28 செப்டம்பர், 2012

ஹஜ்: சிறப்புகளும் விளக்கங்களும்

ஹஜ்: சிறப்புகளும் விளக்கங்களும் விரிவாக அறிந்துகொள்ள இந்த அரபு கட்டுரை வாசிக்கவும்:


26 செப்டம்பர், 2012

ஆர்பாட்டத்தால் அதிர்ந்தது முகவை!

ramanathapuram
முஸ்லிம்களின் ஒற்றுமை தொடர்கிறது! முகவை அனைத்து ஜமாஅத் ஆர்பாட்டதால் அதிர்ந்தது !

2012 செப். 25 அன்று இராமநாதபுரம் நகரில் தமுமுக, எஸ்.டி.பி.ஐ, ஐ.என்.டி.ஜே , சுன்னத் ஜமாத்தார்கள் , அனைத்து உலமா பெருமக்கள், அனைத்து ஊர் ஜமாத்தினர்கள். இதர இஸ்லாமிய இயக்கங்கள், சங்கங்கள் ஆகியோர் இனைந்த இராமநாதபுரம் மாவட்ட அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் சார்பாக
இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான உன்னத நபி முகம்மது (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்தவர்களையும்
அதை கண்டிக்க மறுக்கும் அமெரிக்கர்களையும்
அந்த திரப்படத்தை வெளியிட்டுள்ள அனைத்து வலைத்தளங்களையும்
தடை செயய மறுக்கம் மத்திய அரசை கண்டித்தும் ஒரு மாபெரும் கண்டன பேரணியும் கண்டன பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

  • இராமநாதபுரம் நகர் கொல்லம்பட்டரை தெருவில் உள்ள இராமநாதபுரத்தின் மிக பழமையானதும் , முதல் பள்ளியுமான கொல்லம் பட்டறை பள்ளியில் இருந்து துவங்கிய இந்த பேரணிக்கு 
  • ஆலிம் கிராஅத் ஓத 
  • அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளரும் கொல்லம்பட்டறை தெரு ஜமாத் நிர்வாகியுமான ஜனாப் முத்தலிப் அவர்கள் துவக்கி வைத்தார்கள். 
  • பேரணியை வழி நடத்தும் விதமாக அனைத்து இயக்கத்தவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்த்தர்கள் , மாவட்டத்தின் அனைத்து ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள், அனைத்து இயக்க நிர்வாகிகள் வீர முழக்கமெழுப்பி கண்டன கோசங்களை உணர்ச்சி பொங்க ஒங்கி ஒலித்து வந்தார்கள். 

 மாவட்டமெங்கிலும் இருந்து இசுலாமிய வீர இளைஞர்கள் ஆர்ப்பரித்து வரலாறு காணாத வகையில் ஆயிரக்கணக்கில் கண்டன பதாகைகளை கையில் ஏந்தி சின்க்கடை வீதியெங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து அன்னல் நபியை இழிவு படுத்தியதை கண்டித்தும் மாநபியின் வீர வேங்கைகள் கோசம் எழுப்பி பேரணியாக தெருவெங்கும் நடந்து வந்தது இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கும் காணத சரித்திர சம்பவம்.

  • இன்று தங்கள் கண்டனங்களை பதிவு செய்யும் வகையில் இராமநாதபுரத்தில் உள்ள அனைத்து இசுலாமிய வியாபார நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. 
  • பொங்கி எழுந்த வீர இசுலாமியர்களின் ஆர்பரிப்பில் இராமநாதபுரம் தினறியது. 
  • தப்புக்கணக்கு போட்டு வாகனங்களில் வந்து முஸ்லிம்களை பீதியடைய செய்யலாம் என்று திறலாக குவிக்கப்பட்டிருந்த காவல்துறை எம் மாவட்ட இசுலாமிய வீரவேங்கைகளின் ஆக்ரோசத்தில் பின்வாங்கியது. 

முகவை மாநகர சரித்திரத்தில் திரன்டிராத கூட்டமிது. காவல்துறையும் உளவுத்துறை உட்பட ஏனைய அனைத்து மக்களும் திரன்டிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் ஓழுக்கமான கூடலை பார்த்து ஆச்சர்யத்தில் வியந்தனர்.
நமது உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுப் படுத்திய அமெரிக்க கயவர்களை கண்டித்து நடந்த இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்த்தில் பங்கெடுத்து அன்னல் நபிகளுக்கெதிரான அநீதிக்கு கண்டன் தெறிவித்தவர்களாக சரித்திரத்தில் தங்களை இம்மக்கள் பதிவு செய்து கொண்டனர்.

25 செப்டம்பர், 2012

அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலம்அமெரிக்காவில் வெளியான Innocence of Muslim திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் குலாம் அகமது பிலோர்ஸ், இஸ்லாமை அவமதித்து வரும் எந்த செய்தியையும் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி, திரைப்படத்தை தயாரித்தரின் தலைக்கு 1 லட்சம் அமெரிக்க டொலர் பரிசு அறிவித்தார்.

இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அந்நாட்டு வெளிவிவகாரத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், தலைவர்கள் பொறுப்புடன் இருந்து வன்முறைக்கு எதிராக பேசுவது, நடந்து கொள்ளவது மிக முக்கியம்.

வன்முறையை தூண்டும் விதத்தில் பொறுப்பற்ற முறையில் அவர் பேசியிருப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

வன்முறையைத் தூண்டும் விதத்தில் திரைப்படம் எடுக்கலாமாம்; அவனைத் தண்டிக்க துப்பில்லாத அமெரிக்காவிற்கு நியாயம் பேச என்ன தகுதி இருக்கிறது? 
அமெரிக்காவைச் சேர்ந்த அந்த அயோக்கியன் சாம் பாசைல் தயாரித்த திரைப்படத்தால் முஸ்லிம் உலகமே கொந்தளிப் போய் இருக்கிறது. உலகம் முழுதும் ஆர்ப்பாட்டங்களும் அறவழிப் போராட்டங்களும் நடைபெற்றுவருகிறது. இத்தனைக்குப் பிறகும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் நான் இதைவிட இன்னும் பெரிய படம் எடுத்து வெளியிடுவேன் என கொக்கரிக்கும் திமிர் பிடித்த அந்த அயோக்கியனை கண்டிக்கவோ தண்டிக்கவோ செய்யாத அமெரிக்கா நியாயமான முறையில் தன் உணர்வுகளைப் பதிவு செய்யும் முஸ்லிம்களை கண்டிக்கிறது என்றால் என்ன பொருள்? அமெரிக்கா தரும் ஊட்டத்தால்தான் இதுபோன்ற அயோக்கியத் தனங்கள் நடைபெறுகிறது என்று தெளிவாக புரியவில்லையா?
ஆனால் அமெரிக்கா சில தினங்களுக்கு முன் பாக்கிஸ்தான் டிவிகளில் என்ன கூறியது? ''அந்த திரைப்படத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' 
அப்படியானால் அந்த திரைப்படம் எடுத்த அயோக்கியனின் தலைக்கு விலை நிர்ணயிக்கப்படும்போது அமெரிக்காவுக்கு ஏன் தாங்கமுடியவில்லை? 


நைஜீரியா இஸ்லாமியர் போராட்டம்

இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: நைஜீரியாவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்


அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் நாடான நைஜீரியாவின் கடுனா நகரில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் வசிக்கும் நாடான நைஜீரியாவில் நடத்தப்பட்ட இப்போராட்டம் எவ்வித வன்முறைகளும் இல்லாமல் அமைதியாக நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் அமெரிக்க கொடியை எரித்தும், தெருக்களில் இழுத்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அமெரிக்க கொடியுடன் இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் கொடிகளையும் போராட்டத்தில் ஈடுபட்டோர் இழிவுபடுத்தினர். மேலும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படங்களும் போராட்டத்தின்போது எரிக்கப்பட்டன. முன்னதாக, இதே காரணத்துக்காக நைஜீரியாவின் கனோ மற்றும் சரியா நகர்களில் ஏற்கனவே நடத்தப்பட்ட போராட்டங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
  நன்றி:  www.maalaimalar.com

சென்னை 25-09-2012 (செவ்வாய்க்கிழமை

இலங்கையில் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம்


அமெரிக்க பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டியும், முஸ்லிம்களுக்கு எதிரான திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கையில் நேற்று பேரணி நடத்தப்பட்டது.
கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி இந்த பேரணி நடத்தப்பட்டது. 

20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றனர். அமெரிக்க தூதரகத்துக்கு வெகு அருகில் அதிபர் ராஜபக்சே அலுவலகம் இருப்பதால் போராட்டக்காரர்களை தூதரகம் அருகே போலீசார் அனுமதிக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூதரகம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், பிரச்னைக்குரிய படத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

22 செப்டம்பர், 2012

இஸ்லாமிய எதிர்ப்பு படத்திற்கும், அமெரிக்காவிற்கும் தொடர்பும் இல்லையாம்?


லிபோர்னியாவைச் சேர்ந்த இஸ்ரேலிய அமெரிக்கன் ஒருவன் எடுத்த இஸ்லாமியர்கள் குறித்த படமானது உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியுள்ளது. நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் இந்தப் படம் இருப்பதால் இஸ்லாமியர்கள் குமுறி வருகின்றனர். பல்வேறு நாடுகளிலும் அமெரிக்க அரசையும், அதன் தூதரகங்களையும் குறி வைத்து தாக்குதல்கள், போராட்டங்கள் நடந்து வருகின்றன.
பாகிஸ்தானிலும் கொந்தளிப்பான நிலையே காணப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் மூலம் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமாதானப் பேச்சை விளம்பரமாக ஒளிபரப்பு செய்யும் பணிகளில் அமெரிக்க அரசு இறங்கியுள்ளது. இதற்காக அது பாகிஸ்தான் டிவி நிறுவனங்களுக்கு விளம்பரங்களைக் கொடுத்து வருகிறது. அதில், ஒபாமாவும், ஹில்லாரி கிளிண்டனும் பேசும் பேச்சுக்கள் இடம் பெற்றுள்ளன. இதற்காக இதுவரை 70 ஆயிரம் டாலர் வரை செலவிட்டுள்ளதாம் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம்.
ஐநா சபையையே ஆட்டிப்படைக்கிற அமெரிக்கா தன் நாட்டைச் சார்ந்த ஒரு பிரஜை எடுத்த படத்தை தடை செய்யமுடியவில்லையாம். அவனைத் தண்டிக்கமுடியவில்லையாம். யாரு காதுல பூ சுத்துறீங்க?21 செப்டம்பர், 2012

கேலி செய்தோருக்கு கிடைத்த கூலி


அமெரிக்க சாத்தான் தயாரித்துள்ள திரைப் படத்தில் நபியவர்களை வன்முறையாளர் என்றும் பெண் பித்தர் என்றும் தவறாக சித்தரித்துள்ளான். நவூது பில்லாஹ்.
யார் வன்முறையாளர்? 
ஒரு ஒட்டகம் தண்ணீர் குடித்த விஷயத்திற்காக 120 வருட காலமாக பரம்பரை பரம்பரையாக சண்டை போட்டு வெட்டிக் கொண்டும் குத்திக்கொண்டும் மாண்டுகொண்டிருந்தவர்களை 

16 செப்டம்பர், 2012

"பிராய்லர் கோழி- இறைச்சி வடிவில் ஒரு "எமன்"


நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.


40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. விரைவாக வளரும் பொருட்டு பலவித கெமிக்கல்ஸ் சேர்க்கப்படுகிறது (அந்த வளரும் கெமிக்கல்ஸ் நமது உயிர் அணுக்கலை பாதித்து, உடல் செல்கலை அபரிமிதமான வளர்ச்சியை உண்டாக்கி புற்று நோய் மற்றும் இளமையில் முதுமையை கொடுத்து விடுகிறது. விளைவு குறைந்த ஆயுள்). இளம் வயது சிறுமிகள் பெரிய மனுஷி ஆவதற்கும் இந்த கெமிக்கல்ஸ் தான் காரணம்.


பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:-

நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில் தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.


ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாதது தான்.

6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயனங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன. ரசாயனங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.

பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.

நம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை
.

இவ்வாறு டாக்டர் வெங்கடேசன் கூறினார்.


சிறு நீரகங்களிலும், கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகி விடுமாம். எனவே இதுபோன்ற ரசாயனம் கலந்த உணவுகளை சிறுவர்கள் கண்ணில் கூட காட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.

இந்த கோழி உருவாகும் முறை சற்று வித்தியாசமானது. இவை இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாறாக மின்சார இயந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்து இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றது. இவை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை நாம் இந்த வீடியோ மூலம் காணலாம்.
http://www.youtube.com/watch?v=99VeH0-R9Ro&feature=player_embedded


எனவே

பிராயிலர் கோழி சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள்..

அல்லது நிறுத்தி கொள்ளுங்கள்...

15 செப்டம்பர், 2012

நீங்கள் 18 வயது பூர்த்தியானவரா?

நீங்கள் 18 வயது பூர்த்தியானவரா? வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம்


சென்னை: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று சென்னை யில் நிருபர்களிடம் கூறியதாவது:2013ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் (சிறப்பு சுருக்க முறை திருத்தம்) தயாரிக்கப்பட உள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் 18 வயது நிரம்பிய அனைவரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். இவர்கள் தவிர, இதுவரை வாக் காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், பெயர் நீக்கம், திருத்தம் செய்ய விரும்புபவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அக்டோபர் 31ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகம், நகராட்சி அலுவலகம், வாக்குச்சாவடி மையங்கள், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் அலுவலக நாட்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். வாக்குச்சாவடி மையங்களில், பள்ளி தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பம் பெறலாம்.
வரும் அக்டோபர் மாதம் 7, 14, 21 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும். இதுதவிர அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் கிராமசபை, உள்ளாட்சி மன்றங்கள், குடியிருப்போர் நலச் சங்கம் மூலம் சிறப்பு கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தற்போது வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு சரி பார்க்கப்படும். இதன்முலம் அப்பகுதியில் இருந்து வீடு மாறி இருப்பதும், புதிதாக வந்திருப்பவர்களை சேர்க்க, நீக்க முடியும்.4,089 வங்கிகள், 7,343 தபால் நிலையங்களில் தங்கள் பகுதிக்கான பூத் அதிகாரி பெயர், தொலைபேசி எண்கள் போஸ்டர் மூலம் அடித்து ஒட்டப்படும். அதன்மூலம், அந்த அதிகாரிகளை பொதுமக்கள் தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம். கல்லூரிகளில் விண்ணப்பத்துடன், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்ப படிவமும் வழங்கப்பட்டுள்ளது.2013ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ம் தேதி புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும்.

100% புகைப்படத்துடன்
வாக்காளர் அட்டை
சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்புபடி 67.5 சதவீதம் பேர் தமிழகத்தில் வாக்களிக்கும் தகுதி உள்ளது. ஆனால் மக்கள்தொகை கணக்கெடுப்பைவிட 68.8 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. வீடு மாறிச் சென்ற சிலர் தங்கள் பெயரை பட்டியலில் இருந்து நீக்காததே இதற்கு காரணம். தமிழகத்தில் 100 சதவீதம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்களே உள்ளனர். வாக்காளர் அடையாள அட்டையை தவற விட்டவர்கள், ரூ. 25 கட்டணம் செலுத்தி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று பிரவீன்குமார் கூறினார்