09 மே, 2013

தோல்வியின்றி வரலாறா? துக்கமென்ன என் தோழா!


பத்துகளும் துன்பங்களும் ஏற்படவும் வேண்டும்; அவற்றை துணிவோடு வெல்லவும் வேண்டும் . அதுவே ஆண்மகனுக்கு அழகு '' என்பார் அவ்ரங்கசீப் (ரஹ் )
எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக யாருக்கும்  இறைவன் வழங்கியதில்லை.
பிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இலாமல் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்?
கண்களை மூடிக்கொண்டு எண்ணிப் பாருங்கள்.
ஒரு கட்டம் அப்படி என்றால்மறு கட்டம் இப்படி!


ஏற்றம் என்பது இறைவன் வழங்கும்பரிசு.
இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை.
சில நேரங்களில் ஏற்றமும் சோதனையாக அமையலாம்

  • வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது.
  • குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன.
  • நிலங்கள் வறண்ட பின்தான் பசுமை யடைகின்றன.
  • மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன.
  • இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான்.
  • நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
  • முதற்கட்டம் வரவு என்றால்அடுத்தக் கட்டம் செலவு.
  • முதற்கட்டம் இன்பமென்றால்அடுத்தக்கட்டம் துன்பம்.
  • முதற்கட்டமே துன்பமென்றால்அடுத்த கட்டம் இன்பம் இறைவனது தராசில் இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்குகின்றன.ووضعنا عنك وِزْرَكَ، الذي أنقض ظهرك، ورفعنا لك ذكرك، فإنّ مع العسر يسراً، إنّ مع العسر يسراً 
நிச்சயமாக கஷ்டத்துடன் சௌகரியம் இருக்கின்றது. 
 سيجعلُ اللّهُ بعد عسرٍ يسراً 65:07உஸைர் அலை அவர்கள் பாழடைந்த ஊரைக் கண்டு இதை எப்படி அல்லாஹ் செழிப்பாக்க போகிறானோ என்று நினைக்க அல்லாஹ் அவர்கள நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்து உயிர் கொடுத்து எழுப்பியதோடு மாத்திரமல்லாமல் அந்த பாழடைந்த ஊரையும் செழிப்பாக்கிக் கட்டினான் என்பது குர்ஆன் கூறும் வரலாறு 
இதன் மூலம் இறைவன் சொல்ல வரும் செய்திகளில் ஒன்று :அழிந்து நாசமானதைக் கூட அவன் நாடினால் மீண்டும் பூரணப் பொலிவோடு மாற்றியமைக்க முடியும்
எந்த துன்பமும் நிரந்தரமல்ல.. எல்லாம் மாறும்கஷ்டங்கள் என்பது மனித வாழ்க்கைக்குப் பொதுவான ஒன்றாகும். கஷ்டம் என்பது இல்லாது விட்டால் வாழ்க்கையில் உருவாகும் மகிழ்ச்சி சுவையாக இருக்காது. வீழாமல் இருப்பது பலம் அல்ல. மீண்டும் மீண்டும் வீழ்ந்து தைரியமாக எழுந்து நடப்பதில் தான் உண்மையான பலம் அடங்கியுள்ளது.
கஷ்டங்கள் துன்பங்கள் நேர்ந்த போது அவற்றைத் திராணியோடு எதிர்த்து நின்று போராடிப் பெறும் இன்பம் தான் வாழ்வில் நிலையான இன்பம். தோல்வியே வெற்றியின் முதற்படி. 
 وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنْ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنْ الأَمْوَالِ وَالأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرْ الصَّابِرِينَ* الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ* أُوْلَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُوْلَئِكَ هُمْ الْمُهْتَدُونَ[البقرة:151-157]

(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும் பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.


கஷ்டம் என்று நினைத்தால் கடுகும் கூட கடக்க முடியாத மலையாகிவிடும். கஷ்டங்களை இஷ்டமுடன் ஏற்று அவற்றைக் களைந்து முன்னேறுவது தான் சிறக்க ஒரே வழி. கண்ணீரில் உழன்றவர்கள் பிற்காலத்தில் உலகம் போற்றும் உன்னதர்களாக உயர்ந்த கதைகளை நாம் அறிவோம்.


உலகையே தன நகைச்சுவையால் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் சார்ளி சாப்ளின் அவரது ஆரம்ப கால வாழ்க்கை அநேக கஷ்டங்களும் சிரமங்களும் நிறைந்தது. அப்பன் குடிகாரன். சம்பாதித்தைஎல்லாம் சல்லிக்காசு கொடுக்காமல் சாராயத்தில் வீனாக்கியவன். தாயும் தந்தையும் பிரிந்ததால் சின்ன வயதிலேயே குடும்பச் சுமைகளைத் தாங்கவேண்டிய நிலை. அதன் பின்னர் இல்லற வாழ்க்கையாவது இனிமையாக இருந்ததா என்றால் இல்லை. பல துன்பங்கள் வந்தபோதும் துவண்டு விடாமல் தொடர்ந்து போராடி தானும் சிரித்து பிறரையும் சிரிக்க வைத்தார். ஒரு நேரத்தில் எந்த அமேரிக்கா விரட்டியதோ அதே அமேரிக்கா அழைத்து விருதும் பாராட்டும் வழங்கியபோது அவரை சூழ நின்று நிருபர்கள் பேட்டி கண்டார்கள் வாழ்க்கை முழுதும் போராட்டக் களமாய் இருந்தும் எப்படி ஜெயித்தீர்கள்? அவர் கூறிய வார்த்தை : எல்லாம் மாறும் என்று நம்பினேன் துன்பமோ இன்பமோ எல்லாம் மாறும் இதுதான் என் வெற்றியின் தாரக மந்திரம் 
ஆதம் அலை அவர்கள் தொடுத்து அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் வரை நபிமார்கள் படாத கஷ்டமா? இந்த உலகிலேயே அதிகம் இன்னலுக்கு ஆளானவர்கள் என்றால் அது தீர்க்கதரிகள்தான்
فالأنبياء أكمل الناس إيماناً و أكثرهم بلاءً ، و ذلك لأن الابتلاء على قدر العطاء ، فقد قال ربنا تعالى : { لِيَبْلُوَكُمْ فِي مَا آتَاكُمْ } [ المائدة : 48 ] .
و ابتلي نبي الله يوسف عليه السلام بالطعن في أمانته حينما قال إخوته : { إِنْ يَسْرِقْ فَقَدْ سَرَقَ أَخٌ لَهُ مِنْ قَبْلُ } [ يوسف : 77 ] 
ابتلي إبراهيم عليه السلام في أبيه الذي كان يصنع أصناماً تعبد من دون الله ، و ابتلي في جسمه فقذف في النار ، و ابتلي في ولده و فلذة كبده فأمر بذبحه ، و ابتلي إلى ذلك بابتلاء من نوع خاص ، و هو تحميله أمانة الإمامة ، حيث قال تعالى : { وَ إِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَ مِنْ ذُرِّيَّتِي قَالَ لا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ } [ البقرة : 142 ]

அண்ணலார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ,இப்ராஹீம் அலை போன்றோர் அதிகம் சோதிகப்பட்டவர்கள் எனலாம்.
அதுபோல நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் ௯௫௦ வருட தீவிர பிரச்சாரத்திற்குப் பின் ஒரு வழியாக என்பது சொச்சம் நபர்கள் மாத்திரம் ஈமான் கொண்டு மற்றவர்கள் எல்லாம் மறுக்கவே அவர்களை ஆழிப்பேரலையில் அழிக்கவும்  கலிமா சொன்னவர்களைக் கப்பலில் காப்பாற்றவும் கட்டளை .
கட்டளையை சிரமேற் தாங்கி கப்பல் கட்டுகிற பணியில் நபியவர்கள் மும்முரமாய் ஈடுபடும்போது ஈனர்கள் வந்து இழிவாய்ப் பேசினார்கள் நபியை நையாண்டி செய்தார்கள் அதுமட்டுமல்ல.. கப்பலை சேதப்படுத்தினர். திரும்பவும் கப்பல் கட்ட ஆரம்பிப்பார்கள் சிலநாள் கழித்து மீண்டும் வந்து கைவரிசையை காட்டிவிட்டுப் போவார்கள் அல்லாஹ்வின் தூதர் அசரவில்லை அரும்பாடு பட்டு பல நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு ஒரு வழியாக வெற்றிகரமாக முடித்தார்கள். தோல்வியைக் கண்டு துவண்டிருந்தால் தூய்மையான தூதுப்பணிக்கு அது அடுக்குமா?
மஹ்மூது கஸ்னவி ரஹ் அவர்கள் இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்துத் தோற்று அதன்பின்னும் அயராமல் முயன்று வெற்றி கண்டார் என்று வரலாறு கூறும்.
தாமஸ் ஆல்வா எடிசன் பல்பை எரியவைக்கும் முயற்சியில் இரண்டாயிரம் முறை தோற்று அதன்பின் ஜெயித்தார். அவர் கூறுவார்: ஒரு பல்பை எரியவைக்கும் முயற்சியில் நான் இரண்டாயிரம் முறை தோற்றேன் என நினைக்கவில்லை ஒரு பல்பு எதனால் எல்லாம் எரியாது என்பதற்கு இரண்டாயிரம் காரணங்களை கண்டறிந்துவிட்டேன் அல்லவா? அதுவும் வெற்றிதானே ?
 100 முறை தோல்வியடைந்த ஒருவர் 101 ஆவது முறை வெற்றியடைந்துவிட முடியும் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன். எனக்கு அபாரமான அறிவும் ஆற்றலும் இருப்பதால்தான் நான் வெற்றி பெறுவதாகச் சிலர் சொல்கிறார்கள். அது என் நண்பர்கள் கூறும் புகழ்ச்சி உரையே தவிர அதில் உண்மையில்லை என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன். 
விடா முயற்சியுடன் தொடர்ந்து பாடுபடுபவர்களும் என்னைவிடச் சிறப்பான வெற்றிகளைப் பெற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் தாமஸ் ஆல்வா எடிசன். ( True facts of Thomas Alva Edison ).

 சமாதானத்துக்காக நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனாலும் அவர் நிச்சயமாக ஒருநாள் வெற்றிபெற முடியும் என்ற உறுதியோடு தன் பணியை இனிதே நிறைவேற்றினார். வெற்றியும் பெற்றார். துன்பங்கள் தொடராக வந்த போதிலும் அவர் தன் செயலில் உறுதியாக நின்றார். கஷ்டங்களில் கவனம் செலுத்தாது செயலிலேயே உறுதியாக நின்றார்.

வாழ்க்கை வீதியிலே ஏற்பட்ட இன்னல்களை இடையூறுகளை அவர் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. கஷ்டத்தைக் கண்டு காததூரம் ஓடவில்லை. பயத்தைக் கண்டு பதற்றமடையவில்லை. தான் கொண்ட கருமம் தான் முக்கியம் என்று கருதினார். செயலிலேயே கண்ணாகினார். ஆதலால் அவரின் செயல்கள் அனைத்திலும் வெற்றி ஒளியே பரவியது.
ஒருமுறை ஏழைகளுக்கும் தொழு நோயாளிகளுக்காகவும் நன்கொடை கேட்டு வீதிவீதியாக  சென்றார் ஒரு செல்வந்தரிடம் உதவி கேட்டு கை நீட்டியபோது அவன் அவரை அவமானப் படுத்தும் நோக்கில் காரி கைகளில் உமிழ்ந்தான் அன்னை தெரசா ஆத்திரப்படவில்லை அமைதியாக எச்சிலை துடைத்துவிட்டு மீண்டும் கை நீட்டினார் எனக்கு எச்சில் தந்தாய் ஏழைகளுக்கு என்ன தரப்போகிறாய்/? அவன் அப்படியே பிரமித்துப் போனான் இப்படியும் ஒரு பெண்மனியா? கைநிறைய காசை எடுத்து கையிலே தந்துவிட்டு கையெடுத்து கும்பிட்டான்.

இடுக்கண் வருங்கால் நகுக; அதனைஅடுத்தூர்வ தஃதொப்ப தில்
என்றான் வள்ளுவன்.
சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.
தாமஸ் ஆல்வா எடிசனின் வாக்குக்கு ஏற்ப பிடிவாதமும், திரும்ப, திரும்ப அச்செயலை செய்து, செய்து விழுந்து.. எழுந்து.. மீண்டும் விழுந்து.. எழுந்து.. தட்டுத் தடுமாறி எழுந்து நிற்கத்தான் வேண்டும். அப்போதுதான் நாம் நினைக்கும் செயல் வெற்றியடையும். அறிஞர் ஒருவர் சொன்னது போல எத்தனை முறை விழுந்தாய் என்பது முக்கியமல்ல.. எத்தனை முறை எழுந்து நின்றாய் என்பதுதான் முக்கியம். 
விழுந்து கிடந்தால் சிலந்தி வலையும் உன்னை சிறை பிடிக்கும் 
எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு சிரம் பணியும் 

அறிஞர் லுக்மான் அலைஹிஸ் சலாம் தன் மகனை அழைத்துக் கொண்டு அவசரமாக ஒரு ஊருக்கு செல்கிறார்கள் வழியில் ஒரு காட்டுப் பகுதியில் மகனின் காலில்முள் தைத்து இரத்தம் வழிகிறது. கடுமையான வலி. நடக்க முடியவில்லை. சரி இன்றிரவு இங்கேஏ பொழுதைக் கழித்துவிட்டு வலி குறைந்ததும் பயனிக்க்லாலம் என்று அங்கு தங்குகிறார்கள் மறுநாள் காலையில் புறப்பட்டு அந்த ஊருக்கு சென்று பார்த்தபோது ஒரே மயானமாக காட்சசி தந்தது . அன்று அதிகாலையில் நடந்த பூகம்பத்தில் அந்த ஊரே காணாமல் போயிருந்தது
மகனே ஒருவேளை முள் குத்தாமல் இருந்தால் இடையில் தங்காமல் வந்திருந்தால் நாமும் பூமிக்குள் புதையுண்டிருப்போம்  ஒரு சோதனையிலும் நன்மை

عجباً لأمر المؤمن، إن أمر المؤمن كله عجب، إن أصابته ضراء صبر عليها فكان ذلك خيراً له، وإن أصابته سراء ونعمة شكر الله عليها فكان ذلك خيراً له، وليس ذلك إلا للمؤمن"

செத்தும் கொடைகொடுத்தான் வள்ளல் சீதக்காதி குறித்து அறியாதார் யாரும் இருக்கமுடியாது சாதாரண ஒரு வியாபாரியாக இருந்த அவர் வறியவர்களுக்கு வாரி வாரி வழங்குகிற வள்ளலாக - கோடீஸ்வரராக ஆனதன் பின்னணியில் ஒரு பெரிய சோதனை இருந்தது.
ஒருமுறை அவர் பணியாட்கள் சகிதம் ஒரு கப்பலில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது வழியில் திடீரென கடும் புயல் . கப்பல் அங்குமிங்கும் அல்லோலகல்லோலப் பட்டது. இந்த ஆட்டத்தை நிறுத்தாவிட்டால் கப்பல் மூழ்கிவிடுமோ என்ற அபாயம். சீதக்காதி மனம் கலங்கவில்லை பணியாட்களை ஏவினார் அவர்கள சாக்கு பைகளை எடுத்துக்கொண்டு கடலில் குதித்தனர் அடியில் சென்று மணல்-கற்களை மூட்டைகளில் அள்ளி வந்தனர் கப்பலில் போட்டனர் சுமை கூடியதும் ஆட்டம் நின்றது ஒருவாறாக புயல் ஓய்ந்ததும் கப்பல் கரைய அடைந்தது அந்த சாக்குகளில் உள்ள சுமை இனி அவசியமில்லை கீழே  கொட்டி விடுங்கள் என்றார் கொட்டி பார்த்தபோது அவ்வளவும் பச்சை மரகதங்கள் பார்த்தீர்களா ஒரு சோதனையிலும் நன்மை

சோதனையின்போது பொறுமையாக இருந்தால் கிடைக்கிற மாபெரும் பரிசு
 أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات ولد العبد قال الله لملائكته قبضتم ولد عبدي فيقولون نعم فيقول قبضتم ثمرة فؤاده فيقولون نعم فيقول ماذا قال عبدي فيقولون حمدك واسترجع فيقول الله ابنوا لعبدي بيتا في الجنة وسموه بيت الحمد 

ஒரு அடியானின் குழந்தை வபாத்தாகிவிடால் அல்லாஹ் வானவர்களிடம் கேட்பான் என் அடியானின் ஈரக்குலையை கைப்பற்றி வந்தீர்களா? அவனின் குழந்தையை கைப்பற்றி வந்தீர்களா/ ''ஆமாம். யாஅல்லாஹ்.'' என் அடியான் என்ன கூறினான்?'' யா அல்லாஹ் உன்னைப் புகழ்ந்தான் இன்னா லில்லாஹி.. சொன்னான் ''  ''அப்படியா! உடனே அவனுக்காக் சுவனத்தில் ஒரு மாளிகை எழுப்புங்கள் அதற்கு புகழ் மாளிகை எனப் பெயரிடுங்கள்

நெருப்பின் சூட்டை தாங்குகிற தங்கம்தான் அணிகின்ற ஆபரணமாகும்
உளியால் செதுக்கப்படுகிற கல்லு தான் சிற்பமாகும்