11 ஆகஸ்ட், 2013

மனிதநேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா?-4வீழ்கிறதே!

இவ்வவைக்கு சுவையாக  வீற்றிருந்து எங்களின் சத்திய கருத்துக்களை  கேட்டறிந்து  எதிர் அணியினர்  மீது தோல்வியை விட்டெறிந்து நியாயமாக நீதியாக மனிதநேயம் வீழ்கிறதே... வீழ்கிறதே... வீழ்கிறதே..
என்று தீர்ப்பு  வழங்குவதற்காக காத்திருக்கும் நெல்லை ஈன்றெடுத்த வாடா முல்லை நடுவர் அவர்களே...!
     
நடுவர் அவர்களே, ஒருவனுக்கு  தன் குடும்பத்திற்குள் ஏற்படுகிற பாசம் இருக்கிறதே அது இரத்தம் சம்பந்தப்பட்ட ஒர் உறவு.


ஒரு முஸ்லிம் ஒரு முஸ்லிமை நேசிப்பது மனித நேயமல்ல, இஸ்லாம் சொல்கிற மனிதநேயம் எது?
'மதத்தை கடந்து, மொழியை கடந்து, இனத்தை கடந்து நாட்டை கடந்து மனிதன் என்பதற்காக வேண்டி ஒரு மனிதனை  நேசி அது தான் மனிதநேயம்'

உண்மையான மனிதநேயத்தின் தத்துவம் எது?
எதார்த்தம் எது? நிதர்ஸனம் எது?
     
ஒரு முஸ்லிம் ஹிந்துவை நேசிப்பது மனிதநேயம்,
ஒரு ஹிந்து  ஒரு இஸ்லாமியனை  நேசிப்பது மனிதநேயம்,  
ஒரு கிறிஸ்தவன் பசித்து  கிடக்கின்றான் என்பதற்காக  ஒரு  முஸ்லிம் இரக்கப்படுவது மனிதநேயம்.
இந்த மனிதநேயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகிற்கு  அறிமுகம் படுத்தி காட்டினார்கள்.
     
பக்கத்து  வீட்டுக்காரன் பசித்திருக்கிற போது நீ புசிக்காதே. அவன் ஹிந்து அவன் கிறிஸ்தவன், அவன் சீக்கியன், அவன் இருப்பவன் இல்லாதவன்  அவன் எந்த மொழியை  பேசக்கூடியவன் , அவன் எந்த நாட்டை சேர்ந்தவன் என்றெல்லாம் பார்க்கக் கூடாது. அவன் மனிதனா என்று மட்டும் பார்  இவைகளை  கடந்து  பார்க்கப்படுகிற மனிதநேயம் இன்று இருக்கிறதா?

உங்கத்தா மேல நீங்க வைக்கிற  பாசமெல்லாம் இங்கே மனிதநேயம் கிடையாது. இந்த குடும்ப உறவுகளையும் ரத்த  பந்தங்களையும் இவங்க மனைவியை கொஞ்சி குலாவுவதெல்லாம் மனிதநேயம் கிடையாது.
     
அடுத்தவர் மதத்தை கடந்து மனிதனை  நேசிப்பது தான் மனிதநேயம் என பெருமானார்  (ஸல்) சொல்லி தந்தார்கள்.
     
ஒரு யூதனின் இறந்து போன பிரேதம் எடுத்து செல்லப்படுகிறது. எடுத்து செல்லப்பட்ட பிரேதத்தை பார்த்த பெருமானார் எழுந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு சொல்லப்பட்டது. நபியவர்களே அவர் முஸ்லீம் அல்ல ஒரு யூதன் என்று. அதற்கு எம்பெருமானார் நபியவர்கள் அவர் முஸ்லீம் இல்லை  என்பது எனக்கு தெரியும். இஸ்லாத்திற்கு எதிரான நிலையில் இருப்பவர் என்பதும் எனக்கு தெரியும் அவரும் ஒரு மனிதர் தானே...  என்று சொல்லி  எழுந்து நின்றார்கள்.
     
எந்த  ஒரு  ஹிந்துவின் பிரேதம். இறந்துபோன  எந்த ஒரு  கிறிஸ்தவனின் பிரேதம் மாற்றுமத சகோதரரின் பிரேதம் எடுத்து செல்லப்படுகிற போது எந்த முஸ்லிம் எழுந்து நிற்கிறானோ அவனுக்கு சொர்க்கம் என்கிற சித்தார்ந்தத்தை மனித நேயத்தின் அடிப்படை சித்தார்ந்தமாக உருவாக்கி காட்டியவர் நபியவர்கள்.

ஒரு ஹிந்துவின் பிரேதம் போகிற போது நாம் எழுந்து நின்றால் பெருமானார் (ஸல்) சுன்னத்தை பின்பற்றுகிறோம். அந்த சுன்னத்தால் நமக்கு கிடைப்பது சொர்க்கம்! இது தான் மனித நேயம்.
     
பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பி அணிந்த உடைகளில் ஒரு ஜூப்பா இருந்தது அதிகமாக பெருமானார் அதையே அணிந்து கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் கேட்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் 'இது  ஒரு யூதர் எனக்கு தந்தது' எனவே நபி அதை அணிந்தார்கள். வரலாற்று  ரீதியிலே இப்படிப்பட்ட  மனிதநேயம்  இன்று எங்கே  இருக்கிறது?

மனிதநேயம் இன்று செத்து கிடக்கிறது...
இன்று பெரும்பாலான  விஷயங்களை பாருங்க! கம்மியான விஷயங்கள் பற்றி பேசாதீர்  என்றாரே எதிரணி தலைவர்  பாவாஷா
     
நான் அவர்களின் வாதத்திற்கே வரேன்.
2000 லே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த கொலைகளின் கணக்கு என்ன? மொத்த கற்பழிப்புகளின் கணக்கு என்ன? மொத்த  குற்றச் செயல்களின் கணக்கு என்ன?

2000ல் சொல்லப்பட்ட கணக்குக்கும்2001ல் சொல்லப்பட்ட கணக்குக்கும், 2003ல்  சொல்லப்பட்ட  கணக்குக்கும் இன்றைக்கும் சொல்லப்படுகிற கணக்கும், கொலை குற்றங்கள் குறைந்து இருக்கிறதா? அதிகரித்து இருக்கிறதா? கற்பழிப்பு குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி கொண்டு இருக்கிறதா? குறைந்து கொண்டு இருக்கிறதா?
     
இன்றைய குற்றவியல் சட்டங்களில் மனிதன் இழைத்து கொண்டிருக்கிற அக்கிரமங்கள் அதிகரித்து கொண்டு இருக்கிறது  என்பதற்கு  அடுக்கடுக்கான ஆதாரங்களை  என்னால் சொல்லமுடியும்  இன்ஷா அல்லாஹ் சொல்லத் தான் போரேன்.
     
நாம் யோசித்து பார்க்க வேண்டும் எங்க நீங்க இன்று மனிதனை  தேடிக் கொண்டு இருக்கிறீர்கள்.   
     
அல் ஜன்னத்து  தஹ்த அக்தாமி உம்மு  கஹாதிகும்.
சுவர்க்கத்தை  ஒரு பெண்ணின்  காலடியில் இறக்குமதி  செய்து காட்டிய  அண்ணல் பெருமானார்  (ஸல்) அவர்கள் மனித குலத்தில் மகத்தான  ஒரு உயர்வான அந்தஸ்தை பெண் குலத்திற்கே  கொடுத்து எல்லா  இபாதத்களிலும் சொர்க்கம் கிடைக்கிறது. அந்த சொர்க்கம்  பெண்ணின் காலுக்கு கீழே இருக்கிறது என்று படம் போட்டு காட்டியவர்கள்  (ஸல்) அவர்கள் 
     ஆனால்  இன்றைய தாய்மார்களின் நிலை என்ன?

அன்றைக்கு  பெண் குழந்தை பிறந்தவுடன் மண்ணிலிட்டு புதைத்தார்கள். இன்று  கருவறையே கல்லறையாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறதே. கருவிலேயே  இன்று  சிசுக்கள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்களே!  கருவறையே  கப்ர் அறையாக  இன்று மாற்றப்பட்டு கொண்டு இருக்கிறதே.

மனித நேயம்  என்பது  இன்று எங்கே வளர்கிறது?
மனித நேயம்  இன்று  வளர்ந்து  கொண்டு இருக்கிறதா? அல்லது  இன்று  குறைந்து  கொண்டு இருக்கிறதா?
     
பிறந்த  குழந்தையை  குப்பை  தொட்டிகளில் வீசுவது    அரசு தொட்டிகளில்  போடுவது அது மாத்திரமல்ல, உலகம்  முழுக்க   பிறந்த பச்சை குழந்தைகளின் வாயிலே  உம்மிக்களியையும், எருத்தப்பாலையும்  கொடுத்து பச்சை  குழந்தையை  தன் கரத்தாலேயே  கொன்று குவிக்கக் கூடிய  தாய்மார்களின் மனம்  மனிதநேயம்  வளர்கிறது  என்பதற்கு  அத்தாட்சியா?
      ஏன் இப்படி  உங்கள் மனங்களை  துளைத்து விட்டு இந்த பட்டிமன்றத்திலே  ஜெயிக்க வேண்டும் என்ற குறிக்கோலோடு இப்படி பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். உண்மையை சொல்லுங்க!
      அது மாத்திரமல்ல. இன்று கிட்னியை  பற்றி பேசினார்கள். தமிழகத்தில் லேட்டஸ்ட் என்ன தெரியுமா? பாருங்கள்
மனித நேயம் இன்று வீழ்ந்து கொண்டிருக்கிறது. என்பதற்கு மருத்துவத் துறை ஒரு அத்தாட்சி.
      
இன்னறைக்கு  கிட்னி என்பது திருடப்படுகிறது. என்பதெல்லாம் பழைய செய்தி கிராமப்புற விவசாய கூலிகள்  இருக்கிற பாவப்பட்ட அப்பாவி பெண்கூலிகள், ஆண் கூலிகளை பிடித்து அதற்கு என்றே  கிட்னியை அபேஸ் பண்ணக்கூடிய  தனி மருத்துவமனை உலக முழுக்க நடந்து கொண்டிருக்கிறது.
      மனிதநேயம் வாழ்கிறதா?
      மனிதாபிமானம்  தான் வாழ்கிறதா?
      
நாளுக்கு நாள் மனிதநேயம்  வீழ்ந்து கொண்டிருக்கிறது.
செத்து கொண்டிருக்கிறது என்பதற்கு  இதை விட பெரிய உதாரணம் எதை சொல்ல முடியும்?; யோசித்து  பார்க்க வேண்டும்.
அது போல  எதிரணி சொன்னார்  நாங்கள் உதவி செய்கிறோம் உபகாரம் செய்கிறோம் நாங்கள் அள்ளி அள்ளி கொடுக்கிறோம் என்றார்கள்.
     
நான் இந்த சமுதாயத்தினுடைய பெருமக்களுக்கு முன்னால் கேட்கிறேன்.
கண்ணை கொடுத்தோம். காதை கொடுத்தோம், இரத்தம் கொடுத்தோம் எல்லாவற்றையும் கொடுத்;தோம். இன்றைக்கு வரைக்கும் இந்த சமுதாயத்தில் ஊனமுற்று பிறக்கக்கூடிய  குழந்தைகள் கண் தெரியாமல் பிறக்கிற குழந்தைகள் மூளைவளர்ச்சி குன்றி பிறக்கிற குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்டு பிறக்கிற குழந்தைகள் இவ்வித குழந்தையை வைத்து பாதுகாக்கக் கூடிய காப்பகம் இன்றை வரைக்கும் இந்த சமுதாயத்தின் பெயரால் உண்டா
     
கோடிக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் இன்று இருக்கிறோம். ஆனால் நம் சமூகத்தில் பிறக்கிற ஊனமுற்ற, கண் தெரியாம வாய் பேசமுடியாமல், மனநலம் குன்றி பாதிக்கப்பட்டிருக்கிற ஏழை பாவப்பட்ட முஸ்லிம்களுக்கு உணவு கொடுக்கக் கூடியவர் ஒரு கிறிஸ்த்தவ விஷ்னா அரசு ஆசிரமங்கள், காப்பகங்கள் எல்லாம் செய்கிறோம்.
      
உன் சமுதாயத்தில் கலிமா சொன்ன ஒரு ஊனமுற்றவருக்கு கஞ்சி கொடுப்பதற்கு உனக்கு நாதி இருக்கிறதா? யோசித்து பார்க்க வேண்டும்.
 சிந்தித்து பார்க்க வேண்டும். இது ஏன் உனக்கு வரவில்லை இஸ்லாமியர்களாக இருக்கிற நம்மிடத்திலே மனிதநேயம் இல்லை என்பதற்கு இதை விட பெரிய உதாரணத்தை சொல்ல தேவையே இல்லை!
     ஏன்? அதை வைத்து பார்கனும்னா  கஷ்டம் பாவப்பட்ட அதை வைத்து பாரமரிப்பது  சும்மா இல்லை அதற்கு  ஈகைமனம் இரக்க குணம் வேண்டும். பரந்த மனப்பான்மை வேண்டும். சேவை மனப்பான்மை, வேண்டும், தியாகம் வேண்டும் அர்பணிப்பு வேண்டும் இதெல்லாம் வர வேண்டும் அவைகள் நம்மிடம் வந்துள்ளதா?
     
உன் பிள்ளை அழுகிற போது நீ கண்ணீர் வடிப்பது அல்ல மனிதநேயம்

 
     காஷ்மீரில் ஒருவன் அடிப்பட்டா கன்னியாகுமரியில் உள்ளவனுக்கு கண்ணீர் வரனும். ஏனெ;னறால் மனிதநேயம்  காத்த மாநபி சொன்ன வார்த்தை
       'அல்முஃமினு கஜஸதின் வாஹிதின்' மூஃமின்கள் எல்லாம் ஒரே உடலைப் போன்றவர்கள்
     உடலில் ஏதாவது  ஒரு பகுதியில் அடிப்பட்டு விட்டால் கண்நீர் வடிக்கிறதல்லவா வாய் சப்தமிடுகிறது கால் மருத்துவமனைக்கு செல்கிறது. கை மருந்திடுகிறது. இது போல் தான் முஃமீன்கள்
      ஆகவே  சமூகத்தில் குறைபாடோடு பிறப்பவனுக்கு இன்றைக்கு ஒரு நாதியை சொல் அவனுக்கு ஒரு கதியைச் சொல்.
     நம்மில் எத்தனை பேர்இருக்கிறோம். உலமா சபை இருக்கிறது. ஆயிரக்கணக்கான  கோடிகளை அள்ளி இறைத்து கொண்டிருக்கிற இஸ்லாமிய
 இயக்கங்கள் இருக்கின்றது. சமுதாயத்தை தூக்கி நிறுத்துகின்றோம். என்று சொல்லி வீறுநடை போடுகிற இளைஞர்  பட்டாளம் இருக்கிறது.
      
எல்லா மக்களிடமும் கேட்கப்படுகின்ற கேள்வி இப்படிப்பட்ட பாவப்பட்ட ஒருவனுக்கு ஒருவாய் சோறு கொடுப்பதற்கு  நாதி இல்லை கிறிஸ்தவன் கொடுத்து கொண்டு இருக்கிறான். இந்த சமூகம் என்ன செய்து கொண்டிருக்கிறது. இங்கு தான் மனித நேயம் தூங்கி கொண்டு இருக்கிறது.

     இன்ஷா அல்லாஹ் என் அல்லாஹ் என்னுடைய  இந்த  உருக்கமான இந்த பேச்சின் மூலம் கல்லான கல்புகளையும் கரையச் செய்வானாக, வீழ்ந்து விட்ட மனித நேயத்தை வாழ்  வாங்கு  வாழச் செய்வானாக மனிதநேயத்தை ஒங்க செய்வானாக
வாய்ப்பளித்தமைக்கு  நன்றி கூறி பெறுகிறேன் விடை தருகிறேன் ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும்  (வரஹ்)