29 மார்ச், 2012

உண்மையான முஸ்லிம் யார்?
முஸ்லிம் என்பதற்கு நாம் என்ன அளவுகோலை வைத்திருக்கிறோம். தாடி தலைப்பாகை தொப்பி பைஜாமா ஜிப்பா ஒரு இஸ்லாமிய பெயர். பிரியாணி போன்ற உணவு வகைகளை ஒரு பிடி பிடித்தல் இவைதான் இஸ்லாமியன் என்பதற்கு அடையாளங்களாக கருதிக் கொண்டிருக்கிறோம்۔. ஆனால் இவை மட்டுமல்ல இவையும் தாண்டி இன்னும் ஐந்து அம்சங்களை குர் ஆன் பட்டியல் போடுகிறது
 إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ) الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون  أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم
1. அல்லாஹ்வின் நாமம் கூறப்பட்டால் உள்ளம் நடுங்கி இறையச்சம் உண்டாக வேண்டும்۔
2. அவனது அத்தாட்சிகளை சொல்லிக் காண்பிக்கப்பட்டால் ஈமான் அதிகரித்து பிரகாசம் உண்டாக வேண்டும்
3. முழுமையாக இறைவனின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும்
4. தொழுகையை நிலைநாட்டவேண்டும்۔
5 ۔தான தர்மம் செய்யவேண்டும்
  •  உள்ளம் நடுங்கி இறையச்சம் உண்டாக வேண்டும்۔


நபி அவர்களுக்கு பல நேரங்களில் இவ்வாறு ஏற்பட்டுள்ளது.
الآية فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا என்ற வசனத்தை ஓதி யதைக் கேட்ட நபி குழுங்கி அழுதார்கள்۔
 أن رسول الله صلى الله عليه وسلم أتاهم في بني ظفر فجلس على الصخرة التي في بني ظفر ومعه ابن مسعود ومعاذ وناس من أصحابه فأمر قارئا يقرأ حتى إذا أتى على هذه الآية فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا بكى رسول الله صلى الله عليه وسلم حتى اخضلت وجنتاه ؛ فقال : يا رب هذا على من أنا بين ظهرانيهم فكيف من لم أرهم . وروىالبخاري ، عن عبد الله قال . قال لي رسول الله صلى الله عليه وسلم : اقرأ علي قلت : أقرأ عليك وعليك أنزل ؟ قال : إني أحب أن أسمعه من غيري فقرأت عليه سورة " النساء " حتى بلغت فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا قال : أمسك فإذا عيناه تذرفان .
பொதுவாக சின்ன அதிர்ச்சியைக் கூட தாங்க முடியாத கோழையல்ல நபி. ஒரு சமயம் மதினாவில் நள்ளிரவில் திடீரென ஒரு சப்தம் கேட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். என்ன ஆயிற்று என்று எல்லோருக்கும் கவலை. எதிரிகள் யாரும் படையெடுத்து வந்துவிட்டனரோ என்று ஒரு பீதி. இந்த நேரம் இருட்டில் ஒரு உருவம் குதிரையில் வருவதை உணர்ந்து மக்கள் கூர்ந்து நோக்கினார்கள். வந்தவர்கள் நமது நபிதான். நானும் சப்தம் கேட்டுதான் போய் பார்த்துவிட்டு வருகிறேன். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. எல்லோரும் நிம்மதியாக போய்ப் படுங்கள்'' என்றார்கள். மக்கள் பீதிவயப்பட்ட நேரத்திலும் அஞ்சாத வீரர்.

உஹது களத்தில் உமைய்யத் இப்னு கலஃப் என்பவன் நபியைக் கொல்ல வேகத்துடன் குதிரையில் வந்தபோது நபி அருகில் நின்றிருந்த ஒரு தோழரின் ஈட்டியை வாங்கி ஒரு குத்துமதிப்பாக விட்டார்கள் அவனைக் கொல்லவேண்டும் என்பது நபியின் பிரதானமான நோக்கமல்ல. குறிபார்த்து மெனக்கெட்டு வீசவில்லை. பாய்ந்து வருகிற அவனைத் தடுக்கவேண்டும் அவ்வளவுதான். மிகச் சாதாரணமாக வீசப்பட்ட அந்த ஈட்டி அவனது காது ஓரமாக உரசி ஒரு சின்ன காயத்தை உண்டாக்கிவிட்டுச் சென்றது. அவ்வளவுதான். சடாரென கீழே விழுந்து துடித்தான்; அலறினான் நண்பர்கள் கூட அவனை நையாண்டி செய்தனர்: ஒரு சின்ன காயத்திற்காகவா இப்படி அலறுகிறாய்?
அவன் சொன்னான்: ''டே.. அடித்தது யார் தெரியுமா/? முஹம்மதின் அடி இது. சாதாரண அடி அல்ல; அவர் என்மீது எச்சில் துப்பினாலும் நான் அழிவது உறுதி''
இந்த அளவுக்கு வீரரான நபியவர்கள் குர் ஆனின் வசனங்களை ஓத ஆரம்பித்து விட்டால் குழந்தையைப் போல குலுங்கி குலுங்கி அழுவார்கள். மறுமையின் நிகழ்வுகளை  ஓதினால் மயங்கி விழுந்துவிடுவார்கள்.

உமர் (ரலி) அவர்களைப் பற்றிக் கூறப்படுகிறது: வேற்று அரசர்களின் வாளுக்கு அஞ்சாதவர்கள் கூட உமரின் கைத்தடிக்கு அஞ்சுவார்கள்'' ''இவர் நடந்து வரும் தெருவில் இப்லீஸ் தலைவைத்துக்கூட படுக்கமாட்டான்'' என்று நபி சொல்வார்கள். அந்த உமர் (ரலி) குர் ஆனைக் கையில் ஏந்திவிட்டால் குழந்தையைப் போல குலுங்கி குலுங்கி அழுவார்கள். ''ஹாதா கலாமு ரப்பீ'' ''ஹாதா கலாமு ரப்பீ'' (இது என் இறைவனின் வார்த்தையல்லவா?) என்று கூறி குர் ஆனை நெஞ்சில் அணைத்து முத்தமிடுவார்கள்.

அல்லாமா இக்பால் அவர்கள் தினமும் குர் ஆன் ஓதுவது வழக்கம். ஒரு நாள் தந்தை மகனே குர் ஆன் ஓதும்போது அது உன்னிடம் உரையாடுவதாக எண்ணி ஓது. கவனத்துடன் மன ஓர்மையுடன் ஓது.''
 அதற்கு பிறகு மகன் இக்பால் அவ்வாறே ஓத ஆரம்பித்தார். என்ன வியப்பு! அவர் ஓத தொடங்கிவிட்டால் உள்ளம் உருகி கண்ணீர் பெருகி ஓடுமாம். நாமெல்லாம் குர் ஆன் ஓதி முடித்தால் எடுத்து அலமாரியில் வைப்போம். ஆனால் அவர் அதை எடுத்து சிறிது நேரம் வெயிலில் வைப்பார். காரணம், அவரின் கண்ணீரில் தாளெல்லாம் நனைந்து போயிருக்கும்.

ஒரு தோழருக்கு குர்ஆனின் ஒரு வசனத்தால் இறையச்சம் அதிகமாகி உயிரே போய்விட்டது. அவர்தான் மிஸ்வர் இப்னு மஹ்ரமா (ரலி).
''பக்தியாளர்களை ரஹ்மானின் பக்கம் அழைக்கப்படும் பாவிகளை தரதரவென நரகிற்கு இழுக்கப்படும்''
இந்த வசனத்தை உணர்ந்த மறுவினாடி அலறினார்: அய்யோ நான் இறையச்சமுள்ளவனா? பாவியா? நான் மறுமையில் அழைக்கப் படுவேனா அல்லது இழுக்கப்படுவேனா தெரியவில்லையே என்று கதறி மூர்ச்சையாகி விழுந்தார்; உயிரும் பிரிந்தது.

தாவூது (அலை) ஒரு சின்ன சருகல்/ தவறுக்காக 40 நாட்கள் தொடர்ந்து அழுதார்கள். அவர்களின் கண்ணீரில் புற்கள் முளைத்துவிட்டன. ஒரு சமயம் அவர்கள் 40000 மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் நரகத்தைப் பற்றி உருக்கமாக பயான் செய்தார்கள்; அவர்கள் சொன்ன விதத்தில் 30000 பேர்  அங்கேயே இறந்தனர் (۔ احياء)

நபி (சல்) ஒருமுறை ஜிப்ரீலிடம் கேட்டார்கள்: என்ன ஜிப்ரீலே! மற்ற மலக்குகளைவிட வித்தியாசமாக மீக்காயீலை நான் பார்க்கிறேனே. அவர் சிரித்து நான் பார்க்கவில்லையே? என்ன காரணம்?
ஜிப்ரீல்(அலை)கூறினார்கள்: என்றைக்கு நரகம் படைக்கப்பட்டு அதை அவர் பார்த்தாரோ அன்றிலிருந்து அவர் சிரிப்பைத் தொலைத்தார்.''

பொதுவாக சஹாபாக்கள் நல்லடியார்கள் அனைவரிடமும் இந்த அம்சம் இருந்தது என்பதைக் கீழே காணலாம்

ومن أخلاقهم رضي الله تعالى عنهم كثرة خوفهم من الله تعالى إذا ذكروا أهوال يوم القيامة وكثرة الغشيان و الصعق إذا سمعوا القرآن و الذكر وقد قرأ رسول الله صلى الله عليه وسلم يوما قوله تعالى( إن لدينا أنكالاً وجحيماً وطعاماً ذا غصة وعذابا أليماً )وكان وراءَه حُمران بن أَعيَن فخرّ ميتا رضي الله عنه .
وقد دخل يزيد الرقاشي على عمر بن عبد العزيز رحمهما الله تعالى يوما.فقال له عضني يا يزيد فقال له  يا أمير المؤمنين إنك أول خليفة يموت فبكى عمر وقال له زدني فقال له ليس بينك وبين  أبيك آدم أبٌ حيّ فبكى عمر وقال له زدني فقال له ليس بين الجّنة و النّارمنزلة أخرى فسقط عمر مغشياً عليه وكان الحسن بن صالح رحمهالله تعالى يؤذن مرة فقال أشهد أن لا إله إلا الله فغُشي عليه فحملوه من المنارة ونزلوا به وصَعد أخوه فأذن وصلى بالناس و الحسن في غشيته وكان أبو سليمان الداراني رحمه الله تعالى يقول ''ما رايت أحداً أكثرُ خشوعاً من الحسن 
قام ليلةً ُ إلى الصباح بسورة( عمَّ يتساءلون (يرددها و يغشى عليه إلى الفجر 
ولم يتم السورة وكان كلما غشي عليه يجدد الطهارة وقد مرَّ داود الطائي يوماً علىامرإة تبكي على قبر لها وتقول ليت شعري بأي, خَدًّيكَ بدأ الدود !!فخرّ داود مغشياً عليه 
وقد كانت شعوانة العابدة رحمة الله عليها تقول في مناجاتها ''الهي أنت أكرم الكرماء وسيد السادات ورجاء المسلمين فأسألك أن تغفر اليوم لكل من تعرض لمعصيتك بعد معرفته بعقوبتك ثم تصرخ ويغشى عليها وتقول هاه وقد قرأ أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه يوماً( إذا الشمس كورت حتى بلغ قوله تعالى وإذا الصحف نشرتفخر مغشياً عليه وصار يضطرب على الأرض حين من الزمن
قال وسمع الربيع بن خيثم رحمه الله تعالى قارئاً يقرأ  )إِذَا رَأَتْهُم مِّن مَّكَانٍ بَعِيدٍ سَمِعُوا لَهَا تَغَيُّظاً وَزَفِيراًفخر مغشياً عليه ثم حمل إلى بيته ففاته الظهر والعصروالمغرب والعشاء وكان هوالإمام في حارته وفي رواية كان القارئ عبد الله بن مسعود
وقد كان أبو سليمان الداراني رحمه الله تعالى يقول صلى سفيان الثوري رحمه الله تعالى ركعتين خلف المقامثم نظر إلى السماء فانقلب مغشياً عليه قال الداراني وما فعل به ذلك مجرد نظره إلى السماء وإنما ذلك من التفكر في أهوال القيامة
وكان وهب بن منبه رحمة الله عليه يقول كان إبراهيم الخليل عليه الصلاة والسلام إذا ذكر خطيئته يغشى عليه ويسمع أنين قلبه من مسيرة ميل فيقال له تفعل ذلك وأنت خليل الرحمن ؟ فيقول إذا ذكرت خطيئتي نسيت خلتي
وصلى الفضيل بن عياض رحمه الله تعالى الفجر يوماً وقرأ
(يسفلما بلغ قوله تعالى (إِن كَانَتْ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَفسقط ابنه علّي رحمه الله تعالى فلم يفق حتى طلعت الشمس وقد كان علي إذا أراد أن يقرأ سورة لم يقدر أن يتمها وكان لا يقدر أن يسمع سورة
(إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَاولا سورة القارعة أبداً ولما مات ضحك أبوه الفضيل فقيل له في ذلك وكان كثير الحزن فقال إن الله أحب موته فأحببت ذلك لحب الله وكان علّي يقول لأبيه ادع الله لي أن يقدرني على سماع سورة كاملة أو على ختم القرآن ولو مرة قبل موتي 
كان أحدهم يقرأ القرآن في الليل فإذا أصبح عرف الناس ذلك في وجهه من شدة التغير والإصفرار والذبول فصار الناس اليوم يقرأ أحدهم القرآن كله في الليل فإذا أصبح لا يظهر على وجهه منه شيْ
وكان ميمون بن مهران رحمه الله تعالى يقول سمع سليمان الفارسي رضي الله عنه قارئاً يقرأ قوله تعالى(وإن جهنم لموعدهم أجمعين (فصاح ووضع يده على رأسه وخرج هائماً  لايدري أين يتوجه مدة ثلاثة أيام
 முஃமின்களின் இரண்டாவது அம்சம் அடுத்த வாரம் வரும் இன்ஷா அல்லாஹ். 

சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இட்டுச் செல்லலாமே!