05 நவம்பர், 2012

மழை

மழை
ஓய்வில்லாமல் உழுகிறோம்
களைப்பில்லாமல் களை எடுக்கிறோம்
நெஞ்சில் உரத்துடன் உரமிடுகிறோம்
ஆனால்
மழையில்லாமல் மகசூல் எடுக்கமுடிவதில்லை

வானம் அழவில்லையென
அவன் அழுதான்..
விவசாயி.

ரேசன் கடை
கொளுத்தும் வெயிலில்
அளுத்து வந்த மக்கள்
புளுத்துப்போன அரிசி வாங்க