19 டிசம்பர், 2012

எரிமலை எப்படி பொறுக்கும்?


உலக அழிவு எப்போது? 
அதைத் தெரிந்துகொள்வதில்தான் மக்களுக்கு எவ்வளவு ஆர்வம்?
இன்று இணையமே திணறித் திக்குமுக்காடிப்போயிருக்கும் அளவிற்கு மக்களால் அதிகம் தேடப்படுவது இது குறித்துதான்.

சமீபகாலமாக மக்கள் உலக அழிவு குறித்து அதிர்ச்சியிலும் அதை அறிந்துகொள்வதில் ஆர்வத்திலும் ஆழ்ந்துபோயிருப்பதற்கு என்ன காரணம்?


  • மாயன் காலண்டரும்
  • அமெரிக்காவில் இருந்துகொண்டு அகிலத்தையே பயமுறுத்திக்கொண்டிருக்கும் யெல்லோ ஸ்டோன் (Yellowstone)எனப்படும் எரிமலையும்தான்.

அது என்ன எரிமலை?
அமெரிக்காவின் Wyoming மாநிலத்தில் அமைந்திருக்கிறது இந்த யெல்லோ ஸ்டோன்.  60 கிலோ மீட்டர் நீளமும், 40 கிலோ மீட்டர் அகலமும், 10 கிலோ மீட்டர் பூமியின் கீழே ஆழமுமாக அமைந்த மிகப்பெரிய எரியும் கூண்டு போல இது இருக்கிறது. உண்மையில் இது எரியும் கூண்டு அல்ல. ஆயிரம் ஆயிரம் அணுகுண்டுகளின் வெடிப்பு சக்தியை உள்ளடக்கிய பாரிய வெடிகுண்டு.
யெல்லோ ஸ்டோன்
இந்த யெல்லோ ஸ்டோன் பிரதேசங்களில் 10000 க்கும் அதிகமான வெந்நீர் ஊற்றுகள் நிலத்தில் இருந்து சீறியபடி இருக்கின்றன. இவற்றைப் பார்ப்பதற்கென்றே சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிகின்றனர்.                                                                            

கிட்டத்தட்ட ஒரு மிகப் பெரிய நகரம் ஒன்றே பூமிக்குக் கீழே எரிந்தபடி இருக்கின்றது என்று சொல்லக் கூடியதாக உள்ளது. அது எப்போது வெடித்து வெளிவருமோ என்று தெரியாத நிலையில், அதனால் ஏற்படும் சுடு நீர் ஊற்றுகளைப் பார்க்க மக்கள் அங்கே கூடுகிறார்கள். இந்த யெல்லோ ஸ்டோன் மட்டும் வெடிக்குமானால், ஒட்டுமொத்த அமெரிக்காவே சில நிமிடங்களில் காலியாகிவிடும். அது கடற்பகுதியில் ஏற்படுத்தும் தாக்கத்தால் உலகம் எங்குமே, சுனாமி மற்றும் பூகம்ப அழிவு எற்படும். இதுவெடிப்பதனால், அதன் பாதிப்பின் தொடர்ச்சியாக, உலகின் மற்றைய ஏழு சூப்பர் வோல்கான்களும் வெடிக்கும் சாத்தியங்களும் உண்டு. இதனால் ஏற்படுவது ஒட்டுமொத்த உலக அழிவுதான் என்று சில அறிவியலார் கூறியதைத் தொடர்ந்து உலகம் முழுதும் பெரிய பதட்டம் காணப்படுகிறது.

நாம் என்ன கூறுகிறோம்?
உலக அழிவின்போது எரிமலை வெடிப்பதையோ அதனால் கடல் சீற்றம் ஏற்படுவதையோ குர்ஆன் மறுக்கவில்லை


சூரியன் சுருட்டப்படும்போது... நட்சத்திரங்கள் உதிரும்போது... மலைகள் பெயர்க்கப்படும்போது... கருவுற்ற‌ ஒட்டகைகள் கவனிப்பாரற்று விடப்படும்போது... காட்டு விலங்குகள் ஒன்று திரட்டப்படும்போது... கடல்கள் தீ மூட்டப்படும்போது.... உயிர்கள் மீண்டும் (உடல்களோடு)ஒன்றிணைக்கப்படும்போது...(அல்குர்ஆன் 81:1-7)


பூமி பேரதிர்ச்சியாக குலுக்கப்படும்போது... பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும்போது... இதற்கு என்ன நேர்ந்துவிட்டது என்று மனிதன் கேட்கும்போது... அந்நாளில், தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும்!(அல்குர்ஆன் – 99:1-5)ஆனால் அது இந்த வருடம் டிசம்பரில் நடக்கும் என்று அறுதியிட்டு உறுதி கூறுவதைத்தான் வன்மையாக மறுக்கிறது. அதுபற்றி அறிவு அல்லாஹ்விற்குறியது.
إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (31:34)

இதுவரை இப்படி உலகம் அழியும் என்று கூறியவர்கள் ஒன்றல்ல. இரண்டல்ல.. அப்போதெல்லாம் அந்த கணிப்புகள் பொய்யாகவே முடிந்திருக்கிறது அது என்ன?
இது குறித்து நான் ஏற்கனவே எழுதிய இந்த கட்டுரையை வாசிக்கவும்: