25 மார்ச், 2012

அல்லாஹ்வின் தூதே அருள் தீபமே..அல்லாஹ்வின் தூதே அருள் தீபமே 
எங்கள் யா நபி எங்கள் யா ஹபீப்
எல்லோரும் போற்றும் இறைத்தூதரே
 எங்கள் யா நபி எங்கள் யா ஹபீப்
                                                       (அல்லாஹ்வின் தூதே)


அந்நாளிலே மாந்தர் திசை மாறினார்
எந்நாளுமே தீய வழி தன்னிலே
பாவங்களில் மூழ்கி தடுமாறினார்
ஏனென்று கேட்க எவர் நாடினார்
அருளாக வந்தீரே அண்ணல் நபி
கண்கள் தேடுதே எங்கள் யா நபி -2
                                                  (அல்லாஹ்வின் தூதே)

தாயிஃப் நகரத்து வீதியிலே
தர்க்கர்கள் உம் மேனியைத் தாக்கினார்
செங்குருதி உங்கள் செம்மேனியில்
வழிந்திட நீர் மயங்கி விழுந்தீர்களே
நினைத்தாலே நெஞ்சம் அழுகின்றதே
எங்கள் யா நபி எங்கள் யா ஹபீப் -2
                                                        (அல்லாஹ்வின் தூதே)

ஷுஃபே அபீதாலிபில் வாடினீர்
சருகுகளைக் கொண்டு பசியாறினீர்
பாலின்றி பதறிய குழந்தைகளின்
வேதனை கண்டு நீர் கண்ணீர் சொறிந்தீர்
கண்கள் கலங்குது கருணை நபி 
எங்கள் யா நபி எங்கள் யா ஹபீப் -2
                                                     (அல்லாஹ்வின் தூதே)

சுடுபாலை மணல் மீது நான் ஓடவா
சுந்தரப் பூங்காவை நான் தேடவா
புதர் நிறைந்த மலை மீது நான் பார்க்கவா
பாய்கின்ற கண்ணீரை அணை போடவா
நினைத்தாலே நெஞ்சம் அழுகின்றதே
எங்கள் யா நபி எங்கள் யா ஹபீப் -2
                                                    (அல்லாஹ்வின் தூதே)