08 நவம்பர், 2012

எதிரிகள் படையை நூலாம் படை வென்றது

முதலும் தியாகம் முடிவும் தியாகம்
இஸ்லாமிய ஆண்டு தியாகத்திலே ஆரம்பித்து தியாகத்திலே முடிகிறது.

முதல் மாதம் முஹர்ரம் அண்ணல் நபியின் அருமைப் பேரர் இமாம் ஹுசைன் ரலி கர்பலாக் களத்தில் மக்களாட்சி நிலைப்பதற்காக தம் இன்னுயிரை ஈந்த தியாகம் என்றால்,
இறுதி மாதம் துல்ஹஜ்ஜில் இப்றாஹீம் அலை தம் அருந்தவப் புதல்வர் இஸ்மாயீலை (அலை) இறைவனுக்காக பலியிடத் துணிந்த தியாகம்.

அதுமட்டுமல்ல..
ஆண்டுக்கு 12 மாதங்களை அமைத்த அல்லாஹ், அதில் நான்கு மாதங்களை புனித மாதங்கள் என்றாக்கினான். அதில் இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமும் உண்டு; முடிவான மாதமும் உண்டு.

“வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.”  (அல்குர்ஆன் 09:36)
அந்த நான்கு மாதங்கள் துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் என (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்.
''வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை – துல்கஅதாஃ, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும், ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்'' (ஸஹீஹுல் புஹாரி- -3197)

இஸ்லாமிய ஆண்டுக்கு ஹிஜ்ரி எனப்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. அந்த ஹிஜ்ரி எப்படி வந்தது? எப்போது வந்தது? என்பது பலருக்கும் தெரியாதது.
குழந்தை முதல் முதியோர் வரை பாய்மார்கள் முதல் தாய்மார்கள் வரை மாதங்களின் பெயர்களைக் கூறுங்கள் என்றால் ஜனவரி, பிப்ரவரி, மார்ச்......என்பார்கள். அல்லது சித்திரை,வைகாசி,........ என்பார்கள். இஸ்லாமிய மாதங்களைக் கூறுங்கள் என்றால் ஓ.. இஸ்லாமிய மாதமா... இதோ சொல்கிறோம்.. ஆஷரா,சபர் கழிவு, மவ்லூது, மைதீன் கந்தூரி. மீரான் கந்தூரி, விராத், தோவத்து, நோன்பு என்று அடுக்கிக்கொண்டே போவார்கள். முஹர்ரம் சஃபர் ரபீவுல் அவ்வல் ரபீவுல் ஆகிர் என்று நாம் கூறினால் ஏதோ புரியாத பாஷை போல பேந்த பேந்த முழிப்பார்கள். இதுதான் இன்றைய சமூகத்தின் பெரும்பான்மையான நிலை.
ஆங்கிலப் புத்தாண்டு என்றால் பலநாட்களுக்கு முன்பே பரபரப்பு.. விறுவிறுப்பு. புத்தாடை சரசரக்க.. புதுமணம் கமகமக்க.. பூரிப்புடன் கொண்டாட்டம். விடிய விடிய கும்மாளம் குதூகலம். வீண்விளையாட்டுகள்; கேளிக்கைகள். ஆடம்பரம் நிறைந்த அனாச்சாரங்கள்.
ஆனால் ஹிஜ்ரி என்பது என்ன? அதன் பின்னனியில் உள்ள ஹிஜ்ரத் தரும்பாடம் என்ன? இதை உணராமல் இந்த உம்மத் ஊதாரித்தனங்களில் ஊறிப் போயிருக்கிறது.

ஹிஜ்ரி எப்போது ஆரம்பமானது ?
பெருமானார் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் (கி.பி.639 ல்) வருடத்திற்கு அடையாளமாக எந்தப் பெயரைச் சூட்டலாம் ஆண்டின் தொடக்கமாக எதைக் கருதலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது.
இப்படி ஒரு ஆலோசனை நடைபெறுவதற்கான சூழலை உருவாக்கிய பெருமை நபித்தோழர் அபுமூஸா அல் அஸ்அரீ (ரலி) அவர்களையே சாரும். அன்னார் ஓரு முறை உமர் (ரலி) அவர்களுக்கு கடிதம் எழுதும் போது அரசின் கடிதங்களில் தேதியிடப்படாமை குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்வியின் விளைவாக உடனடியாக இஸ்லாமிய காலண்டர் ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் உணாந்தார்கள்.
எனவே இஸ்லாமிய ஆண்டின் தொடக்கம் பற்றி நபித்தோழர்களுடன் ஆலோசிப்பதற்கான ஒரு கூட்டத்தை ஹிஜ்ரீ 17 ம் ஆண்டில் ஹஜ்ரத் உமர் (ரலி)அவர்கள் கூட்டினர்கள். அதில் நான்கு கருத்துக்கள் முன்வைக்கப்படன. நான்கும் நபிகள் நாயகத்தின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருந்ததன.

1) அண்ணலாரின் பிறப்பு
2) அண்ணலாரின் இறப்பு
3) அண்ணலார் நபியாக தேர்வு செய்யப்பட்டது
4) அண்ணலார் மக்காவிலிருந்து மதீனர்விற்கு (ஹிஜ்ரத்) புலம் பெயர்ந்தது.

உமர்(ரலி) அவர்கள் “ஹிஜ்ரத்”தை தேர்வு செய்தார்கள்.
மற்ற மூன்று விசயங்களும் கூட உலக வரலாற்றிலும் முஸ்லிம் சமூகத்திலும் முக்கியமானவை தான் என்றாலும் அவை அனைத்தையும் விட ஹிஜ்ரத் மிக முக்கியமானது. பல பாடங்களும் படிப்பினைகளும் நிறைந்தது.

ஹிஜ்ரத் தரும் பாடம் என்ன?
திட்டம் வகுத்து செயலாற்றுதல்:
ஒருபுறம் எதிரிகள் திட்டம் தீட்டினார்கள்; மறுபுறம் அல்லாஹ்வும் திருத்தூதரும் திட்டம் தீட்டினார்கள்
ஆனால் அல்லாஹ்வின் திட்டம்தான் வென்றது என்று அல்லாஹ் கூறுகிறான்:
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُواْ لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
எதிரிகளின் திட்டம் என்ன? இஸ்லாத்தின் வளர்ச்சி கண்டு பொறுக்காத அவர்கள்
தாருன் நத்வாவில் (காஃபிர்களின் சட்டமன்றம்) வைத்து அவர்கள் பலத்த ஆலோசனை செய்தார்கள். அந்த சபைக்கு தலைமை தாங்கியவன் யார் தெரியுமா? இப்லீஸ். ஆனால் அவனது அசல் ரூபத்தில் அல்ல. நஜ்து தேசத்தின் ஒரு பெரிய ஷைகு போல தோற்றமளித்து வந்திருந்தான்.
لما علم كفار قريش أن رسول الله صلى عليه وسلم صارت له شيعة وأنصار من غيرهم، ورأوا مهاجرة أصحابه إلى أولئك الأنصار الذين بايعوه على المدافعة عنه حتى الموت، اجتمع رؤساهم وكبارهم في دار الندوة، وهي دار بناها قصي بن كلاب، كانوا يجتمعون فيها عند ما ينزل بهم حادث مهم، اجتمعوا ليتشاوروا فيما يصنعون بالنبي صلى الله عليه وسلم.


فقال قائل منهم: نحبسه مكبلا بالحديد حتى يموت، وقال آخر: نخرجه وننفيه من بلادنا، فقال أحد كبرائهم: ما هذا ولا ذاك برأي؛ لأنه إن حُبس ظهر خبره فيأتي أصحابه وينتزعونه من بين أيديكم، وإن نُفي لم تأمنوا أن يتغلب على من يحل بحيهم من العرب؛ بحسن حديثه وحلاوة منطقه حتى يتبعوه فيسير بهم إليكم، فقال الطاغية أبو جهل: الرأي أن نختار من كل قبيلة فتى جلداً ثم يضربه أولئك الفتيان ضربة رجل واحد؛ فيتفرق دمه في القبائل جميعاً؛ فلا يقدر بنو عبد مناف على حرب جميع القبائل.

மூன்று ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன:
''அவரை நாடு கடத்துவோம்''
''வேண்டாம் அவரை நாடுகடத்தினால் அங்கேயும் சென்று மார்க்கத்தை பரப்பி ஆள் சேர்த்துக்கொண்டு நமக்கு எதிராக படை திரட்டிக்கொண்டு வரலாம்''
''சரி.. அப்படியென்றால் அவரை பிடித்து வந்து இங்கேயே வீட்டுச் சிறை வைக்கலாமா?''
''வேண்டாம். அப்படி செய்தால் அவரது கிளையார் ஆத்திரமடைந்து நம் மீது போர் தொடுத்து அவரை மீட்டுச் சென்றுவிடுவர்.
இறுதியாக அபூஜஹ்ல் ஒரு ஆலோசனை சொன்னான்: ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு இளைஞன் திரண்டு வந்து ஒட்டுமொத்த்மாக சென்று அவரைத் தீர்த்துக்கட்டுவோம் அப்போதுதான் தனிப்பட்டு யார்மீதும் பழி வராது யாரையும் பழிவாங்கமுடியாது.''  இதை அனைவரும் ஏற்றார்கள்.
அல்லாஹ்வின் திட்டம் என்ன?
 ஆனால் அல்லாஹ்வோ வேறு விதமாக நாடியிருந்தான். அவன், இரவுக் காவலில் நின்ற கூட்டத்தாருக்கு மத்தியில் தனது நபியை வெளியாக்கி, அன்றிரவே மக்காவிலிருந்து வெளியேறுமாறு நபிகளாருக்கு ஆணை பிறப்பித்தான்.
கட்டிலில் அலீ
நபி ஸல் அவர்கள், மக்கள் தம்மிடம் அமானிதமாகத் தந்து வைத்திருந்த பொருட்களையெல்லாம், உரியவர்களிடம் மீள ஒப்படைக்குமாறும் அலீயிடம் கையளித்தார்கள். மக்காவை விட்டுப் புறப்படும் நிலையில், நபியவர்கள் வீட்டிலில்லை என்பதை உணர்ந்து எதிரிகள் விழித்துக் கொள்ள கூடாது என்பதற்கா, தமது படுக்கையில் தூங்குமாறு அலீயை நபியவர்கள் பணித்தார்கள்.  அலீ அவர்கள், நபியவர்களின் ஏவலுக்கு வழிப்பட்டு அந்த ஆபத்தான காரியத்தைப் பொறுப்பேற்று நபிகளாருக்கப் பதிலாக அவர்களது படுக்கையில் தூங்கிக் கொண்டார்கள்.
ஹஸ்ரத் அலீயினுடைய இந்த தியாகம் பற்றி அல்லாஹ் புனித அல்குர்ஆனில் புகழ்ந்துரைக்கிறான்:

 {وَمِنَ النَّاسِ مَن يَشْرِى نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللَّه (البقرة207) }نزلت في علي بن أبي طالب رضي الله عنه بات على فراش رسول الله صلى الله عليه وسلّم ليلة خروجه إلى الغار ، ويروى أنه لما نام على فراشه قام جبريل عليه السلام عند رأسه ، وميكائيل عند رجليه ، وجبريل ينادي : بخ بخ مَنْ مِثْلُك يا ابن أبي طالب يباهي الله بك الملائكة ونزلت الآية.(تفسير الرازي

தௌர் குகையை நோக்கி...
மாலையில் இருள் சூழத்தொடங்கியதும், நபி அவர்களின் வீடு முற்றுகையிடப்பட்டது..
நபியவர்களின் வீட்டினை அவர்கள் சூழ்ந்திருக்கின்றனர். “முஹம்மது தூங்குகிறார். அவர் எழுந்து பள்ளிக்கு செல்லும்போது அனைவரும் அவர் மீது பாய்ந்து நமது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வோம்” என்று எண்ணியிருந்தனர். வீட்டினுள்ளே அலீ (ரலீ) அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நபியவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். ஒரு பிடி மண்ணை அள்ளி எதிரிகளை நோக்கி எறிந்தார்கள். அந்த மண் எதிரிகள் எல்லோரின் தலையிலும் சென்றடந்தது என்று எழுதுகிறார்கள். சூரா யாசீனை ஓதிக்கொண்டே கடந்தார்கள். (فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لاَ يُبْصِرُونَ) என்று ஓதியதும் எதிரிகளுக்கு கண் தெரியாமல் போனது. அவர்களால் நபியை பார்க்கமுடியவில்லை.
خرج صلى الله عليه وسلم، وفتيان قريش متجمهرون على باب بيته وهو يتلو سورة (يس)، فلم يكد يصل إليهم حتى بلغ قوله تعالى: (فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لاَ يُبْصِرُونَ)، فجعل يكررها حتى ألقى الله تعالى عليهم النوم وعميت أبصارهم فلم يبصروه ولم يشعروا به

நபியவர்கள், தமது பயணத்தில் அபூபக்கர் (ரலீ) அவர்களையும் தம்மோடு அழைத்துக் கொண்டு, தௌர் குகையை நோக்கியவர்களாக விரைந்து கொண்டிருந்தார்கள்.
விடிந்ததும், வீட்டைச் சூழ்ந்து நின்றிருந்த அந்தக் கொடியவர்கள், தமது வாட்களை உருவிக் கொண்டு, நபிகளாரின் வீட்டினுள் நுழைந்து அவர்களது படுக்கையை தாக்கினர். அப்போது, நபிகளாரின் படுக்கையில் ஹஸ்ரத் அலீயை கண்டதும் ஏமாற்றத்தின் திடுக்கமும் சீறற்றமும் ஒருசேர அவர்களைத் தாக்கின.
தமது முயற்சியெல்லாம் வீணாகி விட்டதைக் கண்ட குறைஷியர், அது தமது பெருமைக்கு பேரிழுக்கை ஏற்படுத்தி விட்டதை உணர்ந்தார்கள். நபியவர்களைக் கண்டுபிடிக்க பெரும் பிரயத்தனம் மேற்கொண்டார்கள். கண்டுபிடித்துக் கொண்டு வருவோருக்கு 100 செந்நிற ஒட்டகைகள் பரிசு என்று அறிவித்தார்கள். பரிசுக்கு ஆசைப்பட்டு பலரும் நபியைத் தேடி வந்தனர். அதில் ஒருவர்தான் சுராக்கா. அவர் மும்முறை நபியைப் பிடிக்க முயன்றபோதெல்லாம் பூமி அவரைப் பிடித்துக்கொண்டதும் அதன் பிறகு அவர் மன்னிப்புகேட்டு திருந்தியதும் நாம் அறிந்த ஒன்றுதான். அதுமடுமல்ல. அபூபக்கர் ரலி அவர்களே கூறுகிறார்கள்:
ورجع سراقة فوجد الناس في الطلب فجعل يقول‏:‏ قد استبرأت لكم الخبر، قد كفيتم ما ها هنا‏.‏ وكان أول النهار جاهدًا عليهما، وآخره حارسًا لهما‏.‏
சுராக்கா எங்களை விட்டு திரும்பியபோது, மக்கள் எங்களைத் தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்களிடம் உங்களுக்காக நான் இங்கு எல்லா இடங்களிலும் தேடிவிட்டேன். நீங்கள் இங்கு தேடவேண்டிய அவசியமில்லை என்று கூறி மக்களைத் திசை திருப்பினார். காலையில் நபி (ஸல்) அவர்களை ஒழிக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தவர் மாலையில் நபி (ஸல்) அவர்களின் பாதுகாவலராக மாறினார். (ஜாதுல் மஆது) (அர்- ரஹீக்குல் மக்தூம்)
நபியும் அபூபக்கர் ரலி அவர்களும் தவ்ரு குகைக்குள் ஒளிந்தார்கள் இது ஏறுவதற்குக் கடினமான, பெரிய பாறைகளைக் கொண்ட உயரமான மலையாகும். இதனால் நபி (ஸல்) அவர்களின் பாதங்கள் காயமடைந்தன. (எதிரிகள் தங்களின் பாத அடிகளைத் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக குதிகால்களின் மீது நீண்ட நேரம் நடந்து வந்ததால்தான் நபி (ஸல்) அவர்களின் கால்கள் காயமடைந்தன என்றும் சிலர் கூறுகின்றனர்.) காரணம் எதுவாயினும் சரியே! மலையில் நபி (ஸல்) அவர்களால் ஏற இயலவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரழி) சுமந்து கொண்டு மலையின் உச்சியிலுள்ள குகைக்குச் சென்றார்கள்.

இருவரும் குகைக்குள்:

நபி (ஸல்) அவர்களும், அவர்களது தோழரும் குகையை அடைந்தபோது “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் உள்ளே நுழையக் கூடாது. நான்தான் முதலில் நுழைவேன். அதில் ஏதாவது தீங்குகள் இருப்பின் அதனால் பாதிப்பு எனக்கு ஏற்படட்டும், உங்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது” என்று அபூபக்ர் (ரழி) கூறி, உள்ளே நுழைந்தார்கள். அக்குகையைச் சுத்தம் செய்து அதிலிருந்த ஓட்டைகளில் ஓர் ஓட்டையைத் தனது கீழாடையின் ஒரு பகுதியைக் கிழித்து அடைத்துவிட்டு மற்ற இரண்டு ஓட்டைகளை தனது கால்களைக் கொண்டு அடைத்துக் கொண்டார்கள். பின்பு, நபி (ஸல்) அவர்களை உள்ளே அழைக்கவே அவர்கள் உள்ளே நுழைந்து அபூபக்ரின் மடியில் தனது தலையை வைத்துத் தூங்கி விட்டார்கள். சிறிது நேரத்தில் அபூபக்ர் (ரழி) காலில் ஏதோவொன்று தீண்டிவிடவே வலியினால் வேதனையடைந்த அவர்கள், ‘நபி (ஸல்) விழித்துக் கொள்வார்களே!’ என்ற பயத்தில் அசையாமல் இருந்து விட்டார்கள். எனினும், வலியின் வேதனையால் அவர்களின் கண்களில் இருந்து கசிந்த நீர், நபி (ஸல்) அவர்களின் முகத்தை நனைத்தது. விழித்துப் பார்த்த நபி (ஸல்) “அபூபக்ரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது” என்று கேட்டார்கள். “என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! என்னை ஏதோ தீண்டிவிட்டது” என்று அவர்கள் கூறவே நபி (ஸல்) தங்களது உமிழ்நீரை அவ்விடத்தில் தடவ அவர்களது வலி தூரமானது. (ரஜீன், மிஷ்காத்)
என் உயிர் போனாலும் பரவாயில்லை. களைப்புடன் கண்ணயர்ந்து உறங்கிகொண்டிருக்கும் காத்தமுன் நபியவர்கள் கண்விழித்துவிடக்கூடாது என்று கடுமையான விஷத்தின் வேதனையையும் தாங்கிகொண்டார்களே அந்த அபூபக்கர் ரலி நமக்கு ஒரு பாடம்.
இருவரும் மூன்று நாட்கள் குகையில் தங்கியிருந்தனர். அப்போது அவர்களைத் தடிக்கொண்டு வந்த எதிரிகள் குகையின் வாசலில் நின்றுகொண்டிருந்தனர். நாயகமே அவர்கள் சற்று குனிந்து பார்த்தாலும் நம்மைக் கண்டுகொள்வார்களே என்று அபூபக்கர் ரலி கவலைப்பட்டபொழுது لاَتَحْزَنْ إِنَّ اللهَ مَعَنَا)) தோழரே கவலைப்ப்டவேண்டாம் நாம் இருவரல்ல; நம்முடன் அல்லாஹ் இருக்கிறான். என்றார்கள் நபி. இந்த இறைநம்பிக்கை நமக்கு இன்னொரு பாடம். அல்லாஹ் மீது அழுத்தமான நம்பிக்கை வைத்தால் அல்லாஹ் எப்படியும் பாதுகாப்பான்
قال له النبي صلى الله عليه وسلم: (لاَتَحْزَنْ إِنَّ اللهَ مَعَنَا)، فصرف الله تعالى أبصار هؤلاء القوم وبصائرهم حتى لم يلتفت إلى داخل ذلك الغار أحد منهم، بل جزم طاغيتهم أمية بن خلف بأنه لا يمكن اختفاؤهما به لِمَا رأوه من نسج العنكبوت وتعشيش الحمام على بابه.

குகையின் வாசலில் சிலந்தி வலை பின்னியது புறா கூடு கட்டியது. இந்த குகைக்குள் மனிதர்கள் சென்றிருந்தால் வலை அறுந்திருக்கும் எனவே இதற்குள் யாரும் சென்றிருக்கமுடியாது.'' என்று எதிரிகள் திரும்பிச் சென்றார்கள்
இந்த இடத்தில் கவிக்கோ அப்துர் ரஹ்மான் எழுதுவார்:
 ''எதிரிகள் படையை ஒரு நூலாம் படை வென்று விட்டது. அந்த சிலந்தி வலையா பின்னியது? உள்ளே ஒளிந்திருக்கும் ரகசியத்தை குகை உளறிவிடுமோ என்று குகையின் வாயை நூலால் தைத்துவிட்டது. ''
இதிலும் நமக்கு ஒரு படிப்பினை உண்டு அல்லாஹ்வை நம்பினால் அவன் நம்மை பாதுகாப்பதற்கு பெரும்படைகளைத்தான் அனுப்பவேண்டும் என்பதல்ல.. அற்பமான சிலந்தி போன்றதைக்கொண்டுகூட நம்மை பாதுகாக்கமுடியும்
அன்றைக்கு ஈருலகின் தலைவரைக் காக்க அல்லாஹ் சிலந்தி வலையை பயன்படுத்தினான்; இன்றும் பல தலைவர்களை பாதுகாக்க பயன்படுத்திக்கொண்டிருக்கிறான். ஆம். அரசியல் தலைவர்கள் குண்டுதுளைக்காத புல்லட் புரூஃப் ஆடைகளை அணிகிறார்களே அதன் தயாரிப்பில் சிலந்தியின் நூலாம் படையும் சேர்க்கப்படுகிறது.

மிகவும் ஆச்ச்ரியமான முறையில் நபிகளாரை அல்லாஹ் பாதுகாத்து மதீனா சேர்ப்பித்தான் வரலாறு நீண்டது .
மதீனா செல்லும் வழியில் நடைபெற்ற இன்னும் சில வியப்பான நிகழ்வுகளைப் படிக்க இந்த இணைப்பை க்ளிக் செய்யவும் 
மதீனாவிற்கு சென்ற மாநபிக்கு மகத்தான மரியாதையும் வரவேற்பும் கிடைத்தது நபிக்கு மாத்திரமல்ல..


பல நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் மதீனாவில் செழிப்பான வாழ்கையும் அற்புதமான வாழ்வாதாரங்களும்  காத்திருந்தது.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்து குடிபெயர்ந்து மதீனாவிற்கு வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவரை சஃது பின் ரபீஃ என்ற மதீனா தோழரின் குடும்பத்தில் ஒருவராக இணைத்துவிட்டாகள். அந்த தோழர் தனது அகதி சகோதரரை தன் வீட்டிற்கு அழைத்துக் சென்று அவரது கையைப்பிடித்துக் கொண்டு
“சகோதரரே! எனக்கு இரண்டு வீடுகள் இருக்கின்றன ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு இரண்டு தோட்டங்கள் இருக்கின்ற ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு இரண்டு மனைவியர் இருக்கிறாகள். அவர்களில் ஒரு வரை தேர்வு செய்யுங்ககள் அவரை நான் விவாக விலக்கு செய்து உங்களுக்கு திருமணம் செய்து தருகிறேன்”
என்று சொன்னர். நெகிழ்ந்து போன அப்துரரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் அன்புச் சகோதரரே! அல்லாஹ் உங்களுக்கு குடும்பத்திலும் செல்வத்திலும் அருட்செய்யட்டும். எனக்கு கடைவீதிக்கு வழி காட்டுங்கள் இவை எதுவும் எனக்கு தேவை இல்லை என்று சொன்னர்கள்.

கடைவீதிக்கு சென்று சிறிய அளவில் வெண்ணை வாங்கி வியாபாரம் செய்யத் தொடங்கிய அப்துர் ரஹமான் பின் அவ்ப் (ரலி) பின்னாட்களில் அரபுலகின் மிகப் பெரிய செலவ்ந்தராக உயர்ந்தார்கள்.

மதீனாவின் தோழர்கள் தங்களது வீடுகளிலும் சொத்துக்களிலும் மக்காவின் அகதிகளுக்கு இடமளித்த்னர்.

அபூபக்கர் (ரலி) அவர்களை காரிஜா தன வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
உமர் அவர்களை இத்பானும் (ரலி),உஸ்மான் அவர்களை அவ்ஸும் (ரலி)
சுபைர் அவர்களை சலமாவும் (ரலி),அப்துர் ரஹ்மான் பின் அவபை சஃதும் (ரலி)
அபூ உபைதா அவர்களை இன்னொரு ஸஃதும் (ரலி) தங்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.அன்றைய தினமே 45 அகதிகளுக்கு 45 உள்ளூர் வாசிகள் பொறுப்பேறுறுக் கொண்டனர்.

மக்காவின் அகதிகளுக்கு (முஹாஜிர்களுக்கு) அன்று மதீனத்து அன்ஸாரிகள் செய்த உதவி நமக்கு ஒரு பாடம். மார்க்கத்திற்காகவும் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்காகவும் எவ்வளவு உதவவேண்டும் என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.  இன்று இந்த உம்மத்தில் தங்களுக்குள் உதவுகிற மனப்பான்மை மிகவும் குறைந்துகொண்டே வருகிறது.
ஒரு மூமின் மற்றொரு மூமினுக்கு சகோதரன் ஆவான் என்றும் மூமின்கள் ஒரு உடல் உறுப்புகளைப் போல.
ஒரு உறுப்பில் காயம் பட்டால் கண் அழுகிறது கரம் தடவி விடுகிறது..... என்றும் கூறிய நபிகளாரின் வார்த்தைகளை நினைவில் கொள்ளவேண்டும். ''ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவுகிறான் என்றும் கூறினார்கள்.

திருவள்ளுவரோ உதவும் மனபான்மை இல்லாதவனை 'செத்தவன்' என்கிறார்.
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்; மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்
உதவி செய்பவன் மென்மேலும் நன்றாக வாழ்வான்; செய்யாதவன் செத்தவனுக்கு சமம்; இருந்தும் பயனில்லை.

நம் முன்னோர்கள் அழகாக சொல்லிவைத்தார்கள்:
ஒப்புறவில்லாத ஊரில் இருப்பதும்
துப்புரவில்லாத தோகையைச் சேர்வதும்
சப்பள சளபள.
ஒருவருக்கொருவர் உதவி செய்யாத ஊரில் இருப்பதும்
சுத்தம் சுகாதாரமில்லாத பெண்ணோடு வாழ்வதும்
சரிப்படாது.

ஒருவன் வாழைப்பழத்தோல் வழுக்கி கீழே விழுந்தான். பக்கத்துல இருந்த நண்பன் உடனே இவனைத் தூக்கிட்டுப் போய் ஆஸ்பத்திரியில சேர்த்தான். அதுக்கப்பறம் சொன்னான்: நீ பழத்தோலில் கால் வைக்கப்போறதை நான் முன்னாடியே கவனிச்சுட்டேன்.
''அப்படின்னா அப்பவே நீ எனக்கு உதவி செஞ்சிருக்கலாமே?''
நான் டாக்டருக்கு உதவலாம்னு நினைச்சேன்'' அப்படின்னானாம்.
இப்ப இந்த உதவி தேவையா?

இன்னொருவன் கூறினான்:
அடுத்தவன் கஷ்டப்படுறதைப் பார்த்துட்டு நான் சும்மா இருக்கமாட்டேன்''
''அப்படியா? என்ன செய்வீங்க?
உடனே என்னோட இரண்டு கண்ணையும் இறுக்கிப் பொத்திக்குவேன்''


சத்தியத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும்போது எத்தனை துன்பங்களை சந்திக்க நேரிட்டாலும் அதற்காக சத்திய பிரச்சாரத்தை துறக்கக்கூடாது; அதுவே இறுதி வெற்றியை ஈட்டித்தரும் என்ற படிப்பினையை முஸ்லிம்கள் இந்த ஹிஜ்ரி ஆண்டின் துவக்கத்தில் பெறுவோமாக.


ஹிஜ்ரத் குறித்து நபியின் வரலாற்று நூல்களில் பிரசித்திபெற்ற நூலான அர்-ரஹீக் -ல் வாசிக்கவேண்டுமா?
இதோ இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்