08 ஜூன், 2013

ஏமாறாதே! ஏமாற்றாதே!க்கம் என்னும் அரசன் ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்த காலம்.
ஒருநாள் அவர் நகரை வலம் வந்தபோது ஒரு அழகான நிலத்தைப் பார்த்தார். அதனால் கவரப்பட்ட அவர் அந்த இடத்திலே தமக்கென மாளிகை ஒன்றை கட்டிக் கொள்ள விரும்பினார்
அந்த நிலம் ஒரு கிழவிக்கு உரியது. அதிலே ஒரு குடிசை அமைத்து குடியிருந்தாள். அந்த நிலத்திற்கு நியாமான ஒரு விலையைக் கொடுக்க அரசர் முன்வந்தார் அக்கிழவி விற்க மறுத்துவிட்டாள். 'தன் கணவரோடு வாழ்ந்த குடிசையே தனக்கு அரண்மனை' என்றாள்.
அரசருக்கு ஆத்திரம் வந்தது.
அக்குடிசையைப் பிடுங்கி எறிந்து அவளை அந்த நிலத்திலிருந்து விரட்டினார். அங்கே ஓர் அரச மாளிகையும் அழகிய பூங்காவையும் அமைத்தார்
கிழவி உடனே நீதிபதியிடம் சென்று அரசருக்கு எதிராக முறையிட்டாள்.
சில நாட்கள் சென்றது. அரசர் தனது புதிய மாளிகையை வந்து பார்க்கும்படி நீதிபதிக்கு அழைப்பு விடுத்தார். குறித்த நேரத்தில் ஒரு கழுதையுடனும் வெறும் சாக்குகள் சிலவற்றுடனும் நீதிபதி அரசமாளிகைக்கு வந்து சேர்ந்தார்.
அரசருக்கு ஆச்சரியமாக இருந்தது
கழுதையும் சாக்குப் பையும் ஏன்?'' என்றார்.
''இந்த தோட்டத்திலிருந்து சிறிது மண் வெட்டிக் கொண்டு போவதற்கு அனுமதி தாருங்கள்'' என்றார்
இந்த வினோதமான கோரிக்கை அரசருக்கு வியப்பாக இருந்தது எனினும் அனுமதி வழங்கினார். நீதிபதி மண்ணை வெட்டி அந்த சாக்குகளை நிரப்பினார்.
பின்னர் அவற்றை கழுதையின் மேல் வைப்பதற்கு தமக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார் அரசருக்கு இன்னும் வியப்பாக இருந்தது. என்றாலும் மகிழ்ச்சியுடன் உதவ அவர் முனவந்தார்
எவ்வளவு முயன்றபோதிலும் ஒரு சாக்கைக் கூட அவரால் தூக்க முடியவில்லை.
நீதிபதி அரசரை நோக்கி கூறினார்:

''அரசே! இன்று உங்களால் ஒரு சாக்கு மண்ணைக் கூட தூக்க முடியவில்லை. மறுமைநாளில் அந்த கிழவியிடமிருந்து நீங்கள் அநீதியாக அபகரித்த இந்த தோட்டம் முழுவதையும் சுமக்கும்படி அல்லாஹ் ஆணையிட்டால் என்ன செய்வீர்கள்? 

அரசர் தமது செயலுக்காக வெட்கப்பட்டார். அந்த கிழவியை உடனே வரவழைத்து , தாயே! நான் பெரும் பிழை செய்துவிட்டேன். இன்றிலிருந்து இந்த மாளிகையும் தோட்டமும் உங்களுக்குரியதே!'' என்றார்.

மோசடி செய்பவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நஷ்டம்தான் .
இம்மையில் என்ன நஷ்டம்?
  • அந்த சமுதாயத்தில் அச்சமும் பீதியும் நிலவும் 
  • ஈமான் இழப்பு கூட ஏற்படாலம் 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

''எந்த சமுதாயத்தில்  மோசடி பரவலாக இடம் பெறுகின்றதோ அவர்களுக்கு மத்தியில் அச்ச உணர்வு தோற்றுவிக்கப்படும்"". (முஅத்தா மாலிக் -26)
 ''உங்களில் ஒருவர் மோசடி செய்கையில் அவர் முஃமினாக இருக்க மாட்டார். உங்களை நான் அப்படியான நிலையை விட்டும் கடுமையாக எச்சரிக்கிறேன்"". (முஸ்லிம் - கிதாபுல் ஈமான் - 103)

மறுமையில் என்ன நஷ்டம்?

பொதுச் சொத்தில் மோசடி செய்வோர் அமானிதத்தை வீனாக்குவோர் ஏமாற்றுவோர் யாரும் தப்பிக்க முடியாது. மறுமையில் அவர்கள் மோசடி செய்த அந்த பொருளே அவர்களுக்கு பெரும் சுமையாக மாறி அவர்களை திணறடிக்கும். அப்போது யாரையும் உதவிக்கு அழைக்க முடியாது 
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَذَكَرَ الْغُلُولَ فَعَظَّمَهُ وَعَظَّمَ أَمْرَهُ ثُمَّ قَالَ ‏ "‏ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ بَعِيرٌ لَهُ رُغَاءٌ يَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي ‏.‏ فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ ‏.‏ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ فَرَسٌ لَهُ حَمْحَمَةٌ فَيَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي ‏.‏ فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ ‏.‏ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ شَاةٌ لَهَا ثُغَاءٌ يَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي ‏.‏ فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ ‏.‏ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ نَفْسٌ لَهَا صِيَاحٌ فَيَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي ‏.‏ فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ ‏.‏ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ رِقَاعٌ تَخْفِقُ فَيَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي ‏.‏ فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ ‏.‏ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ صَامِتٌ فَيَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ 
  أَبْلَغْتُكَ.‏

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று (போர்ச் செல்வங்கள் உள்ளிட்ட) பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் தண்டனை கொடியது என்பதையும் எடுத்துரைத்தார்கள்.
பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.

இவ்வாறே, மறுமை நாளில் கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையைத் தமது கழுத்தில் சுமந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய இயலாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.
இவ்வாறே, மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஆட்டைத் தமது கழுத்தில் சுமந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லி விட்டேன்" என்று கூறிவிடுவேன்.

இவ்வாறே, மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஓர் உயிரினத்தைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்யமுடியாது; உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.
இவ்வாறே, மறுமை நாளில் (காற்றில்) அசையும் துணிகளைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கூறி (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம்.ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய இயலாது. உனக்கு (சொல்ல வேண்டியதை உலகி லேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.
இவ்வாறே, மறுமை நாளில் பொன்னையும் வெள்ளியையும் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கூறி (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம்.ஏனெனில், அப்போது நான் "என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.
  (ஸஹீஹ் முஸ்லிம் 4839)

 وَمَن يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لاَ يُظْلَمُونَ" (161) سورة آل عمران

 எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் (.3:161)


முஆத் பின் ஜபல் ரலி அவர்களை ஏமனுக்கு அனுப்பியபோது அண்ணலார் ஸல் அவர்கள் மிகவும் வலியுறுத்தியது: பொது சொத்துகளில் பதுக்கக்கூடாது அவாறு பதுக்கினால் அது மோசடிதான் , எதைப் பதுக்குகிரோமோ அது  மறுமையில் பெரும் சுமையாக மாறிவிடும்
عن معاذ بن جبل قال: بعثني رسول الله صلى الله عليه وسلم فلما سرت أرسل في أثري فرددت فقال : أتدري لم بعثت إليك ؟ لا تصيبن شيئا بغير إذني فإنه غلول { ومن يغلل يأت بما غل يوم القيامة } لهذا دعوتك فامض لعملك " رواه البخاريநபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் வீட்டை விட்டு
 வெளியாகும் போதெல்லாம் அவர்களின் உதட்டிலிருந்து வெளியாகும் வார்த்தை: நானும் ஏமாறக் கூடாது; பிறரையும் ஏமாற்றக் கூடாது.

مَا خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَيْتِي قَطُّ إِلَّا رَفَعَ طَرْفَهُ إِلَى السَّمَاءِ فَقَالَ اللَّهُمَّ أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ( رواه أصحاب السنن الأربعة)


தியாகியையும் தீக்குண்டத்தில் சேர்க்கும் திருட்டு:
கைபர் யுத்தம் நடந்து முடிந்த பின்னர் நபி (ஸல்) அவர்களது தோழர்களிற் சிலர் அங்கு வந்தனர். மேற்படி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி 'அவர் ஷஹீத், இவர் ஷஹீத்", என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். ஒரு நபரை (அவரது ஜனாஸாவைக்) கடந்து சென்ற அவர்கள் 'இவரும் ஷஹீத்" என்றனர். அதுகேட்ட நபி (ஸல்) அவர்கள் ''நீங்கள் அப்படிக் கூற வேண்டாம். அவர் யுத்தத்தில் கிடைத்த கனீமத் பொருட்களில் ஒன்றான ஓர் ஆடையை அல்லது மேலங்கியைத் (திருட்டுத் தனமாக) அபகரித்துக் கொண்டார். அந்த ஆடையுடன் அவரை நான் நரகில் கண்டேன்"" என்று கூறி விட்டு, ''உமர் இப்னு கத்தாபே! நீர் சென்று முஃமீன்களைத் தவிர வேறு எவரும் சுவர்க்கம் நுழைய மாட்டார்கள்"" என்று மக்களுக்கு மத்தியில் சொல்வீராக"" என்றார்கள்.  (ஸஹீஹ் முஸ்லிம், 182)

யுத்தத்தின் போது எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட (கனீமத்) பொருட்களிலிருந்து ஓர் ஆடையைத் திருட்டுத்தனமாக அபகரித்துக் கொண்ட நபருக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா?
பொதுச் சொத்துக்களை அபகரிப்போர், அவற்றில் கையாடல் செய்வோர், அதிகாரத்தைப் பயன்படுத்தி தம் சொந்த நலன்களை ஈட்டிக் கொள்வோர் போன்றோருக்கு இந்த ஹதீஸ் ஒரு எச்சரிக்கை மணி.

நபி (ஸல்) அவர்கள் யுத்தம் நடந்து முடிந்த பின்னர் கனீமத் பொருட்களை அல்லாஹ் கூறிய பிரகாரமே பங்கிடுவார்கள். ஆனால், அவ்வாறு அதிகாரப்பூர்வமாக அப்பொருட்கள் பங்கிடப்படும் முன்னர் அப்பொருட்களில் ஏதாவது ஒன்றை தனிப்பட்ட முறையில் திருடுவது குற்றமாகும்.
  • அல்லாஹ் மார்க்கத்திற்காக நடைபெற்ற யுத்தமாயினும் அதில்  ஒருவர் பதுக்கினால் அவர் நரகம் நுழைவார்.
  • அவரது ஈமானிலும் அது பாதிப்பை உண்டு பண்ணும்.
  • அவர் மோசடி செய்த பொருள் அற்பமானதாயினும் சரியே.
  • ஜிஹாதில் ஈடுபட்டார் என்ற சிறப்பை அவர் பெற மாட்டார். அதாவது ஷஹீத் எனப்பட மாட்டார்.
  • அவர் கொல்லப்பட்டால் புனித உயிர்த்தியாகத்தின் சிறப்புக் கிட்டாது.

அர்ப்பமான செருப்பின் வார் கூட நெருப்பாக மாறும் :

 حديث أَبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: (افْتَتَحْنَا خَيْبَرَ وَلَمْ نَغْنَمْ ذَهَبًا وَلا فِضَّةً، إِنَّما غَنِمْنا الْبَقَرَ وَالإِبِلَ وَالْمَتاعَ وَالْحَوائِطَ، ثُمَّ انْصَرَفْنا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم إِلى وادي الْقُرى وَمَعَهُ عَبْدٌ لَهُ يُقالُ لَهُ مِدْعَمٌ، أَهْداهُ لَهُ أَحَدُ بَني الضِّبابِ؛ فَبَيْنَما هُوَ يَحُطُّ رَحْلَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم إِذْ جاءَهُ سَهْمٌ عائِرٌ حَتّى أَصابَ ذَلِكَ الْعَبْدَ فَقالَ النَّاسُ: هَنيئًا لَهُ الشَّهادَةُ فَقالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: بَلى وَالَّذي نَفْسِي بِيَدِهِ إِنَّ الشَّمْلَةَ الَّتي أَصابَها يَوْمَ خَيْبَرَ مِنَ الْمَغانِمِ لَمْ تُصِبْها الْمَقاسِمُ لَتَشْتَعِلُ عَلَيْهِ نارًا فَجاءَ رَجُلٌ، حِينَ سَمِعَ ذَلِكَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم، بِشِراكٍ أَوْ بِشِراكَيْنِ، فَقالَ: هذا شَيْءٌ كُنْتُ أَصَبْتُهُ فَقالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: شِراكٌ أَوْ شِرَاكانِ مِنْ نارٍ).

 கைபர் யுத்தத்தின் போது எதிரிகளது அம்பெய்தலுக்கு இலக்காகிக் கொல்லப்பட்ட மித்அம் என்பவரைப் பார்த்து 'அவர் உயிர்த்தியாகம் செய்திருப்பதால் வாழ்த்துக்கள்" என ஸஹாபாக்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் குறிக்கிட்டு ''முஹம்மதின் உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் (அல்லாஹ்) மீது ஆணையாக கைபரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள் பங்கிடப்படுவதற்கு முன்னர் அவற்றிலிருந்து அவர் அபகரித்த ஒரு சிறிய போர்வை (ஷம்லா) அவர்மீது நெருப்பாகப் பற்றி எரிகிறது"" என்றார்கள். இதுகேட்டு மக்கள் பதட்ட முற்றிருக்கையில் செருப்பின் ஒரு தோல் வார் அல்லது இரண்டு வார்களை எடுத்துக் கொண்டு அங்கு வந்த ஒரு நபர் 'இவை கைபரில் நான் (திருட்டுத்தனமாகக கனீமத்திலிருந்து) எடுத்தவை" என்றார். அதுகேட்ட நபியவர்கள் ''நெருப்பிலான ஒரு வார் அல்லது நெருப்பிலான இரண்டு வார்கள்"" என்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 183)

சிறிய நகை; பெரிய பகை:
கைபரின் போது இறந்த இன்னுமொரு நபருடைய ஜனாஸாவுக்கான தொழுகையை நடாத்தி வைப்பதற்கு நபியவர்கள் மறுத்தார்கள். அப்போது அங்கிருந்தோர் ஆச்சரியமுற்று ஏன்’’ என்று வினவ  ''அவர் அல்லாஹ்வின் பாதையில் போராடிக் கொண்டே யுத்தப் பொருளைத் திருடியிருக்கின்றார்"" என்று நபியவர்கள் கூறியதாகவும் அவரது பொட்டலங்களை ஸஹாபாக்கள் ஆராய்ந்து பார்த்த போது இரண்டு திர்ஹம்கள் கூட பெறுமதியற்ற யூதர்களது ஆபரணமொன்று அங்கு கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (முஅத்தா மாலிக், அஹ்மத் : அபூதாவூத்
அமானிதங்களை நிறைவேற்ற வேண்டும்

நரகின் நெருப்பும் உண்டு; நாயனின் வெறுப்பும் உண்டு :

 قال النبي صلى الله عليه وسلم: (لكل غادر لواء يعرف به يوم القيامة) [متفق عليه]

ஏமாற்றுப் பேர்வழி என்று அடையாளக் கோடி ஒன்று அவனுக்கு மறுமையில் கொடுக்கப்படும் 

அபகரிப்பின் வடிவங்கள்:

யுத்தத்தில் கிடைத்த பொருட்கள் மட்டுமல்ல வக்ப் சொத்துக்கள், அநாதைகளது உடைமைகள், அரசசார்பற்ற நிறுவனங்களது சொத்துக்கள், அரச சொத்துக்கள், பைத்துல்மால் சொந்தமான பொருட்கள் என்பவற்றை கையாளும் போதும் இதே எச்சரிக்கை உணர்வு அவசியமாகும். பெரும்பாலானோர் இந்த விசயத்தில் மிகுந்த அசிரத்தையோடு நடந்து கொள்கின்றார்கள். அலுவலகத் தொலைபேசி, காகிதங்கள், அரசாங்க வாகனம் மற்றும் உடமைகள் போன்றவற்றை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்  இது பெரிய குற்றமாகும்.

ஊதியத்துக்கு மேலாக...

அரசுகளும் கம்பெனிகளும் வேலையாட்களுக்குக் குறிப்பிட்ட அளவு சம்பளத்தை வழங்குகின்றன. ஆனால், அத்தொகையை விட அதிகமான அளவைப் பெற்றுக் கொள்ள ஒருவர் குறுக்குவழிகளை நாடினால் அது ஹராமான சம்பாத்தியமாகவே இஸ்லாத்தில் கணிக்கப்படும்.

நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்
قال رسول الله صلى الله عليه وسلم :"أيما عامل استعملناه وفرضنا له رزقا فما أصاب بعد رزقه فهو غلول " صحيح على شرط الشيخين.


 ''நாம் நமது ஒருவரை அதிகாரியாக நியமித்து சம்பளமாக அவருக்கு ஒரு தொகையைக் கொடுக்கையில் அதற்கு மேலதிகமாக அவர் எடுத்தால் அது (குலூல்) அபகரிப்பாகும்"". (அபூதாவூது)


ஏனெனில், பலவீனர்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் செலவிடப்பட வேண்டிய நிலையிலுள்ள அல்லது பொதுப்பணிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டிய பணத்தையே அவர் மோசடி செய்கின்றார் என்பதனால் தான் நபியவர்கள் இவ்வாறு கூறியிருக்கின்றார்கள்.

''உங்களில் ஒருவரை நாம் ஒரு பொறுப்புக்காக நியமித்து அவர் எம்மிடம் காட்டாமல் ஒரு தையல் ஊசியை அல்லது அதனை விட அற்பமான ஒரு பொருளi மறைத்தாலும் அது (குலூல்) மோசடியாகும். அதனை எடுத்துக் கொண்டு மறுமைநாளில் அவர் வருவார்.. .. உங்களில் ஒருவரை ஒரு பொறுப்புக்காக நாம் நியமித்தால் (அவர் சேகரித்த பொருள்) குறைந்த அளவாயினும் அதிக அளவாயினும் (அவை அனைத்தையும், அவர் எம்மிடம்) எடுத்து வரட்டும். அவருக்கு அப்பொருளிலிருந்து எந்த அளவு (நியாயமாக, சம்பளமாகவோ அல்லது சட்டபூர்வமாகவோ) வழங்கப்படுகிறதோ அந்த அளவை அவர் எடுத்துக் கொள்ளட்டும். அவர் எடுக்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டவற்றை அவர் விட்டு விடட்டும்"". (முஸ்லிம்,  1833)

கொஞ்சமும் லஞ்சமும் வேண்டாம் 

அதுமட்டுமின்றி அபூஸயீத் (ரழி) அவர்களது கருத்துப்படி அதிகாரிகள் குடிமக்களிடம் இருந்து பெறும் அன்பளிப்புக்கள் (கையூட்டு கூட (குலூல்) மோசடியாகவே அமையும்.


 استعمل النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏رجلا من ‏ ‏الأزد ‏ ‏يقال له ‏ ‏ابن اللتبية ‏ ‏على ‏ ‏صدقة ‏ ‏فجاء فقال هذا لكم وهذا أهدي لي فقام رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏على المنبر فقال ‏ ‏ما بال العامل نبعثه فيجيء فيقول هذا لكم وهذا أهدي لي أفلا جلس في بيت أبيه وأمه فينظر أيهدى إليه أم لا والذي نفس ‏ ‏محمد ‏ ‏بيده لا يأتي أحد منكم منها بشيء إلا جاء به يوم القيامة على رقبته إن كان بعيرا له ‏ ‏رغاء ‏ ‏أو بقرة لها ‏ ‏خوار ‏ ‏أو شاة ‏ ‏تيعر ‏ ‏ثم رفع يديه حتى رأينا عفرة يديه ثم ‏ ‏قال اللهم هل بلغت ثلاثا ‏


நபி (ஸல்) அவர்க்ள இப்னு லுத்பியா என்பவரை ஸகாத் சேகரிக்க அனுப்பினார்கள். தான் சேகரித்த பொருட்களில் ஒருபகுதியைச் சுட்டிக்காட்டிய லுத்பியா அவர்கள் அவை ஸகாத் பணம் என்றும் வேறு ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி அவை தனக்கு அன்பளிப்பாகக் கிடைத்தவை என்றும் கூறிய போது நபியவர்கள் 'இவர் தனது தாயின், தகப்பனின் வீட்டில் இருந்திருந்தால் இந்த அன்பளிப்புக்கள் கிடைத்திருக்குமா? என்று வினவி விட்டு ''எவன் கைவசம் என் ஆத்மா உள்ளதோ அவன் மீது சத்தியமாக, அவர் (லுத்பியா) இந்தப் பொருட்களில் எதனையும் எடுக்கலாகாது. அப்படி எடுத்தால் (மறுமையில்) அதனைத் தனது கழுத்தில் சுமந்து கொண்ட தான் அவர் வருவார்.."" என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தனது இரண்டு கைகளையும் கமுக்கட்டு தெரியுமளவுக்கு உயர்த்தி, அல்லாஹ்வே நான் எத்தி வைத்து விட்டேனா?"" என்று கேட்டார்கள். (முஸ்லிம்)


அதிகாரிகள் பொதுமக்களிடம் லஞ்சத்தை அல்லது அன்பளிப்புக்களைப் பெறுகின்ற பொழுது மறுபுறத்தில் சமூகக் கடமைகளில் அவர்கள் கோட்டை விடுவதற்கு ஈடாகவே அவற்றைப் பெறுவார்கள். பக்கசார்பான தீர்ப்புகளை வழங்குவதற்கோ வரியிலிருந்து லஞ்சம் வழங்குவோரை விலக்கிக் கொள்வதற்கோ, விஷேச சலுகைகளை அவர்களுக்கு வழங்குவதற்கோ அதிகாரிகள் லஞ்சத்தை அல்லது அன்பளிப்பைப் பெறுவது முழு சமுதாயத்திற்கும் எதிராக அவர்கள் இழைக்கும் துரோகமாகும். அப்படியான நடைமுறைகள் இருக்கும் சமுதாயம் குட்டிச்சுவராகி சின்னாபின்னப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.


பெருமக்களின் பேணுதல்
அவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்டார்கள். தமக்குக் கிடைத்த அதிகாரங்களையும், பதவிகளையும் அமானிதமாகவும் அல்லாஹ்வுக்கு கணக்குக் காட்ட வேண்டி பொறுப்புக்களாகவுமே கணித்து கடமை உணர்ச்சியின் உச்சத்திலிருந்து செயல்பட்டிருக்கின்றார்கள்.


மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கையில் தனது மகள் ஆயிஷா (ரலி) அவர்களை அழைத்து, தன்னிடம் இருந்த பைத்துல்மாலுக்குச் சொந்தமான ஓர் ஒட்டகத்தையும், அடிமை ஒருவரையும், கந்தலான, மயிர்கள் கொட்டிய ஒரு துணியையும் பைத்துல்மாலில் சேர்த்து விடும்படி பணித்தார்கள். அவர்களது மரணத்தின் பின் அவை மூன்றையும் எடுத்துக் கொண்டு ஒருவர் புதிய கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் வந்து விசயத்தைக் கூறிய பொழுது, உமர் (ரலி) அவர்கள் பூமியில் கண்ணீர் சிந்தும் வரை அழுதார்கள். ஆனால், அவற்றை பைத்துல்மாலில் சேர்க்கவே அவர்கள் விரும்பினார்கள். இதுபற்றி அறிந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவாகள் 'இவற்றை அபூபக்கரின் குடும்பத்தாரிடமிருந்து பறிக்கப் பார்க்கின்றீர்களா? அவர்களிடம் மீண்டும் ஒப்படையுங்கள்" என்று கூறிய பொழுது, உமர் (ரலி) அவர்கள், ''எனது ஆட்சியில் இது நடக்காது"" என்றார்கள்.

உமர் (ரலி) தனது மகனின் ஒட்டகையொன்று சந்தையில் நிற்கக் கண்டார்கள். அதன் உடல் முன்னரைவிடச் சற்றுப் பருத்திருந்தது. அதனை மேய்த்தவர் மிகவுமே சிறந்த புல் தரையில் அதனை மேய்த்திருக்கலாம் என்றும் கலீபாவின் மகனது ஒட்டகை என்பதற்காக இந்த வரப்பிரசாதத்தை அவர் ஒட்டகைக்குப் பெற்றுக் கொடுத்திருக்கலாம் என்றும் நினைத்தார்கள். அதாவது. அரச செல்வாக்கினால் இப்படி நடந்திருக்கலாம் என்பது அவர்களது கணிப்பாக இருந்தது. எனவே, அதனை விற்று அதன் பெறுமதியை பைத்துல்மாலில் சேர்த்து விடும்படி அவர்கள் தனது மகனைப் பணித்தார்கள்.

ஒரு தடவை அலி (ரலி) அவர்கள், போர்வையொன்றால் போர்த்திக் கொண்டிருந்த போதிலும் குளிரால் அவர்கள் நடுங்கிக் கொண்டிருந்ததைக் கண்ட அன்தாரா (ரலி) அவர்கள் ''உமக்கும், குடும்பத்தாருக்கும் பைத்துல்மாலிலிருந்து ஒரு பங்கை அல்லாஹ் வைத்திருக்கின்றான். அப்படியிருக்க நீர் குளிரால் நடுங்குவதா?"" எனக் கேட்டார்கள். அப்போது அலி(ரலி) அவர்கள், ''அல்லாஹ் மீது சத்தியமாக நான் உங்களது இந்த (பைத்துல்மால்) பணத்திலிருந்த எந்த ஒரு பகுதியையும் எடுத்து அதனைக் குறைத்து விட மாட்டேன். இந்தப் போர்வையும் கூட எனது வீட்டிலிருந்த நான் பெற்றது தான்"" என்றார்கள். (அல் பிதாயா பாகம் 7, பக் - 3)


தடுக்கப்பட்ட வழியில் பெற்ற உணவை உண்டு ஆடை உடுத்தி நிற்பவனது பிரார்த்தனை கூட அங்கீகரிக்கப்பட மாட்டாது. (முஸ்லிம்)

அல்குர்ஆனிலும் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் :


وَلاَ تَأْكُلُواْ أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ 
''உங்களுக்கு மத்தியில் உங்கள் சொத்து செல்வங்களை அநியாயமான முறையில் புசிக்காதீர்கள்"" (2:188) 


''அதிகமான யூத அறிஞர்களும், கிறிஸ்தவ பாதிரிகளும் மக்களது சொத்துக்களை அநியாயமான முறையில் புசிக்கிறார்கள்"". (9:34)

''அநாதைகளின் சொத்துக்களை மிகவுமே சிறந்த வழிமுறையில் அன்றி நீங்கள் (கையாள வேண்டாம்) அணுக வேண்டாம்"". (6:152)

விசுவாசிகளே! நீங்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் துரோகம் செய்யாதீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அடைமானங்களுக்கும் (பதவிகள், பொருட்கள்) நீங்கள் மோசடி (துரோகம்) செய்யாதீர்கள். (8:28)

எனவே, அல்லாஹ்வின் சந்நிதியில் பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சத்தோடு சிறிய, பெரிய அனைத்துப் பொறுப்புக்களையும் சொத்துக்களையும் கையாள்வது அவசியமாகும். குறிப்பாக, அடியார்களுக்கு வழங்க வேண்டிய பொருள்கள் உரிமைகள் விசயத்தில் இஸ்லாம் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்திருப்பதை மறக்காமல் செயல்படுவது அனைவரதும் தலையாய கடமையாகும்.


:"إِنَّ اللّهَ يَأْمُرُكُمْ أَن تُؤدُّواْ الأَمَانَاتِ إِلَى أَهْلِهَا وَإِذَا حَكَمْتُم بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُواْ بِالْعَدْلِ إِنَّ اللّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ إِنَّ اللّهَ كَانَ سَمِيعاً بَصِيراً "{58}النساء

''அமானிதங்களை அதற்குரியவர்களிடம் ஒப்படைக்கும் படியும் நீதமாக தீர்ப்பளிக்கும் படியும் அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகிறான் ''


மோசடி செய்யாமல் நீதமாக நேர்மையாக வாழ்பவன்தான் சுவனம் நுழைய முடியும் :
عن ثوبان -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: (من فارقت روحه جسده وهو بريء من ثلاث دخل الجنة: الغلول، والدين، والكبر)، رواه الترمذي

.மூன்று விஷயங்களை விட்டும் நீங்கிய நிலையில் யாருடைய உயிர்
 பிரிந்ததோ அவர் சுவர்க்கம் நுழைவார் மோசடி, கடன், தற்பெருமை