07 அக்டோபர், 2012

அறிவு, செல்வம் இரண்டிலும் எது சிறந்தது?


கல்வி
ரு சமயம் பத்து யூதர்கள் அலி (ரலி) அவர்களிடம் வந்து '' அறிவு, செல்வம் இரண்டிலும் எது சிறந்தது? ஏன் சிறந்தது? எங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வெவ்வேறு பதிலகள் தரவேண்டும் '' என்று கேட்டனர்.
அலி ரலி அவர்கள் பத்து பதில்கள் தந்தார்கள்:

1. அறிவு என்பது இறைத் தூதர்களின் மரபுரிமைச் சொத்து; செல்வம் அரசர்களுடைய வழி வழிச் சொத்து. எனவே அறிவுதான் சிறந்தது.

2. செல்வத்தை நீங்கள் பாதுகாக்கவேண்டும்; ஆனால் அறிவு உங்களைப் பாதுகாக்கும். எனவே அறிவுதான் சிறந்தது.

3. செல்வத்தை வைத்திருக்கும் ஒருவனுக்கு அநேக எதிரிகள் இருப்பார்கள். அறிவை உடையவனுக்கு பல நண்பர்கள் இருப்பார்கள் எனவே அறிவுதான் சிறந்தது.

4. அறிவை விநியோகித்தால் அது பெருகுகின்றது; ஆனால் செலவத்தை விநியோகித்தால் அது குறைகின்றது. எனவே அறிவுதான் சிறந்தது. 

5. அறிவாளி பெருந்தன்மையுடன் நடந்துகொள்கிறான். செல்வந்தன் கஞ்சத்துடன் நடந்து கொள்கிறான். எனவே அறிவுதான் சிறந்தது. 

6. அறிவு திருட்டுப் போகாது; செல்வம் திருட்டுப் போகும் வாய்ப்புள்ளது. எனவே அறிவுதான் சிறந்தது. 

7. காலத்தின் ஓட்டத்திலே அறிவு பழுதடைவதில்லை. ஆனால் செல்வம் துருப்பிடித்து தேய்கிறது. எனவே அறிவுதான் சிறந்தது. 

8. அறிவு எல்லையற்றது; செல்வத்திற்கு எல்லையுண்டு அதைப் பற்றி கணக்கு வைத்துக்கொள்ளலாம். எனவே அறிவுதான் சிறந்தது. 

9. அறிவு உள்ளத்தைப் பிரகாசப்படுத்துகிறது; செல்வம் இருளடையச் செய்கிறது. எனவே அறிவுதான் சிறந்தது. 

10. அறிவு பணிவைத் தருகிறது; செல்வம் பகட்டைத் தருகிறது. எனவே அறிவுதான் சிறந்தது. 


சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே!