07 பிப்ரவரி, 2012

அன்பாய் பழகினால் அனகோண்டாவும் அடிமைதான்


ன்பினால் பலவற்றை வசிப்படுத்த முடிமென பல ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளான் மனிதன்.
 மலை, மண், நிலம் நீர், காற்று, விலங்கு ........... இவ்வாறு பல்வேறு என பட்டியல் நீண்டு கொண்டு செல்லும். ”பாம்பென்றால் படையும் நடுங்கும்” என்ற ஒரு பழமொழி தமிழில் உள்ளது. இன்று கூட பாம்புக்கு பயந்து அதன் பாதிப்புகளிலிருந்து விலக அதற்கு பாலூற்றி வணங்குகிறார்கள். ''நாகராஜா..எங்களை ஒன்னும் செஞ்சிறாதே.. நாகராஜா.. எங்களைக் காப்பாத்து..' என பாம்புக்கு முன்னால் மண்டி போட்டு கும்பிடும் மடையர்களைப் பார்க்கிறோம்.
 பொதுவாக மனிதனிடம் உள்ள இந்த பயத்தைப் போக்குவதற்காகவே இறைவன் இறைத்தூதர் மூஸா (அலை) மோசஸ் அவர்களுக்கு கையில் உள்ள தடியை கீழே போடுமாறு கூறி அவ்வாறு அவர்கள் கீழே போடவே அது பாம்பாய் மாறி சீறிக்கொண்டு வரவே அதைப் பார்த்து நபி பயந்து நடுங்க இறைவன் ''மூஸா! அதைப் பிடியுங்கள்.. தைரியமாக பிடியுங்கள்'' என்று சொல்ல, மூசா அதைப் பிடிக்க அது மீண்டும் தடியாக மாறியது. பாம்பே ஆனாலும் மனிதனுக்கு கீழ்தான் என்பதை இறைவன் அன்று உணர்த்தினான். அதனால்தான் நபி (ஸல்) அவர்கள்கூட ஒருமுறை இவ்வாறு கூறினார்கள்:'' 


பாம்பு பழிவாங்கும் என்பதற்கு பயந்து யார் அதை அடிக்காமல் விடுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல'' 


 பாம்பை முறையாக பழக்கினால் அது நமக்கு அடிமைதான். இங்கு நான் உங்களுக்கு காணொளியாக தரப் போவது மிகப் பயங்கரமான பாம்புடன் -அனோகொண்டாவுடன்- அன்பாக பழகும் ஒருவரின் காட்சியை பார்த்து ரசியுங்கள்: