22 பிப்ரவரி, 2014

கண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே

 قدم محمد عليه الصلاة والسلامகண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே
 திங்கள் இரசூலே உங்கள் அன்பை மனம் நாடுதே
கண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே

மக்க நகர் மண்ணாய்ப் பிறந்தேனா நானும் 
மஹ்மூதர் பாதம் தொடர்ந்தேனா நானும்-2
 என்றுலகில் காண்பேன் எங்கள் நபி நாதர்
 இனிதான தோற்றம் கண்டாலே ஏற்றம்-2

                                                                 (கண்கள் இரண்டும்)

மதினாவிலே ஓர் மரமாகினேனா
 மாநபிக்குத் தென்றல் காற்றும் தந்தேனா-2
அவர் கையில் ஏந்தும் வாளாகினேனா
 அன்னல் நபி அன்புக்கு ஆளாகினேனா-2

                                                                (கண்கள் இரண்டும்)

கஃபாவிலே ஓர் கல்லாகினேனா
 காப்பவனின் வீட்டில் உள்ளாகினேனா-2
 கடும்பசி தாங்கி கருணை நபி வயிற்றில் 
கட்டிய கல்லில் இடமாகினேனா-2

                                                          (கண்கள் இரண்டும்)

ஒட்டகமாய் உலகில் பிறந்தேனா நானும்
 உத்தம நபியை சுமந்தேனா நானும்
 பேரித்தங்கனியாய் கனிந்தேனா நானும்
பெருமானின் உமிழ் நீரில் கலந்தேனும் நானும்

                                                     (கண்கள் இரண்டும்)