17 ஆகஸ்ட், 2013

முஹம்மது (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) வினாடி - வினா 5101. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசளின் பெயர் என்ன?
மஸ்ஜிதுன் நபவீ ஆகும்.

102. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனார் பெயர் என்ன?
ஹழ்ரத் ஸைத் (ரலி) அவர்களாகும்.

103. முஹம்மது நபி (ஸல்) அவர்களின்; பேரர்கள் யார் யார்?
1. ஹரழ்ரத் ஹசன் (ரலி)
2. ஹழ்ரத் ஹுஸைன் (ரலி)

104. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கொள்ளு பேரர் பெயர் என்ன?
1. ஹழ்ரத் ஸைனுல் ஆபீதீன்

105. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவின் போது 
 திருக்குர்ஆன் எந்த நிலையில் இருந்தது?
தனித்தனி ஏடுகளில் எழுதப்பட்டும், சில நபித் தோழர்களால்  
  மனப்பாடம் செய்யப்பட்டும் இருந்தது.

106. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திலும், நபித் தோழர்கள் காலத்திலும்; எந்த எழுத்துக்கள் புழக்கத்தில் இருந்தன?
கூஃபா நகர எழுத்துக்கள்

107. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் வீட்டை 
     சுற்றி முற்றுகையிட்டு வாளேந்தி நின்ற எதிரிகளின் பார்வையிலிருந்து
     தப்பிக்க ஓதிய வஸனம் எது?
  சூரா யாஸீனின் (அத்தியாயம் 361 வஜ்அல்னா என்று துவங்கும் (9வது)வசனமாகும்.

108. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் செய்த சூன்யத்தை முறியடிக்க இறங்கிய சூராக்கள் எவை?
சூரத்துல் ஃபலக் மற்றும் சூரத்துன்னாஸ்.

109. முஹம்மது நபி (ஸல்)அவர்களுடைய சிறப்பு பெயர்கள் திருக்குர்ஆனில் எத்தனை கூறப்பட்டுள்ளது?
ஷாஹித், பஷீர், நதீர், தாஈ, ஹாதீ, ஸிராஜீம் முனீர் உட்பட 27 பெயர்களாகும்.

110. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கல்வி ஞானம் பெருக இறைவனே கற்றுக் கொடுக்கும் துஆ எது?
ரப்பி ஸித்னீ இல்மா. இறiவா எனக்கு கல்வி ஞானத்தை அதிகப்படுத்து வாயாக! என்ற துஆவாகும்.

111. முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய எந்த துணைவியாரை பரிசுத்தப்படுத்தி நூர் என்ற அத்தியாயத்தில் 10வஸனங்கள் இறங்கியது?
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை பரிசுத்தப்படுத்தி 10வஸனங்கள் இறங்கியது.

112. முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய மாமனார்கள் யார்? யார்?
ஹழ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) 
ஹழ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி)

113. முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய மருமகன்கள் 
  யார்? யார்?
   ஹழ்ரத் உஸ்மானிப்னு அஃப்வான் (ரலி) 
   ஹழ்ரத் அலிஇப்னு அபூதாலிப் (ரலி)
 ஹழ்ரத் அம்ருப்னு ஆஸ் (ரலி) ஆகியோராகும்.

114. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அரபு எழுத்துக்களில் புள்ளி (நுக்தா)கள் இருந்தனவா?
இல்லை.

115. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை கற்று பிறருக்கு
 கற்ப்பித்துக் கொடுப்பவர் பற்றி எவ்விதம் புகழ்ந்தார்கள்?
  அவர்தான் உங்களில் சிறந்தவர் என்றார்கள்.

116. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவுக்கு முன்பே முழு குர்ஆனையும் மனனம் செய்த பெண் ஸஹாபாக்கள் யார்? யார்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துனைவிமார்களான அன்னை ஆயிஷா (ரலி) அன்னை ஹஃப்ஸா (ரலி) அன்னை உம்மு ஸலமா (ரலி) ஆகியோராகும்.

117. முஹம்மது நபி (ஸல்)அவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் மக்காவில் வஹீ இறங்கியது?
12 ஆண்டுகள் 5 மாதம் 13 நாட்கள்

118. முஹம்மது நபி (ஸல்)அவர்களுக்கு திருக்குர்ஆன் வஸனங்கள் மதினாவில்இறங்கி அருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது?
9 வருடங்கள் 9 மாதங்கள் 9 நாட்கள்

119. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த மனைவியரை அல்லாஹ்வின்
  கட்டளைப்படி திருமணம் செய்தார்கள்?
அன்னை ஸைனப் (ரலி) அவர்களையாகும்.

120. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நடக்கிற பொழுது நிழல் கீழே  விழுமா?
 விழாது மேகம் அவர்களுக்கு நிழல் கொடுக்கும்.

121. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு பிறந்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் சுன்னத் செய்யப்பட்ட நிலையிலேயும், ஸுஜுதிலே விழுந்த நிலையிலேயும், சுர்மாயிடப்பட்ட நிலையிலேயும் தம் ஆள்காட்டி விரலை வானின் பக்கம் உயர்த்திய நிலையிலேயும் பிறந்தார்கள்.

122. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த குகையிலே 
முதன் முதலாக வஹீ இறங்கியது?
 ஹிரா என்ற குகையாகும்.

123. முஹம்மது நபி (ஸல்) அவர்களும், ஹழ்ரத் அபூபக்கர்
 ஸித்தீக் (ரலி) அவர்களும் ஒளிந்திருந்த குகை எது?
  ஸவ்ர் என்னும் குகையாகும்.

124. முஹம்மது நபி (ஸல்) அவர்களை கனவிலே கண்டால் 
  நம்பலாமா?
ஆம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கனவிலே கண்டால்; அது அவர்களே தான் ஏனெனில் அவர்களின் தோற்றத்திலே ஷைத்தான் வர மாட்டான் என நபியே சொல்லியுள்ளார்கள்.

125. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்க்காக 
   செய்ய இருக்கிற மாபெரும் உபகாரம் எது?
  ஷஃபாஅத்  என்னும் பரிந்துரையாகும்.