19 ஜூன், 2012

ஒப்பிலான் மாணவர்கள் சாதனைநேற்று (16-06-2012) சனி காலையிலிருந்து இரவு வரை பரமக்குடியில் நடைபெற்ற முகவை மாவட்ட அளவிலான மக்தப் மதரஸாக்களுக்கான மார்க்க அறிவுப் போட்டிகளில் ஒப்பிலான் மன்பவுல் ஹஸனாத் மதரஸா மாபெரும் வெற்றி பெற்றது. மாஷா அல்லாஹ்.


மொத்தம் 42 மதரஸாக்களிலிருந்து 121 மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்தினர். பல்வேறு போட்டிகள். 

அதில் பட்டிமன்றப் போட்டியில் 3 பட்டிமன்றங்கள் பங்கேற்றன. ஒப்பிலான் மாணவர்கள் நடத்திய பட்டிமன்றம் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் முதல் தரத்தையும் பெற்று சிறப்பு பரிசை வென்றது. அல்ஹம்து லில்லாஹ்.
மண்ணின் பெருமை காத்த மாணவர்கள்
வீடியோவிற்கு அனுமதி வழங்கப்படாததால் அதைப் பதிவு செய்யமுடியவில்லை என்ற வருத்தம் ஒருபக்கம் இருந்தாலும் தலைமை நடுவர் மவ்லானா O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்களின் திருவாயால் கிடைத்த பாராட்டும் துஆவும் வாழ்வில் மறக்கமுடியாதவை.  ''இந்த பட்டிமன்றத்தில் உரையாற்றிய மாணவச் செல்வங்களின் உரையைக் கேட்டால் அவர்களின் பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்கள்'' என்று திரும்ப திரும்ப ஹழ்ரத் அவர்கள் கூறிய அந்த வாழ்த்து மரணப் படுக்கையிலும் நம்மால் மறக்க முடியாது. அல்ஹம்து லில்லாஹ். 


பாகவி ஹழ்ரத் அவர்களின் பாராட்டு
நமது முயற்சிக்கு இறைவன் வழங்கிய அங்கீகாரம் என்பதால் உடனே நம் மாணவர்கள் இரண்டு ரக்அத் தொழுது இறைவனுக்கு நன்றி செலுத்தினர். 


மாவட்ட அளவில் ஒரு அழுத்தமான முத்திரையை நம் மாணவர்கள் பதித்ததற்காக அவர்களுக்கு இந்த வலை தளம் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் அவர்கள் சாதனை படைக்க மனமுவந்து வாழ்த்துகிறது. 


சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே!