையை  ஏவும்  வசனங்கள் எத்தனை?
   சுமார் 1000

64) திருக்குர்ஆனில் தீமையை தடுக்கும் வசனங்கள் எத்தனை?
   சுமார் 1000

65) திருக்குர்ஆனில் உதாரணம்  கூறும்  வசனங்கள் எத்தனை?
     1000

66) திருக்குர்ஆனில் வாக்குறுதி  கூறும் வசனங்கள் எத்தனை?
    1000

67) திருக்குர்ஆனில் அச்சமூட்டி  எச்சரிக்கை  செய்யும் வசனங்கள் 
எத்தனை?
    1000

68) திருக்குர்ஆனில் ஹலால் (ஆகுமாக்கப்பட்டவை) பற்றிய வசனங்கள் எத்தனை?
    250

69) திருக்குர் ஆனில் ஹராம் (ஆகாதவை) பற்றிய வசனங்கள் எத்தனை?
    250

70) திருக்குர்ஆனில் வரலாறு  கூறும் வசனங்கள் எத்தனை?
    1000

71) திருக்குர்ஆனில் துஆக்கள் (பிரார்த்தனை) அடங்கிய வசனங்கள் எத்தனை?
    1000

72) திருக்குர்ஆனில் மன்சூக் (சட்டம் மாற்றப்பட்டவை) வசனங்கள் எத்தனை?
    66

73) திருக்குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன?
    25 நபி மார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன.

74) திருக்குர்ஆனில் நபி (ஸல்) அவர்களின் பெயர் எத்தனை இடங்களில் கூறப்பட்டுள்ளது?
    4 இடங்களில் முஹம்மது என்றும், ஒரு இடத்தில் அஹ்மது 
       என்றும்  கூறப்பட்டுள்ளது.

75) நபி ஆதம் (அலை) அவர்களின் பெயர் எத்தனை இடங்களில் கூறப்பட்டுள்ளது?
    25 இடங்களில்

76) திருக்குர்ஆனைப் போன்று வாழ்ந்தவர்கள் யார்?
     நபி (ஸல்) அவர்கள்

77) திருக்குர்ஆனில் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் என்னென்ன பெயர்கள் மூலம் அழைக்கிறான்?
     முஹம்மது, அஹ்மது, தாஹா, யாஸீன், முஸ்ஸம்மில்,   
     முத்தஸ்ஸிர்அப்துல்லாஹ் ஆகிய  7 பெயர்களில்
      அழைக்கிறான்.

78) நபி (ஸல்) அவர்களுடைய சிறப்பு பெயர்கள் திருக்குர்ஆனில் எத்தனை கூறப்பட்டுள்ளது?
    ஷாஹித், பஷீர், நதீர், தாஈ, ஹாதி, ஸிராஜிம்-முனீர் உட்பட 27      பெயர்கள்

79) திருக்குர்ஆனில் 'யா அய்யுஹன்ன பிய்யு' என்று எத்தனை இடங்களில் வருகிறது?
    11 இடங்களில்

80) திருக்குர்ஆனில் நபிமார்களின் பெயர்களைக் கொண்ட சூராக்கள் எத்தனை?
     மொத்தம்  6 சூராக்கள்