20 ஜூன், 2013

பராஅத் சிறப்புக் கட்டுரை


இது குறித்து கடந்த ஆண்டு நான் பதிவு செய்த கட்டுரையை வாசிப்பதற்கு முன் இந்த தகவலையும் சேர்த்துக் கொள்ளலாம் :

 நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள ஏனைய மாதங்களில் கூடுதலாக நோன்பு நோற்ற ஒரு மாதமென்றால் அது ஷஃபான் மாதம் மான் என்பதை ஹதீஸ்களில் மூலம் நாம் காணலாம். இதன் மூலம் ஷஃபான் மாத நோன்பின் சிறப்பையும் அதன் மகத்துவத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.

16 ஜூன், 2013

இல்லற வாழ்க்கையில் வள்ளுவரும் வாசுகியும்

இல்லறம்
உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அவரது மனைவி வாசுகி தான்.

அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று வினவியதற்கு ''அன்னம்  புறத்து சிதறினால் அதை எடுத்து சுத்தம் செய்து உண்ணவேண்டும். அது விசாலமான இரணத்தை தரும்'' என்றார். 
வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவருக்கும், வள்ளுவருக்கும் துறவறம் பெரிதா, இல்லறம் பெரிதா என்ற பேச்சு எழுந்தது. வள்ளுவர் இல்லறத்தின் பக்கம் நின்றார். அவர்கள் சாப்பிட ஆரம்பித்தனர். வாசுகி அவர்களுக்கு பழைய சாதம் பரிமாறினார். பின், கிணற்றுக்கு தண்ணீர் எடுக்கச் சென்று விட்டார். வள்ளுவர் அவளை திடீரென அழைத்தார். "கிணற்றடியில் நிற்கிறேன், ஏதாச்சும் வேணுமினா போட்டுச் சாப்பிடுங்க' என்று கத்தவில்லை. அப்படியே கயிறை விட்டார். குடம் கிணற்றுக்குள் விழவில்லை. அப்படியே நின்றது. உள்ளே வந்த அம்மையாரிடம், ""இந்த சோறு சுடுகிறது,'' என்றார். அம்மையார் பதிலேதும் பேசாமல், விசிற ஆரம்பித்து விட்டார். பழைய சோறு எங்காவது சுடுமா? இருப்பினும், வாசுகி கணவரைக் கேள்வி ஏதும் கேட்காமல் பணிவிடை செய்தார். துறவி ஆச்சரியப் பட்டார். வள்ளுவர் நெசவுத்தொழில் செய்பவர். தறியின் ஓடத்தை பட்டப்பகல் வேளையில் கீழே போட்டு விட்டு, ""வாசுகி, ஓடம் கீழே விழுந்து விட்டது. விளக்கை எடுத்து வா,'' என்றார். பகலென்றும் பாராமல், கேள்வி கேளாமல் அம்மையார் விளக்கை எடுத்து வந்தார். கணவனின் சொல் கேட்கிற மனைவி மட்டும் கிடைத்து விட்டால், துறவறத்தை விட இல்லறமே மிகச்சிறந்தது என்றாராம் அந்த பெரியவர்.

இத்தகைய அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். ''நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு'' என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தப் புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,
அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு
என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!


08 ஜூன், 2013

ஏமாறாதே! ஏமாற்றாதே!க்கம் என்னும் அரசன் ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்த காலம்.
ஒருநாள் அவர் நகரை வலம் வந்தபோது ஒரு அழகான நிலத்தைப் பார்த்தார். அதனால் கவரப்பட்ட அவர் அந்த இடத்திலே தமக்கென மாளிகை ஒன்றை கட்டிக் கொள்ள விரும்பினார்
அந்த நிலம் ஒரு கிழவிக்கு உரியது. அதிலே ஒரு குடிசை அமைத்து குடியிருந்தாள். அந்த நிலத்திற்கு நியாமான ஒரு விலையைக் கொடுக்க அரசர் முன்வந்தார் அக்கிழவி விற்க மறுத்துவிட்டாள். 'தன் கணவரோடு வாழ்ந்த குடிசையே தனக்கு அரண்மனை' என்றாள்.
அரசருக்கு ஆத்திரம் வந்தது.

05 ஜூன், 2013

S S AHAMED BAQAVI: மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!!

S S AHAMED BAQAVI: மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!!: سُبۡحَـٰنَ ٱلَّذِىٓ أَسۡرَىٰ بِعَبۡدِهِۦ لَيۡلاً۬ مِّنَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ إِلَى ٱلۡمَسۡجِدِ ٱلۡأَقۡصَا ٱلَّذِى بَـٰرَكۡنَا حَوۡلَهُ ۥ ل...

04 ஜூன், 2013

நினைவு யாவும் உங்கள்மீது யா ரசூலல்லாஹ்நினைவு யாவும் உங்கள்மீது யா ரசூலல்லாஹ்
நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ்
அணைந்திடாத உலகஜோதி யாய்த் தோன்றி
அகில மெங்கும் ஒளிதெளித்த யா ரசூலல்லாஹ்
         (-நினைவு)

மதீனா நகர்க் கொருநாள் நான்வருவேன்
மன்னவர் பூவடி கண்ணால் தொடுவேன்
நதியென அருட்கடலில் நான் விழுவேன்
நபியே கதியென்றங்கு நான் அழுவேன்
எந்தன் மீது உங்கள் பார்வை பட்டநேரமே
பிந்திடாமல் பிரிய வேண்டும் இந்த ரூஹுமே !
                (-நினைவு)

காணும் வரையில் கண்கள் தூங்காது !
காதலில் எந்த நெஞ்சம் ஏங்காது !
வானில்லாமல் நிலம் வாழாது
வாடல் தொடர உள்ளம் தாங்காது !
ஒளியைத் தேடும் விட்டிலாக நானும் மாறுவேன்
உம்மத்தென்ற பெருமையோடு வந்து சேருவேன் !
                 (-நினைவு)

உலகில் வாழவந்த உயிர்கள் யாவும்
உம்மி ரசூலே உங்கள் புகழ்பாடும் !
அருளாய் வந்திலங்கும் மறைமூலம்
அல்லாஹு போற்றும் மனித அனுகூலம் !
இரண்டு வாழ்வின் பொருளைச் சொன்ன இதயதீபமே
இறுதித் தூதராகவந்த இறையின் ஞானமே !
          (-நினைவு)