20 டிசம்பர், 2012

அறிஞர்களின் மறைவும் அகிலத்தின் அழிவும்

நாடறிந்த பேச்சாளர், ஆன்மீகம், அரசியல் சகல துறைகளிலும் முதிர்ச்சி பெற்ற ஞானி,காயல்பட்டணம் மஹ்லரா அரபிக்கல்லூரி முதல்வர் கடையநல்லூர் S.S.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள் இன்று 20.12.121 இரவு 2.00 மணியளவில் சென்னை வேளச்சேரி விஜயா மருத்துவமனையில் மரணமடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் 

சமீப காலமாகவே அறிவிற் சிறந்த ஆன்றோர்கள் மூத்த உலமாக்கள் பலரும் அடுத்தடுத்து இறையடி சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். பண்பட்ட அறிஞர்கள் பலரும் மறைந்துகொண்டே இருப்பது ஆழ்ந்த துயரை உண்டாக்கி இருக்கிறது۔
அது குறித்து ஒரு கட்டுரை:


19 டிசம்பர், 2012

எரிமலை எப்படி பொறுக்கும்?


உலக அழிவு எப்போது? 
அதைத் தெரிந்துகொள்வதில்தான் மக்களுக்கு எவ்வளவு ஆர்வம்?
இன்று இணையமே திணறித் திக்குமுக்காடிப்போயிருக்கும் அளவிற்கு மக்களால் அதிகம் தேடப்படுவது இது குறித்துதான்.

சமீபகாலமாக மக்கள் உலக அழிவு குறித்து அதிர்ச்சியிலும் அதை அறிந்துகொள்வதில் ஆர்வத்திலும் ஆழ்ந்துபோயிருப்பதற்கு என்ன காரணம்?

16 டிசம்பர், 2012

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறியுங்கள்

வானம் வசப்படும்-1  (தன்னம்பிக்கை தொடர்)


தாழ்வு மனப்பான்மை வேண்டாம்


மற்றவர்களைவிட நாம் தாழ்ந்தவர்களோ என்ற சந்தேகம் நம் வாழ்வில் ஏற்படுவது சகஜம்தான். உலக மக்களில் 95 சதவீதத்தினர் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாகவே இருக்கின்றனர் என்கிறார் டாக்டர் 'மேக்ஸ் வெல்மால்ட்ஸ் '

தாழ்வு மனப்பான்மை (inferiority complex) என்பது தன்னைத்தானே குறைத்து மதிப்பிடுகின்ற ஒரு தன்மை. திருப்தியின்மையானால் எழுகின்ற உணர்வு. பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாம் குறைவானவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்றே தம்மைப் பற்றிக் கருதுவார்கள். பலர் மனஅழுத்தத்தில் உழல்வார்கள். தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அபாயம் இவர்களில் உண்டு.
திறமை , தோற்றம், வாழ்க்கை முறை போன்றவற்றில் நம்மில் பலருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதற்கு காரணம் சினிமா எனும் கனவுலக நாயகன் நாயகிகளுடன் நம்மை நாம் ஒப்பிட்டுப் பார்ப்பதுதான். அல்லது வசதி பெருத்தவர்களைப் பார்த்து நாம் ஏங்குவதுதான்.

இது தவறு. நீங்கள் நீங்கள்தான். எவருடனும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய அவசியமில்லை.  இறைவன் தனது படைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமையைத் தந்திருக்கிறான் உங்கள் வெற்றியை உங்கள் ஆற்றலுடன் ஒப்பிட்டு தீர்மானியுங்கள். உங்களிடமுள்ள திறமையை சிறப்பாகப் பயன்படுத்தினால் நீங்கள்தான் 'நம்பர் ஒன்'


நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்:


"انْظُرُوا إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْكُمْ , وَلا تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ ، فَإِنَّهُ أَجْدَرُ أَنْ لا تَزْدَرُوا نِعَمَ اللَّهِ عَلَيْكُمْ  )مسند أحمد (
 ''
வசதியில் உங்களுக்கு கீழ்நிலையிலுள்ளோரைக் கவனியுங்கள்; மேல்நிலையில் உள்ளோரைக் கவனியாதீர்கள்; 
அப்போதுதான் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள அருள்வளங்களை குறைத்து மதிப்பிடாமல் இருக்க ஏதுவாகும்''
வெளிச்ச மனதுடனும் முகமலர்ச்சியுடனும் இருப்பவர்களைக் கவனி யுங்கள், எப்போதும் ஆக்க பூர்வமாகச் சிந்திப்பார்கள். நல்ல விடயங்களையே பேசுவார்கள். மற்றவர்களின் நற்பண்புகளை, திறமை களைப் பாராட்டுவார்கள். உறவுகளை மதிப்பார்கள், அவர்களின் உள்ளம் உயர்ந்திருப்பதினால் அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதே இல்லை.

வீணான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் முழுக் கவனத்தையும் தங்கள் பணியில் செலுத்துவார்கள். ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் புதிய இலக்கை நிர்ணயித்து அதற்கு நேராய் செயல் படுவார்கள். உடனிருப்போரை யெல்லாம் மகிழ்ச்சியடையச் செய்வார்கள். அப்படிப்பட்டவர்களின் சிந்தையும் செயலும் ஆரோக்கியமாக இருப்பதால் தாழ்வு மனப்பான்மை என்னும் நோய் அவர்களைத் தாக்குவதில்லை.

எழுந்து நடந்தால் 
எரிமலையும் சிரம் பணியும்
சோம்பிக் கிடந்தால்
சிலந்தி வலையும் உன்னை
சிறை பிடிக்கும்

13 டிசம்பர், 2012

சஃபர் மாதம்: சங்கடமா? சந்தோஷமா?
யானைக்கு தும்பிக்கை எப்படியோ
மனிதனுக்கு நம்பிக்கை அப்படி.
நம்பிக்கை எனும்போது ...
இறை நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கை இருக்கவேண்டும்

ஆனால் மூடநம்பிக்கை அறவே இருக்கக்கூடாது.
மனித சமூகத்தில் மண்டிக்கிடக்கும் மடமைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.
மூட நம்பிக்கையின் முடைநாற்றத்தில் மூழ்கிக்கிடக்கும் முட்டாள் தனமான மக்கள் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனைக்குறிய விஷயம்.
எத்தனை வகையான நம்பிக்கைகள்? அப்பப்பா.. மக்கள் தொகையைவிட மடமைகளின் தொகை அதிகமாக இருக்கும்போல் தெரிகிறதே..

08 டிசம்பர், 2012

உலமாப் பெருமக்களின் உயரிய வலைதளங்கள்

இதுவரை அடியேனின் பார்வையில் பட்ட தளங்கள்.!
இன்னும் இருந்தால் அதை கருத்துரையில் தெரிவித்தால் அவசியம் சேர்த்துக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ்.
ssahamedbaqavi.blogspot.com

06 டிசம்பர், 2012

மரணத்தின் மடியில் மனிதனின் நிலை


ஜீனா துமாரா ஜீனா
மர்னா துமாரா ஜீனா
கியா க்ஹூப் ஹே துமாரா
முஃமினே..
உன் வாழ்வும் வாழ்க்கைதான்உன் மரணமும் உனக்கு வாழ்க்கைதான்என்ன ஒரு அதிர்ஷ்டம் உனக்கு?
ஒரு நல்ல முஃமினைப் பொறுத்தவரை இறப்பு அவருக்கு இழப்பல்ல என்பதை அற்புதமாக படம்பிடித்துக் காட்டும் அல்லாமா இக்பாலின் வரிகள் இவை.

05 டிசம்பர், 2012

மரணம் ஒரு ஓய்வு- கவிதை


மரணம் வென்றவர் யாருமில்லை
மரணத்தை கண்டு அஞ்சாதவர் எவருமில்லை

மரணம் ஒரு ஓய்வு
நல்லவன் இறந்தால் அது
அவனுக்கு கிடைக்கும் ஓய்வாகுகிறது
கெட்டவன் இறந்தால் அது
மற்றவருக்கு கிடைக்கும் ஓய்வாகுகிறது

பயணி தன் பயணமுடிவிடம் கண்டு
அஞ்சுவானா
பயணத்தின் முடிவில்
பயணிக்குக் கிடைக்கும் ஓய்வு
சுகமானது

நம் வாழ்க்கைப் பயணமும்
மரணத்தில் முடிகிறது
உதித்தது முதல்
எங்கெங்கோ அலைந்து திரியும் நதி
கடலை அடைந்ததும்
ஓய்வு பெறுவது போல
பிறந்தது முதல்
துன்பங்களை அனுபவிக்கும் மனிதன்
மரணத்தில் ஓய்வு பெறுகிறான்

பலருக்கு மரணமே
துன்பங்களில் இருந்து விடுதலை
அளிக்கிறது
மரணம் துன்பங்களில் மட்டுமல்ல
பாவங்களில் இருந்தும்
விடுதலை அளிக்கிறது

வாழ்க்கை பாதை முழுவதும்
சாத்தான் வலை விரித்து
காத்துக் கொண்டிருக்கிறான்
வாழ்க்கை என்பதே
பாவம் செய்வதற்கான
வாய்ப்பு தானே
நல்லவர்கள் சீக்கிரம்
இறந்து போகிறார்கள்
நல்லவர்கள் பாவத்தில் விழாமல் இருக்க
மரணம் அவர்களுக்கு
உதவுகிறது

                        - கவிக்கோ. அப்துல் ரகுமான்

தவளை தரும் நன்மைகள்

டெங்கு


தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் கொசுக்கள் கட்டுக்கடங்காமல் பெருகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் இந்திய முழுவதும் வேகமாக பரவி வருகின்றன. இதில் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானவர்கள் பலியாகிவிட்டனர். ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் டெங்கு பரவி வருகிறது.
இந்த அளவுக்கு டெங்கு பரவியதற்கு கரணம், ஏடிஸ் ஏஜிப்டி ரக கொசுக்கள் கட்டுகடங்காமல் பெருகியதுதான். இந்த நிலையில் ஆசிய டைகர் எனப்படும் புதிய ரக கொசுக்கள் டெங்குவை பரப்புவது கண்டுபிடிகபட்டுள்ளது. ஏடிஸ் ஏஜிப்டி ரக கொசுக்கள் வீட்டுக்குள் தேங்கி இருக்கும் தண்ணீரில் உருவாகும். ஆனால் ஆசிய டைகர் ரக கொசுக்கள் திறந்த வெளியில் தேங்கி இருக்கும் தண்ணீரில் முட்டையிட்டு பெருகுகிறது.

இதுபோல கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆவதற்கு காரணம் தவளைகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததுதான் என்று சுற்றுசுழல் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர். தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் கொசுக்கள் அதிகமாக பெருகிவருகிறது. தவளைகள் அதிகமாக இருந்தால் தண்ணீரில் மிதக்கும் கொசுக்களின் லார்வாக்களை அவை சாப்பிட்டுவிடும். அண்மையில் டெல்லியில் நடத்திய ஆய்வில் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் தவளைகளே இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால், தவளைகளை காப்பாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் தவளையை கொள்வதை தடை செய்தார்கள்
நூல்:தாரமீ(1914)
தவளைகள் மனிதர்களுக்கு ஆற்றிய நன்மைகளை பட்டியலிடுகிறது பின்வரும் நபிமொழிகள்:

عن عائشة أن النبي صلى الله عليه و سلم قال كانت الضفدع تطفىء النار عن إبراهيم وكان الوزغ ينفخ فيه فنهي عن قتل هذا وأمر بقتل هذا
 عَنْ كَثِيرِ بْنِ عُبَيْدٍ قَالَ: إِنِّي لَجَالِسٌ عِنْدَ عَائِشَةَ إِذْ رَأَتْ وَزَغًا فَقَالَتْ: اقْتُلِ اقْتُلْ. قِيلَ: مَا شَأْنُهُ؟ فَقَالَتْ: إِنَّهُ كَانَ يَنْفُخُ النَّارَ يَوْمَ احْتَرَقَ بَيْتُ الْمَقْدِسِ وَكَانَ الضِّفْدَعُ يُطْفِئُ "
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ الْقُرَشِيِّ - رَضِيَ اللَّهُ عَنْهُ -، «أَنَّ طَبِيبًا سَأَلَ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَنْ الضِّفْدَعِ يَجْعَلُهَا فِي دَوَاءٍ، فَنَهَى عَنْ قَتْلِهَا» . أَخْرَجَهُ أَحْمَدُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ. وَأَخْرَجَهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيُّ" قال قَالَ الْبَيْهَقِيُّ: هُوَ أَقْوَى مَا وَرَدَ فِي النَّهْيِ عَنْ قَتْلِ الضِّفْدَع. وَأَخْرَجَ مِنْ حَدِيثِ ابْنِ عُمَرَو: «لَا تَقْتُلُوا الضَّفَادِعَ فَإِنَّ نَقِيقَهَا تَسْبِيحٌ وَلَا تَقْتُلُوا الْخُفَّاشَ فَإِنَّهُ لَمَّا خَرِبَ بَيْتُ الْمَقْدِسِ قَالَ: يَا رَبِّ سَلِّطْنِي عَلَى الْبَحْرِ حَتَّى أُغْرِقَهُمْ» قَالَ الْبَيْهَقِيُّ: إسْنَادُهُ صَحِيحٌ.
وَعَنْ أَنَسٍ «لَا تَقْتُلُوا الضَّفَادِعَ فَإِنَّهَا مَرَّتْ عَلَى نَارِ إبْرَاهِيمَ فَجَعَلَتْ فِي أَفْوَاهِهَا الْمَاءَ وَكَانَتْ تَرُشُّهُ عَلَى النَّارِ».
عند عبدالرزاق أيضا 8393 - قال أخبرنا أبو سعيد الشامي عن أبان عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه و سلم أمنوا الضفدع فإن صوته الذي تسمعون تسبيح وتقديس وتكبير إن البهائم استأذنت ربها في أن تطفىء النار عن إبراهيم فأذن للضفادعفتراكبت عليه فأبدلها الله بحر النار الماء.


  • நபி இப்றாஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் நெருப்பில் தூக்கி வீசப்பட்டபொழுது அந்த நெருப்பை அணைக்க உதவி செய்துள்ளது.
  • பைத்துல் முகத்தஸ் தீக்கிரையாக்கப்பட்டபொழுது நெருப்பை அணக்க முயற்சித்துள்ளது.
  • அதிகமாக இறைவனைத் துதிக்கிற உயிரினம்.
  • ஒரு மருத்துவர் மருந்துக்காக அதைக் கொல்ல அனுமதி வேண்டியபொழுது கூட மாநபி அனுமதிக்கவில்லை. காரணம் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத டெங்கு போன்ற கொடிய நோய்களின் கொசுக்களைக்கூட தவளைகள் தடுக்கும் என்பதை ஏந்தல் நபி அப்போதே புரிந்திருந்தார்களோ என்னவோ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவளைகளை கொள்வதை தடை செய்துள்ளார்கள் என்று மேற்கொண்ட ஆதாரப்பூர்வமான செய்தி தெளிவுபடுத்துகின்றது.

அப்படியானால் தவளைகளின் காரணமாக ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டுதான் அல்லாஹுடைய தூதர் அவர்கள் தவளையைக் கொள்ள வேண்டாம் என்று கட்டளையை பிறப்பித்துள்ளார்கள்.
தவளைகளால் எப்படிப்பட்ட நன்மைகள் விளைகின்றன என்பதை அப்போதுள்ள மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தற்போது நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.இஸ்லாம் இறைவனின் மார்க்கம்தான் என்பதை மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் உண்மைபடுத்துகின்றன.

சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே!

மழை நீர் -அறிவியலும் அல்குர்ஆனும்


இவ்வசனத்தில் (24:43) 'வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு, பூமியில் பொழியப்படுகின்றது' என்ற அறிவியல் உண்மை விளக்கப்படுகிறது.


பூமியில் உள்ள நீரை சூரியன் நீராவியாக மாற்றி மேலே இழுத்துச் சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தி யிருப்பதை இன்று அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். இம்மேகங்களின் பிரமாண்டத்தைப் பற்றிப் பெரும்பாலான மக்கள் இன்று கூட அறிந்திருக்கவில்லை. மேலே இழுத்துச் செல்லப்படும் நீராவியானது, ஒன்றோடொன்றாக இழுத்து இணைக்கப்பட்டு ஆலங்கட்டி (பனிக் கட்டி) தொகுப்புகளாக மாற்றப்படுகிறது.

இந்தப் பனிக் கட்டிகள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, 1000 அடி முதல் 30,000 அடிகள் வரை உயர்கின்றது. 30,000 அடி என்பது 9 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இது உலகின் பெரிய மலையான இமய மலையின் உயரத்தை விட அதிகம். இவ்வளவு பெரிய மலையின் அளவுக்கு இந்தப் பனிக் கட்டிகள், செங்குத் தாக அடுக்கப்பட்டு, மின் காந்தத் தூண்டுதல் ஏற்பட்டவுடன், பனிக் கட்டி கள் உருகி தண்ணீரைக் கொட்டுகின்றன.
இது மழையின் இரகசியமாகும். மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றைத் தான் மேலே தந்திருக்கிறோம்.

இதில் கூறப்பட்டுள்ள செய்திகளான, மேகங்களை இழுத்தல், அவற்றை அடுக்கடுக்காக அமைத்தல், மலை உயரத்திற்குப் பனிக் கட்டிகள் செங்குத் தாக நிறுத்தப்படுதல், மின்னல் மூலம் மின்காந்தத் தூண்டுதல் ஏற்படுத்துதல் போன்ற அத்தனை விஷயங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக இந்த வசனம் (24:43) அப்படியே கூறுவதைப் பார்த்து பிரமித்துப் போகிறோம். குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை۔


சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே!

மூன்று மாத இத்தா ஏன்? - ஒரு அறிவியல் விளக்கம்யூத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்.

‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.

மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்

‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.

ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்-கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே, டி.என்.ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும். ‘ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும்” என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு. அதையே குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத விஞ்ஞானி ஆடிப்போனார்; குர்ஆனை ஏற்றார்.

இது தொடர்பாக, எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்:

அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார்.
தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான். அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார் அவர் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.

ராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.

இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு. குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்.
- மௌலவி அ.முஹம்மது கான் பாகவி
நன்றி - சமரசம்

சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே!