25 டிசம்பர், 2013

மனிதருள் மாணிக்கம் மாநபி (ஸல்)

மனிதருள் மாணிக்கம் மாநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்த சில பதிவுகள் தங்களின் பார்வைக்கு..

14 டிசம்பர், 2013

மழை நீர் மாபெரும் அருட்கொடை

ஜும்ஆ பயான் (13-12-2013) by மவ்லானா அல்ஹாஜ் எஸ்.எஸ்.அஹ்மது பாகவி ஹழ்ரத், தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா


 • நீரின்றி அமையாது உலகு என்பது முதுமொழி .
 • உலகத்தையே ஒரு பாட்டிலுக்குள் அடைக்க முடியுமா?
 • அடைத்துக் காட்டிய அறிஞர் இப்னு அப்பாஸ் ரலி
 • இன்னும் பல....


08 டிசம்பர், 2013

அல்ஹம்து லில்லாஹ் ஒரு வரலாற்றுப் பார்வை (தஃப்ஸீர் வகுப்பு)
மூழ்கவே வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட டைட்டானிக் கப்பல் மூழ்கியது எப்படி?
உலகில் மறைக்கப்பட்ட இடங்கள் என்னென்ன?
துல்கர்னைன் (அலை) கட்டிய தடுப்புச் சுவரின் வரலாறு ..
இன்னும் பல அறிய தகவல்கள்...
கேளுங்க.. கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க!
06 டிசம்பர், 2013

நெகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள்


குடிகாரனின் மரணத்தின்போது அவனை ஒரு பாம்பு விழுங்கிய நிகழ்ச்சி..
வட்டி வாங்கி உணடவனின் மண்ணறையில் தீ எரிந்த சம்பவம்....
அதே போல சிலரை அல்லாஹ் ஆச்சரியமான முறையில் காப்பாற்றவும் செய்கிறான் பாம்பு கொத்தவிருந்த ஒருவனை எங்கிருந்தோ வந்த தேள் காப்பாற்றிய நிகழ்வு ..
இன்னும் பல நிகழ்வுகள் ..

11 நவம்பர், 2013

பிஸ்மில்லாஹ்-ஒரு ஆழமான ஆய்வு

 • உலகில் உள்ள எல்லாமே குர்ஆனில் இருக்கிறது..குர்ஆனில் உள்ள எல்லாமே பிஸ்மில்லாஹ்வில் இருக்கிறது..பிஸ்மில்லாஹ்வில் உள்ள எல்லாமே அதன் ب வில் இருக்கிறது  அதிலுள்ள எல்லாமே அதன் கீழே உள்ள ஒரு புள்ளிக்குள் அடக்கம்.  என்று கூறப்படுகிறதே இது எப்படி சாத்தியம் ? அதை நிரூபிக்கும் ஒரு உண்மை வரலாறு.
 • சமீபத்தில் மலேசியாவில் சில மண்ணறைகள் தோண்டப்பட்டபோது எட்டு வருடம்-பன்னிரெண்டு வருடத்திற்கு முன்னால் அடக்கப்பட்ட 12 ஜனாஸாக்கள் எந்த சிதிலமும் எந்த மாற்றமும் இல்லாமல் துர்வாடை கூட இன்றி நறுமணத்துடன் காணப்பட்ட அதிசய நிகழ்ச்சி ..
 • இன்னும் பல தகவல்கள்......
 • கேளுங்க..கேளுங்க... கேட்டுக்கிட்டே இருங்க!
 • பதிவேற்றமும் செய்யலாம்.


08 நவம்பர், 2013

06 நவம்பர், 2013

ஆஷூராவின் பெயரால் அனாச்சாரங்களா?


 • ஹிஜ்ரிப் புத்தாண்டுக்கும் இதர புத்தாண்டுகளுக்கும் என்ன வித்தியாசம்?
 • முஹர்ரம் மாதத்தில் சில முஸ்லிம்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகள்.
 • ஆஷூராவின் பெயரால் ஷியாக்கள் செய்யும் அனாச்சாரங்கள் .
 • ஆஷூராவின் சிறப்புகள் .
 • இத்தியாதி...

04 நவம்பர், 2013

வருடக் கடைசியிலும் ஆரம்பத்திலும் ஓதும் துஆ

أورد صاحب كتاب (السفينة القادرية) ص 84:

وقال خاتمة الحفاظ جلال الملة والدين السيوطي في الجامع الكبير دعاء
نهاية السنة ويتلى في آخر يوم من السنة الهجرية:

اللهم ما عملتُ في هذه السنةِ مما نهيتني عنه ولم ترضه،
وحلمتَ عليّ فيه مع قدرتك على عقوبتي، ودعوتني إلى الطاعة
بعد جرأتي على معصيتك فإني أستغفرك منه ، وما عملتُ فيها
من عملٍ ترضاه ووعدتني عليه الثوابَ فإني أسألك أن تتقبله
مني ولا تقطع رجائي منك يا كريم وصلى الله على سيدنا محمد وعلى آله وصبه وسلم .

وقال السيوطي أيضا في الجامع الكبير:
دعاء أول السنة عن رسول الله صلى الله عليه وسلم أنه قال:
ما من عبد يصلي أول يوم من المحرم ركعتين يقرأ فيهما ما شاء
فإذا فرغ من صلاته رفع يديه ثم قال:
اللهم أنت الأبديُّ القديم وهذه سنةٌ جديدة أسألك فيها
العصمةَ من الشيطانِ وأوليائه والعونَ على هذه النفسِ الأمّارةِ بالسوء
والاشتغالَ بما يقربني إليك وإلى رضاك يا كريم

يا ذا الجلال والإكرام، إلا وكل الله به ملكا يُذهب عنه الشيطان
وأعانه على نفسه ورأى اليسر في جميع أموره وإن عاش الى تمام السنة يقول الشيطان: قد آيسنا منه جميع السنة .

وهذا الدعاء لم أجده في الجامع الكبير ، والعهدة في هذا على صاحب كتاب السفينة القادرية، وعلى كلٍٍ ليس في هذا ما يخالف الشرع فلا أرى به بأسا فإنه من فضائل الأعمال، وليبدأ الدعاء ويختمه بالحمد والثناء على الله تعالى ثم بالصلاة والسلام على سيدنا محمد .
 

15 அக்டோபர், 2013

மன ஓர்மையும் மகத்தான வெற்றியும்

மன ஓர்மை இருந்தால் வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் மகத்தான வெற்றி பெறலாம்.
வாழ்வின் இறுதிவரை இமாலய வெற்றி கிடைக்கும் .
அப்படி வெற்றி பெற்ற மாமனிதர்களின் வரலாற்றுத் துணுக்குகள்...
மகாத்மா காந்தியின் மன ஓர்மை ...
இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி புத்தகத்தில் காட்டிய மன ஓர்மை...
யூசுப் நபி யின் அழகிய வரலாற்றின் சிறு துணுக்கு..
மரண நேரத்தில் கூட வேதனை இன்றி எளிமையாக உயிர் பிரிய என்ன வழி?
இன்னும் இத்தியாதி.....
கேட்க ..பதிவிறக்கம் செய்ய...


09 அக்டோபர், 2013

அரஃபா பற்றிய அறிமுகக் குறிப்புகள்

(குறிப்பு: இனிய நெஞ்சங்களே! ஆலிம்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் இந்த வலைப் பதிவை வாசிப்பதால் பலரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழ் மொழிபெயர்ப்பு முழுதும் முதலில் பதிந்துவிட்டு அதற்கான அரபி மூலாதாரங்களை பதிவின் கீழே பட்டியலிட்டுள்ளேன். எண் வரிசைப் படி அடிக் குறிப்பிட்டுள்ளேன்)

அல்லாஹ் அருள்மறைக் குர்ஆனில் சத்தியமிட்டு சிலாகித்துக் கூறும்
அற்புத நாள் அரஃபா.

வாக்களிக்கப்பட்ட நாளின் மீதும் சாட்சியின் மீதும் சாட்சி சொல்லவேண்டிய நாளின் மீதும் சத்தியமாக!’’ (அல்குர்ஆன் 82: 2,3)

இந்த வசனத்தில் வரும் முதலாவது நாள் மறுமை நாள். இரண்டாவது கூறப்பட்டது வெள்ளிக் கிழமை மூன்றாவது சத்தியம் செய்து கூறப்பட்ட நாள் அரஃபா நாளாகும். (திர்மிதி)*1

17 ஆகஸ்ட், 2013

இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது உறவினர்களே!- பட்டிமன்றம்நடுவரவர்களே!
ஒரு காலம் இருந்தது. அந்த காலத்திலே மனிதன் இலைகளையும், தழைகளையும் உண்டு வந்தான். ஆனால் காலத்தினுடைய சூழல்ச்சியின் காரணமாக பல அருசுவையான உணவுகளை உண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அதுபோன்று ஒரு காலம் இருந்தது மனிதன் இலைகளையும், தழைகளையும் ஆடைகளாக அணிந்து வாழ்ந்து கொண்டு இருந்தான். பிறகு ஒரு காலம், இப்ப இருக்கிறது. நாகரீக உடையிலே உடையணிந்து அழகாக காட்சி தரக்கூடிய நிலையிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது மனைவியே!- பட்டிமன்றம்கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரித்தான  நடுவரவர்களே! இங்கு இருக்கிற மக்களிடம் கேட்டாலே எல்லோரும் சொல்லி விடுவார்கள்..

இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது யாரென்று கேட்டு பாருங்க எல்லேரும் சொல்கிற பதில் 
மனைவியே!
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். மனைவி மாறு செய்வாள் என்று சொல்கிறார்கள். நரகத்திலே அதிகமான பெண்களை கண்டேன். எதற்காக  என்று கேட்கிற போது பெருமானார் சொன்னார்கள்.
தக்ஸூர்னல் லஃன வதக்ஃபுரினல் அஷீர
கணவனுக்கு மாறு செய்கிற காரணத்தினாலும், அதிகம் சாபமிடுவதினாலும் நரகத்திலே கண்டேன். இந்த நிலை எல்லா குடும்பத்திலேயும் இருக்கிறது என்ற முதல் குற்றச்சாட்டை இம்மன்றத்திலே நான் பதிவு செய்கிறேன்.
எதைச் சொன்னாலும் மாற்றிப் பேசுவது, மாறாக  நடப்பது, நான் இப்படித்தான் செய்வேன் என்று சொல்வது 
வரலாற்றிலே கூட ஒரு கதை சொல்வார்களே!

சிரிப்புகள் பலவிதம்தேவையில்லாமல் சிரிப்பதும் தேவையான போது தேவையற்ற அளவு சிரிப்பதும் பிறர் மனம் வருந்தும் படி சிரிப்பதும் மனிதனை மதிப்பிழக்கச் செய்துவிடும் சிரிப்புகள் பலவிதம் உண்டு. எதற்காகச் சிரிக்கலாம் எதற்கெல்லாம் சிரிக்கக்கூடாது என்பதையும் தெரிய வேண்டும்.

முஹம்மது (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) வினாடி - வினா 5101. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசளின் பெயர் என்ன?
மஸ்ஜிதுன் நபவீ ஆகும்.

102. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனார் பெயர் என்ன?
ஹழ்ரத் ஸைத் (ரலி) அவர்களாகும்.

103. முஹம்மது நபி (ஸல்) அவர்களின்; பேரர்கள் யார் யார்?
1. ஹரழ்ரத் ஹசன் (ரலி)
2. ஹழ்ரத் ஹுஸைன் (ரலி)

104. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கொள்ளு பேரர் பெயர் என்ன?
1. ஹழ்ரத் ஸைனுல் ஆபீதீன்

105. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவின் போது 
 திருக்குர்ஆன் எந்த நிலையில் இருந்தது?
தனித்தனி ஏடுகளில் எழுதப்பட்டும், சில நபித் தோழர்களால்  
  மனப்பாடம் செய்யப்பட்டும் இருந்தது.

106. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திலும், நபித் தோழர்கள் காலத்திலும்; எந்த எழுத்துக்கள் புழக்கத்தில் இருந்தன?
கூஃபா நகர எழுத்துக்கள்

107. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் வீட்டை 
     சுற்றி முற்றுகையிட்டு வாளேந்தி நின்ற எதிரிகளின் பார்வையிலிருந்து
     தப்பிக்க ஓதிய வஸனம் எது?
  சூரா யாஸீனின் (அத்தியாயம் 361 வஜ்அல்னா என்று துவங்கும் (9வது)வசனமாகும்.

108. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் செய்த சூன்யத்தை முறியடிக்க இறங்கிய சூராக்கள் எவை?
சூரத்துல் ஃபலக் மற்றும் சூரத்துன்னாஸ்.

109. முஹம்மது நபி (ஸல்)அவர்களுடைய சிறப்பு பெயர்கள் திருக்குர்ஆனில் எத்தனை கூறப்பட்டுள்ளது?
ஷாஹித், பஷீர், நதீர், தாஈ, ஹாதீ, ஸிராஜீம் முனீர் உட்பட 27 பெயர்களாகும்.

110. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கல்வி ஞானம் பெருக இறைவனே கற்றுக் கொடுக்கும் துஆ எது?
ரப்பி ஸித்னீ இல்மா. இறiவா எனக்கு கல்வி ஞானத்தை அதிகப்படுத்து வாயாக! என்ற துஆவாகும்.

111. முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய எந்த துணைவியாரை பரிசுத்தப்படுத்தி நூர் என்ற அத்தியாயத்தில் 10வஸனங்கள் இறங்கியது?
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை பரிசுத்தப்படுத்தி 10வஸனங்கள் இறங்கியது.

112. முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய மாமனார்கள் யார்? யார்?
ஹழ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) 
ஹழ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி)

113. முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய மருமகன்கள் 
  யார்? யார்?
   ஹழ்ரத் உஸ்மானிப்னு அஃப்வான் (ரலி) 
   ஹழ்ரத் அலிஇப்னு அபூதாலிப் (ரலி)
 ஹழ்ரத் அம்ருப்னு ஆஸ் (ரலி) ஆகியோராகும்.

114. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அரபு எழுத்துக்களில் புள்ளி (நுக்தா)கள் இருந்தனவா?
இல்லை.

115. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை கற்று பிறருக்கு
 கற்ப்பித்துக் கொடுப்பவர் பற்றி எவ்விதம் புகழ்ந்தார்கள்?
  அவர்தான் உங்களில் சிறந்தவர் என்றார்கள்.

116. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவுக்கு முன்பே முழு குர்ஆனையும் மனனம் செய்த பெண் ஸஹாபாக்கள் யார்? யார்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துனைவிமார்களான அன்னை ஆயிஷா (ரலி) அன்னை ஹஃப்ஸா (ரலி) அன்னை உம்மு ஸலமா (ரலி) ஆகியோராகும்.

117. முஹம்மது நபி (ஸல்)அவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் மக்காவில் வஹீ இறங்கியது?
12 ஆண்டுகள் 5 மாதம் 13 நாட்கள்

118. முஹம்மது நபி (ஸல்)அவர்களுக்கு திருக்குர்ஆன் வஸனங்கள் மதினாவில்இறங்கி அருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது?
9 வருடங்கள் 9 மாதங்கள் 9 நாட்கள்

119. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த மனைவியரை அல்லாஹ்வின்
  கட்டளைப்படி திருமணம் செய்தார்கள்?
அன்னை ஸைனப் (ரலி) அவர்களையாகும்.

120. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நடக்கிற பொழுது நிழல் கீழே  விழுமா?
 விழாது மேகம் அவர்களுக்கு நிழல் கொடுக்கும்.

121. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு பிறந்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் சுன்னத் செய்யப்பட்ட நிலையிலேயும், ஸுஜுதிலே விழுந்த நிலையிலேயும், சுர்மாயிடப்பட்ட நிலையிலேயும் தம் ஆள்காட்டி விரலை வானின் பக்கம் உயர்த்திய நிலையிலேயும் பிறந்தார்கள்.

122. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த குகையிலே 
முதன் முதலாக வஹீ இறங்கியது?
 ஹிரா என்ற குகையாகும்.

123. முஹம்மது நபி (ஸல்) அவர்களும், ஹழ்ரத் அபூபக்கர்
 ஸித்தீக் (ரலி) அவர்களும் ஒளிந்திருந்த குகை எது?
  ஸவ்ர் என்னும் குகையாகும்.

124. முஹம்மது நபி (ஸல்) அவர்களை கனவிலே கண்டால் 
  நம்பலாமா?
ஆம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கனவிலே கண்டால்; அது அவர்களே தான் ஏனெனில் அவர்களின் தோற்றத்திலே ஷைத்தான் வர மாட்டான் என நபியே சொல்லியுள்ளார்கள்.

125. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்க்காக 
   செய்ய இருக்கிற மாபெரும் உபகாரம் எது?
  ஷஃபாஅத்  என்னும் பரிந்துரையாகும்.

முஹம்மது (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) வினாடி - வினா 476. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே மரணித்த மனைவி யார்?
ஹழ்ரத் அன்னை ஸைனப் பின்து குஸைமா (ரலி) அன்ஹா

77. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முஹம்மது என பெயர் சூட்டியவர் யார்?
பாட்டனார் அப்துல் முத்தலிப் ஆகும்.

78. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த வயதில் மிஃராஜ் எனும் விண்ணுலக பயணம் மேற்க்கொண்டார்கள்?
நபி (ஸல்) அவர்கள் தங்களது 52வது வயதில் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

79. முஹம்மது நபி (ஸல்)அவர்களுக்கும் அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கும் பிறந்த குழந்தைகள் யார்? யார்?
1. ஹழ்ரத் காஸிம் (ரலி)
2. ஹழ்ரத் அப்துல்லாஹ் (ரலி)
3. ஹழ்ரத் ஸைனப் (ரலி)
4. ஹழ்ரத் ருகைய்யா (ரலி)
5. ஹழ்ரத் பாஃத்திமா   (ரலி)
6. ஹழ்ரத் உம்மு குல்ஸும்  (ரலி)

80. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களின் அடிமையான மாரிய்யதுல் கிப்திய்யா (ரலி) அவர்கள் மூலம் பிறந்த குழந்தை யார்?
ஹழ்ரத் இப்ராஹீம் (ரலி) அவர்களாகும்

81. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத்திற்காக வெளியேறிய போது அவர்களின் வயது என்ன?
53 ஆகும்

82. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எப்போது ஹஜ் செய்தார்கள்?
ஹிஜ்ரி 10ம் ஆண்டு ஹஜ் செய்தார்கள்


83. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எத்தனை ஸஹாபாக்களுடன் ஹஜ் செய்தார்கள்?
சுமார் ஒருலட்ச தோழர்களுடன் ஹஜ் செய்தார்கள்

84. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கடைசியாக செய்த ஹஜ்ஜிக்கு என்ன பெயர் சொல்லப்படும்?
ஹஜ்ஜத்துல் வதா விடை பெறும் ஹஜ் என்று சொல்லப்படும்.

85. முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய ஆண் மக்கள் 3 பேர்களும் எப்போது மரணமானார்கள்?
நபி (ஸல்) அவர்களுடைய 3ஆண் மக்களும் சிறு பிராயத்திலேயே மரணித்து விட்டார்கள். இன்னா லில்லாஹி...

86. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேச்சி எவ்வாறு இருந்தது?
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
'நபி (ஸல்) அவர்கள் உங்களைப் போன்று விரைவாகப் பேசக்கூடியவர்களாக இருந்ததில்லை அவர்களிடம் அமர்ந்திருப்பவர் மனனம் செய்யும் வண்ணம் இடைவெளிவிட்டு தெளிவாக அவர்களின் பேச்சு இருக்கும்.

87. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்புகளை ஏற்பார்களா?
நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்ப்பவர்களாகவும், அதற்குப் பிரதியுபகாரம் செய்பவர்களாகவும் இருந்தார்கள்'.
88. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்தபின் அவர்களது புனித நெற்றியிலே முத்தமிட்ட ஸஹாபி யார்?
ஹழ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களாகும்.
89. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குணம் எப்படி இருந்தது?
நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே  இருந்தது.

90. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு என்ன சொல்லப்படும்?
ஸஹாபாக்கள் என்று சொல்லப்படும்.

91. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த மகத்தான மாபெரும் பாக்கியம் எது?
அல்லாஹ்வை நேரடியாக கண்கூடாக கண்ட மிஃராஜ் உடைய பாக்கியம் ஆகும்.

92. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கடைசியாக சொன்ன வார்த்தை எது?
அல்லாஹும்ம ஃபிர்ரஃபீகில் அஃலா உயர்வான நண்பனின் பக்கம் சேரப் போகிறேன் என்ற வார்த்தையாகும்.


93. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிக்கு என்ன பெயர் சொல்லப்படும்?
அல் ஹதீஸ் என்று சொல்லப்படும்


94. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களுக்கு என்ன சொல்லப்படும்?
அஹ்லபைத் என சொல்லப்படும்.


95. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த போர்க்களத்தில் பற்கள் உடைந்தது?
உஹது போர்களமாகும்.


96. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் பிரத்யோகமாக அல்லாஹ் கொடுத்த 6 சிறப்பு அம்சம் என்ன?
1. குறைந்த வார்த்;தைகள் மூலம் நிறைந்த கருத்துக்களை கூறும் வாக்குகள்.
2. என்னைக் கானும் எவரும் மரியாதையுடன் அஞ்சும் தன்மை கொடுத்தும் உதவப்பட்டுள்ளேன்.
3. யுத்தத்தில் கிடைத்த பொருட்களை உபயோகித்துக் கொள்ள எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4. எங்கு வேண்டுமானாலும் தொழுவதற்கும் சுத்தம் செய்வதற்கும் எனக்கு இந்த பூமி ஆகுமாக்கப்பட்டுள்ளது.
5. படைப்புகள் அனைவருக்கும் பொதுவான முறையில் நான் தூதராக அனுப்பப்பட்டிருக்கிறேன்.
6. என்னைக் கொண்டு நபிமார்கள் வருகை முடிக்கப்பட்டுவிட்டது.


97. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்வில் எத்தனை முறை முடி வெட்டி உள்ளார்கள்?
4முறையாகும்.

98. முஹம்மது நபி (ஸல்;) அவர்களுக்கு முடி வெட்டும் நாவிதர் யார்?
கிதாஷ் என்பவர் ஆகும்.

99. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கொடி எவ்வளவு உயரம் இருந்தது?
நபி(ஸல் அவர்களின் கொடி 12 அடி உயரம் இருந்தது.

100. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வேர்வை எப்படி இருக்கும்?
நபி (ஸல்) அவர்களின் வேர்வையின் நறுமணத்தைப் போல் வேறு எந்த ஒரு கஸ்தூரியையும் நான் மணந்ததில்லை என அனஸ்(ரலி) சொன்னார்கள்.

முஹம்மது (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) வினாடி - வினா 351. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூங்கும் முன் என்ன செய்வார்கள்?
நபி (ஸல்) அவர்கள் தூங்கும் போது இஸ்மித் என்ற சூர்மாவை பயன்படுத்துவார்கள் ஏனெனில் அவை பார்வையை கூர்மையாக்கும் இமை முடியை வளரச்செய்யும்.

52. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் விருப்பமான ஆடை எது?
நபி (ஸல்) அவர்களின் விருப்பமான ஆடை, சட்டையாகவே இருந்தது.

53. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சட்டையின் கை எவ்வாறு இருந்தது?
நபி (ஸல்) அவர்களின் சட்டையின் கை மணிக்கட்டு வரை நீளமாக இருந்தது.

54. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் செருப்பு எவ்வாறு இருந்தது?
நபி(ஸல்) அவர்களின் செருப்பு இரண்டு வார்ப்பட்டையுடையதாக இருந்தது.

55. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எதை தடை செய்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் இடது கையால் சாப்பிடுவதையும், ஒரு செருப்பணிந்து நடப்பதையும் தடை செய்தார்கள்.

56. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மோதிரம் எவ்வாறு இருந்தது?
நபி (ஸல்) அவர்களின் மோதிரம் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தது. அதன் மேல்பகுதியில் அபிஸீனியா நாட்டின் வேலைப்பாடு இருந்தது.

57. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மோதிரத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது?
நபி (ஸல்) அவர்களின் மோதிரத்தில் 'முஹம்மது' என்ற ஒருவரியும் 'ரஸுல்' என்ற ஒருவரியும் 'அல்லாஹ்' என்ற ஒருவரியும் செதுக்கப்பட்டிருந்தது. 'நபி (ஸல்) அவர்கள் கழிப்பறைக்குச் சென்றால் தனது மோதிரத்தைக் கழற்றிவிடுவார்கள்'.

58. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மோதிரத்தை எந்த கரத்தில் அணிந்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் வலது கையில் மோதிரம் அணிபவர்களாக இருந்தார்கள்.

59. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாள் எவ்வாறு இருந்தது?
நபி (ஸல்) அவர்களின் வாளின் கைப்பிடி வெள்ளியாலாகியிருந்தது.

60. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த நிறத்;தில் தலைப்பாகை அணிந்திருந்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் கருப்பு நிறத்தில் தலைப்பாகை அணிந்திருந்தார்கள்.

61. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு வேட்டி அணிந்திருந்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் கெண்டை காலில் பாதி அளவு வரை வேட்டி அணிவார்கள்.

62. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு நடப்பார்கள்?
நபி (ஸல்) அவர்கள் நடக்கும்போது மேடான பகுதியிலிருந்து பள்ளமான இடத்தில் இறங்குவது போல் அடி எடுத்து வைப்பார்கள்.

63. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு அமருவார்கள்?
நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்தால் இரு கைகளையும் முழங்காலில் கட்டிக் கொண்டவர்களாக அமருவார்கள்.

64. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உணவருந்தமாட்டார்கள்?
நபி (ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டு உணவருந்தமாட்டார்கள்.

65. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடித்த உடன் என்ன செய்வார்கள்?
நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடித்த உடன் விரல்களை மூன்று முறை சூப்புவார்கள்.

66. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எதை விரும்பி சாப்பிடுவார்கள்?
நபி (ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டங்களை விரும்பி சாப்பிடுவார்கள்.

67. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள்?
நபி(ஸல்) அவர்கள் பேரீத்தம்பழத்துடன் தர்பூசணியையும் சேர்த்துச் சாப்பிடுவார்கள்.

68. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விரும்பிய குடிபானம்; எது?
இனிப்பும், குளிர்ச்சியும் உடையவை நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமான பானமாக இருந்தது.

69. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஸம்ஸம் நீரை எவ்வாறு அருந்துவார்கள்?
நபி (ஸல்) அவர்கள் ஸம்ஸம் நீரை நின்று கொண்டு அருந்துவார்கள்.

70. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அத்தர் விஷயமாக என்ன சொன்னார்கள்?
உங்களில் எவறுக்கேனும் நறுமணம் வழங்கப்பட்டால் அதை மறுக்க வேண்டாம் ஏனெனில் அது சொர்க்கத்திலிருந்து வந்ததாகும் என்றார்கள்.

71. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட போர்கள் எத்தனை?
27 போர்களாகும்.

72. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் எத்தனை பேர்? அவர்கள் யார்? யார்?
11 மனைவிமார்கள் ஆகும்
1. அன்னை கதீஜா     (ரலி)
2. அன்னை ஆயிஷா     (ரலி)
3. அன்னை உம்முசலமா (ரலி)
4. அன்னை சவ்தா (ரலி)
5. அன்னை ஹஃப்ஸா (ரலி)
6. அன்னை ஸைனப்பின்த் குஸைமா (ரலி)
7. அன்னை ஜுவைரிய்யா (ரலி)
8. அன்னை உம்மு ஹபீபா (ரலி)
9. அன்னை ஸஃபிய்யா (ரலி)
10. அன்னை மைமூனா (ரலி)
11. அன்னை ஸைனப்பின்த் ஜஹ்ஷ் (ரலி)

73. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த ஆண்டு வஃபாத்தானார்கள்?
ஹிஜ்ரி 11ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் 12ம் தேதி (கி.பி 632) திங்கட்கிழமை வஃபாத்தானார்கள்.

74. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எங்கு நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்?
மதீனாவில் மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசலினுள் அமைந்துள்ள அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். இன்னா லில்லாஹி..

75. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த கிழமை நல்லடக்கம்  செய்யப்பட்டார்கள்?
புதன் கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்

முஹம்மது (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) வினாடி - வினா 226. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தை எப்போது இறந்தார்கள்?
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாயின் கர்ப்பத்தில் இருந்த போது தந்தை இறந்தார்கள்.

27. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தாயார் இறந்தபோது முஹம்மது நபி (ஸல); அவர்களுக்கு வயது என்ன?
6 வயது ஆகும்.

28. முஹம்மது நபி (ஸல்) அவர்களின்; தாயார் இறந்த பிறகு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யாருடைய பொறுப்பில் வளர்ந்தார்கள்?
பாட்டனார் அப்துல் முத்தலிபின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.

29. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் இறந்தபோது முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வயது என்ன?
9 வயது ஆகும்.

30. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் இறந்த பிறகு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யாருடைய பொறுப்பில் வளர்ந்தார்கள்?
சிறிய தந்தை அபூதாலிபின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.

31. முஹம்மது நபி (ஸல்)  அவர்கள் இறைவழிபாட்டிற்காக தங்கியிருந்த குகையின் பெயர் என்ன?
ஹிரா குகை ஆகும்.

32. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த வயதில் நபிப்பட்டம் கிடைத்தது?
40வது வயதில்

33. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கொண்டு வந்த வானவர் யார்?
ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள்.

34. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன்முதலில் இறங்கிய குர்ஆன் வாசகம் எது?
இக்றஃ பிஸ்மிரப்பிக்க என்பதாகும்.

35. முஹம்மது நபி (ஸல்)  அவர்கள் நபிப்பட்டம் கிடைத்த பிறகு எத்தனை ஆண்டுகள் மக்காவில் தங்கியிருந்தார்கள்?
13 ஆண்டுகள்

36. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினா சென்ற நிகழ்ச்சிக்கு பெயர் என்ன?
ஹிஜ்ரத் ஆகும்.

37. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் சென்ற போது உடன் சென்ற ஸஹாபி யார்?
ஹழ்ரத் அபூக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள்

38. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்ற பிறகு முதன் முதலில் கட்டிய பள்ளிவாசல் எது?
மஸ்ஜிதுன்னபவீ ஆகும்.
39. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எத்தனை ஆண்டுகள் மதீனாவில் தங்கியிருந்தார்கள்?
10 ஆண்டுகள்.

40. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எத்தனை வயதில் இவ்வுலகை விட்டும் மறைந்தார்கள்?
63ம் வயதில்

41. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப்பிறகு இஸ்லாமிய ஆட்சியின் முதலாவது கலீஃபா யார்?
ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள்42. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப்பிறகு இஸ்லாமிய ஆட்சியின் இரண்டாவது கலீஃபா யார்?
ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள்.

43. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப்பிறகு இஸ்லாமிய ஆட்சியின் மூன்றாவது கலீஃபா யார்?
ஹழ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள்

44. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப்பிறகு இஸ்லாமிய ஆட்சியின் நான்காவது கலீஃபா யார்?
ஹழ்ரத் அலி (ரலி) அவர்கள்

45. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிள்ளை செல்வங்கள் எத்தனை?
7 ஆகும்.


46. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆண் மக்கள் யார்? யார்?
1. ஹழ்ரத் அப்துல்லாஹ் (ரலி)
2. ஹழ்ரத் இப்ராஹீம் (ரலி)
3. ஹழ்ரத் காசிம் (ரலி)

47. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெண் மக்கள் யார்? யார்?
1. ஹழ்ரத் ஸைனப் (ரலி) அன்ஹா
2. ஹழ்ரத் ருகைய்யா (ரலி) அன்ஹா
3. ஹழ்ரத் உம்மு குல்ஸும் (ரலி) அன்ஹா
4. ஹழ்ரத் பாத்திமா (ரலி) அன்ஹா

48. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வம்சம் எது?
குரைஷி வம்சமாகும்.

49. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தலையிலும் தாடியிலும் எத்தனை நரைமுடிகள் இருந்தது?
14 நரைமுடிகள் இருந்தது.

50. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தலைமுடி எவ்வாறு இருந்தது?
நபிகளாரின் தலைமுடி இரு காதுகளின் பாதிவரை இருந்தது.

முஹம்மது (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) வினாடி - வினா 11. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் திருப்பெயரின் அர்த்தம் என்ன?
புகழுக்குறியவர் என்பதாகும்.

2. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் திருக்குர் ஆனில் எத்தனை முறை வருகிறது?
நான்கு தடவை வருகிறது.

3. முஹம்மது நபி (ஸல்) அவர்கள்; கடைசியாக செய்த செயல் எது?
மிஸ்வாக் (குச்சியால் பல் துலக்கினார்கள்)

4. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த ஆடையை விரும்பினார்கள்?
நபி (ஸல்) வெண்ணிற ஆடையை அதிகம் விரும்பியுள்ளார்கள் பச்சைநிற ஆடையையும் விரும்பியுள்ளார்கள்.

5. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பண்பு  எப்படி இருந்தது?
மிக உயர்ந்த பண்புடனும், குர்ஆனுக்கு முன்மாதிரியாகவும்  இருந்தது.


6. முஹம்மது நபி (ஸல்)அவர்களின் பெரிய அற்புதம் எது?
 அல்குர்ஆன் அகும்.


7. முஹம்மது நபி (ஸல்) அவர்கள்; எந்த பொருளை மறுக்க கூடாது என்றார்கள்?
தலையணை, எண்ணை, நறுமணப் பொருள், பால்

8. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன் அவர்களுக்கு இறைவன் வைத்த பெயர் என்ன?
அஹ்மது என்ற பெயராகும்.

9. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறந்த பின் இறைவன் வைத்த பெயர் என்ன?
முஹம்மது  என்ற பெயராகும்.

10. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மறைந்த பின் மறுமையில் இறைவன் வைக்கும் பெயர் என்ன?
மஹ்மூது  என்ற பெயராகும்.


11. முஹம்மது நபி (ஸல்) அதிகம் விரும்பிய காய் எது?
சுரைக்காய் ஆகும்.

12. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விரும்பிய எண்ணை எது?
ஜைத்தூண் எண்ணையாகும்.

13. முஹம்மது நபி (ஸல்) அவர்கள்; விரும்பிய நிறம் எது?
பச்சை நிறம் ஆகும்.

14. முஹம்மது நபி (ஸல்) அவர்கள்; பயன்படுத்திய சுர்மா என்ன?
இஸ்மித் என்ற சுர்மாவாகும்.

15. முஹம்மது நபி (ஸல்) அவர்கள்; அதிகம் விரும்பிய நறுமணம் எது?
கஸ்தூரி மற்றும் ஊது ஆகும்.

16. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிடித்த மாமிசம் எது?
ஆட்டின் முன்சப்பைக் கறி ஆகும்.

17. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சுத்தம் எப்படிப்பட்டது?
தூய்மையான ஆடை அணிவார்கள் தினசரி மிஸ்வாக் செய்வார்கள், நறுமணம் பூசுவார்கள். சுர்மா இடுவார்கள், தலைமுடி மற்றும் தாடியை சீப்பினால்; வாறுவார்கள்.

18. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கப்ரை கட்டியது யார்?
ஹழரத் ஆபூதல்ஹா  அன்ஸாரி (ரலி) அவர்களாகும்.

19. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தாருக்கு ஸலாம் சொல்லி அனுப்பிய நபி யார்?
மிஃராஜ் பயணத்தின் போது நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஸலாம் சொல்லி அனுப்பினார்கள்.

20. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட போருக்கு என்ன சொல்லப்படும்?
ஙஸ்வா என சொல்லப்படும்.

21. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கலந்து கொல்லாத போருக்கு என்ன சொல்லப்படும்?
ஸரிய்யா என்று சொல்லப்படும்

22. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த ஆண்டு எது?
கி.பி 571 ஆகும்.

23. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் பெயர் என்ன?
தந்தை பெயர் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்
தாயார் பெயர் ஆமினா உம்மா (ரலி) அவர்கள்

24. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டானார் பெயர் என்ன?
அப்துல் முத்தலிபு ஆகும்.

25. முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு பாலூட்டிய தாயார் யார்?
ஹ்ழரத் ஹலீமத்துஸ்ஸஃதிய்யா (ரலி) அவர்கள்

பத்ரு சஹாபாக்கள் (ரலியல்லாஹூ அன்ஹூம்)பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அல்லாஹூம்ம இன்னா நஸ்அலுக்க வநத்தவஸ்ஸலு இலைக்க பிஹபீபிக்க வநபிய்யிக ஸைய்யிதினா வமவ்லானா முஹம்மதின் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்.
வ ஸைய்யிதினா அபீபக்கரிஸ் ஸித்தீக் ரலி
வ ஸைய்யிதினா உமரப்னில் கத்தாப் ரலி
வ ஸைய்யிதினா உஸ்மானிப்னி அகுப்குபான் ரலி
வ ஸைய்யிதினா அலிய்யிப்னி அபீதாலிப் ரலி
வ ஸைய்யிதினா தல்ஹதப்னி உபைதில்லாஹ் ரலி
வ ஸைய்யிதினா ஸூபைரிப்னில் அவாம் ரலி
வ ஸைய்யிதினா ஸஃதிப்னி அபீவக்காஸ் ரலி
வ ஸைய்யிதினா ஸஈதிப்னி ஸைத் ரலி
வ ஸைய்யிதினா அப்திர்ரஹ்மானிப்னி அவ்குபின் ரலி
வ ஸைய்யிதினா அபீஉபைததப்னில் ஜர்ராஹ் ரலி


வ ஸைய்யிதினா உபைய்யின் ரலி
வ ஸைய்யிதினா அக்னஸ ரலி
வ ஸைய்யிதினா அர்கம ரலி
வ ஸைய்யிதினா அஸ்அத ரலி
வ ஸைய்யிதினா அனஸின் ரலி
வ ஸைய்யிதினா அனஸத ரலி
வ ஸைய்யிதினா உனைஸின் ரலி
வ ஸைய்யிதினா அவ்ஸின் - 2 ரலி
வ ஸைய்யிதினா இயாஸின் - 2 ரலி
வ ஸைய்யிதினா புஜைரின் ரலி

வ ஸைய்யிதினா பஹ்ஹாஸின் ரலி
வ ஸைய்யிதினா பராஇன் ரலி
வ ஸைய்யிதினா பஸ்பஸத்த ரலி
வ ஸைய்யிதினா பிஷ்ரின் ரலி
வ ஸைய்யிதினா பஷீரின் ரலி
வ ஸைய்யிதினா பிலாலின் ரலி
வ ஸைய்யிதினா தமீமின் - 3 ரலி
வ ஸைய்யிதினா ஸாபித்தின் - 5 ரலி
வ ஸைய்யிதினா ஸஃலபத்த ரலி
வ ஸைய்யிதினா ஸக்பின் ரலி

வ ஸைய்யிதினா ஜாபிர் -2 ரலி
வ ஸைய்யிதினா ஜப்பாரின் ரலி
வ ஸைய்யிதினா ஜப்ரின் ரலி
வ ஸைய்யிதினா ஜூபைரின் ரலி
வ ஸைய்யிதினா ஹாரிஸ்  -11 ரலி
வ ஸைய்யிதினா ஹாரிஸத்த - 2 ரலி
வ ஸைய்யிதினா ஹாதிபின்  -2 ரலி
வ ஸைய்யிதினா ஹூபாபின் ரலி
வ ஸைய்யிதினா ஹபீபின் ரலி
வ ஸைய்யிதினா ஹராமின் ரலி

வ ஸைய்யிதினா ஹூரைஸின் ரலி
வ ஸைய்யிதினா ஹூஸைனின் ரலி
வ ஸைய்யிதினா ஹம்ஸத்த – 2 ரலி
வ ஸைய்யிதினா காரிஜத்த ரலி
வ ஸைய்யிதினா காலிதின் - 2 ருலி
வ ஸைய்யிதினா கப்பாபின் - 2 ரலி
வ ஸைய்யிதினா குபைபின் ரலி
வ ஸைய்யிதினா கிதாஷின் ரலி
வ ஸைய்யிதினா கிராஷின் ரலி
வ ஸைய்யிதினா குரைமின் ரலி
வ ஸைய்யிதினா கல்லாதின் - 4 ரலி
வ ஸைய்யிதினா குலைதின் ரலி
வ ஸைய்யிதினா கலீகுபத்த ரலி
வ ஸைய்யிதினா ஹூனைஸின் ரலி
வ ஸைய்யிதினா கவ்வாத்தின் ரலி
வ ஸைய்யிதினா கவ்லிய்யின் ரலி
வ ஸைய்யிதினா தக்வான ரலி
வ ஸைய்யிதினா திஷ்ஷிமாலைனி ரலி
வ ஸைய்யிதினா ராஷிதின் ரலி
வ ஸைய்யிதினா ராகுபிஇன்-5 ரலி


வ ஸைய்யிதினா ரிப்இய்யின் ரலி
வ ஸைய்யிதினா ரபீஇன் ரலி
வ ஸைய்யிதினா ரபீஅத்த ரலி
வ ஸைய்யிதினா ருகைய்லத்த ரலி
வ ஸைய்யிதினா ரிகுபாஆ-4 ரலி
வ ஸைய்யிதினா ஜியாத்-3 ரலி
வ ஸைய்யிதினா ஜைத்-6 ரலி
வ ஸைய்யிதினா ஸாலிம்-2 ரலி
வ ஸைய்யிதினா ஸாயிப் ரலி
வ ஸைய்யிதினா ஸப்ரா ரலி
வ ஸைய்யிதினா ஸூராக்கா-2 ரலி
வ ஸைய்யிதினா ஸஃதின்-11 ரலி
வ ஸைய்யிதினா ஸஈதின் ரலி
வ ஸைய்யிதினா ஸூப்குயான ரலி
வ ஸைய்யிதினா ஸலமத்த-3 ரலி
வ ஸைய்யிதினா ஸலீத்தின் ரலி
வ ஸைய்யிதினா ஸூலைமின் -4 ரலி
வ ஸைய்யிதினா ஸிமாகின் ரலி
வ ஸைய்யிதினா ஸினானின்-2 ரலி
வ ஸைய்யிதினா ஸஹ்லின்-4  ரலி


வ ஸைய்யிதினா ஸூஹைலின் -2 ரலி
வ ஸைய்யிதினா ஸவாதின் -2 ரலி
வ ஸைய்யிதினா ஸூவைபித்தின் ரலி
வ ஸைய்யிதினா ஸூஜாயின் ரலி
வ ஸைய்யிதினா ஷரீக்கின் ரலி
வ ஸைய்யிதினா ஷம்மாஸின் ரலி
வ ஸைய்யிதினா ஸூபைஹின் ரலி
வ ஸைய்யிதினா ஸகுபவான ரலி
வ ஸைய்யிதினா ஸய்பிய்யின் ரலி
வ ஸைய்யிதினா ஸூஹைபி;ன் ரலி

வ ஸைய்யிதினா ழஹ்ஹாக்-2 ரலி
வ ஸைய்யிதினா ழம்ரத்த ரலி
வ ஸைய்யிதினா துiகுபலின்-3 ரலி
வ ஸைய்யிதினா துலைபின் ரலி
வ ஸைய்யிதினா லுஹைரிப்னிராபிகுஇப்னி அதிய்யின் ரலி
வ ஸைய்யிதினா ஆஸிமின்-4 ரலி
வ ஸைய்யிதினா ஆகிலின் ரலி
வ ஸைய்யிதினா ஆமிரின்-8 ரலி
வ ஸைய்யிதினா அப்பாதின்-2 ரலி
வ ஸைய்யிதினா உபாதா ருலி

வ ஸைய்யிதினா   அப்தில்லாஹ்-26 ரலி
வ ஸைய்யிதினா   அப்திர் ரஹ்மான் ரலி
வ ஸைய்யிதினா   அப்த ரப்பிஹி ரலி
வ ஸைய்யிதினா   அப்தத ரலி
வ ஸைய்யிதினா   அப்ஸின் ரலி
வ ஸைய்யிதினா   ஆயிதின் ரலி
வ ஸைய்யிதினா   உபைதின்-4 ரலி
வ ஸைய்யிதினா   உபைதத்த ரலி
வ ஸைய்யிதினா   இத்பான ரலி
வ ஸைய்யிதினா   உத்பத்த -3 ரலி
வ ஸைய்யிதினா   உஸ்மான ரலி

வ ஸைய்யிதினா அஜ்லான ரலி
வ ஸைய்யிதினா அதிய்யின் ரலி
வ ஸைய்யிதினா இஸ்மத்த ரலி
வ ஸைய்யிதினா உஸைமத்த ரலி
வ ஸைய்யிதினா அதிய்யத்த ரலி
வ ஸைய்யிதினா உக்பத்த – 4 ரலி
வ ஸைய்யிதினா உக்காஷத்த ரலி
வ ஸைய்யிதினா அம்மாரின் ரலி
வ ஸைய்யிதினா உமாரத்த – 2 ரலி
வ ஸைய்யிதினா அம்ரின் - 11 ரலி
வ ஸைய்யிதினா உமைரின் - 5 ரலி
வ ஸைய்யிதினா அவ்குபின் ரலி

வ ஸைய்யிதினா உவைமின் ரலி
வ ஸைய்யிதினா இயாழின் ரலி
வ ஸைய்யிதினா கன்னாமின் ரலி
வ ஸைய்யிதினா குபாகிஹின்; ரலி
வ ஸைய்யிதினா பர்வத்த ரலி
வ ஸைய்யிதினா கதாதத்த ரலி
வ ஸைய்யிதினா குதாமத்த ரலி
வ ஸைய்யிதினா குத்பத்த ரலி
வ ஸைய்யிதினா கைஸின் - 3 ரலி
வ ஸைய்யதினா கஃபின் -2 ரலி

வ ஸைய்யிதினா லிப்தத்த ரலி
வ ஸைய்யிதினா மாலிகின் - 8 ரலி
வ ஸைய்யிதினா முபஷ்ஷிரின் ரலி
வ ஸைய்யிதினா முஜத்தரின் ரலி
வ ஸைய்யிதினா முஹர்ரரின் ரலி
வ ஸைய்யிதினா முஹ்ரிஜின் ரலி
வ ஸைய்யிதினா முஹம்மதின் ரலி
வ ஸைய்யிதினா மித்லாஜின் ரலி
வ ஸைய்யிதினா மர்ஸதின் ரலி
வ ஸைய்யிதினா மிஸ்தஹின் ரலி

வ ஸைய்யிதினா மஸ்ஊதின் - 6 ரலி
வ ஸைய்யிதினா முஸ்அபின் ரலி
வ ஸைய்யிதினா முஆதின் - 5 ரலி
வ ஸைய்யிதினா மஃபதின் - 2 ரலி
வ ஸைய்யிதினா முஅத்திபின் - 3 ரலி
வ ஸைய்யிதினா மஃகலின் ரலி
வ ஸைய்யிதினா மஃமரின் ரலி
வ ஸைய்யிதினா மஃனின் 2 ரலி
வ ஸைய்யிதினா முஅவ்விதின் -2 ரலி
வ ஸைய்யிதினா மிக்தாதின் ரலி

வ ஸைய்யிதினா முலைலின் ரலி
வ ஸைய்யிதினா முன்திரின் - 3 ரலி
வ ஸைய்யிதினா மிஹ்ஜஇன் ரலி
வ ஸைய்யிதினா நழ்ரின் ரலி
வ ஸைய்யிதினா நுஃமான -7 ரலி
வ ஸைய்யிதினா நுஅய்மான ரலி
வ ஸைய்யிதினா நவ்பகுலின் ரலி
வ ஸைய்யிதினா ஹானியின் ரலி
வ ஸைய்யிதினா ஹூபைலின் ரலி
வ ஸைய்யிதினா ஹிலாலின் ரலி

வ ஸைய்யிதினா வாகிதின் ரலி
வ ஸைய்யிதினா வதகத்த ரலி
வ ஸைய்யிதினா வதீஅத்த ரலி
வ ஸைய்யிதினா வஹ்பின் -2 ரலி
வ ஸைய்யிதினா யஜீத – 6 ரலி
வ ஸைய்யிதினா அபீ அய்யூப ரலி
வ ஸைய்யிதினா அபில் அஃவரி ரலி
வ ஸைய்யிதினா அபீ ஹப்பத்த ரலி
வ ஸைய்யிதினா அபீ ஹன்னத்த ரலி
வ ஸைய்யிதினா அபீ ஹபீபின் ரலி

வ ஸைய்யிதினா அபீ ஹூதைபகுத்த ரலி
வ ஸைய்யிதினா அபீ ஹஸனின் ரலி
வ ஸைய்யிதினா அபீ காரிஜத்த ரலி
வ ஸைய்யிதினா அபீ கல்லாதின் ரலி
வ ஸைய்யிதினா அபீ குஸைமத்த ரலி
வ ஸைய்யிதினா அபீ தாவூத ரலி
வ ஸைய்யிதினா அபீ துஜானத்த ரலி
வ ஸைய்யிதினா அபீ ஸப்ரத்த ரலி
வ ஸைய்யிதினா அபீ ஸலீத்தின் ரலி
வ ஸைய்யிதினா அபீ ஸலமத்த ரலி

வ ஸைய்யிதினா அபீ ஸினானின் ரலி
வ ஸைய்யிதினா அபீ ஷைகின் ரலி
வ ஸைய்யிதினா அபீ ஸிர்மத்த ரலி
வ ஸைய்யிதினா அபீ ழய்யாஹின் ரலி
வ ஸைய்யிதினா அபீ தல்ஹத்த ரலி
வ ஸைய்யிதினா அபீ அகீலின் ரலி
வ ஸைய்யிதினா அபீ கதாத்தத்த ரலி
வ ஸைய்யிதினா அபீ கைஸின் ரலி
வ ஸைய்யிதினா அபீ கப்ஷத்த ரலி
வ ஸைய்யிதினா அபீ லுபாபத்த ரலி

வ ஸைய்யிதினா அபீ மக்ஷிய்யின் ரலி
வ ஸைய்யிதினா அபீ மர்ஸதின் ரலி
வ ஸைய்யிதினா அபீ மஸ்ஊதின் ரலி
வ ஸைய்யிதினா அபீ முலைலின் ரலி
வ ஸைய்யிதினா அபில் ஹய்ஸமி ரலி
வ ஸைய்யிதினா அபில் யஸ்ரி ரலி

அல்லாஹூம் மக்ழி ஹாஜாத்தினா பிஹக்கி அஸ்ஹாபில் பத்ரிய்யீன ரிழ்வானுல்லாஹி தஆலா அன்குல்வி வாஹிதிம் மின்ஹூம் அஜ்மஈன் வஸல்லம தஸ்லீமன் கஸீரன் கஸீராஹ் வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

திருக்குர்ஆனில் கூறப்பட்ட 25 நபிமார்களின் பெயர்கள்1. ஆதம்         அலைஹிஸ்ஸலாம்
2. இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம்
3. நூஹ்         அலைஹிஸ்ஸலாம்
4. சாலிஹ் அலைஹிஸ்ஸலாம்
5. ஹுது        அலைஹிஸ்ஸலாம்


6. இப்ராஹும் அலைஹிஸ்ஸலாம்
7. லூத்;                அலைஹிஸ்ஸலாம்
8. இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம்
9. இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம்
10. யஃகூப்         அலைஹிஸ்ஸலாம்


11. யூசுப்         அலைஹிஸ்ஸலாம்
12. அய்யூப்; அலைஹிஸ்ஸலாம்
13. ஷீஐப்        அலைஹிஸ்ஸலாம்
14. ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்
15. மூஸா        அலைஹிஸ்ஸலாம்


16. அல்யஸஃ     அலைஹிஸ்ஸலாம்
17. துல்கிப்லி     அலைஹிஸ்ஸலாம்
18. தாவூத்            அலைஹிஸ்ஸலாம்
19. சுலைமான்; அலைஹிஸ்ஸலாம்
20. இல்யாஸ்       அலைஹிஸ்ஸலாம்


21. யூனுஸ்; அலைஹிஸ்ஸலாம்
22. ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம்
23. யஹ்யா அலைஹிஸ்ஸலாம்
24. ஈஸா        அலைஹிஸ்ஸலாம்
25.  முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வசல்லம் 

ஹழ்ரத் அலி (கர்ரமல்லாஹு வஜ்ஹஹு) -சிறு குறிப்பு

  

பிறந்த ஆண்டு - கி.பி 600

மறைந்த ஆண்டு - ஹிஜ்ரி 40

தந்தை பெயர் - அபூதாலிப்

தாய் பெயர் - ஃபாத்திமா பின்து அஸது

மனைவி மற்றும் - மனைவி பெயர் ஃபாத்திமா (ரலி)

குழந்தைகள் - குழந்தைகள் ஹஸன்(ரலி)ஹுஸைன்

உடல்வாகு - மாநிறம், நடுத்தரமான உயரம், சற்று தடிப்பமான உடல் 

நாயகம்(ஸல்) அவர்களோடு உறவு - மருமகன்- ஒன்றுவிட்ட சகோதரர்

இஸ்லாத்தில் இணைந்தது - சிறுவர்களில் முதல் நபர்

வகித்த பொறுப்பு - இஸ்லாத்தின் 4வது கலீஃபா

அறிவித்துள்ள ஹதீஸ்கள் - 586 

இஸ்லாத்திலே இணைந்த போது வயது - 9ஆகும்

புரிந்த சாதனை - கைபர் போரில் வெற்றி

அலி(ரலி)யை கொலை செய்தவன் இப்னு முல்ஜிம்

இறந்த நேரம் - ஸஹர் நேரமாகும்

உயிர் பிரிந்த நேரம் - ஹிஜ்ரி 40ஆம்ஆண்டு ரமழான் மாதம் 17ஆம் தேதி
ஸஹருடைய நேரத்திலே உயிர் பிரிந்தது 

ஆட்சி காலம் - 4ஆண்டுகள் 9மாதங்கள்

வயது - 63

ஜனாஸா தொழுகை வைத்தவர் - மகனார் ஹஸன்(ரலி)

நல்லடக்கம் - கூஃபாவிலே

ஹழ்ரத் உஸ்மான் (ரலி)- சிறு குறிப்புபிறந்த ஆண்டு கி.பி 577

மறைந்த ஆண்டு ஹிஜ்ரி 35

சிறப்பு துன்னூரைன்

தந்தை பெயர் அஃப்பான்

தாய் பெயர் அர்வா பின்து குறைஜ்

உடல்வாகு சிகப்பு கலந்த வெண்மை நிறைந்த நடுத்தரமான உடல்

நாயகம் (ஸல்) அவர்களோடு உறவு மருமகன்

வகித்த பொறுப்பு இஸ்லாத்தின் 3-வது கலீஃபா

ஆட்சி செய்த காலம் 12 ½  ஆண்டுகள்

அறிவித்துள்ள ஹதீஸ்கள் 146 ஹதீஸ்கள்

ஹழ்ரத் உமர் (ரலி) -சிறு குறிப்புபிறந்த ஆண்டு 581

மறைந்த ஆண்டு ஹிஜ்ரி  23

இஸ்லாத்தில் இணைந்தது நுபுவ்வத் கிடைத்த 6-ம் ஆண்டு

தந்தை பெயர் கத்தாபு

உடல்வாகு சிகப்பு கலந்த வெண்மை நிறைந்த சற்று உயரமான உடல்

இவர்களின் கருத்துக்கு தோதுவாக இறங்கிய வசனங்கள் இருபதுக்கும் அதிகமான வசனங்கள்

நாயகம் (ஸல்) அவர்களோடு உறவு மாமனார்

வகித்த பொறுப்பு இஸ்லாத்தின் 2-வது கலீஃபா

ஆட்சி செய்த காலம் 10 ஆண்டுகள்

அறிவித்துள்ள ஹதீஸ்கள் 539 ஹதீஸ்கள்

அபூபக்கர் ரலி -சிறு குறிப்புபிறந்த ஆண்டு கி.பி 573

மறைந்த ஆண்டு ஹிஜ்ரி 13

வயது 63

இயற்பெயர் அப்துல்லாஹ்

இஸ்லாத்தில் இணைந்தது ஆண்களில் முதல் நபர்

தந்தை பெயர் அபூ குஹாஃபா

நாயகம் (ஸல்) அவர்களுக்கு உறவு மாமனார்

வகித்த பொறுப்பு இஸ்லாத்தின் முதல் கலீஃபா

ஆட்சி செய்த காலம் 2 ½ ஆண்டுகள்

முக்கிய சேவை குர்ஆனை ஒன்று சேர்த்தது

நாயகம் (ஸல்)- சிறு குறிப்புபிறந்தஆண்டு கி.பி.570 ஏப்ரல் 22 ரபீயுல் அவ்வல் பிறை 12 திங்கள் கிழமை

மறைந்த ஆண்டு ஹிஜ்ரி 11 கி.பி.630 ஜூன் 9

முதல் திருமணத்தின் வயது 25

மொத்தம் மனைவிமார்கள் 11

ஆண் பிள்ளைகள்-3 காசிம் (ரலி), அப்துல்லாஹ் (ரலி), இபுறாஹீம் (ரலி)
பெண் பிள்ளைகள்-4 ஜைனப் (ரலி), உம்மு குல்ஸூம் (ரலி), ருகையா (ரலி) ஃபாத்திமா (ரலி)

மருமகன்கள் உஸ்மான் (ரலி), அலி (ரலி),
அபுல் ஆஸ் (ரலி)

கலந்து கொண்ட போர்கள் 19

மக்காவில் நபித்துவத்திற்குப் பின் தங்கியிருந்த ஆண்டுகள் 13
வயது 63

இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது கணவனே!.


இனிய இல்லறத்திற்கு இடையூறாக இருப்பது ............கணவனே!.
என்ற ஆய்வுக்காக அழைக்கப்பட்டு உள்ளேன்.

மனைவியின் புறத்திலே எத்தனை குறைபாடுகள் இருந்தாலும், எத்தனை குற்றச்சாட்டுகள் மனைவியின் புறத்திலே இருந்தாலும் கூட அந்த குற்றங்கள் உருவாக காரணம் யார்? எத்தனை குற்றச்சாட்டு வேண்டுமானாலும் சாட்டலாம். ஆனால் அந்த குற்றங்கள் உருவாக அடிப்படை அசல் காரணம் கணவன் தான்.


16 ஆகஸ்ட், 2013

நபிமார்கள்- ஒரு சிறு குறிப்புநோயின் மூலம் சோதிக்கப்பட்ட நபி
ஹழ்ரத் அய்யூப் (அலை)

முதன்முதலில் கவசங்கள் செய்த
நபி ஹழ்ரத் தாவூது (அலை)

நெருப்புக்குண்டத்திலிருந்து காப்பாற்றப்பட்ட நபி
ஹழ்ரத் இப்றாஹீம் (அலை)

சட்டையின் மூலம் கண்பார்வை பெற்ற நபி
ஹழ்ரத் யாகூப் (அலை)

முதன் முதலில் ரேசன் முறையை அறிமுகம் செய்த நபி
ஹழ்ரத் யூசுப் (அலை)

மீன் வயிற்றுக்குள் சென்று திரும்பிய நபி
ஹழ்ரத் யூனுஸ் (அலை)

காற்றின் மூலம் ஆகாயப் பயணம் செய்த நபி
ஹழ்ரத் சுலைமான் (அலை)

ரம்பத்தால் அறுக்கப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட நபி
ஹழ்ரத் ஜகரிய்யா (அலை)

உயிருடன் வானுலகம் உயர்த்தப்பட்ட நபி
ஹழ்ரத் ஈஸா (அலை)

நபி மார்களின் இறுதியான 
நபி ஹழ்ரத் முஹம்மது (ஸல்)

இல்லவே இல்லை!1. சவூதி அரேபியாவில் நதிகளே இல்லை.
2. ஆப்கானிஸ்தானில் ரயில்களே இல்லை
3. ஆப்பிரிக்காவில் புலிகளே இல்லை.
4. அல்போனியாவில் மதங்களே இல்லை.
5. மண்ணுளி பாம்பிற்கு கண்களே இல்லை.
6. யானையின் துதிக்கையில் எலும்புகளே இல்லை.
7. யமுனை  நதி கடலில் கலப்பதே இல்லை.
8. முதலைக்கு நாக்கே இல்லை.
9. நண்டுக்கு தலையே இல்லை.
10. வெளவாலுக்கு பார்வையே இல்லை.
11. வண்ணத்துப் பூச்சிக்கு வாயே இல்லை.
12. நியுஸிலாந்தில் காகமே இல்லை.
13. உண்மை உழைப்பிற்கு தாழ்வே இல்லை.
14. முயற்சியின் பயணத்திற்கு முடிவே இல்லை.
15. கல்விக்கு முடிவே இல்லை.

12 ஆகஸ்ட், 2013

எல்லா நேரமும் அல்லாஹ்வை நினையுங்கள்      பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1)எதையும் செய்ய ஆரம்பிக்கும் போது என்ன ஓத வேண்டும்?
    பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருநாமத்தால்)

2)எதையும் செய்ய நினைக்கும் போது என்ன ஓத வேண்டும்?
    இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்)

3)எதுவும் புகழப்படும் போது என்ன ஓத வேண்டும்?
   சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)

4)துன்பத்தில் உழலும் போது என்ன ஓத வேண்டும்?
    யா அல்லாஹ் (அல்லாஹ்வே)

5) எதையும் பாராட்டும் போது என்ன ஓத வேண்டும்?
மாஷா அல்லாஹ் (எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே)

6) யாருக்கும் நன்றி கூறும் போது என்ன ஓத வேண்டும்?
ஜஸாக்கல்லாஹூ (அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக)

7) தும்மும் போது என்ன ஓத வேண்டும்?
    அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)

8) பிறர் தும்மும் போது என்ன ஓத வேண்டும்?
    யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் அருள் பாலிப்பானாக)

9) தவறை எண்ணி வருந்தும்போது என்ன ஓத வேண்டும்?    
   அஸ்தஃகு பிருல்லாஹ் (அல்லாஹ் பிழை பொறுப்பானாக)

10) உறுதி மொழி எடுக்கும் போது என்ன ஓத வேண்டும்?
  வல்லாஹிபில்லாஹ் (அல்லாஹ் மீது ஆணையாக)

11) தருமம் செய்யும் போது என்ன ஓத வேண்டும்?
   fபீ ஸபீலில்லாஹ் (அல்லாஹ்வின் பாதையில்

12) யார் மீதும் அன்பு பாராட்டும் போது என்ன ஓத வேண்டும்?
  லி ஹூப்பில்லாஹ் (அல்லாஹ்வின் அன்பிற்காக)

13) யாரிடமிருந்தும் விடைபெறும் போது என்ன ஓத    வேண்டும்?
   fபீ அமானில்லாஹ்(அல்லாஹ்வின் அடைக்கலத்தில்)

14) பிரச்சனைகள் எழும் போது என்ன ஓத வேண்டும்?
தவக்கல்து அலல்லாஹ் (அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தேன்)

15) விரும்பியவை நடக்கும் போது என்ன ஓத வேண்டும்?
    fபதபாரகல்லாஹ் (அல்லாஹ் உயர்வானவன்)

16) விரும்பாதவை நடக்கும் போது என்ன ஓத வேண்டும்?
     நஊதுபில்லாஹ் (அல்லாஹ்விடம் காவல் தேடுகிறோம்)

17) திடுக்கிடும் செய்திகேள்வியுறும் போது என்ன ஓத வேண்டும்?
  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன் (அல்லாஹ்விடமிருந்து வந்தோம் மேலும் அவனிடமே திரும்பிவருபவர்களாக உள்ளோம்.