29 அக்டோபர், 2012

தூத்துக்குடி விவாதம் பாகம் 1

musthafa maslahi
குர்ஆனில் எழுத்துப் பிழைகளா? என்ற தலைப்பில் விறுவிறுப்பான விவாதம் ஒன்று சமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்றது நாம் அனைவரும் அறிந்ததே
தூத்துக்குடி ஜமாஅத்துல் உலமா சபை ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்வில் TNTJ வினரும் முஸ்தஃபா மஸ்லஹி அவர்கள் தலைமையிலான உலமாக்கள் குழுவும் பங்கேற்று இன்று பரபரப்பாக பேசிக்கொள்ளப்படுகிற விஷயம் இது.
அந்த விவாத CD கள் கிடைக்குமா? என்று பல நண்பர்களும் அங்கலாய்த்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது YouTube லேயே இது பதிவேற்றப்பட்டு பலரும் பார்த்து ரசிக்கும் வகையில் உள்ளது. இதோ அந்த காணொளி. கண்டு களியுங்கள்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-tT4w6qvIEA#t=18
28 அக்டோபர், 2012

பெருநாள் கொண்டாட்டமா? பெரும் திண்டாட்டமா?பொதுவாக நோன்புப் பெருநாளாகட்டும்.. ஹஜ்ஜுப் பெருநாளாகட்டும்.. இஸ்லாமியப் பெருநாட்களில் என்னவெல்லாம் இருக்கும்?

வணக்கம் இருக்கும்! எல்லோருக்கும் மத்தியில் ஒரு இணக்கம் இருக்கும்!!
ஏழைகளை ஆதரிக்கிற ஏற்றமான பண்பு இருக்கும்.

26 அக்டோபர், 2012

சோதனையில் சாதனை! இதுவே இப்றாஹீம் நபியின் போதனை!!


தியாகத் திருநாள் வந்துவிட்டது.
இந்த பக்ரீத் பண்டிகையை ஹஜ்ஜுப் பெருநாள் என்றும் தியாகத் திருநாள் என்றும் மக்கள் மகிமையோடு அழைப்பதுண்டு. காரணம் இதில் பிரதான வணக்கமாய் ஹஜ்ஜும் அந்த ஹஜ்ஜுக்கே முன்னோடியாய் நபி இப்றாஹீம் அலை அவர்களும் அவர்களின் குடும்பமும் செய்த தியாகமும் இந்த பெருநாளில் பின்னிப் பிணைந்திருக்கிறது.
ஹஜ்ஜின் அதிகமான கிரியைகளைக் உற்றுநோக்கினால் ஒரு உண்மை புரியும்:

20 அக்டோபர், 2012

அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை ஆராய்ந்து பார்ப்போமா?


منتديات سيدتي
இஸ்லாத்தின் கடமைகளில் சில உடல் சார்ந்த கடமைகள் உதாரணமாக தொழுகை நோன்பு ۔ உடல் ஆரோக்கியம் இருந்தால் மட்டும் போதும்۔
இன்னும் சில பொருள் சார்ந்த கடமைகள். உதாரண்மாக ஜகாத். இதற்கு பொருள் வேண்டும் உடல் ஆரோக்கியம் தேவையில்லை.
ஆனால் ஹஜ் மட்டும் உடல், பொருள் இரண்டும் சார்ந்தது. உடல் ஆரோக்கியமும் பொருள் வசதியும் இருந்தால் கடமை.

எல்லா நோய்களும் நீங்கிட மழைநீர் மருத்துவம்


روى السّيد الجليل عليّ ابن طاوس (رحمه الله) انّ قوماً من الاصحاب كانوا جلوساً اذ دخل عليهم رسول الله (صلى الله عليه وآله وسلم) فسلّم عليهم فردّوا عليه السّلام فقال: ألا أعلّمكم دواءاً علّمني جبرئيل (عليه السلام) حيث لا أحتاج الى دواء الاطبّاء وقال علي  وسلمان وغيرهم: وما ذاك الدّواء؟ فقال النّبي (صلى الله عليه وآله وسلم) لعليّ : تأخذ من ماء المطر بنيسان وتقرأ عليه كلاًّ من فاتحة الكتاب وآية الكرسي و ﴿قُلْ هُوَ اللهُ اَحَدٌ﴾ و ﴿قُلْ اَعُوذُ بِرَبِّ الْفَلَقِ﴾ وَ ﴿قُلْ اَعُوذُ بِرَبِّ النّاسِ﴾ و ﴿قُلْ يا اَيُّها الْكافِرُونَ﴾ سَبعين مرّة وزادت رواية أخرى سورة ﴿اِنّا أنزَلْناهُ﴾ ايضاً سبعين مرّة وتشرب من ذلك الماء غدوة وعشيّة سبعة أيّام متواليات والّذي بعثني بالحقّ نبيّاً انّ جبرئيل (عليه السلام) قال: انّ الله يرفع عن الّذي يشرب هذا المآء كلّ دآء في جسده وبعافية ويخرج من جسده وعظمه وجميع أعضائه ويمحو ذلك من اللّوح المحفوظ والذي بعثني بالحقّ نبيّاً إن لم يكن له ولد بعد فشرب من ذلك الماء كان له ولد وإن كانت المرأة عقيماً وشربت من ذلك الماء رزقها الله ولداً
“எனக்கு ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஒரு மருந்தை கற்றுத்தந்தார்கள். அம்மருந்து ஒன்றே போதும். வேறு எந்த மருந்தும் தேவை இல்லை. எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா நோய்களையும் இந்த ஒரு மருந்தின் மூலமே குணப்படுத்தி விடுவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஒரு சமயம் ஸஹாபாப் பெருமக்களிடம் கூறியபோது, அலீ போன்ற தோழர்கள் (ரலியல்லாஹு அன்ஹும்)  அதை தத்தமக்குக் கற்றுத்தருமாறு வேண்டினார்கள்.
அப்போது “(முகட்டிலோ மரத்திலோ )வேறு எதிலும் படாத சுத்தமான மழைத் தண்ணீரில் ஃபாத்திஹா, ஆயத்துல் குர்ஸீ, காஃபிரூன், இக்லாஸ், ஃபலக், நாஸ் ஆகிய சூராக்களை எழுபது எழுபது தடவை ஓதி அதில் ஊதி வைத்துக் கொண்டு, எப்படிப்பட்ட நோயால், செய்வினை மற்றும் கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களும் காலையும், மாலையும் தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் என்னை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக் நிச்சயம் அந்த நோய் நீங்கிவிடும். மலட்டுத்தன்மை உடையவர் இவ்வாறு இதைக் குடித்து வந்தால் நிச்சயம் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பெறுவார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளினார்கள்.

11 அக்டோபர், 2012

துல்ஹஜ், குர்பானி


இந்த வாரம் ஜும் ஆ உரையின் அம்சங்கள் :

 • துல்ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்பும் 
 • அவற்றில் ஆற்றவேண்டிய அமலும்
 • குர்பானியின் சிறப்பு 
 • அதன் சட்டங்கள் 
 • அதில் அடங்கியுள்ள ஆத்மார்த்தமான தத்துவங்கள், 
 • குர்பானியின் வரலாறு 

 இவற்றை உள்ளடக்கி இரு உரைகள் தரப்பட்டுள்ளன. தங்களின் மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.


 1. துல்ஹஜ்: சிறப்பும் செய்யவேண்டிய அமலும் 

  2. உயிர் கொடுத்து உயிர் காப்போம்

உயிர் கொடுத்து உயிர் காப்போம்

உள்ஹிய்யா
மனித வாழ்க்கையில் முக்கியமான மூன்று கட்டங்கள் உண்டு;
 • மழலை வாழ்க்கை
 • மணவாழ்க்கை
 • மறுமை வாழ்க்கை
இம் மூன்றிலும் மனிதன் ஆபத்துகள் சிரமங்கள் பெரும் துன்பங்கள் இன்றி நிம்மதியாக வாழ மார்க்கம் பல வழிமுறைகளை கற்றுத் தந்துள்ளது. அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் பாதையில் அறுத்துப் பலியிட்டு பங்கிடுதல்

08 அக்டோபர், 2012

வரதட்சணைக்கு பெரிதும் காரணம் பெண்களே-3


திருமணச் சடங்கு
நடுவர் அவர்களே! 
ஒரு பெண்ணைக் கட்டிக் கொடுத்தால் அவளுக்கு புகுந்த வீட்டில் ஏற்படும் கொடுமைகளில் ஒன்று நாத்தனார் கொடுமை. இந்த நாசம் பிடித்த நாத்தனார்கள் சுனாமிகளைப் போல் குடும்பத்தை நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

 •  இந்த மாமியார் நாத்தனார் என்ற பெண்களின் கோரப்பிடியில் சிக்கி சீரழியும் பெண்கள் எத்தனை? 
 • இவர்களால் ஸ்டவ்கள் வெடித்து பரிதாபமாய் பலியான பெண்கள் எத்தனை? 
 • தீக்குளித்த பெண்கள் எத்தனை? 
 • விஷம் குடித்த பெண்கள் எத்தனை? 
 • தற்கொலை செய்துகொண்ட பெண்கள் எத்தனை? 
இப்படி ஏராளமான மாபாதகங்களை செய்துகொண்டிருப்பவர்கள் இந்த பெண்கள்தான்.

ஒரு வாலிபன் வரதட்சணை வேண்டாம் என்று மறுத்தாலும் அவனைப் பெற்ற தாயும் சகோதரியும் சும்மா விடுவதில்லை. 
இதுல இரட்டை சீர்வரிசைன்னு ஒன்னு இருக்குங்க.. இதை எவதான் கண்டுபிடிச்சாளோ தெரியல.. இரட்டை சீர்வரிசைன்னா என்ன தெரியுமா? 
 • அண்டாவானா ரெண்டு; குண்டாவானா ரெண்டு.
 • சட்டியானா ரெண்டு பெட்டியானா ரெண்டு. 
இப்படி அண்டா குண்டா எல்லாமே ரெண்டு கொடுத்தா மட்டும் போதாது.அதுக்குள்ள 101 லட்டு வக்காட்டி குத்தம்; குழல் பணியாரம் வக்காட்டி குத்தம்; தேங்காயில ஒன்னு குறைஞ்சால குத்தம். இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் குத்தம் கண்டுபிடிச்சு மார்க்கத்திலில்லாத மடமைகளை கடமைகளாக்கி வைத்திருப்பவர்கள் இந்த பெண்கள்தான். 

ஆகவே வரதட்சணை வாங்குவது பெண்களின் மடமை!
அதை வாங்காமலிருப்பது ஆண்களின் கடமை!!
எனவே வாட்டி வதைக்கும் வரதட்சணைக் கொடுமைக்கு பெரிதும் காரணம் பெண்களே! பெண்களே!! என்று உறுதிபடக் கூறி அமர்கிறேன்.

07 அக்டோபர், 2012

வரதட்சணைக்கு பெரிதும் காரணம் பெண்களே-2


தனிக்காட்டு ராஜாவாக அமர்ந்திருக்கும் சிங்கமே!
மரியாதைக்குரிய நடுவர் அவர்களே!
வரதட்சணை வன் கொடுமைக்கு பெண்கள்தான் காரணம் என்று அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்து சொன்னதற்குப் பிறகும் இந்த வருங்காலக் கிழவிகளுக்கு இன்னுமா புரியவில்லை?
வரதட்சணைக்கு மாத்திரமல்ல.. நடுவர் அவர்களே! உலகில் நடக்கும் அத்தனை தீமைகளுக்கும் இந்த பெண்கள் தான் காரணம். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பார்கள் பெண்களால் ஆகின்றதோ இல்லையோ அழிவுதான் அதிகம் நடந்துகொண்டே இருக்கிறது.

ஆதிமனிதனாம் ஆதம் (அலை) அவர்களுக்கு பிறந்த காபீல் என்பவர் ஹாபீலைக் கொலை செய்தார். உலகில் நடந்த முதல் கொலை யாரால் நடந்தது தெரியுமா? இக்லிமா என்ற பெண்ணால்தான். அதுமட்டுமல்ல பெண்கள் சிறந்தவர்கள் பெண்கள் உயர்ந்தவர்கள் என்று பேசுகிறாங்க பெருசா..
அன்றைய பெண்களின் நிலை என்ன? இன்றைய பெண்களின் நிலை என்ன? அன்று தாய்மார்கள் குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டும்போது இஸ்லாமிய பாடல்களை பாடினார்கள்.
கண்ணுறங்கு கண்மணியே! கருவில் வந்த கற்கண்டே !!
ஆண்டவன் தந்த அற்புதமே !
அல்லாஹு அக்பர் என்று உறங்கு! 
நீ அண்ணல் நபி ஆசியோடு உறங்கு 

ஆனால் இன்னைக்குள்ள தாய்மாருக்கு தாலாட்டுப் பாடவே தெரியல.. அப்படியே பாடினாலும் என்ன தெரியுமா பாடுறாங்க..

''ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி ''
(இந்த இடத்தில் வேறு ஏதாவது பாடலை சேர்த்துக் கொண்டாலும் சரியே)

இந்தமாதிரி பாலாய்ப்போன சினிமாப் பாடலைப் பாடி பாடி குழந்தைகளைக் கெடுத்து சமுதாயத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த பெண்கள்.

நடுவர் அவர்களே! நோகாம நொங்கு திங்குறதுன்னா என்ன தெரியுமா? சொல்றேன் கேளுங்க.. தன் பையனுக்கு மாத்திரம் நகையும் நட்டும் காசு பணத்தையும் அதிகமாக வாங்கி மருமகள் கொண்டு வந்ததையெல்லாம் தன் மகளுக்கு போட்டு கல்யாணம் பண்ணி வைக்கிற லேட்டஸ்டு கலாச்சாரம்தான் நோகாம நொங்கு திங்குறது.

ஆதியிலே வந்தவன் வீதியிலே போனானாம்.. நேத்து வந்தவன் நெய்யூத்தி தின்னானாம். அந்த கதையாவுல இருக்கு?
ஒரு பொம்பள தன் மகனுக்கு பொண்ணு பார்க்க போயி 150 பவுன் நகை போடனும்னு கேட்டாளாம். ''அடி ஆத்தி.. அப்படியென்ன ஒம் மகன் லாடு வூட்டு லபக்கு தாஸா.. இல்ல லாடு வூட்டு கொலாப்புட்டா? என்ன உத்தியோகம் பார்க்கிறான் என்று கேட்டால், ''எம்புள்ள S.I யா இருக்கான் அப்படின்னாங்க '' ''அது என்ன S.I அப்படின்னு கேட்டால், ''சும்மா ருக்கிறதுதான்'' அப்படின்னு சொன்னாங்க.
''சரி 150 பவுன் போடுகிறோம்.. நீங்க என்ன போடுகிறீர்கள்.? என்று கேட்டால் ''நாங்க அதை வாங்கி எடை போடுவோம்; குறைஞ்சா கல்யாணத்துக்கு தடை போடுவோம்'' அப்படின்னாங்க.
இப்படிப்பட்ட பெண் மாமியாரின் அவலட்சணங்களால்தான் வரதட்சணைக் கொடுமை காட்டுத்தீயாய் சமூகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது.

அருமையானவர்களே!

 • ஏங்கித் தவிக்கும் ஏழைக் குமர்களின் ஏக்கப் பெருமூச்சுகளைத் துடைத்திட 
 • வாடி வதங்கும் வண்ண மலர்களின் வருத்தங்களைக் கலைந்திட
 • கண்ணீர்க் கடலில் தினம் தினம் கலங்கிக் கிடக்கும் கன்னியரின் கவலைப் போக்கிட 
 • வாழ வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் பெண் குமர்கள் கரை சேர்ந்திட
 • வேதனைத் தீயில் வெம்பித் துடிக்கும் பெண் இனத்தின் துயர் தீர்ந்திட
 • கல்யாணச் சந்தையில் விலைபோக முடியாமல் விரக்தியின் விளிம்பில் நடைப் பிணமாய் வாழும் எண்ணற்ற அன்பு மலர்களை, அழகுப் பதுமைகளை வாழவைத்திட 
ஆண்கள் மாத்திரமல்ல பெண்களும் திருந்தவேண்டும் குறிப்பாக மாமியார் என்ற அல்லி ராணிகள் கெட்ட கள்ளி ராணிகள் கொள்ளை ராணிகள் திருந்தினால் மட்டுமே வரதட்சணை சனியனை ஒழிக்க முடியும். ஆகவே வாட்டி வதைக்கும் வரதட்சணைக் கொடுமைக்கு பெரிதும் காரணம் பெண்களே பெண்களே என்று கூறி என்னுரையை நிறைவு செய்கிறேன்.


சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! 

அறிவு, செல்வம் இரண்டிலும் எது சிறந்தது?


கல்வி
ரு சமயம் பத்து யூதர்கள் அலி (ரலி) அவர்களிடம் வந்து '' அறிவு, செல்வம் இரண்டிலும் எது சிறந்தது? ஏன் சிறந்தது? எங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வெவ்வேறு பதிலகள் தரவேண்டும் '' என்று கேட்டனர்.
அலி ரலி அவர்கள் பத்து பதில்கள் தந்தார்கள்:

1. அறிவு என்பது இறைத் தூதர்களின் மரபுரிமைச் சொத்து; செல்வம் அரசர்களுடைய வழி வழிச் சொத்து. எனவே அறிவுதான் சிறந்தது.

2. செல்வத்தை நீங்கள் பாதுகாக்கவேண்டும்; ஆனால் அறிவு உங்களைப் பாதுகாக்கும். எனவே அறிவுதான் சிறந்தது.

3. செல்வத்தை வைத்திருக்கும் ஒருவனுக்கு அநேக எதிரிகள் இருப்பார்கள். அறிவை உடையவனுக்கு பல நண்பர்கள் இருப்பார்கள் எனவே அறிவுதான் சிறந்தது.

4. அறிவை விநியோகித்தால் அது பெருகுகின்றது; ஆனால் செலவத்தை விநியோகித்தால் அது குறைகின்றது. எனவே அறிவுதான் சிறந்தது. 

5. அறிவாளி பெருந்தன்மையுடன் நடந்துகொள்கிறான். செல்வந்தன் கஞ்சத்துடன் நடந்து கொள்கிறான். எனவே அறிவுதான் சிறந்தது. 

6. அறிவு திருட்டுப் போகாது; செல்வம் திருட்டுப் போகும் வாய்ப்புள்ளது. எனவே அறிவுதான் சிறந்தது. 

7. காலத்தின் ஓட்டத்திலே அறிவு பழுதடைவதில்லை. ஆனால் செல்வம் துருப்பிடித்து தேய்கிறது. எனவே அறிவுதான் சிறந்தது. 

8. அறிவு எல்லையற்றது; செல்வத்திற்கு எல்லையுண்டு அதைப் பற்றி கணக்கு வைத்துக்கொள்ளலாம். எனவே அறிவுதான் சிறந்தது. 

9. அறிவு உள்ளத்தைப் பிரகாசப்படுத்துகிறது; செல்வம் இருளடையச் செய்கிறது. எனவே அறிவுதான் சிறந்தது. 

10. அறிவு பணிவைத் தருகிறது; செல்வம் பகட்டைத் தருகிறது. எனவே அறிவுதான் சிறந்தது. 


சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! 

05 அக்டோபர், 2012

வரதட்சணைக்கு பெரிதும் காரணம் ஆண்களே-3


எனக்கு முன்னால் பேசிய .............................. அண்டப் புழுகு; ஆகாசப் புழுகு ; உலக மகாப் புழுகு.
வரதட்சணைக்கு யார் காரணம்னு பேசச் சொன்னா தேவையில்லாம எங்களைத் திட்டிட்டுப் போயிருக்கிறார். 
அருமையும் பெருமையும் நிறைந்த பெண்ணினத்தை தங்கத்திற்கு நிகரான தாய்க்குலத்தை தரைக்குறைவாய் பேசிவிட்டுப் போயிருக்கிறார்.

நடுவர் அவர்களே!
நாங்களெல்லாம் அக்கிரமச் செயல்களை செய்வதாக கதை கட்டிட்டுப் போயிருக்கிறார். ஆண்களின் அக்கிரம செயல்களை பட்டியலிட்டுக் காட்டட்டுமா? 
 • நாட்டிலே நடக்கும் கொலை கொள்ளை மோசடி திருட்டு போன்ற எல்லா நாசகார செயல்களை அதிகமாக செய்பவர்கள் ஆண்களில்லையா?
 • குடித்துக் குடித்துக் கும்மாளமடித்து குடும்பத்தைக் கெடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஆண்களில்லையா? 
 • போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி அவமானச் சின்னங்களாக வலம் வருபவர்கள் ஆண்களில்லையா? 
உத்தமத் திருநபி ஸல் அவர்கள் கூறினார்கள்:
خيركم خيركم لاهله 
உங்களில் சிறந்தவர் யாரென்றால் உங்கள் மனைவியிடம் சிறந்தவரே! ஆனால் இன்றைக்கு மணப் பெண்ணிடம் வரதட்சணை வாங்கிய ஆண்கள்கள்தான் அதிகம். இவர்களால் இதை மறுத்துப் பேச முடியுமா?
இங்கு அமர்ந்திருக்கும் திருமண ஆண்களைப் பார்த்து கேட்கிறேன்: உங்களில் எத்தனை பேர் வரதட்சணை வாங்காமல் திருமணம் முடித்திருக்கிறீர்கள் இன்றைக்கு ஒரு சில இளைஞர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் முடிப்போம் என்று புறப்பட்டிருக்கிறார்களாம் ஆனால் அவர்கள்கூட புடிச்சாலும் கூட பெரிய புளியங்கொப்பாய்ப் பார்த்துத்தான் புடிக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன்: நீங்கள் வரதட்சணை வாங்காமல் முடிக்கிறீர்கள் சரி..
ஆனால் குடிசையில் வாழும் குமர்களை ஏன் முடிப்பதில்லை? ஏழை வீட்டு ரோஜாக்களை ஏன் மணம் புரிவதில்லை? வசதி இல்லாத குடும்பத்தில் ஏன் பெண் எடுப்பதில்லை? இதையெல்லாம் விட்டுவிட்டு வசதியான குடும்பத்தில் போய் வரதட்சணை வேண்டாம் என்று திருமணம் முடிப்பதுதான் நியாயமா? இதுதான் சீர்திருத்தமா? 

நடுவர் அவர்களே!
ஒரு கவிஞன் இப்படி சொன்னான்:
கைக்கூலி கொடுமையினால்
கரை சேர முடியாமல்
ஏழைவீட்டு ரோஜாக்கள் வாடுது
ஒரு பெண்ணுக்கு மணம் முடிக்க
பையனுக்கு பை நிறைய தரும் கொடுமை
தலைவிரித்தாடுது!

இது எவ்வளவு பெரிய உண்மை?
ஆண்களின் அக்கிரமத்திற்கு ஒரு உண்மை சம்பவம் சொல்லட்டுமா?

தமிழ் நாட்டிலே ஒரு ஊரில் இரண்டு பெண்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் மூத்த பெண்ணை திருமணம் முடித்துக் கொடுத்து விட்டார்கள். இரண்டாம் பெண்ணுக்கு வசதி இல்லாததால் என்ன செய்வது என வழி தெரியாமல் கை பிசைந்து நின்றார்கள். பெண்ணின் தந்தை தன் மனைவியிடம் சொன்னார்: நாம கவுரமான குடும்பம். நாம யாருட்டயும் போய் உதவி கேட்டு நிற்கக் கூடாது. நம்ம பொண்ணைக் கட்டிக் கொடுக்க 2 லட்சம் தேவைப்படுது. அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு. அதை நான் சொல்கிறேன் யாருட்டயும் சொல்லாதே! நான் காலையில் எழுந்ததும் சைக்கிளை எடுத்துக் கொண்டு மெயின் ரோட்டில் வரும் லாரியில் மோதி உயிரை விடுகிறேன். செய்தி கேள்விப்பட்டு இன்ஷுரன்ஸ் அதிகார்கள் வந்து என் பேரில் இருக்கும் பாலிசிக்கு 2 லட்சம் தருவார்கள். அதை வாங்கி நம்ம பொண்ணு கல்யாணத்தை ஜாம் ஜாம்முன்னு முடிச்சுடு.'' என்று சொல்லிவிட்டு இரவு படுத்தார். சொன்னது போலவே காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு  லாரியில் மோதி உயிரை விட்டார். செய்தி அறிந்து மனைவி ஓடி வந்து நெஞ்சிலும் முகத்திலும் அடித்துக் கதறி அழுதாள். ''லாரியில் விழப்போறேன் லாரியில் விழப்போறேன்னு சொன்னீங்களே.. சொன்னதுபோல செஞ்சிட்டீங்களே. என்று கதறி அழுதாள். 
இதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்ஷுரன்ஸ் அதிகாரிகள் இது விபத்தல்ல தற்கொலை என்று சொல்லி கொடுக்கவேண்டிய 2 லட்சத்தையும் கொடுக்காமல் போய்விட்டனர். 
ஒரு உயிரும் போயி குமரும் கரையேற வழியில்லாமல் போய்விட்டது. இந்த பரிதாபத்திற்கும் பரிதவிப்பிற்கும் எது காரணம்? நெஞ்சுல கைவச்சு சொல்லுங்க.. ஈவிரக்கமில்லாமல் ஆண்கள் கேட்கும் வரதட்சணைதானே! 

கண்ணியமிக்க இந்த சமுதாயத்தின் மானமரியாதையை குழிதோண்டிப் புதைக்கும் வண்ணம் ஒரு அநியாயம் நடக்குதுங்க.  எந்த இந்து சமுதாயத்தின் கோயிலிலும் நடக்காத செயல். எந்த கிறிஸ்தவ சர்ச்சுகளிலும் நடக்காத செயல். முஸ்லிம்களின் புனிதமிக்க பள்ளிவாசல்களில் நடக்குதுங்க. என்னன்னு கேட்குறீங்களா? பெண்ணை பெற்றெடுத்த பெற்றோர்கள் வரதட்சணை கொடுக்க வழியில்லாமல் பள்ளிகளிலே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 
ஏ மணம் முடிக்கும் மாப்பிள்ளைகளே! ஆண்மக்கள் எனப் பெருமை அடிக்கும் நீங்கள் யாரிடம் தெரியுமா பணம் கேட்கிறீர்கள்?
ஊண்மறந்து உறக்கம் மறந்து தன் இரத்தத்தைப் பாலாக்கி குழந்தைக்கு உணவாக்கி கொடுக்கிற தாய். அந்த குழந்தையை பெற்றெடுக்கும்போது அவள் படுகிற வேதனைக்கு நிகராக இந்த உலகத்தில் வேறு ஏதாவது உண்டா?
மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்புகிறாள். அப்பேற்பட்ட அந்த தியாகச் செம்மல்களிடமா கூலி கேட்கிறீர்கள்?04 அக்டோபர், 2012

உள்ளத்தை அள்ளும் இல்லம்

حج
''காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை
ஹஜ்ஜு காட்சிக்கிணையாக உலகில் எதுவுமே இல்லை.''
இந்த வரிகள்தான் எவ்வளவு உண்மையானது!

இப்பொழுது உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மக்காவை நோக்கி ஹஜ்ஜுக்காக புறப்பட்டவண்ணம் இருக்கின்றனர்.

02 அக்டோபர், 2012

வரதட்சணைக்கு பெரிதும் காரணம் ஆண்களே -2


வாட்டி வதைக்கும் வரதட்சணைக்கு பெரிதும் காரணம் ஆண்களே என்று எங்கள் அணியினர் ஆதாரத்துடன் அடித்துப் பேசியும் இந்த மண்டையிலே மசாலா இல்லாத மரமண்டைகளுக்கு உரைக்கவில்லைனா என்ன செய்வது?
பத்துமாசம் சுமந்து பெற்றெடுத்த தாய்மார்களை எதிர்த்துப் பேச வந்திருக்கும் நன்றி மறந்தவர்களே! நன்றி கெட்டவர்களே!

நடுவர் அவர்களே! இவங்கள பார்த்தால் இருட்டுல புடிச்சு வச்ச கொழுக்கட்டை மாதிரி இருந்துக்கிட்டு எங்கள எதிர்த்து பேச வந்துட்டாக
الجنة تحت أقدام الأمهات                                                                                                                            
  

தாயின் காலடியில் சேயின் சொர்க்கம் என்று பெண்ணினத்தின் பெருமையை உயர்த்திப் பேசிய பெருமானாரின் மணி மொழியை மறந்துவிட்டீர்களா

திருமணம் சொர்க்கத்தில்; நிச்சயிக்கப்படுது என்பார்கள்.
''ஏங்க.. சொர்க்கத்திலயா நிச்சயிக்கப்படுது? ரொக்கத்திலும் சொக்கத் தங்கத்திலும் அல்லவா நிச்சயிக்கப்படுது?
இன்று நடுத்தரமான குடும்பத்துல ஒரு பெண்ணை கல்யாணம் முடிச்சுக் கொடுக்கணும்னா என்னவெல்லாம் கொடுக்கணும்னு தெரியுங்களா?

 • சொத்த மாப்பிள்ளையானாலும் சொக்கத் தங்கத்துல 25 பவுன் நகை.
 • வேலைவெட்டிக்கே போகாமல் ஊர் சுற்றித் திரியும் ஊதாரி மாப்பிள்ளைக்கு 50 ஆயிரம் பணம்
 • வாட்ச் வாங்க வக்கில்லாதவனுக்கு கைக்கு ஒரு வாட்ச்
 • விரலே இல்லாத விளக்கெண்ணைக்கு இன்ஷியல் போட்ட மோதிரம்.
 • நிச்சயதார்த்தம் அன்னைக்கு 100 பேருக்கு ஓசி பிரியாணி.
 • கல்யாணத்தன்னிக்கு சுத்தமான கிடாக்கறியிலே 500 பேருக்கு தண்டச்சோறு
 • சுத்த பேக்கு மாப்பிள்ளயானாலும் தேக்கு மரத்துல கட்டிலும் பீரோவும் கொடுக்கணுங்க
 • பண்டாரங்களுக்கு பாத்திரப் பண்டங்கள் வேற.
 • கல்யாணம் முடிஞ்சு குழந்தை பெறந்துச்சுன்னா குழந்தைக்கு காதுக்கு கழுத்துக்கு இடுப்புக்கு தங்கத்திலோ வெள்ளியிலோ போடனுங்க
 • சாதாரண நொண்டி மாப்பிள்ளைக்கே வண்டி வண்டியா கொடுக்கனும்னா படிச்ச பண்டார மாப்பிள்ளைக்கு எவ்வளவு கொடுக்கணும்? 

நடுவர் அவர்களே!
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் உங்களுக்கு ஒரு அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று அல்லாஹ் கூறுகிறான்
அப்படிப்பட்ட பெருமானார் திருமணம் முடித்திருக்கிறார்கள். எந்த மனைவியிடமாவது வரதட்சணை வாங்கியிருக்கிறார்களா? சீர் வரிசையாவது வாங்கியிருக்கிறார்களா? இல்லையே!

மார்க்கத்தின் மான்புகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு இந்த ஆண்கள் செய்யும் அக்கிரமங்களால் வாடி வதங்கும் பெண்கள் எத்தனை? கதிகலங்கிக் கிடக்கும் கன்னியர் எத்தனை? மனம் வெதும்பி அழுகின்ற மங்கையர் எத்தனை? தனக்கு ஒரு வரன் கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கும் ஏழைக் குமர்கள் எத்தனை?
ஏ۔۔ வக்கற்ற வாலிபக் கூட்டமே! நீங்கள் வரதட்சணை வாங்கி வயிறு வளர்ப்பதில் சங்கடங்கள் சோகங்கள் உங்களுக்கு தெரியுமா? புனிதமிக்க இஸ்லாத்தில் பிறந்து இஸ்லாத்தில் வளர்ந்து வயதுக்கு வந்த ஏழைக்குமர்களை திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர்கள் வரதட்சணை கேட்பதால் வேறு வழியில்லாமல் மாற்று மத இளைஞர்கள் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இஸ்லாத்தைத் தூக்கிப் பிடித்திருக்கிறேன் என கொக்கரிக்கு இளைஞர்களே! கண்ணியத்திற்குறிய பள்ளிவாசல் நிர்வாகிகளே! மார்க்கத்திற்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும் உலமாப் பெருமக்களே!! இதற்கெல்லாம் தீர்வு காண்பது உங்கள் கடமை அல்லவா? ஆண்களாகிய நீங்கள் பொறுப்புகளை உணராததால்தான் இந்த வரதட்சணைக் கொடுமை அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
ஆகவே புற்றுநோய் தொற்று நோய் போல பரவிகொண்டிருக்கும் இந்த வரதட்சணைக்கு பெரிதும் காரணம் ஆண்களே ஆண்களே என்று உறுதிபடக் கூறி என் உரைக்குத் திரையிடுகிறேன்.