02 நவம்பர், 2012

ஆது சமுதாயமும் அமெரிக்க அபாயமும்

சாண்டி புயல்-ஆண்டிப் பயல் 
சாண்டி புயல், அமெரிக்காவின் கடற்கரையோர நகரங்களை நிலைகுலையச் செய்துள்ளது. 13 அடி உயரத்துக்கு மேல் எழும்பிய அலைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. 
மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றால்,
மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்துள்ளன.அமெரிக்காவில் சாண்டி புயலால் 2,000 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1.08 லட்சம் கோடி) அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 11 மாகாணங்கள் இருளில் மூழ்கியுள்ளன. 62 லட்சம் பேர் மின்சாரம் இன்றித் தவித்து வருகின்றனர். புயல் பாதிப்பால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌ம் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியே‌றியுள்ளனர். போக்குவரத்து தொடர்ந்து முடங்கியுள்ளது. நியூயார்க்கின் ஜான் எஃப் கென்னடி விமான நிலையம் மூடப்பட்டு, 13 ஆயிரம் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மொத்தத்தில் சாண்டி புயல் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை ஆண்டிப் பயல் ஆக்கிவிட்டது.
அமெரிக்காவின் இந்த பேரழிவைக் காணுகிறபொழுது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகங்காரத்தோடும் ஆணவத் திமிரோடும் வாழ்ந்து அழிந்துபோன ஆது சமுதாயம் நினைவிற்கு வருகிறது.அதிபயங்கர புயற்காற்றால் அழிவைச் சந்தித்த இந்த இரண்டு கூட்டத்திற்கும் எவ்வளவு பொருத்தம்?
ஆது உடல் வலிமை; அமெரிக்கா ஆயுத வலிமை!
இந்த சமூகத்தினர் வலிமை மிக்க உடலமைப்பைப் பெற்றிருந்தார்கள். பெரும் செல்வந்தவர்களாகவும் இருந்தனர். இவர்கள் ஹள்ர மவுத்திலிருந்து அம்மான் வரை பரவி வாழ்ந்து கொண்டிருந்தனர். 

فقد زادهم الله في الخِلقة والقوة، وبسَطَ لهم في أجساهم وعظامهم فكانوا طوالاً في أجسامهم وقوامهم، قيل كان أطولُهم مائة ذراع وأقصرهم ستين ذراًعا، قال تعالى :{واذكروا إذ جعلكم خلفاءَ من بعد قوم نوح وزادكم في الخلق بصطه} (سورة الأعراف/69).

''நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிகமாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" (என்றும் கூறினார்) (அல்குர்ஆன் 7:69)

{ألم ترَ كيف فعل ربُّك بعاد * أرمَ ذات العماد * التي لم يُخلق مثلها في البلاد} (سورة الفجر/6-7-8

(அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள், (அல்குர்ஆன் 89:7)
அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை. (அல்குர்ஆன்89:8)
உலக படை வலிமையில் ஐக்கிய அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அனு ஆயுத வலிமையில் அமெரிக்கா குறைந்த நாடல்ல. உலகளவில் மிகப் பெரிய ஆயுத விற்பனை கார்ப்பரேட்டுகள் என லாக்ஹீட் மார்டின், பி,ஏ,ஈ சிஸ்டம்ஸ், போயிங், ரேய்தியான், நார்த்ராப் க்ரும்மன், ஜெனரல் டைனமிக்ஸ், தாம்சன் சி.எஸ்.எஃப் ஆகிய ஏழு நிறுவனங்களைச் சொல்லுகிறார்கள். இவற்றில் முதல் ஆறும் அமெரிக்க நிறுவனங்கள். ஏழாவது மட்டுமே பிரான்சுடையது. (மேலும் விபரத்திற்கு அ.மார்க்ஸ் எழுதிய 'ஏகபோக மரண வியாபாரத்தில் அமெரிக்கா' என்ற கட்டுரையைக் காணவும்.)

விதம் விதமான மாளிகைகள் கோபுரங்கள் கட்டுவதில் ஆது அமெரிக்கா இருவருமே ஆர்வம் காட்டியுள்ளனர்.
மலைகளைக் குடைந்து பல அறைகள் அமைத்து வாழ்ந்தவர்கள் ஆதுகள்.
ஆதுகளின் மாளிகைகள்
அமெரிக்க வெள்ளை மாளிகை:
132 அறைகள், 35 குளியல் அறைகள், 6 அடுக்கு மாடி இருப்பிடங்களை வெள்ளை மாளிகை 55000 சதுர அடி பரப்பளவில் கொண்டுள்ளது. மேலும் 412 கதவுகள், 147 ஜன்னல்கள், 28 எரிப்புகள், 8 மாடி படிக்கட்டுத்தொகுதிகள், 3 மின்னகர்த்திகள் ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகை
அல்லாஹ்வின் தூதர் ஹூது அலை அவர்கள் ஆது கூட்டத்தை நோக்கி கேட்டதை அல்குர் ஆன் கூறுகிறது:
 أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ ءايَةً تَعْبَثُونَ  وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ

"நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?  (அல்குர்ஆன் 26:127)
இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?  (அல்குர்ஆன் 26:128)

3۔ இந்த வசதியாலும் வலிமையாலும் ஆணவம் தலைக்கேறி من أشدّ منّا قوة எங்களைப் போல உண்டுமா உலகில்? என்று ஆர்ப்பரித்தனர் ஆதுகள். அதேபோல் அமெரிக்காவும் ஆணவத்தால் ஆடுவது அனைவரும் அறிந்த உண்மை. 
{فأما عاد فاستكبروا في الأرض بغير الحقّ وقالوا من أشدّ منّا قوة أولم يروا أن اللهَ الذي خلقهم هو أشدّ منهم قوّة وكانوا بآياتنا يجحدون} (سورة فصلت/15

4۔தன் சுயநலத்திற்காக அப்பாவிகளை அடக்குமுறைக்கு ஆளாக்கி அளவுக்கு மீறி அநியாயம் புரிவது 
 وَإِذَا بَطَشْتُم بَطَشْتُمْ جَبَّارِينَ 
இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றம் சுமத்திப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள்.  (அல்குர்ஆன் 26:129) என்று ஹூது அலை அவர்கள் அந்த ஆது கூட்டத்தை நோக்கி கூறினார்கள்.

தங்கள் தலைகள் மீது பெரும் பாறாங்கற்களைத் தூக்கி சென்று அப்பாவிகள் மீது போட்டு அநியாயமாகக் கொல்வராம் ஆதுகள்.
அமெரிக்கா பல நாடுகளில் அத்துமீறி நுழைந்து அப்பாவி மக்களை அழித்துக் கொண்டே இருப்பது அகிலமே அறிந்தது. அமெரிக்காவின் குவாண்டமா சிறையில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.
அதுமட்டுமல்ல.. கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் கொடூரமாக தாக்குவதில் அமெரிக்காவிற்கு நிகர் அமெரிக்காதான். 
ஜப்பான் நாட்டிலுள்ள ‘ஹிரோஷிமா’ நகரத்தின் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டு போட்டது. அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. கட்டங்கள் தரைமட்டமாயின. மூன்று நாட்கள் கழித்து ‘நாகசாகி’ நகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர்.  இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.

சுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர். ‘இறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்’ என்று ஆய்வறிக்கை கூறியது.

 1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளீப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன.
5۔ இறைத் தூதர்களை இழிவு படுத்துவது 
ஆது (கூட்டத்தினரும், இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர். (அல்குர்ஆன் 26:123)
 அவர்கள் நபியை நோக்கி "நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்" எனக் கூறினார்கள்.  (அல்குர்ஆன் 26:135)

"இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.  (அல்குர்ஆன் 26:136)

"மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மாட்டோம்."  (அல்குர்ஆன் 26:137)

(இவ்வாறு கூறி) அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலின் நாம் அவர்களை அழித்தோம்; நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.  (அல்குர்ஆன் 26:138)

நபியைப் பொய்ப்பித்து நையாண்டி செய்தததால் அழிவு ஏற்பட்டது என்று அல்லாஹ் கூறுகிறான்.
அதேபோல நம் உயிரினும் மேலான நபி ஸல் அவர்களை நையாண்டி செய்து அமெரிக்கன் ஒருவன் எடுத்த திரைப்படத்திற்கு அமெரிக்கா 'கருத்து சுதந்திரம்' என்று வக்காலத்து வாங்கியது 
அதன் தொடர்ச்சியாக கலிபோர்னியா மாகாணத்தில் கடுமையான நில நடுக்கமும் இப்போது பயங்கர சூறைக்காற்றும் அமெரிக்காவை சூறையாடிவிட்டது.

ஆது மக்களுக்கு ஏற்பட்ட புயற்காற்று அமெரிக்காவையும் ஆட்டிப் படைத்துவிட்டது.
அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், "இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்" எனக் கூறினார்கள்; "அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது  (அல்குர்ஆன் 46:24)

"அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்" (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.  (அல்குர்ஆன் 46:25)

அவர்கள் வேண்டிய வேதனை காற்று உருவத்தில் வந்தது ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் காற்று அவர்களைத் துன்புறுத்தி அணு அணுவாக அழிந்தது அல்லாஹுவின் வாக்கு நிறைவேறியது.

நிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.  (அல்குர்ஆன் 54:19)

நிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்துறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது.  (அல்குர்ஆன் 54:20)

ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?)  (அல்குர்ஆன் 54:21)

இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.  (அல்குர்ஆன் 69:6)

அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.  (அல்குர்ஆன் 69:7)

{وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ  سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ  فَهَلْ تَرَى لَهُم مّن بَاقِيَةٍ .
 قال الله تبارك وتعالى :{وفي عادٍ إذ أرسلنا عليهِمُ الريحَ العقيم} (سورة الذاريات/41) أي التي لا تنتج خيرًا، وقال تعالى :{ما تذر من شىء أتت عليه إلا جعلته كالرميم} (سورة الذاريات/42). أي كالشىء البالي الفاني الذي لا ينتفع به بالمرة، وقال تعالى :{إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي يَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّ تَنزِعُ النَّاسَ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ مُّنقَعِرٍ فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ(سورة القمر).


ஆது கூட்டம் சவால் விட்டது. நீர் உண்மையாளராக இருந்தால் அந்த வேதனையைக் கொண்டு வாரும் பார்க்கலாம். 
அதன் பின்னால் வானத்தில் கருமேகம் வந்தது. இது நீண்ட நாள் பஞ்சத்திற்கு பிறகு நமக்கு நல்ல மழை தரும் மேகம் என்று ஆர்ப்பரித்தார்கள். ஆனால் அது மழை மேகம் அல்ல; அவர்களை அழிக்க வந்த கொலை மேகம் என்று பிறகுதான் புரிந்துகொண்டார்கள். முதன் முதலில் இந்த காட்சியைக் கண்டவள் மஹ்த் என்ற பெண்.
''நரகிலிருந்து தீப்பொறி பறந்துவருவதைப்போல கண்டேன். அவற்றின்மீது நீண்டு உயர்ந்த பெரிய மனிதர்கள் சிலர் தோன்றி அங்கு போ இங்கு போ என்று அந்த தீப்பொறி மேகங்களுக்கு ஆனையிட்டுக் கொண்டிருந்தனர். எனவே இது வேதனைக்குரிய மேகம்தான் என்றாள் அந்த மக்கள் அதை நம்பவில்லை. இவளுக்கு பைத்தியம் என்று கேலி செய்தார்கள்.
இதேபோல ஒரு காட்சி சமீபத்தில் இராமேஸ்வரம் தனுஷ்கோடி புயலில் அழிந்தபோது நடந்துள்ளது. 
நூற்றுக் கணக்கான பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ரயில் இராமேஸ்வரம் பாலத்தில்,சென்றுகொண்டிருந்தது. அந்த நேரம் திடீரென கடும் புயற்காற்று வந்து கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ரயில் கடலில் அடித்து செல்லப்பட்டது. அதில் பயனித்த ஒரு பெண்மணியின் உடலை உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் மீட்டபோது அவள் கொடுத்த வாக்குமூலம்:
நான் கடல் அலைகளுக்கு மத்தியில் போராடிக்கொண்டிருந்தபோது ரயில் தண்டவாளத்தின் ஒரு கட்டை மிதந்து வந்தது. அதைப் பற்றிப் பிடித்துக்கொண்டேன். அந்த நேரம் ஆகாயத்தில் ஒரு அதிசயத்தைக் கண்டேன். கடும் காற்று வீசிக்கொண்டு இருந்த நிலையில் மேகங்களுக்கிடையே சில மனிதர்கள் தலையில் தலைப்பாகை அணிந்திருந்தார்கள். என் கண்ணால் கண்டேன்  இங்கு போ அங்கே போ என்று மேகங்ளையும் காற்றையும் அதட்டிக் கொண்டிருந்தார்கள். என் காதால் கேட்டேன்''


ஆது சமுதாயம் மழைமேகம் என நம்பிய போது, இல்லை, அது அல்லாஹுவின் தண்டனை என ஹூத்(அலை) அவர்கள் எச்சரித்த சம்பவத்தை குர்ஆன் ஒளியில் அறிந்தோம். நபி(ஸல்) அவர்கள் மழை மேகத்தை காணும் போதெல்லாம் ஆது சமுதாயத்தின் நிலையை நினைத்து அஞ்சக் கூடியவர்களாகவே இருந்துள்ளார்கள்.

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
நபி(ஸல்) அவர்கள் மழை மேகத்தை வானத்தில் கண்டால் முன்னால் நடப்பார்கள்; பிறகு திரும்பி நடப்பார்கள்; (தம் அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) அவர்களின் முகம் மாறி விடும். வானம், மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பான) நிலை அவர்களைவிட்டு நீங்கி விடும். எனவே, (ஒரு முறை) நான் அவர்களுக்கு அந்தத் தவிப்பான நிலை ஏற்படுவதை கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ஆது சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது (தவறாகப் புரிந்து கொண்டு), 'இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்" (திருக்குர்ஆன் 46:24) என்று கூறினார்களே அத்தகைய (வேதனையைக் கொணரக் கூடிய) மேகமாகவும் இது இருக்கலாம் எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார்கள்.  (புகாரி - 3206)

இதுவரை ஆது சமுதாயத்தின் இறைநிராகரிப்பவர்கள், ஹூத்(அலை) அம்மக்களுக்குச் செய்த பிரச்சாரத்தையும், அதனை ஏற்க மறுத்த ஆணவக்கார ஆது சமுதாயம் அழிக்கப்பட்ட சம்பவத்தையும், திருமறை குர்ஆன் வாயிலாகவும், நபிமொழிகள் வாயிலாகவும் மூலமும் அறிந்து கொண்டோம். இனியேனும் எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவோமாக!

மேலும் ஆது கூட்டம் வாழ்ந்த இடம் அதுகுறித்த ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே!