28 பிப்ரவரி, 2013

உயர்ந்த உள்ளம் வேண்டும்


من سره أن ينجيه الله من كرب يوم القيامة فلينظر معسرا وليضع عنه » رواه مسلم في الصحيح  البيهقي

மறுமை நாளின் சிரமங்களிலிருந்து தன்னை அல்லாஹ் காப்பாற்ற வேண்டுமென விரும்புவர் இம்மையில் சிரமப்படுவோரின் சிரமத்தை நீக்கி உதவட்டும் (பைஹகீ, முஸ்லிம்)

ரபு நாட்டு வள்ளல் ஹாத்திம் தாயைப் பற்றி அறிந்திருப்போம் இல்லைஎன்று தம் இல்லம் மிதித்த யாருக்கும இல்லைஎன்று அவர் சொன்னதில்லை கேட்டு வந்துருக்கேல்லாம் கொடுத்து கொடுத்து கறைந்து போன அவர் ஒரு கட்டத்திலே இருக்க ஒரு இல்லமும் வாகனிக்க ஒரு வாகனமுமாய் இருந்த போது
நன்கொடை கேட்டு நான்கு பேர் அவரிடத்தில் வந்தனர் வந்தவர்களை வரவேற்று விருந்தளித்தார் விருந்து முடிந்து இருந்து பேசிக்கொண்டிருந்தபோது வந்தவர்கள் தன நோக்கத்தை சொன்னார்கள் அதைக்கேட்ட ஹாத்திம் தாய் என்னிடத்தில் இருப்பாதாய் பார்த்து கேளுங்கள் நான் இதுவரை யாருக்கும் இல்லைஎன்று சொன்னதில்லை இல்லாததைக் கேட்டு இல்லை எனற அந்த வார்த்தையை சொல்ல வைத்து விடாதீர்கள்
அவர்கள் சொனார்கள் இல்லை உங்களிடம் இருப்பதைத்தான் கேட்கப்போகிறோம் நாங்கள் உள்ளே வரும்போது வாசலில் பார்த்தோமே அந்த குதிரை. அரபு நாட்டிலேயே விலை உயர்ந்த அதிசய குதிரை அதையாவது நன்கொடை கொடுங்கள் என்று கேட்டபோது ஹாத்திம் தாய் அழுதார் நான் இதுவரைக்கும் சொல்லாத வார்த்தையை சொல்ல வைத்துவிட்டீர்களே அந்த குதிரை நீங்கள் வரும்போது வாசலில் இருந்தது உண்மைதான் ஆனால் பாசத்தோடு வந்த நீங்கள் பசியோடு செல்லக் கூடாதே என்று அதை அறுத்து உங்களுக்கு விருந்து வைத்துவிட்டேன் என்றார்
அவசிய தேவை இருந்தும் அதில் அடுத்தவருக்கு முன்னுரிமை அளித்தவர்கள் அந்த மேன்மக்கள் .இதுதான் உயர்ந்த உள்ளம் என்பது .

இது அரபு உலகில்தான் என்றில்லை தர்மத்தில் தமிழர்களும் குறைந்தவர்கள் அல்ல என்பதை பண்டைய வரலாறு பறைசாற்றும்

 மிழ் மூதாட்டி ஒளவையார் நீடுடி வாழ வேண்டும் என்று அவருக்கு, பழந்தமிழ் மன்னன் அதியமான் அரியவகை நெல்லிக்கனி ஒன்றை அளித்தான் என்பது நம்மில் பெரும்பாலோருக்கு தெரியும்.
விருந்தினராக வந்த தமிழ்ப் பெரும்புலவர் ஒளவை, நீண்ட நாள் வாழ்ந்து  தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கடும் முயற்சியால் கிடைத்த அருங்கனியை தான் உண்ணாது அவருக்கு வழங்கி மகிழ்ந்த அதியமானின் உயர்ந்த உள்ளத்தை என்ன சொல்வது !
காக்கையிடம் கூட இந்த நல்ல குணம் இருப்பதை நாம் பார்க்கலாம் 
''காலை எழுதல் காணாமல் புணருதல் 
மாலை குளித்து வீடு புகுதல் சால உற்றாரோடு உறவோடு உண்ணுதல் இவை யாவும் பெற்றேன் காக்கைப் பாடம் ''
என்று தமிழ் புலவர் காக்கியிடமிருந்து நாம் பெற வேண்டிய பாடத்தை படம் பிடித்துக் காட்டுகிறார்
  • அதிகாலை சீக்கிரமாகவே எழுந்து விடுதல்
  • மறைவாக உறவில் ஈடுபடுதல் (புறா ஜோடிகள் கொஞ்சுவதைப் பார்க்கலாம் குருவிகள கொஞ்சி குலாவுவதைக் காணலாம் ஆனால் காக்கைகள் கொஞ்சுவதை சாதாரணமாக காணமுடியாது இன்று கடற்கரை மணல்களிலும் பொதுமக்கள் கூடுகிற இடங்களிலும் பட்டவர்த்தனமாக படுத்துக் கிடக்கும் பரத்தைகளைப் பார்க்கிற காலம் இது. )
  • மாலை குளித்து வீடு புகுதல் காலையில் கிளம்பிச் சென்று காடெல்லாம் சுற்றிவிட்டு களைப்போடும் கடும் தூசியோடும் அப்படியே கூடு திரும்புவதல்ல அழுக்கான மேனியை அலசிவிட்டு வருவது காக்கைகளிடம் உள்ள அழகிய குணம்
  • உறவோடு இணைந்து ஒருவருக்கொருவர் கொடுத்து உண்ணுதல்
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள. - திருக்குறள் 
காக்கை தன ஒத்த காக்கைகளை கூவி அழைத்தே உண்ணும் அதுபோல உறவுகளோடு ஒட்டி வாழ்பவர்க்கே முன்னேற்றம் முகம் காட்டும் 

عن أنس بن مالك قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سره أن يبسط عليه رزقه أو ينسأ في أثره فليصل رحمه  النسائي


தன் ஆயுளில் அபிவிருத்தியும் வாழ்வாதாரத்தில் விசாலமும் ஏற்படவேண்டும் என விரும்புவர் தன இனபந்துக்களோடு இணைந்து வாழட்டும் (நசயீ)


நபியவர்கள் வேகமாக வீசும் காற்றைவிட அதிகமதிகம் வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்வார்கள். மொத்தத்தில் நபி (ஸல்) அவர்களிடம் யாராவது ஒருவர் ஒன்றைக் கேட்டு அதை அவர்கள் தராமல், 'இல்லை' என்று சொன்ன சரித்திரம் இல்லை.

எந்த அளவுக்கென்றால்...? மற்றவர்கள் அவர்களுக்குப் பிரியத்தோடு வழங்கிய அன்பளிப்புகளைக் கூட அடுத்த விநாடியே அதை விரும்பக்கூடிய ஒருவருக்கு இன்முகத்துடன் கொடுத்து விடுவார்கள்.

ஒருமுறை பெண்ணொருத்தி நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு சால்வையை அன்பளிப்பாக வழங்கினார். உடனே அதை நபியவர்கள் அணிந்தார்கள். அழகாக இருந்தது.
அதைக்கண்ட நபித்தோழர் ஒருவர், இறைத்தூதர் அவர்களே...! இது மிகவும் அழகாக உள்ளது. எனக்குப் பிடித்துள்ளது. நான் அதை அணிய விரும்புகிறேன். எனக்குத் தந்து விடுங்களேன் என்று கேட்டார்.

உடனே மறுபேச்சில்லாமல் நபி (ஸல்) அவர்கள் 'இதோ' என்று அதைக் கழற்றி அவரிடம் தந்து விட்டார்கள். அருகிலிருந்த தோழர்களுக்கு கடும் வருத்தம் ஏற்பட்டு, அவரைப் பார்த்துக் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் எதைக் கேட்டாலும் தந்து விடுவார்கள் என்ற துணிச்சலில்தானே, அதைக்கேட்டுப் பெற்றாய்? இப்போதுதான் அதை பிரியமுடன் நபியவர்கள் அணிந்தார்கள், பார்க்க அழகாகவும் இருந்தது. உடனே அதைக் கேட்டுப் பெற வேண்டுமா? ஒருநாள் கழிந்த பின்பாவது கேட்டிருக்கலாமே என்று கடிந்து கொண்டார்கள்.
அதற்கு அந்தத் தோழர் என்ன சொன்னார் தெரியுமா? தோழர்களே...! நபியவர்களிடமிருந்து அதைப்பறிக்க வேண்டும் என்ற சாதரண எண்ணத்தில், அதை நான் அவர்களிடம் கேட்கவில்லை. மாறாக... நான் இறந்த பின்பு, என் மீது போர்த்தப்படும் கஃபன் துணியாக, அது இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த எண்ணம் தான் அதைக் கேட்கத் தூண்டியது.

நபியவர்களுக்குத்தான் எவ்வளவு உயர்ந்த உள்ளம். அந்த தோழருக்குத்தான் எவ்வளவு தூய எண்ணம். நபியவர்களை நம்முடைய தலைவர் என்கிறோம், உயிரினும் மேலாக மதிக்கிறோம் என்று நாம் மார்தட்டி கூறுகிறோம்.

ஆனால்.... வறியோருக்காக, தேவைப்படுவோருக்காக எதையும் இன்முகத்துடன் இழக்கக்கூடிய ஓர் உயர்ந்த பண்பாட்டை நபியவர்கள் பெற்றிருந்தார்களே... அப்படியான ஓர் உயர்ந்த பண்பாடு, நம்மிடம் ஏற்பட்டுள்ளதா? சற்று யோசித்துப் பாருங்கள்.
உயர்கல்விக்கான ஆர்வம் இருக்கிறது. ஆனால், அதைத் தொடர முடியாமல் தவிக்கும் பல்துறை சார்ந்த அறிவு ஜீவிகள் சமூகத்தில் இருக்கின்றனர்.
வருமானம் இல்லாததால், வேறு வழியின்றி வட்டி வாங்கி அதில் சிக்கித் தவிப்போர் சமூகத்தில் நிறைய இருக்கின்றனர்.
 வறுமை காரணமாக வேலைக்;குப் பசியாற வழியின்றி பசியிலும், பட்டிணியிலும் கிடந்து தவிப்போர் உலகின் பலபாகங்களில் உள்ளனர்.
சிகிச்சை செய்ய வசதி இல்லாததால், நோய் ஏற்பட்டு, அந்த நோயுடனேயே வாழ்ந்து, அந்த நோயிலேயே உயிர் துறக்கும் பரிதாபத்துக்குறியோர் சமூகத்தில் உள்ளனர்.
கணவனால் கைவிடப்பட்டு, அல்லது விவாகரத்தாகி, தன்னையும் - பிள்ளைகளையும் பராமரிக்க வழியில்லாமல் தவிக்கும் ஒற்றைப் பெற்றோர்களும் சமூகத்தில் பரவலாக உள்ளனர்.
வறுமை காரணமாக மதமாற்றத்துக்கும், ஒழுக்கச் சீர்கேடுகளுக்கும் இலக்காகி நம்முடைய உயிரிலும் மேலான ஈமானை பலிகொடுத்து விடும் பலவீனர்களும் சமூகத்தில் நிறைய உள்ளனர்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு, இப்படிப்பட்டவர்களுக்கு நமது செல்வத்திலிருந்து வாரி வழங்கி, அவர்கள் வாழ்வில் ஒரு புதுவசந்தத்தைக் கொண்டு வர, எந்த வித முயற்சியம் எடுக்காமல், சும்மா விஷேச இரவுகளில் இறையில்லங்களில் சோத்துப் பொட்டலங்கள் வழங்குவதோடு நம் கடமை முடிந்து விட்டது என்று எண்ணுகிறோம் 


இன்று நம்மிலே பலர் செய்கிற உதவிகள் எந்த ரகம் தெரியுமா?

ஒரு பேருந்திலே பயணித்துக்கொண்டிருந்த பலருக்கு மத்தியில் ஒரு உயர்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் டிப்டாப்பாக கோர்ட் சூட்டுடன் அமர்ந்திருந்தார். நடத்துனர் டிக்கெட் எடுக்க அருகே வந்தபோது பாக்கெட்டில் தடவிப் பார்க்கிறார் பர்சைக் காணவில்லை எவனோ ஒருவன் ஆட்டைய போட்டுட்டான் என்ன செய்வதென்றே புரியவில்லை 

இறுதியில் கண்டக்டரின் காதருகே ரகசியமாய் சொன்னார் : ''சார் நான் இதே வண்டியிலேதான் பல  வருஷமா வர்றேன்’’ 
அவன் சொன்னான் ''நானும் இதே வண்டியிலேதான் பல வருஷமா வர்றேன் சொல்லுங்க என்ன விஷயம்?''
இல்ல.. டிக்கெட் எடுக்கணும்  பர்சைக் காணோம்’’
''யார்ட்ட காதுல பூ சுத்துற ? இப்படி எத்தனை பேருய்யா கிளம்பிருக்கீங்க''
அவன் காட்டுத்தனமா சத்தம் போட்டான். பர்ஸ் போனது கூட பரவாயில்லை மானமும் மரியாதையும் போனதே என்று மனம் கலங்கிக் கொண்டிருக்கும்போது நடத்துனர் ''கீழே இறங்குய்யா'' என்று அதட்டினான். வண்டியே வேடிக்கை பார்க்க பெருத்த அவமானத்தோடு அவர் இறங்க எத்தனித்தபோது அந்த வண்டியிலே இருந்த யாரோ  ஒரு ஆளு பரிதாபப் பட்டு , 'சே காலம் கெட்டுப் போச்சு ஒரு டிக்கெட் எடுத்துக் கொடுக்கிற அளவுக்கு கூட மனிதாபிமானம் இல்லாமப் போச்சே' என்று கூறி அவன் டிக்கெட் எடுத்து அந்த பெரியவர் கையில் கொடுத்து அவரை அமரவைத்தான்.
இரண்டு பேரும் இறங்க வேண்டிய இடம் வந்தது. பேருந்தை விட்டு இறங்கி செல்லும்போது அந்த பெரியவர் கையெடுத்துக் கும்பிட்டு தம்பி நீ நல்லா இருக்கணும் அறிமுகமே இல்லாத நீ ஒரு அவசர நேரத்தில் செய்த உதவியை வாழ்நாள் பூராவும் நான் மறக்கமாட்டேன் கண்டிப்பாக அந்த ௨௦ ரூபாயை மணியார்டரில் உனக்கு அனுப்பி வைக்கிறேன் உன் முகவர் சொல்லு என்றபோது சே சே இந்த சின்ன உதவிக்கெல்லாம் மணியார்டரா வேண்டாம் சார் என்று மரியாதையோடு அவரை அந்த பக்கம் அணிப்பிவிட்டு இந்த பக்கம் திரும்பி நின்று இவன் சொன்னானாம் பர்சில் இருந்த 2000 ரூபாயில் 20 ரூபாய் போனா மீதம் 1980 ரூபாய் நமக்குத்தான்.
20 போய்விட்டது 1980 மிஞ்சிவிட்டது இதுல மணியார்டர் வேறு அனுப்புகிறேன் என்று போக்கத்தவன் சொல்லுகிறானே என்று ஏளனமாக சிரித்தானாம் 
ஆக 2000 ஐ மொத்ததமாக கபளீகரம் செய்துவிட்டு ஒரு 20 ஐ மட்டும் ரொம்ப பெரியத்தனமாய் வாரி வழங்கிவிட்டு 1980 ஐ அப்படியே பாக்கெட்டில் போட்டுக்கொள்கிற பரதேசிகளும் உண்டு
இன்று சில நவீன இயக்கங்கள் ஆம்புலன்ஸ் உதவி மருத்துவ உதவி என்று சின்ன அளவில் செய்துவிட்டு அதை அப்படியே படம் பிடித்து பத்திரிக்கையிலே போட்டு பணம் சம்பாதிப்பதும் இந்த ரகம்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது
எனவே சுயநலம் இல்லாத பொதுநலம் வேண்டும் பலனை எதிர்பார்க்காமல் உதவி செய்கிற உயர்ந்த உள்ளம் வேண்டும்