07 பிப்ரவரி, 2013

தொட்டால் ஷாக் இன்று ; தொடாமலேயே ஷாக் அன்று

பெண்களுக்கெதிரான குற்றங்கள் பெருகிவரும் சூழலில் அவர்களைக் காப்பாற்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன . பாலியல் பலாத்காரக் குற்றங்களுக்கு மரண தண்டனை , அல்லது நீண்ட கால சிறை தண்டனை போன்ற சட்டங்கள் அதிரடியாக நடைமுறைக்கு வந்துள்ளன  .
இந்நிலையில் இரண்டு இளைஞர்கள் ஒரு புதிய கருவியைக் கண்டு பிடித்துள்ளனர்.


இன்று காலை (7-2- 2013) தினகரனில் வந்த செய்தி இது :
திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் பிரிவில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மணிகண்டன் (20), பரத்கிரண் (20). டெல்லியில் கல்லூரி மாணவி ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய கருவியை கண்டுபிடிக்க இம்மாணவர்கள் முடிவு செய்தனர். 15 நாட்கள் முயற்சியில் கருவியை செய்து முடித்துள்ளனர். இதற்கு ‘லேடீஸ் சேப்டி ஷாக்கர்’ என பெயரிட்டுள்ளனர்.60 கிராம் எடையுள்ள இக்கருவியை பெண்கள் தலையில் கிளிப் போல் மாட்டிக் கொள்ளலாம். குடை, கீசெயின், செல்போன் பவுச் ஆகியவற்றிலும் பொருத்திக் கொள்ளலாம். இந்த கருவியில் 3 பேட்டரிகள் உள்ளன. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும். இந்த கருவியில் 2 பட்டன்கள் உள்ளன. முதல் பட்டனை அழுத்தினால் அபாய ஒலி எழுப்பும். இந்த ஒலி சுமார் 20 மீட்டர் தூரம் கேட்கும்.கருவியை எதிரியின் உடலில் படும்படிவைத்து 2வது பட்டனை அழுத்தினால், அவர் மீது 1,700 வோல்ட் மின்சாரம் தாக்கிவிடும். இதனால் எதிரி நிலைகுலைந்துவிடுவார். ஆனால், அவரது உயிருக்கு எந்த ஆபத்து ஏற்படாது. இக்கருவியை வெயிலில் ரீசார்ஜ் செய்யும் வசதியும் உண்டு.
                   (தினகரன் )

இந்த செய்தியைப் படித்தபோது அன்றொருநாள் இப்ராஹீம் (அலை ) அவர்களின் மனைவி அன்னை சாராவை அநியாயக்கார அரசனிடமிருந்து அல்லாஹ் பாதுகாத்த அருமையான ஏற்பாட்டு முறையை எண்ணி வியந்தேன் . இந்த கருவியைத் தொட்டால்தான் எதிரி நிலைகுலைவான் ; ஆனால் அன்று சாராவை தொட நெருங்கியபோதே அந்த மன்னன் நிலைகுலைந்து கீழே விழுந்து வலிப்பு வந்தது போல துடித்தான் :

قال رسولُ الله - صلى الله عليه وسلم- : «هاجر إبراهيم عليه السلام بسارَةَ ، فدخل بها قرية فيها مَلك من الملوك ، أو جبَّار من الجبابرة ، فقيل له : دخل إبراهيم بامرأة هي من أحسن النساء ، فأرسلَ إليه : أَنْ يا إبراهيمُ : من هذه التي معك ؟ قال : أُختي ، ثم رجع إليها فقال : لا تكذِّبي حديثي ، فإني أخبرتُهُم أنكِ أختي ، والله إن على الأرض مؤمن غيري وغيرك ، فأرسل بها إليه ، فقام إليها ، فقامت توَّضأُ وتُصلِّي ، فقالت : اللهم إن كنتُ آمَنْتُ بِكَ وبرسولكَ وأحصَنْتُ فرْجِي إلا على زوجي ، فلا تُسلِّطْ عَليَّ يَدَ الكافر ، فَغُطَّ ، حتى رَكضَ برجله فقالت : اللهم إن يمُتْ يقال : هي قتَلَتْهُ ، فأُرْسِل ، ثم قام إليها ، فقامَتْ توَّضأُ وتصلِّي ، وتقول : اللهم إن كنتُ آمنتُ بك وبرسولِكَ ، وأحصَنْتُ فرجي فلا تسَلِّط عليَّ هذا الكافر ، فَغُطَّ حتى ركض برجله ، قال أبو هريرة فقالتْ : اللهم إن يمُتْ ، يقال : هي قتَلَتهُ ، فأرسل في الثانية أو الثالثة ، فقال : والله ما أرسلتم إليَّ إلا شيطاناً ، أرجعوهَا إلى إبراهيم وأعطوه هاجر ، فرجعت إلى إبراهيم ، فقالت : أشعرت أن الله كبتَ الكافِرَ وأخدَم وليدَة» ) رواه البخاري 6 / 277 - 280 في الأنبياء ، باب قول الله تعالى : {واتخذ الله إبراهيم خليلا} ، وفي البيوع ، باب شراء المملوك من الحربي وهبته وعتقه ، وفي الهبة ، باب إذا قال : أخدمتك هذه الجارية على ما يتعارف الناس فهو جائز ، وفي النكاح ، باب إتحاد السراري ، وفي الإكراه ، باب إذا استكرهت المرأة على الزنا فلا حد عليها ، ومسلم رقم (2371) في الفضائل ، باب من فضائل إبراهيم الخليل صلى الله عليه وسلم ، وأبو داود رقم (2212) في الطلاق ، باب في الرجل يقول لامرأته : يا أختي ، والترمذي رقم (3165) في التفسير ، باب ومن سورة الأنبياء


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவி) சாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர். அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்! என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. மன்னன் இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் செய்து இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்? எனக் கேட்டான். இப்ராஹீம் (அலை) என் சகோதரி என்று சொன்னார்கள்.
பிறகு சாராவிடம் திரும்பிய இராப்ராஹீம் (அலை) அவர்கள் நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் ஓரிறை விசுவாசி (மூமின்) யாரும் இல்லை என்று சொன்னார்கள். பிறகு சாராவை மன்னனிடம் அனுப்பினார்கள். அவன் அவரை நோக்கி எழுந்தான். சாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால் எனது பெண்மையை கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே! என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்கள் உதைத்துக் கொண்டான்.
மன்னனின் நிலையைக் கண்ட சாரா இறைவா! இவன் செத்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர் என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்கு மீண்டு மறுபடியும் சாராவை நெருங்கினான். சாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால் எனது பெண்மையை கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து கால்களால் உதைத்துக் கொண்டான்.
மன்னனின் நிலையைக் கண்ட சாரா இறைவா! இவன் செத்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர் என்று பிரார்த்தித்தார். இப்படி மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத் தான் அனுப்பியிருக்கிறீர்கள். எனவே இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப் பெண்ணான) ஹாஜரைக் கொடுங்கள் என்று (அவையோரிடம்) சொன்னான். சாரா இப்ராஹீம் (அலை) அவர்களிம் திரும்பி வந்து அல்லாஹ் இந்த காஃபிரை வீழ்த்தி நமக்குப் பணி புரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்து விட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார். ( புகாரி 2217)
அந்த இளைஞர்களின் கருவிக்கும் சாரா அம்மையாரின் சம்பவத்திற்கும் ஒரு பொருத்தம் உண்டு ஷாக் அடிக்கவும் வேண்டும் சாகவும் கூடாது என்பதுதான் அது .

(இப்போதெல்லாம் நீளமான பதிவுகள் டைப் செய்வதற்கான நேரமும் இல்லை உடலும் ஒத்துழைப்பதில்லை ஆகவே இது ஜும்ஆ உரையல்ல )