25 மார்ச், 2012

மண்ணின் மைந்தனே..
மண்ணின் மைந்தனே மண்ணின் மைந்தனே மறவாதே!
நீ செய்த சரித்திர சாதனை தன்னை மறவாதே!
தியாகத்தின் பரம்பரையே! தூய வீரத்தின் விளை நிலமே!
நாம் சிந்திய ரத்தத்தில் தியாகத்தில் வந்தது இந்திய சுதந்திரமே..
தாய்நாட்டின் விடுதலையே.. நம் நாட்டின் விடுதலையே!
                                               (மண்ணின் மைந்தனே)
ஜாலியன்வாலா படுகொலை

ஜாலியன்வாலா படுகொலை சோகக் காட்சிகளே
அந்த மஸ்ஜிது கூனெனும் பள்ளியின் ரத்த சாட்சிகளே
பூட்டிய ரயிலில் திணறிய மூச்சுக் காற்றுகளே
அங்கு சிதைந்து விழுந்த கேரள முஸ்லிம் சடலங்களே
சிப்பாய் கலகத்தில் வீரம் சொறிந்த சிங்கங்களே
அங்கு சீரிய தோட்டா சுமந்து மடிந்த நெஞ்சங்களே
ஆங்கில தர்பார் நடுங்கிடச் செய்த வீரர்களே
என்றும் மறக்க முடியா நாட்டின் சொக்கத் தங்கங்களே!
)                            தியாகத்தின் பரம்பரையே(
திப்பு சுல்தான்
திப்பு சுல்தானின் வீரமரணத் துணிவுகளே
வங்கத்து வேங்கை சிராஜுத் தவ்லா எழுச்சிகளே
சிறையின் சிங்கம் பகதூர்ஷாவின் உணர்வுகளே
யூசுஃப்கானெனும் மருதநாயகத்து மறவர்களே
எண்ணிலடங்கா தியாகச் சுடர்களின் வெளிச்சங்களே
தன்னலம் மறந்து மண்ணகம் காத்த உண்மைகளே
தேசியக் கொடியின் பச்சை நிறத்து சின்னங்களே
''ஹுப்புல் வதனி மினல் ஈமான்'' எனும் உணர்வுகளே
                              ( தியாகத்தின் பரம்பரையே)

சுதந்திரப் போரில் முன்னிலை வகித்த சமுதாயம்
அதில் அரை நூற்றாண்டுகள் கல்வியை இழந்த சமுதாயம்
எண்ணூறு ஆண்டுகள் நாட்டை ஆண்ட சமுதாயம்
இன்று உரிமை இழந்து போராடுகின்ற சமுதாயம்
உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழந்த சமுதாயம்
என்றும் நாட்டுக்காகவே உழைத்து நிற்கும் சமுதாயம்
                             ( தியாகத்தின் பரம்பரையே