30 ஏப்ரல், 2012

பாபர் மசூதி

டிசம்பர் ஆறு 6
அது கூறும்
ஒரு இரத்த ஞாயிறின் வரலாறு.


பாபரியே...
நீ இல்லாத ஒருவனுக்காய் 
இடம் பெயர்க்கப்பட்டாய் 
இன்று இருப்போர் மனதில் எல்லாம் 
இடம் பிடித்துக் கொண்டாய்
சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! அல்லது கீழ்காணும் தளங்களில் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே!

29 ஏப்ரல், 2012

இக்கால இப்றாஹீம்கள்

உலமாக்களே!
மதரசா எனும் அரண்மனையில் பிறந்த 
மவ்லவிகள் எனும் மன்னர்கள் நீங்கள். 
குர்ஆன் கோட்டைக்குள் ஹதீஸ் குடையின் கீழ் 
கோலோச்சுகின்ற காரணத்தால் 
நாங்கள் உங்களுக்கு குடிமக்கள். 


ஓதுதல் என்னும் நண்ணீர் கொண்டு 
உங்களின் இதயங்கள் இருப்பதால்தான் 
உங்கள் தூக்கம் கூட தொழுகைக்கு சமம். 
நீங்கள் ருகூவுக்குப் போகும் முன் 
ரூஹே போனாலும் நாங்கள் முந்தக் கூடாது. 


சூரியன் உதிப்பதே நீங்கள் 
சுப்ஹுக்கு எழுவதைக் கண்டுதான். 


உலமாக்களே! 
மதரசா சூளையில் 
மலர்ந்த செங்கற்கள் நீங்கள். 
நீங்கள் அடிக்கல்லாக 
அடுக்கப் படவில்லையானால் 
இறையச்சக் கோட்டை 
எழுவது எப்படி? 


உலகம் முழுவதும் செல்ல 
உங்களுக்கு தடையில்லை. 
காரணம், 
நீங்கள் ஆன்மீகத்தில் 
ஆசாத் விசா பெற்றவர்கள். 


உங்களைக் 
கண்ணியப் படுத்தும் போதெல்லாம் 
நாங்கள் 
புண்ணியப் படுத்தப் படுகிறோம். 


தீனுக்கு எதிரென்றால் 
தீக்குண்டத்திற்கும் அஞ்சாத 
இக்கால இப்றாஹீம்கள் நீங்கள்.


உலமாக்களே!
நீங்கள் கூடினால் 
அது எங்களுக்கு தேன்கூடு. 
நீங்கள் பேசினால் 
அது எங்களுக்கு பேரீச்சம் பழம். 


பலர் வருமானத்தால் வளர்கிறார்கள் 
தேய்வதற்காக... 
நீங்களோ தேய்கிறீர்கள் 
சமுதாய வளர்ச்சிக்காக! 


உலமாக்களே!  நீங்கள் 
ஆடம்பர சாட்டைக்கு 
ஆடாத பம்பரம். 
ஆன்மீக காற்று சேர 
அகல விரியும் பாய்மரம்.


அல்லாஹ்வின் அருள்தனை சுமந்திருக்கும் 
அண்ணல் நபியின் வாரிசுகளே !
உங்கள் மறை வாழ்க்கை வெற்றி பெற
மனதாற வாழ்த்துகிறேன்.

28 ஏப்ரல், 2012

ஆண்கள் குறைகிறார்களா?அண்ணல் நபி (சல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்த அழிவு நாளின் அடையாளங்களில் ஒன்று:
  إن من أشراط الساعة أن يرفع العلم، ويكثر الجهل، ويكثر الزنى، ويكثر شرب الخمر، ويقل الرجال، ويكثر النساء، حتى يكون لخمسين امرأة القيم الواحد  
கடைசி காலத்தில் ஐம்பது பெண்களுக்கு ஒரு தரமான ஆண் என்ற விகிதத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்
 என்பது. 
இதை நையாண்டி செய்து பல இணைய தளங்களில் கேள்விக் கனைகளை தொடுத்திருந்தார்கள். 
1.இதுவரைக்கும் இந்த முன்னறிவிப்பு உண்மையாகவில்லையே.. அப்படியென்றால் எப்பொழுதான் வரும்?
2.அப்படி ஏற்படுவதாக இருந்தால் இரண்டாவது உலகப் போரின்போதே ஏற்பட்டிருக்கவேண்டுமே. ஏனெனில் அதில் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பலியாகினர். அதில் பெரும்பாலும் பலியானது ஆண்கள்தான். அப்பொழுது இந்த 50/1 என்ற விகிதாச்சாரம் ஏற்படவில்லையே? 
ஏதோ ஒரு சில நாடுகளில் மட்டும் ஒரு சின்ன மாற்றம் நிகழ்ந்தது. உதாரணமாக அல்மானியா. 6 மில்லியன் அல்மானியர்கள் கொல்லப்பட்டதால் அங்கே மட்டும் 1/3 என்ற விகிதாச்சாரத்தில் ஆண்களின் எண்ணிக்கை இருந்தது.
 3. அதுமட்டுமல்ல .தற்பொழுது சீனா போன்ற நாடுகளில் தீவிர கருத்தடை சட்டத்தால் ஒரே ஒரு ஆண் குழந்தையுடன் அவர்கள் கருத்தடை செய்து கொள்வதால் அங்கே ஆண்களின் விகிதாச்சாரமே அதிகமாகியிருக்கிறது. 
4.இனி மூன்றாவது உலகப் போர் வந்து பயங்கர அழிவு ஏற்பட்டாலும் அப்பொழுதுகூட ஆண் பெண் வித்தியாசமில்லாமல் அனைவரும்தான் அழிவார்கள். காரணம் அணுகுண்டுகளுக்கு ஆண் பெண் வித்தியாசம் பார்க்கத் தெரியாது. அப்படியிருக்க எப்படி இந்த முன்னறிவிப்பு சாத்தியாமாகும்?

இப்படி அடுக்கடுக்கான கேள்விகள்.. விமர்சனங்கள்.
அவற்றுக்கு நம் அறிஞர்களும் தக்க பதில் தந்துகொண்டுதான் இருந்தார்கள்.


Dr.ஜாகிர் நாயிக் அவர்களின் பதில்:
உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது.
 • அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் – பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது நாம் அறிந்த செய்தி.
 • அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும்.
 • ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும்.
 • ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும். 
 • உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் எத்தனை கோடி பெண்கள் ஆண்களைவிட அதிகம் என்பதை அறிந்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே. 
 • அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்களை விட 7.8 மில்லியன் பெண்கள் அதிகமாக‌ உள்ளனர்.
இதுபோல பலரும் பல பதில்களைத் தந்துள்ளனர். அவற்றுக்கு மறுப்புகளும் சில தளங்களில் வெளியாகியுள்ளன. ஜாகிர் நாயிக் தரும் கணக்கெடுப்பு சரியான தகவல் இல்லை என்று கூறுவோரும் உண்டு.
நமது பதில்:
நபியவர்களின் அந்த அறிவிப்பு 
1. ஆண்கள் குறைவதையும் குறிக்கும்
2. ஆண் தன்மை குறைவதையும் குறிக்கலாம்.
நபியவர்களின் வார்த்தையை நன்கு கவனிக்கவேண்டும்.
                                             حتى يكون لخمسين امرأة القيم الواحد 
50 பெண்களுக்கு 1 தரமான ஆண்மை நிறந்த ஆண் என்ற விகிதாச்சாரம் ஏற்படும்.
இதை உண்மைப் படுத்தும் விதத்தில் இப்பொழுது ஒரு அதிர்ச்சியான ஆய்வறிக்கை ஒன்று இணையங்களில் வெளியாகியுள்ளது. அது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பை அப்படியே உண்மைப் படுத்துவதாக உள்ளது. நையாண்டி செய்த அதிமேதாவிகளின் அகல வாயை அடக்கி ஒடுக்கவதாக அமைந்துள்ளது.
பல வெப்சைட்டுகளிலும் வெளியாகியுள்ள அந்த அதிர்ச்சியான தகவல் என்ன?
இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதையும் இது கட்டுப்படுத்தப்பட வில்லையானால் 50 ஆண்டுகளில் போதிய விந்தணுக்கள் உள்ள மனிதர்களே இருப்பதே கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


குறைபாட்டிற்கு காரணம்:
விந்தணு குறைபாட்டுக்கு காற்று மாசுபடுதல், ஜங்க் உணவுகள், சுற்றுப்புற மாசு, உடல் பருமன், ஸ்டரஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி புகைத்தல், குடித்தல், உடல் பருமனோடு நாம் உபயோகப்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலம் வெளியாகும் ஈஸ்ட்ரோஜனை ஒத்த வேதியியல் பொருட்கள் மூலமும் விந்தணுக்கள் குறைகின்றன என்கிறது.
இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் பார்கவா, சராசரியாக ஓராண்டுக்கு 2% ஆண்களுக்கு போதுமான விந்தணு குறைந்து கொண்டே வருகிறது என்றும் இப்படியே போனால் 50 ஆண்டுகளில் போதுமான விந்தணு கொண்ட ஆண்களை பார்ப்பதே அபூர்வம் என்கிறார். மேற்கத்திய நாடுகளில் விந்தணு வீழ்ச்சி 90களிலேயே உணரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ள பார்கவா ஹைதரபாத்தை சேர்ந்த தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆண் விகிதம் குறையும் என்பதை இன்னொரு கண்ணோட்டத்தில் பார்ப்போம்:


ஒரு பெண், கருத்தரிக்கும் போது அது ஆண் குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ ஆகுவதற்கு அவளுடைய கனவனின் உயிரணுவே காரணம்: மனைவி காரணமல்ல என்பது தற்கால அறிவியல் ஆராய்ச்சியின் முடிவு. 

பெண்ணின் சினை முட்டையில்X X உயிரணுக்கள் உள்ளன. ஆணின் இந்திரியத்தில் Y Xஅணுக்கள் உள்ளன.


X குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் X குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-X என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் முலம் பெண் குழந்தையாக உருவாகின்றது. (X-X என்ற குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் பெண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக் கொண்டது)


X குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் Y குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-Y என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் முலம் ஆண் குழந்தையாக உருவாகின்றது. (X-Y என்ற குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் ஆண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக் கொண்டது)


இதை இப்படியும் புந்துக் கொள்ளலாம்:

 •  பெண்ணின் சினை முட்டையுடன் - கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் X குரோமோசோம் உடைய உயிரணு சேர்ந்தால் பெண் குழந்தையாக உருவாகிறது.
 •  பெண்ணின் சினை முட்டையுடன் - கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் Y குரோமோசோம் உடைய உயிரணு சேர்ந்தால் ஆண் குழந்தையாக உருவாகிறது.

இந்த அறிவியல் கண்டுபிடிப்பை 1400 ஆண்டுகளுக்கு முன்பே அல்குர்ஆன் கூறிவிட்டது
"இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் - (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு" (அல் குர்ஆன் 53:45-46)

ஆக, ஆண்குழந்தையை முடிவு செய்யும் Y உயிரணுக்கள் ஆணிடமே உள்ளன.
 அந்த விந்தணுக்கள் இன்னும் சில வருடங்களில் கணிசமாக குறையும் என்று ஆய்வுகள் கூறுவதால் ஆண்குழந்தை பிறப்பும் கணிசமாக குறைவதற்கான வாய்ப்புள்ளது.


விந்தணுக்கள் பழைய படி மனிதனிடத்தில் வளமாய் இருக்க வேண்டுமெனில் மனிதன் இயற்கையான வாழ்வுக்கு திரும்ப வேண்டும்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதைப்போல மண்ணில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்குவதாக கூறியுள்ளார். மண் மலடானால், மனிதர்களும் மலடாவார்கள் என்று கூறி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 
என்ன பிரச்சாரம் செய்தாலும் உபதேசங்களை வெறுக்கும் மக்கள் அதிகமாகும் இந்த காலத்தில் இந்த பிரச்சாரங்கள் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரப் போவதில்லை. மது, சூதாட்டம் விபச்சாரம். லஞ்ச லாவண்யம் இவற்றை எதிர்த்தும் பிரச்சாரம் நடக்கத்தான் செய்கிறது. அதனால் இவை குறைந்தாவிட்டதா என்ன? எனவே முழுஆண்மையுள்ளவர்கள் குறைந்து பெண்கள் அதிகமாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அல்லாஹ்வே அறிந்தவன். 


சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! அல்லது கீழ்காணும் தளங்களில் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே!

முஸ்லிம் சமுதாயத்திற்கு வேண்டுகோள்

இட ஒதிக்கீட்டின் பலனை முஸ்லிம் சமுதாயம் முழுமையாகப் பெற சாதிவாரி கணக்கெடுப்பில் விழிப்புடன் செயல்படவேண்டும்

    
 தமிழகத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (சாதிவாரியாக) ஏப்ரல் 23 ல் தொடங்கி 40 நாட்கள் நடைபெறுகிறது. இம்மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சாதிய அடிப்படையில் நடைபெறுவதால் முஸ்லிம்கள் கல்வி - வேலை வாய்ப்பில் முழுமையாக இட ஒதுக்கீட்டைப் பெற இந்த கணக்கெடுப்பின்போது மதம் என்ற கேள்விக்கு "இஸ்லாம்" என்றும், சாதி என்ற கேள்விக்கு.......


 • லெப்பை (தமிழ் - உருது பேசக்கூடிய ராவுத்தர், மரைக்காயர்)
 • தக்னி (உருது பேசுவோர்)
 • தூதேகுலா (தெலுங்கு பேசுவோர்)
 • மாப்பிள்ளா (மலையாளம் பேசுவோர்)
 • (அன்சர்,சேக்,சைய்யத் உட்பட)

இவற்றில் ஏதேனும் ஒன்றை கட்டாயமாக பதிவு செய்யவும்.

 மத ரீதியாக இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைப் பெற இந்திய அரசியல் சாசனத்தில் வழிவகை செய்யப்பட வில்லை. எனவே மத்திய அரசு இம்மக்கள் தொகைக் கணக்கெடுப்பை சாதிய அடிப்படையில் நடத்த உத்தரவிட்டுள்ளது. இக்கணக்கெடுப்பின்பொழுது மேற்க்குறிப்பிட்ட சாதிகளில் ஒன்றை தெரிவு செய்வதின் மூலமே மத்திய அரசு வழங்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை முழுமையாகப் பெற முடியு.ம்.

(நன்றி- மணிச்சுடர் 25./04/2012)