24 ஜூன், 2012

நடுங்குகிறது ஈரக்குலை

அழைப்பு பணி
இறை மறுப்பாளர்
இறப்பெய்தினாலும்
இதயத்தில்
இரக்கம் பிறக்கிறது.
இதுவரை அவருக்கு
இஸ்லாமை
இயம்பாமல்
இருந்துவிட்டோமே
என்று.


காஃபிர் ஒருவர்
காலமானாலும்
கவலை வருகிறது
கலிமாவை அவருக்கு
கற்றுத் தராமல்
காலத்தை கடத்திவிட்டோமே
என்று.


நாளை மறுமையில்
நம்மை அவர்
நாயனிடம்
பிடித்துக் கொடுத்துவிட்டால்
நாமென்ன செய்வோம் என
நடுங்குகிறது ஈரக்குலை.சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! அல்லது கீழ்காணும் தளங்களில் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே!