15 ஜனவரி, 2013

அகிலம் கண்ட அதிசய பேரொளி


''அரபுப் பாலைவனத்தில் அரிய மாணிக்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது;
அதன் ஒளி அகிலமனைத்தையும் ஆட்கொண்டுள்ளது ''
என்றான் ஆங்கிலக் கவிஞன்.
ஆம் உண்மைதான். ஆதம் அலைஹிஸ் சலாம் மண்ணிற்கும் தண்ணீருக்குமிடையில் இருக்கும்போதே ஒளியாக பிரகாசித்த பெருமானாரின் ஜோதி, பிறப்பின்போதும் காட்சி வழங்கி, வாழ்க்கையில் பல கட்டங்களில் பலருக்கும் பயன் தந்தது. அந்த வரலாற்றை தொடர் கட்டுரையாக காண்போம்.


பிறப்பதற்கு முன்பே பிரகாசமாய்...


وَعَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ  " كَانَتْ رَوْحُهُ نُورًا بَيْنَ يَدَيِ اللَّهِ تَعَالَى، قَبْلَ أَنْ يَخْلُقَ آدَمَ بِأَلْفَيْ عَامٍ، يُسَبِّحُ ذَلِكَ النُّورُ، وَتُسَبّحُ الْمَلَائِكَةُ بِتَسْبِيحِهِ، فَلَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ، أَلْقَى ذَلِكَ النُّورَ فِي صُلْبِهِ "، فَقَالَ رَسُولُ  اللَّهِ صلي الله عليه وسلم: " فَأَهْبَطَنِي اللَّهُ إِلَى الْأَرْضِ فِي صُلْب آدَمَ، وَجَعَلَنِي فِي صُلْبِ نُوحٍ، وَقَذَفَ بِي فِي صُلْبِ إِبْرَاهِيمَ، ثُمَّ لَمْ يَزَلِ اللَّهُ تَعَالَى يَنْقُلُنِي مِنَ الأَصْلَابِ الْكَرِيمَةِ، وَالْأَرْحَام الطَّاهِرَةِ، حَتَّى أَخْرَجَنِي مِنَ أَبَوَيَّ، لَمْ يَلْتَقِيَا عَلَى سِفَاحٍ قَطُّ (الشفا باحوال المصطفي)ஆதம் அலைஹிஸ்ஸலாமைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அன்னாரின் ஒளி அல்லாஹ்வை துதித்தவண்ணம் இருந்தது. ஆதமைப் படைத்து அவர்களின் முதுகந்தண்டில் அந்த நூரை செலுத்தினான். அதன் பிறகு அதன் நிலையை அண்ணலாரே விவரிக்கிறார்கள்: ஆதமின் முதுகந்தண்டின் மூலம் அல்லாஹ் என்னை புவியில் இறக்கினான். அதன் பின் நூஹ் அலைஹிஸ் ஸலாம், இப்றாஹீம் அலைஹிஸ் ஸலாம் இப்படியாக சங்கைக்குரியவர்களின் முதுகந்தண்டுகளிலும் பரிசுத்த கருவறைகளிலும் இறக்கி. பின்னர் என் பெற்றோர்கள் மூலம் என்னை அவதரிக்கச் செய்தான். அவர்கள் தீய நடத்தை உள்ளவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை 


عن خالد بن معدان عن أصحاب رسول الله صلى الله عليه وسلم أنهم قالوا : يا رسول الله ، أخبرنا عن نفسك فقال : « دعوة أبي إبراهيم ، وبشرى عيسى ، ورأت أمي حين حملت كأنه خرج منها نور أضاءت له بصرى من أرض الشام »(دلايل النبوة للبيهقي)

''நான் இப்றாஹீம் நபியின் பிரார்த்தனையாகவும், ஈஸா நபியின் சுபச்
 செய்தியாகவும், என் அன்னையின் கனவாகவும் இருக்கிறேன்''

இப்படி ஒரு தூதரை அனுப்பு என்று ஏற்கனவே இப்றாஹீம் அலைஹிஸ் சலாம் கேட்ட துஆ:
رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولاً مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنتَ العَزِيزُ الحَكِيمُ)سورة البقرة
அஹ்மத் என்ற பெயருடன் ஒரு தீர்க்கதரிசி இனி வருவார் என ஈஸா 
அலைஹிஸ் சலாம் சுபச் செய்தி அறிவித்ததை அல்குர் ஆன் ஆமோதிக்கிறது:

(وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُم مُّصَدِّقاً لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّراً بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُّبِينٌ)
அன்னை கண்ட கனவு என்ன?
قالت : حملت به ، فما حملت حملا قط أخف منه ، فأريت في المنام حين حملت به كأنه خرج مني نور أضاءت له قصور الشام


.

அன்னையிடமிருந்து ஒரு பேரொளி தோன்றி அதில் சிரியாவின் கோட்டைகளெல்லாம் காட்சி அளித்தது போல ஒரு கனவு கண்டேன் என அன்னையே வாக்குமூலம் தருகிறார்கள்.


நபி பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அப்துல் முத்தலிபின் உடல் அமைப்பைக் கண்டு எமன் நாட்டு யூதப் பண்டிதர் ஒருவர் உம் ஒரு கையில் ஆட்சியையும் மறு கையில் நபித்துவத்தையும் காண்கிறேன் என்று முன்னறிவிப்பு செய்த நிகழ்ச்சி:
عن ابن عباس ، عن أبيه ، قال : قال عبد المطلب : « قدمت اليمن في رحلة الشتاء ، فنزلت على حبر  من اليهود ، فقال لي رجل من أهل الزبور : يا عبد المطلب : أتأذن لي أن أنظر إلى بدنك ؟ فقلت : انظر ما لم يكن عورة . قال : ففتح إحدى منخري  فنظر فيه ، ثم نظر في الآخر ، فقال : أشهد أن في إحدى يديك ملكا ، وفي الأخرى نبوة ، وأرى ذلك في بني زهرة ، فكيف ذلك ؟ فقلت : لا أدري . قال : هل لك من شاعة ؟ قال : قلت : وما الشاعة ؟ قال : زوجة . قلت : أما اليوم فلا . قال : إذا قدمت فتزوج فيهن . فرجع عبد المطلب إلى مكة ، فتزوج هالة بنت وهب بن عبد مناف ، فولدت له : حمزة ، وصفية . وتزوج عبد الله بن عبد المطلب ، آمنة بنت وهب ، فولدت رسول الله صلى الله عليه وسلم


பிறந்த அன்று...

 عن عائشة قالت : كان يهودي يسكن مكة فلما كانت الليلة التي ولد فيها رسول الله صلى الله تعالى عليه و سلم حضر مجلس قريش فقال يا معشر قريش : هل ولد فيكم الليلة مولود ؟ فقال القوم : و الله ما نعلم قال : الله أكبر أما إذا أخطأكم فلا بأس انظروا و احفظوا ما أقول لكم و لد في هذه الليلة نبي بين كتفيه علامة فيها شعرات متواترات كأنها عرف وثن فتسارع القوم عن مجلسهم و هم متعجبون من قوله
فلما صاروا إلى منازلهم أخبر كل إنسان منهم أهله فقالوا : ولد لعبد الله بن عبد المطلب غلام سموه محمدا : فانطلق القوم إلى اليهودي فأخبروه فقال : اذهبوا بي حتى أنظر إليه فأدخلوه على آمنة قالوا : اخرجي إلينا ابنك فأخرجته و كشفوا عن ظهره فرأى اليهودي تلك الشامة فوقع مغشيا عليه فلما أفاق فقالوا له : مالك ؟ قال : ذهبت و الله النبوة من بني إسرائيل يا معشر قريش و الله ليسطون بكم سطوة يخرج خبرها من المشرق إلى المغرب
و كان في القوم الذين أخبرهم اليهودي بذلك هشام بن المغيرة و الوليد بن المغيرة و عبيد بن الحرث بن عبد المطلب و عتبة بن ربيعة فعصمه الله تعالى منهم(دلايل النبوة للبيهقي)
மக்காவில் வாழ்ந்த ஒரு யூதன் , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த அன்றிரவு குறைஷிகளின் கூட்டத்தில் வந்து இன்றிரவு உங்களில் யாருக்காவது ஒரு குழந்தை பிறந்துள்ளதா? என்று கேட்க, அல்லாஹ்வின் மீது ஆணையாக அப்படி ஒன்றும் நாங்கள் அறியவில்லையே/ என்றார்கள் குறைஷிகள். அவன் கூறினான்: நான் கூறுவதை நன்றாகக் கவனியுங்கள். இன்றிரவு உங்களில் ஒரு நபி பிறந்துள்ளார். அவரின் இரு புஜங்களுக்கிடையில் ஒரு அடையாளம் இருக்கும். அதில் சில ரோமங்கள் இருக்கும்.....
இதைக்கேட்டு அவர்கள் ஆச்சரியத்துடன் கலைந்து சென்றனர். தங்கள் இல்லம் சென்று மனைவிமார்களிடம் இதுபற்றி விசாரித்தபோது அப்துல்லாஹ்விற்கு ஒரு ஆண்குழந்தை பிறந்திருப்பதாகவும் முஹம்மது என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். அந்த யூதனிடம் தெரிவிக்கப்பட்டபோது அவன் வந்து பார்த்தான். அந்த குழந்தையின் முதுகில் நபித்துவ முத்திரையின் அடையாளம் இருப்பதைக் கண்டு மயக்கம்போட்டு விழுந்தான். மயக்கம் தெளிந்து எழுந்து கூறினான்;
அல்லாஹ்வின்மீது ஆணையாக! நபித்துவம் பனூ இஸ்ரவேலர்களிடமிருந்து எடுபட்டுவிட்டது. குறைஷிகளே! உங்களுக்கு ஒரு மகத்தான ஆட்சி அதிகாரம் கிடைக்கப்போகிறது; அந்த செய்தி கிழக்கிலிருந்து மேற்குவரை பரவப் போகிறது.

நபியின் நட்சத்திரம் உதயமானதைக் கூட நன்கு அறிந்திருந்த யூத அறிஞர்கள் 

عن حسان بن ثابت ، قال : « إني لغلام يفعة ابن سبع سنين أو ثمان ، أعقل كل ما رأيت وسمعت ، إذا يهودي بيثرب يصرخ ذات غداة (1) : يا معشر يهود فاجتمعوا إليه وأنا أسمع ، قالوا : ويلك ما لك ؟ قال : طلع نجم أحمد الذي ولد به في هذه الليلة »(المطالب العالية لابن حجر العسكلاني)


ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) கூறுகிறார்கள்:
நான் ஏழு எட்டு வயது சிறுவனாக- சொல்வதைப் புரிந்துகொள்ளக்கூடிய பருவத்தில் இருக்கும்போது ஒருநாள் ஒரு யூதன் யத்ரிபின் (மதீனாவின்) வீதியில் நின்று அலறினான்: ''ஓ யூதர்களே!''
''என்ன ஆயிற்று உனக்கு? (ஏன் இப்படி கத்துகிறாய்?) என்று மற்ற யூதர்கள் ஒன்று கூடி வினவினர்.
'' இந்த இரவில் பிறக்கும் 'அந்த குழந்தைக்கான' வின்மீண் வானில் தோன்றிவிட்டது'' என்றான்.


ஆமினாவின் பிரசவத்தை நேரில் கண்ட ஒரு பெண்மணியின் வாக்குமூலம்:

அன்று இரவில் இல்லத்திலிருந்த அனைத்தும் ஒளிர்ந்தன; வின்மீண்கள் எங்கே அவை என்மீது விழுந்து விடுமோ என்று நான் எண்ணுகிற அளவுக்கு  மிக நெருக்கமாக வந்தன:


عن عثمان بن أبي العاص ، قال : حدثتني أمي ، أنها شهدت ولادة آمنة بنت وهب رسول الله صلى الله عليه وسلم ، ليلة ولدته . قالت : « فما شيء أنظر إليه في البيت إلا نور ، وإني لأنظر إلى النجوم تدنو  حتى إني لأقول : ليقعن علي »

பிறக்கும்போதே கண்மூடிப் பழக்கத்தை மண்மூடிப் புதைத்த மாநபி:
பிறந்த குழந்தை கண் திறந்ததும் வானைப் பார்க்கக்கூடாது என்று குழந்தையை சட்டியைக் கொண்டு மூடி வைப்பர். அதுபோலவே இந்த குழந்தையையும் மூடிவைத்துவிட்டு காலையில் வந்து பார்த்தபொழுது என்ன அதிசயம் அந்த சட்டி இரண்டாகக் உடைந்து கிடந்தது நபியவர்களோ விழி திறந்தவர்களாக வானை நோக்கியவர்களாக இருப்பதைக் கண்டு அதிசயப்பட்டனர்.

عن أبي الحكم التنوخي ، قال : كان المولود إذا ولد من قريش دفعوه إلى نسوة من قريش إلى الصبح ، فيكفين عليه برمة  فلما ولد رسول الله صلى الله عليه وسلم دفعه عبد المطلب إلى نسوة يكفين عليه برمة ، فلما أصبحن أتين ، فوجدن البرمة قد انفلقت عليه باثنتين ، فوجدنه مفتوح العينين ، شاخصا ببصره إلى السماء فأتاهن عبد المطلب ، فقلن له : ما رأينا مولودا مثله ، وجدناه قد انفلقت عنه البرمة ، ووجدناه مفتوح العينين ، شاخصا ببصره إلى السماء . فقال : احفظنه ، فإني أرجو أن يصيب خيرا . فلما كان اليوم السابع ذبح عنه ، ودعا له قريشا ، فلما أكلوا قالوا : يا عبد المطلب ، أرأيت ابنك هذا الذي أكرمتنا على وجهه ، ما سميته ؟ قال : سميته محمدا . قالوا : فلم رغبت به عن أسماء أهل بيته ؟ قال : أردت أن يحمده الله تعالى في السماء ، وخلقه في الأرضஅவர்களின் சிறப்பான பிறப்பு வியப்பானது:
 காலிரண்டும் முந்தினதாகவும், வானத்தை பார்த்தவர்களாகவும், புன் சிரிப்புடையவர்களாகவும் கண்களில் சுருமா வும் எண்ணையும் போடப்பட்டவர்களாகவும் அவர்கள் உதித்தார்கள். இன்னும் மற்றவர்கள் காணக்கூடாதென்பதற்காக அவர்களின் இடது கரத்தால்  தன் இரகசிய இடத்தை மறைத்தவர்களாவும், கத்னா செய்யப்பட்டவர்களாகவும்  இன்னும் அல்லாஹ் ஒருவனே என்று சைக்கினை செய்வதற்காக தன் வலது கரத்தின் கலிமா விரலை உயர்த்தினவர்களாகவும் அவர்கள் பிறந்தார்கள்.
கடைசி நபி பிறந்தவுடன், இணை வைப்போர்களால் வணங்கப்பட்ட சிலைகள் குப்புற வீழ்தன. சைத்தான்க்களின் தலைவன் இப்லீஸின் சிம்மாசனம் உடைந்தது.  அவன் தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டான். உண்மை வந்து விட்டது என அறிவிக்கும் சைகையாக முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்ட, வற்றிருந்த ஸமாவா எனும் சிற்றாரு பொங்கி ஓட துவங்கியது. பொய் அழிந்து விடும்  என அறிவிக்கும் சமிக்கையாக காபிர்களால் பயன்படுத்தப்பட்ட, ஸாவா விலிருந்த ஓடிக்கொண்டிருந்த புஹைரா எனும் சிரு கடல் வற்றியது.  ஆட்சி கைமாறி விட்டது என அறிவிக்கும் சைக்கினையாக கிஸ்ரா வின் கோட்டைகளும் 14 கொத்தலங்களும் தரையில் உடைந்து வீழ்தன. ஆயிரக்கணக்கு வருடங்களாக அணையாமல் இருந்த, பாரிஸீகளால் வணங்கப்பட்டுக் கொண்டிருந்த தீ அணைந்து விட்டது. சாத்திரிகளின் தவம் இயற்றும் மாளிகைகள் உடைந்தன, சைத்தானும் அதன் குட்டிகளும் அண்டம் இழந்தன


நபி பிறந்தபொழுது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலி அவர்களின் தாயார் கண்ட அதிசயக் காட்சியை அவர்களே வர்ணிக்கிறார்கள்:

قال عبد الرحمن : فأخبرتني أمي قالت : لما ولد محمد صلى الله عليه وسلم وقع على يدي استهل ، فسمعت قائلا من ناحية البيت يقول : يرحمك ربك قالت : فلما لينته وأضجعته أضاء لي نور ، حتى رأيت قصور الروم ، ثم غشيتني ظلمة ورعدة ، ثم نظرت عن يميني فلم أر شيئا ، فسمعت قائلا يقول : أين ذهبت به ؟ قال : ذهبت به إلى المغرب قالت : ثم أصابتني رعدة وظلمة قالت : ثم نظرت عن يساري ، فلم أر شيئا ، فسمعت قائلا يقول : أين ذهبت به ؟ قال : ذهبت به إلى المشرق قال عبد الرحمن : فكان الحديث من شأني ، حتى بعث الله عز وجل رسوله صلى الله عليه وسلم فكان أول قومه إسلاما


அந்த குழந்தை பிறந்து என் கரத்தில் வந்தபோது அந்த இல்லத்தின் மூலையிலிருந்து ஒரு அசரீரி முழங்கியது: உம் இறைவன் உமக்கு அருள் புரிவானாக! ''
அதன் பின் அங்கு பிரகாசம் தோன்றியது. அதன் ஒளியில் சிரியாவின் கோட்டைகளெல்லாம் காட்சி அளித்தது......                                                    (இன்னும் ஒளிரும்..இன்ஷா அல்லாஹ்)