22 பிப்ரவரி, 2012

மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)
ரபீவுல் ஆகிர் வந்தவுடன் நம் நினைவில் முதலில் வருவது இறைனேசர்களின் தலைவர் சய்யிதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள்தான்.
அவர்களின் வாழ்க்கை வரலாறு அதிகம் நினைவு கூறப்படும் இம்மாதத்தில் சில குறிப்புகளைத் தருவது பொருத்தம். எத்தனையோ இறைநேசர்களை உருவாக்கி, மனிதர்களை புனிதர்களாக ஆகிய மாபெரும் மகான். அவர்களின் சிறப்பான சொற்பொழிவால் பல லட்சக்கணக்கான மக்களை புனித இஸ்லாத்திற்குள் கொண்டு வந்த வள்ளல். இப்படிபட்ட உத்தமரின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவது மிக முக்கியமானது. 

ஜனனம்

எமது ஆத்மீக கடல், ஞானதீபம், மெய்நிலை கண்ட ஞானி, மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள், ஹிஜ்ரி 470 ரமலான் மாதம் திங்கட்கிழமை இரவு ஸஹர் நேரத்தில் ஈராக் நாட்டின் ஜீலான் என்னும் நகரை ஒட்டிய நீப் என்னும் கிராமத்தில் பிறந்தார்கள். 

ஜனனத்தின் மகத்துவம்


மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள்
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் 11 வது தலைமுறையில் பிறந்த பேரப்பிள்ளையாவார்கள். இவர்களின் தந்தையாரின் பெயர் ஸைய்யது அபூ ஸாலிஹ் இப்னு மூஸா ( رضي الله عنه) தாயாரின் பெயர் உம்முல் கைர் என்னும் அமத்துல் ஜப்பார் என்பதாகும். இவர்களின் தந்தையார் ஒரு ஸூஃபி மகானாகவும், தாயார் சிறந்த தக்வாவுடைவர்களாகவும் விளங்கினார்கள். மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தந்தைவழியில் ஹஸனியாகவும் தாய்வழியில் ஹுஸைனியாகவும் விளங்குகிறார்கள். 

இவர்களின் பரம்பரை ஒரு பரிசுத்தமான குடும்பம்.
தந்தை ஒரு நாள் கடும் பசியுடன் காட்டில் நடந்து செல்லும் போது ஆப்பிள் ஒன்று ஆற்றில் மிதந்து வர அதை எடுத்து சாப்பிட்டு பசி தீர்த்துக் கொள்கிறார்கள். யாருடைய ஆப்பிள் தெரியவில்லையே' என்ற உறுத்தல் வரவே அந்த ஆறு ஒடிவரும் திசையை நோக்கி பலமைல் தூரம் நடந்து சென்று ஒரு வீட்டை அடைந்து அங்குள்ள மரத்தின் உரிமையாளரிடம் ஹலால் தேடுகிறார்கள். அவர், என் மகளைத் திருமணம் செய்தால் ஹலால் செய்கிறேன்' ஆனால் அவள் குருடி;ஊமை; நொண்டி; இரண்டு கையும் சூகை; என்கிறார். பரவாயில்லை. என் உடலில் ஹராமான ஒரு உணவு கூட இருக்கக்கூடாது. அதை ஹலாலாக்கிவிடுங்கள். அதற்காக என்ன பரிகாரத்தையும் நான் ஏற்கத் தயார். திருமணம் முடிந்து மணமகளைப் பார்த்து பரவசம் அடைந்தனர். ஏனெனில் அழகென்றால் அழகு அவ்வளவு அழகு. ஒரு குறை இல்லை. பிறகு ஏன் உன் தந்தை இப்படி சொன்னார்? என்றதற்கு அந்த மாது விளக்கம் சொன்னார்: என் தந்தை சொன்னது உன்மைதான். என் கண்கள் தீமைகளைப் பார்க்காத குருடுதான். என் கைகள் தீயவற்றைச் செய்யாத ஊனம்தான். என் கால்கள் பாவத்தின் பக்கம் நடக்காத நொண்டிதான்.......''
இந்த தம்பதியருக்கு பிறந்தவர்கள்தான் தவசீலர் கௌதுனா அவர்கள். கடும் பசி நேரத்திலும் ஹராம் உண்டுவிடக்கூடாது என்ற பரிசுத்தமான தந்தை. எந்த நேரத்திலும் தீமைகளை நினைத்துக்கூட பார்க்காத தாய். இவர்களின் உதிரத்தில் உதித்தவரும் உத்தமராகத்தானே இருப்பார்கள்? 

அவர்கள் இவ்வையகத்தில் பிறந்த இரவு நிகழ்ந்த அற்புதங்களை அவர்களது அருமைத்தாயார் பின்வருமாறு விபரிக்கின்றார்கள். 


1) ஸஹாபாக்கள், வலிமார்கள், இமாம்கள், சகிதம் குத்பு நாயகத்தின் தந்தையின் கனவில் தோன்றிய பெருமானார் (ஸல்) அவர்கள், உங்களுக்குப் பிறக்கப்போகின்ற குழந்தை எனது காதலரும், அல்லாஹ்வின் அன்பாளரும் ஆவார்கள் என சுப சோபனம் கூறினார்கள். 


2) “வலிமார்கள்” அனைவரும் உங்கள் மகனுக்கு கீழ்ப்படிந்து நடப்பார்கள். எனவும், அவரது கால் பாதங்களை தங்களது புயங்களின் மேல் சுமந்தோராகவும், இருப்பர் என பெருமானாரைத் தொடர்ந்து ஸஹாபாக்கள் வாழ்த்துக் கூறினர். 


3) அன்று இரவு பிறந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகள் குத்பு நாயகத்தின் பொருட்டால் விலாயத்தைப் பெற்றன. 


4) மாண்புமிகு நோன்பு தலைப்பிறையன்று குத்பு நாயகம் பிறந்த காரணத்தால் அன்றைய தினம் பால் அருந்த மறுத்து விட்டார்கள். 


5) குத்பு நாயகத்தின் தோள் புயத்தின் மீது பெருமானார் (ஸல்) அவர்களின் புனித பாதங்களைச் சுமந்த அடையாளம் காணப்பட்டது. கல்வி

மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் குழந்தை பருவத்திலேயே கல்வியில் சிறப்புற்று விளங்கினார்கள். ஏனைய மாணவர்கள் மனனஞ் செய்ய ஒரு வாரம் பிடிக்கும் ஒரு பாடத்தை இவர்கள் ஒரே நாளில் மனனஞ் செய்து விடுவார்கள். தனது உயர்தர கல்வியை பக்தாதுக்கு சென்று அங்கு பிரபலமாக இருந்த மாபெரும் அறிஞர்களிடம் கற்றார்கள்.
அவர்கள் கல்வி கற்க சென்ற வழியில் ஒரு கொள்ளைக் கூட்டம் திருடமுயன்றதும், அவர்களிடம் உண்மை உரைத்ததால் திருடர்கள் மனம் மாறி மார்க்கத்தை ஏற்றதும் பிரபல்யமானது. தப்ஸீரிலும், ஹதீஸிலும், ஃபிக்ஹு பாடங்களிலும் சிறந்து விளங்கினார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் பிரபலமாக இருந்த மார்க்க அறிஞர்களிடம் சென்று கல்வி கற்றார்கள். இவர்களின் ஆசிரியர்களாக விளங்கியவர்கள் அபூ ஸையீதினில் முபாரக் பின் அலி முகர்ரமி, அபுல் உபா அல பின் ஹகீம், அபூ காலிப் அஹ்மது, அபுல் காஸிம் அலி, அபூ ஸகரிய்யா யஹ்யா தப்ரேஸி رضي الله عنه போன்றவர்கள். இவர்களிடம் எல்லா விதமான மார்க்க கல்வியை கற்று, தம் ஆத்ம சக்தியாலும், சிந்தனையாலும் குர்ஆனின் விளக்கங்களை புரிந்துக் கொண்டார்கள். ஏழு ஆண்டு காலம் விடா முயற்சியுடன் கல்வி பயின்று பக்தாத் சர்வ கலாசாலையின் உயர்தர பரீட்சையில் ஹிஜ்ரி 496 துல்ஹஜ் மாதம் தேர்ச்சி பெற்றார்கள். 

ஷைக்கின் சகவாசம்

எல்லா விதமான கல்வியையும் கற்ற பின் தனக்கு ஒரு ஆத்மீக வழிக்காட்டி தேவை என்பதையும் அதுவே தன்னை அல்லாஹ்விடம் நெருங்கச்செய்யும் வழி என்றும் உணர்ந்தார்கள். எனவே தனக்கு ஆத்மீக வழிக்காட்ட ஒரு ஞானகுருவை தந்தருளுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். அப்பொழுது இறைவன் அவர்களுக்கு ஷைகு ஹம்மாத் என்னும் மார்க்க பெரியாரை தேர்ந்தெடுத்து கொடுத்தான். அந்த ஷைக் அவர்கள் கௌஸுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்களுக்கு பலவகையான ஆத்மீக ஞானங்களை கற்றுக்கொடுத்தார்கள். பல கடுமையான சோதனைகளை செய்தார்கள். எனினும் கௌஸுல் அஃலம் அவர்கள் சகிப்புதன்மையுடனும் திட நம்பிக்கையில் மலையாகவும் விளங்கினார்கள். பின் மூன்று ஆண்டுகளில் ‘தஸவ்வுஃப்’ என்னும் ஆத்மா ஞானத்தில் தேர்ச்சி பெற்றார்கள். அப்போது ஷைகு ஹம்மாத் அவர்கள், ” இந்த அஜமி அப்துல் காதிர் வரும் காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார். தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார். இவர் காலத்திலுள்ள எல்லா வலிமார்களும் இவருக்கு தலைப்பணிவார்கள்” என்று கூறினார்கள். 

துறவு நிலை


மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தனது ஆத்மீக கல்வியை நிறைவு செய்த பின் இபாதத்துகளிலும், தியானத்திலும் ஈடுபடுவதற்காக பக்தாதை விட்டு வெளியேறி ஈராக் காடுகளை நோக்கி சென்றார்கள். கர்க் என்னும் காட்டில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து கடும் தவம செய்தார்கள். அது எப்படிப்பட்ட தவம் என்றால் வருடத்தில் ஒரு தடவை அவர்களுக்கு ஒரு மனிதர் கம்பளி உடுப்பு ஒன்றை கொடுப்பார். அதை அணிந்துக்கொண்டே நாட்களை போக்குவார்கள். அவர்கள் செருப்பு அணியாமலேயே கல்லும், முள்ளும் நிறைந்த காடுகளில் நடந்து போவார்கள். ஒரு வருஷம் முழுவதும் அவர்கள் வெறும் காய்கறிகளை உண்டு தண்ணீர் குடிக்காமல் தவம் செய்தார்கள். மறு ஆண்டில் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு வேறு எதுவும் சாப்பிடாமல் தவம் செய்தார்கள். மூன்றாம் ஆண்டில் தண்ணீரும் அருந்தாமல், எதுவும் சாப்பிடாமல், தூங்காமல் தவத்தில் ஈடுபட்டார்கள். மேலும் அவர்கள் இஷாவுக்காக செய்யும் வுளுவுடன் சுபஹ் தொழுகையையும் தொழுதார்கள். அதாவது இஷா தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒற்றைக் காலில் நின்றுக்கொண்டு அருகிலுள்ள ஒரு தூணில் தம் ஒரு கையை தூக்கி வைத்து கட்டிக் கொள்வார்கள். தமக்கு தூக்கம் வராமல் இருக்க இப்படி செய்து விட்டு திருக்குர்ஆன் முழுவதையும் ஓத ஆரம்பிப்பார்கள். அப்பொழுது பொழுதும் புலர்ந்து விடும். உடனே சுபஹ் தொழுகையையும் தொழுவார்கள். ஸுப்ஹானல்லாஹ்! எப்படிப்பட்ட கடும் தவம்! அதனாலேயே அவர்களுக்கு மாபெரும் தவசீலர், மெய் நிலை கண்ட ஞானி என்று பல பட்டங்கள் ஏற்பட்டன. கடமையான தொழுகைகளை முறைப்படி முடித்துக் கொண்டு அவர்கள் நபில் தொழுகையின் மூலமும், குர்ஆனைப் பற்றி சிந்தனையில் இருப்பார்கள். இவ்விதமான கடும் தவத்தில் அவர்கள் இருந்த போது பல நபிமார்களுக்கும், மகான்களுக்கும் வழிக்காட்டிய ஸைய்யதுனா கிழ்று (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அவர்கள் தனது அபாரமான கடும் தவத்தாலும், முயற்சியாலும் சிறப்பான ஆத்மீக படித்தரங்களை அடைந்தார்கள். 

காதிரியா தரீக்காவின் உருவாக்கம்

ஹிஜ்ரி 521 ஷவ்வால் 11ம் இரவன்று கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்களின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தோன்றி, “அப்துல் காதிரே! வழிதவறி செல்லும் மக்களை ஏன் நேர்வழிக்கு அழைக்காமல் இருக்கிறீர்கள்” எனக் கேட்டார்கள். அதைக் கேட்டு திடுக்கிட்ட கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள், “யா ரசூலல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நான் அரபி இல்லையே! அஜமிதானே. எனவேதான் அரபிகளின் நகரத்தில் அரபு மொழியில் பேச தயங்குகிறேன்” என்று கூறினார்கள். இந்த பதிலைக்கேட்ட அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சிரித்த முகத்துடன் கௌஸு நாயகத்தின் வாயை திறக்கச்சொல்லி 7 தடவை தங்களின் முபாரக்கான எச்சிலை துப்பினார்கள். அதற்கு பிறகு கௌஸு அஃலத்தின் திருவாயிலிருந்து ஞானப்போதனைகளும், மார்க்க பயான்களும் வெளிவரத்தொடங்கியது. அவர்களின் பயானைக்கேட்க பல ஊர்களிலிருந்து முஸ்லிம்கள் கூட்டம், கூட்டமாக பக்தாத்துக்கு வரத்தொடங்கினார்கள். கௌஸு நாயகம் رضي الله عنه இஸ்லாத்திற்கு செய்த சேவையால் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் நேர்வழிப்பெற்றார்கள். பல்லாயிரக்கணக்கான யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களின் முரீதாகி அவ்லியாக்கள் ஆனார்கள். அவர்களின் ஒரு பயானுக்கு 70 ஆயிரம் பேர்கள் கூடி பயான் கேட்டார்கள். பயானை கேட்டதும் மட்டுமல்ல அதை தங்கள் வாழ்க்கையில் எடுத்தும் நடந்தார்கள். மக்கள் தன் உள்ளங்களை பரிசுத்தப்படுத்தி நல்லவர்களாக வாழவே கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள் காதிரியா தரீக்காவை உருவாக்கினார்கள். திக்ருகளையும், நபில் தொழுகைகளையும் போதித்தார்கள். ஒவ்வொரு ஹாஜத்துகளையும் அடைய தன் முரீதுகளுக்கு திக்ரு முறைகளை சொல்லி கொடுத்தார்கள்.

முஹ்யித்தீன் என்ற சிறப்பு பெயர் கிடைத்தமை

ஸைய்யதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் ஒரு முறை ஒரு தெரு வழியாக வரும்போது, வழியில் பலஹீனமான வயோதிகர் ஒருவர் அமர்ந்திருந்தார். கௌஸுல் அஃலம் அவர்களை கண்ட அவர், அவர்களுக்கு ஸலாம் சொன்னார், அதற்கு அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பிறகு அவர், தம்மை தூக்கி நிறுத்தும்படி கேட்டுகொண்டார். கௌஸுல் அஃலம் அவர்கள் அவரை தூக்கி நிறுத்தினார்கள். உடனே அவர் தம் முதுமை நீங்கி வாலிபராக மாறினார். இதைக்கண்டு திடுக்கிட்ட கௌஸுல் அஃலம் அவர்களிடம் அவர் சொன்னார்: ” நான்தான் தீன் என்னும் சன்மார்க்கமாகும், நீங்கள் இந்த தீனை ஹயாத்தாக்கிய முஹ்யித்தீன் ஆவீர்கள்.” என்று கூறி மறைந்தார். இவ்வாறு கூறி மறைந்தவர் ஒரு மலக்கு ஆவார். 

அல்லாஹ்வின் கட்டளையை வெளிப்படுத்தல் 

கௌஸுல் அஃலம் அவர்களின் 89ம் வயதில் ஒரு மகத்துவமிக்க சம்பவம் நடந்தது. அல்லாஹ்வின் உத்தரவு ஒன்று அவர்களுக்கு வந்து அதை அவர்கள் மக்களுக்கு கூறினார்கள் : ” எனது பாதம் எல்லா வலிமார்களின் தோளின் மேல் இருக்கிறது” என்று கூறியபோது உலகம் முழுவதிலும் இருந்த வலிமார்கள் அனைவர்களும் தமது ஆத்ம காதுகளால் கேட்டார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் கௌஸு அஃலம் அவர்களின் பாதத்தை தங்கள் தோள் மீது ஏற்பதாக கூறினார்கள். 


குடும்ப வாழ்க்கை

மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தமது வாலிப வயதில் ஆத்மீக கல்வி கற்பதிலும், தவத்திலும் ஈடுபட்டு விட்டதால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் ஹிஜ்ரி 521ல் நபிகள் நாயகம் (ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கௌஸுல் அஃலம் அவர்களின் கனவில் தோன்றி திருமணம் செய்து கொள்ளுமாறும், அதுவே உங்களுடைய ஆத்ம ஞானம் சம்பூரணமடைய அவசியமும் ஆகும் என்றார்கள். அதையொட்டி அவர்கள் திருமணம் செய்தார்கள். தமது 51ம் வயதில் நான்கு மனைவிமார்களை மணந்து 27 ஆண் குழந்தைகளையும், 22 பெண் குழந்தைகளையும் மொத்தம் 49 குழந்தைகளை பெற்றார்கள். இவர்களின் ஆண் மக்கள் சிறந்த கல்விமான்களாகவும், வலிமார்களாகவும் ஆனார்கள். அதில் சிலர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இஸ்லாமிய தஃவா பணியை சிறப்பாக செய்தார்கள். 

மறைவு

40 ஆண்டுகள் சன்மார்க்க பிரசாரம் புரிந்த மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தங்கள் பூத உடலைவிட்டு மறையும் நேரம் வந்தது. அதை லௌஹுல் மஹ்பூல் என்னும் ஏட்டில் அவர்களால் பார்க்க முடிந்தது.
கௌஸுல் அஃலம் அவர்கள் தனது இறுதி நேரத்தை அடைந்தபொழுது மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களை பார்க்க வந்துக்கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தார்கள். பிறகு கௌஸுல் அஃலம் அவர்கள் குளித்துவிட்டு இஷா தொழுகையை தொழுதார்கள். நீண்டநேரம் ஸுஜூதில் இருந்து தன் குடும்பத்தார்களுக்கும், சொந்தக்காரர்களுக்கும் தன் முரீதுகளுக்கும், முஸ்லிம்களுக்கும் துஆ கேட்டார்கள். ஸுஜூதிலிருந்து அவர்கள் தலையை உயர்தியதும் ” சாந்தியடைந்த ஆத்மாவே! உன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வருவாயாக. என் சுவர்க்கத்தில் புகுந்து கொள்வாயாக” என்ற திருக்குர்ஆன் வசனம் அசரீரியாக கேட்டது. கடைசி நேரம் வந்துவிட்டதை உணர்ந்த கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்கள் தன் வாயால் திருக்கலிமாவை கூறி மூன்று தடவை அல்லாஹ் என்று அழைத்தார்கள். அதோடு தன் 91வது வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11அன்று இந்த உலகை விட்டு மறைந்தார்கள். அல்லாஹ்வின்பால் அண்மித்துவிட்ட அவர்களுக்கு மரணமேது!!! 

மேலும் சில இணைப்புகள்  கீழே தரப்படுகின்றன. அவற்றில் போதுமான தகவல்கள் உண்டு. இம்மாதம் அடியேனுக்கு சில வேலைப் பளு இருப்பதால் மேற்கொண்டு சில முக்கிய குறிப்புகளை தட்டச்சு செய்ய நேரம் இல்லை. ஆகவே கீழ்கண்ட இந்த இணைப்புகளில் சென்று பயன் பெற்றுக் கொள்ளவும்.


 பொதுவாக ஆன்மீகத்தைப் பற்றிப் பேசுவோருக்கு இந்த தளத்தில்  நிறைய குறிப்புகள் உண்டு :


நேபாளத்தில் பள்ளிவாசல் அதிசயம்


முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம். (வீடியோ இணைப்பு)


இந்த வீடியோ 2010-ல் பதிவேற்றப்பட்டிருக்கிறது.


நேபாளத்தில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம். பள்ளிவாசல் கோபுரத்தை(மினரா) தூக்கிவைப்பதற்கு கிரேனை கேட்டபோது மறுக்கப்பட்டதுடன் உங்கள் அல்லாஹ்வால் முடிந்தால் அதை தூக்கி வைக்கச் சொல்லுங்கள் என்று சிலர் கூறினர்.சொல்லி அடுத்த நொடியே கோபுரம் தானாக சென்று அமர்ந்து கொள்ளும் காட்சி..!


இதைக்கண்ட மக்கள் தக்பீர் முழக்கத்துடன் ஆரவாரம் செய்வதையும் காணலாம். 2010ல் youTube ல் பதிவேற்றம் கண்ட இந்த வீடியோவை இதுவரை பல லட்சம் மக்கள் கண்டு பரவசம் அடைந்துள்ளனர்.


14 பிப்ரவரி, 2012

பிறந்தவர்களில் சிறந்தவர்மனித முயற்சியில் ஆகாதது ஒன்றுமில்லை என்பார்கள். டாக்டராக இஞ்சீனியராக ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆகலாம். ஏன் சந்திரனில்கூட கால்தடம் பதிக்கலாம். ஆனால் மனித முயற்சியால் முடியாத ஒன்று உள்ளதென்றால் அது நபியாகுவது. ஏனெனில் நபிமார்களை அல்லாஹ் தேர்ந்தெடுக்கிறான். 124000 நபிமார்களைத் தேர்ந்தெடுத்து அதில் சிறந்த உயர்ந்த நபியாக உத்தமத் திருநபியை உலகிற்குத் தந்திருக்கிறான்.

எல்லா நபிமார்களையும் பிறந்ததற்கு பிறகு புகழ்ந்துப் போற்றுகின்ற அல்லாஹ் முத்தான முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை மட்டும் பிறப்பதற்கு முன்பே போற்றியிருக்கிறான்.

11 பிப்ரவரி, 2012

புகைப் பழக்கம்;அபாயம் பீடி சிகரெட் புகைச்சா 

 • நாய் கடிக்காது
 • வீட்டுக்கு திருடன் வரமாட்டான்;
 • முதுமை வராது;
 •  பொம்பளப் புள்ள பொறக்காது.

ஏன்? ஏன்? ஏன்?
 இந்த வீடியோவைப் பார்க்கவும்ஒருத்தர் சிகரெட்டும் கையுமா வந்தார்.

''சார்.. இந்த புகைப்பழக்கத்தை நிறுத்திடலாம்னுதான் நினைக்கிறேன்.. முடியல..''ன்னார்.

''புகைப் பழக்கத்தை நிறுத்துறது ரொம்ப சுலபம் சார்'' ன்னார் இன்னொருத்தர்.


''எப்படி சொல்றீங்க ?''


''நான்கூட ஏற்கனவே' பத்து தடவை அந்த பழக்கத்தை நிறுத்தி யிருக்கிறேனே...''

இதிலிருந்து என்ன தெரிகிறது ?
புகை பழக்கத்தை திடீர்னு விட்டுவிட முடியாது. உண்மைதான் . ஆனால் படிப்படியாக நிறுத்த முடியும்.    எப்படி ?
பத்து யோசனைகள்


உடற்பயிற்சி செய்யணும். மூச்சுவாங்குற மாதிரியான பயிற்சிகள் நல்லது.  பிராணயாமம் என்ற மூச்சுப் பயிற்சி மிக நல்லது .

தினமும் இரண்டு தடவை குளிக்கனும். எப்படி தெரியுமா ? முதலில் வெதுவெதுப்பான தண்ணீர் அப்புறம் குளிர்ந்த நீர் இப்படி மாற்றி மாற்றி குளிக்கனும்.
 • ரொம்ப நேரம் பசியோடு இருக்கக் கூடாது.
 • சாப்பாடு மிதமாக இருக்கணும்  ; சீராக இருக்கணும்.பச்சைக் காய்கறிகள் பழங்கள் உணவில் சேர்த்துக்கலாம். 
 • காபி தேனீர் மதுபானம் போதைப் பொருட்கள் இதெல்லாம் வேண்டாம். இவை புகை பிடிப்பதை ஊக்கப்படுத்தும். கடுகு மிளகு காரமான பொருட்களைத் தவிர்க்கவும். உப்பு அளவைக் குறைக்கவும். தினமும் மூன்றுலிட்டர் தண்ணீராவது குடிக்கவும். வெறும் நீர் புகை பிடிக்கிற ஆவலைத் தணிக்கும்.
 •  கையிலே புகையிலை சிகரெட் ஏதாவது இருந்தால் உடனே தூக்கி எறிந்துவிடுங்கள். அது கையில் இருக்கிற வரைக்கும் புகை பிடிக்கும் ஆசை வந்துகொண்டே இருக்கும்.
 • இறை நம்பிக்கை உள்ளவர்கள் புகை பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிடலாம்.
 • உங்களுக்கு நெருக்கமானவர்களிடத்திலெல்லாம் நீங்கள் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டதாக சொல்லி விடுங்கள்.
இந்த 10 வழிகளையும் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டால் புகை நமக்கு பகையாயிடும் என்று அனுபசாலிகள் கூறுகிறார்கள்.

 முயற்சி செய்து பாருங்களேன். இந்த பயிற்சியில் முயற்சி செய்யுங்கள் ; அயற்சி ஆகிவிடாதீர்கள்.
 


சுன்னத் வல் ஜமாஅத் இணையங்கள்
அப்ரோஸ்:செல்வமே!

நடுவர் அவர்களே ஒரு அழகான பாட்டோட ஆரம்பிக்கட்டுமா?


பணம் கொடுத்தாரே பக்கீர் முஹம்மது உண்மையா இல்லையா? 
நாங்கள் தேசத்துரோகிகளா? மற்றவரெல்லாம் தியாகிகளா? 
பதில் சொல்லிடு பட்டிமன்றமே பணத்தால் விடுதலை கிடைத்ததா இல்லையா? நாட்டின் விடுதலைக்கு நாங்கள் கொடுத்ததில் பணமும் இருந்தது உண்மையா இல்லையா?
அருமையானவர்களே! அன்று சுதேசிக் கப்பல் வாங்குவதற்கு வ.உ.சி. அவர்கள் பணமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தபோது ஹாஜி பக்கீர் முஹம்மது அள்ளிக் கொடுத்தாரே அன்றைய மதிப்பிற்கே இரண்டு லட்சம் ரூபாய் என்றால் இன்ரு அதன் மதிப்பென்ன? கொஞ்சமும் தயங்காமல் குறைவின்றிக் கொடுத்து கப்பலை வாங்கி நாட்டுக்கு அர்பணித்து இந்த நாட்டின் மானம் கப்பல் ஏறிவிடாமல் காப்பாற்றியவர்  ஹாஜி பக்கீர் முஹம்மது. அவரின் பரம்பரையிலே வந்த பாசமலர்கள் நாங்கள். அதனால்தான் செல்வத்தின் பெருமையை அள்ளிவிட வந்துள்ளோம். அள்ளிவிடலாமா?


நடுவர் அவர்களே! நம்ம பீமா வந்தாக.. நாக்கு தெறிக்க சொன்னாக.என்ன சொன்னாக? பணம் பாடாப் படுத்துது.. பணம் பாடாப் படுத்துது.. 
ஏம்மா பாடாப் படுத்துது? ஆடத்தெரியாதவளுக்கு தெருக்கோணலாம்.. அந்த கதையாவுல இருக்கு! முறையாப் பயன்படுத்துணா பணம் எப்படி  பாடாப் படுத்தும்? செல்வத்தை சேமித்து சீராக செலவழித்து முறையாக பயன்படுத்தியவர்களெல்லாம் வெற்றி காணவில்லையா? எத்தனை பேரைக் காட்டவேண்டும்?


அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா! ஒரு செல்வச் சீமாட்டி. அவர்களின் திரண்ட செல்வமெல்லாம் இந்த மார்க்கத்தின் வளர்ச்சிக்கு பயன்படவில்லையா? அறவழியிலே அவர்கள் அள்ளிக் கொடுத்ததால்தான் அல்லாஹ்வே அவர்களுக்கு சலாம் சொல்லி அனுப்பினான். யாருக்கு கிடக்கும் இந்த பாக்கியம்? அல்லாஹ்வின் பாதயிலே அள்ளிக் கொடுத்தால் அல்லாஹ்வின் சலாமும் கிடைக்கும்; அகில மக்களின் அன்பும் கிடைக்கும்.


கொடைவள்ளல் ஜமால் முஹம்மது! திருச்சியிலே இவரது பெயரில் ஒரு கல்லூரியே உண்டு.வரலாற்றிலும் இவருக்கு உயர்ந்த இடம் உண்டு. காரணம் என்ன தெரியுமா? பல ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை கல்லூரி கட்ட கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ஏழை மாணவர்களுக்கு ஏராளமாய் உதவினார். இன்று கல்வி கல்வி என்று கத்துகிறீர்களே..அந்த கல்விக்கு அந்த பகுதியிலே உயிர் கொடுத்தவரே அவர்தான். அவரது பணம்தான் பலபேரைப் பட்டதாரியாக்கியது. இன்று ஒப்பிலான் மக்கள் எவ்வாறு கல்விக்காக கல்வி கற்கும் மாணவர்களுக்காக பல லட்சம் செலவழித்து இந்த போட்டிகளை நடத்தி நம்மை ஊக்கப்படுத்துகிறார்களோ அதுபோல கொடைவள்ளல் ஜமால் முஹம்மது மாணவர்களின் அறிவுத் திறனுக்காக ஆயிரக் கணக்கில் அள்ளி வழங்கியவர்.அதனாலே அவருக்கு மக்களின் உள்ளத்தில் உயர்ந்த மதிப்பும் கிடைத்தது இன்ஷாஅல்லாஹ் மறுமையிலும் அவருக்கு உயர்ந்த சுவனத்திலே ஓர் இடம் இருக்கலாம். இதற்கெல்லாம் என்ன காரணம்? அறவழியிலே அவர் அள்ளிக் கொடுத்ததுதான். அவர் இவர்களைப் போல் பணமில்லாமல் பக்கீர்ஸாவாக இருந்திருந்தால் இதையெல்லாம் செய்திருக்கமுடியுமா? வரலாற்றிலே இடம்பிடித்திருக்கமுடியுமா?


அறிஞர் பெர்னாட்ஷாவிடம் கேட்கப்பட்டது: பணத்தைப் பற்றி உங்கள் கருத்தென்ன? அவர் அழகாகச் சொன்னார்: பலர் பணத்தை தவறாக நினைக்கிறார்கள்.அதனால்தான் ஏழையாக இருக்கிறார்கள்.


செல்வம் என்பது வெறும் பொருளல்ல; அது அல்லாஹ்வின் அருளாகவும் இருக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்:


''ஜும்ஆதொழுகை முடிந்துவிட்டால் பூமியிலே பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்''. இந்த வசனத்தில் பொருள் தேடுவதைக்கூட அருள்தேடுவதாக அல்லாஹ் கூறுகிறான் அப்படியானால் செல்வத்திற்கு அல்லாஹ்வே அங்கீகாரம் கொடுத்துவிட்டபிறகு இவர்கள் என்ன அதை மறுத்துப் பேசுவது? நடுவர் அவர்களே! நீங்கள் இறைவன் கட்சியா அல்லது இவர்கள் கட்சியா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.


எனக்கு முன் பேசிய தோழி சொன்னார்: படித்தால்தான் முன்னுக்கு வரமுடியும் என்று. யார் சொன்னது? படிக்காத மேதைகள் எத்தனை பேரைக் காட்டவேண்டும்? 


குறுகிய காலத்திலே கோடீஸ்வரராகி வரலாற்றில் இடம்பிடித்தவர் கோடிச்செல்வர் ஆண்ட்ரூ கார்னீஜி. அவரிடம் பலபேர் கேட்டார்கள்: தங்களுடைய வெற்றியின் இரகசியம் என்ன? அதற்கு அவர் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? வெற்றியின் உண்மையான இரகசியம் சீராக செலவழித்து சேமிப்பதுதான். சேமிப்பு என்பது ஒரு மனிதனுக்கு இக்கட்டான நேரத்திலும் உதவுகிறா உற்ற நண்பன் என்றார். அவர் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை.


எதிரணியைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன்: பணம் இல்லையென்றால் உங்கள் பெற்றோர் உங்களை இந்தளவு ஆளாக்கியிருக்கமுடியுமா? பணம் செலவழிக்காமல்  இந்தளவு நீங்கள் படித்திருக்கமுடியுமா? அல்லது இந்த பட்டிமன்றத்தில் பேசியிருக்க முடியுமா? ஆக உங்கள் கல்விக்கே காரணமாக இருப்பது இந்த செல்வம்தான். அதைக் குறைத்துப் பேசலாமா? ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கலாமா?

பீமா: கல்வியே
பணம் இருப்பவனிடம் குணம் இருப்பதில்லை ;
குணம் இருப்பவனிடம் பணம் இருப்பதில்லை.


சிலருக்கு செல்வம் வந்துதால் வணக்கத்திற்கு தடை அல்லது
குறை ஏற்பட்டு விடுகிறது.


''இறைவிசுவாசிகளே! உங்கள் செல்வமும் பிள்ளைகளும்
இறைவனின் நினைவை விட்டும் உங்களை திசைதிருப்பிவிட வேண்டாம்''


*தஃலபா (ரலி): பள்ளியிலே கிடந்து ‘பள்ளிப் புறா’ என்று பெயர் எடுத்தவர்.
வறுமை அவரை வாட்டியது . வளமான வாழ்க்கை கிடைக்க துஆ செய்யும்படி வள்ளல் நபியிடம் வேண்டினார்.
வறுமை நீங்கியது ஆடுமாடுகள் பெருகின செல்வம் பெருகியது.
என்ன செய்திருக்க வேண்டும் அந்த தோழர்?
வணக்கம் அதிகமாயிருக்க வேண்டுமா இல்லையா?
5 வக்துக்கு மட்டும் வந்தார்.
இன்னும் செல்வம் சேர்ந்தது.வாரத்தில் ஒருநாள் மட்டும்
வந்துபோனார். இன்னும் செல்வம் சேர்ந்தது.. பள்ளியின் பக்கமே
ஆளைக் கானோம்.
எந்த நேரமும் செல்வத்தை சேர்த்துக்கொண்டு
பணங்காசுகளை எண்ணிக்கொண்டு அதேவேலையாக அலைந்தார்.
ஏழைகளுக்கான ஜக்காத்தைக்கூட தர மறுத்தார்.۔......


அமெரிக்காவின் அயல்நாட்டு அமைச்சராக இருந்தவர் ஜார்ஜ் மார்ஷல்.
அவர் இந்த உன்னதமான பதவியை அடைந்ததற்கு என்ன காரணம்?
அவர் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கியதில்லை.
கிடைக்கம் நேரமெல்லாம் புத்தகங்கள் படித்து அறிவைப் பெருக்கிக் கொண்டார். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் புத்தகங்கள் படிக்காமல் ஒருநாள் கூட தூங்கியதில்லை.
அவருடைய படுக்கைக்கு அருகில் இரண்டு மேஜைகள் நிறைய புத்தகங்கள்
நிரம்பி கிடக்கும். தூங்கும்வரை படிப்பார். தூங்கி எழுந்ததும் அவருடைய கை புத்தகத்தின் மீதுதான் பாயும்.


(இன்னும் பல…..)

அழுக்கில் கிடந்து புரளாதே
அழுக்கில் கிடந்து புரளாதே

அச்சம் கொண்டு மிரளாதே

நகத்தைப் பல்லால் கொறிக்காதே

நாளும் சோம்பல் முறிக்காதே

துரும்பை எடுத்து கடிக்காதே

சும்மா செடியை ஒடிக்காதே 


கண்ட இடத்தில் துப்பாதே

கருத்தாய் இருக்க தப்பாதேபிறரை என்றும் திட்டாதே

பெரியோர் முன்னால் கத்தாதே

பாதையை அசுத்தம் செய்யாதே

படித்தவற்றை மறக்காதே

10 பிப்ரவரி, 2012

தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ


தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ
உன்னுடைய தகுதியை இன்னும் கொஞ்சம் உயர்த்திக்கோ
கல்வியை கண்ணாக்கி காட்டிய இஸ்லாத்தில்
கண்மணி நீ அல்லவா! காரணம் நான் சொல்லவா!.........

பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,

09 பிப்ரவரி, 2012

لَيْسَ مِنَّا


கண்ணியமிக்க ஆலிம் பெருமக்களே!
சில முக்கிய குற்றங்களை செய்தவனை ''லைச மின்னா'' லிஸ்டில் நபியவர்கள் சேர்த்துள்ளார்கள். அத்தகைய ஹதீஸ்களையெல்லாம் இயன்ற அளவு ஒன்று சேர்த்துள்ளேன். இன்னும் ஏதாவது விடுபட்டிருந்தால் கருத்துரைப் பகுதியில் சுட்டிக் காட்டுங்கள். சேர்த்துக்கொள்கிறேன். ஜசாக்கல்லாஹ். 

لَيْسَ مِنا مَنْ لَطَمَ الْخُدُودَ وَشَقَّ الْجُيُوبَ وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ 

 لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَتَغَنَّ بِالْقُرْآنِ 

 لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيُوَقِّرْ كَبِيرَنَا

 لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِغَيْرِنَا، لَا تَشَبَّهُوا بِالْيَهُودِ، وَلَا بِالنَّصَارَى، فَإِنَّ تَسْلِيمَ الْيَهُودِ الْإِشَارَةُ بِالْأَصَابِعِ، وَتَسْلِيمَ النَّصَارَى الْإِشَارَةُ بِالْأَكُفِّ "

 لَيْسَ مِنَّا مَنْ خَبَّبَ امْرَأَةً عَلَى زَوْجِهَا أَوْ عَبْدًا عَلَى سَيِّدِهِ 

 لَيْسَ مِنَّا مَنْ حَلَقَ، وَمَنْ سَلَقَ، وَمَنْ خَرَقَ 

 لَيْسَ مِنَّا مَنْ غَشَّ

 لَيْسَ مِنَّا مَنْ دَعَا إِلَى عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ قَاتَلَ عَلَى عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ مَاتَ عَلَى عَصَبِيَّةٍ 

 لَيْسَ مِنَّا مَنْ وَطِئَ حُبْلَى 

 لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ الْكَبِيرَ، وَيَرْحَمْ الصَّغِيرَ، وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ، وَيَنْهَى عَنِ الْمُنْكَرِ

 لَيْسَ مِنَّا مَنِ انْتَهَبَ، أَوْ سَلَبَ، أَوْ أَشَارَ بِالسَّلَبِ

 لَيْسَ مِنَّا مَنْ حَلَفَ بِالأَمَانَةِ، وَلَيْسَ مِنَّا مَنْ خَبَّبَ زَوْجَةَ امْرِئٍ، وَلا مَمْلُوكِهِ
لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَأْخُذْ مِنْ شَارِبِهِ "

لَيْسَ مِنَّا مَنْ تَطَيَّرَ، أَوْ تُطِيَّرَ لَهُ أَوْ تَكَهَّنَ، أَوْ تُكِهِّنَ لَهُ أَوْ سَحَرَ، أَوْ سُحِرَ لَهُ وَمَنْ عَقَدَ عُقْدَةً أَوْ قَالَ: مَنْ عَقَدَ عُقْدَةً، وَمَنْ أَتَى كَاهِنًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ "

ليْسَ مِنَّا مَنْ خَبَّبَ عَبْدًا عَلَى سَيِّدِهِ، وَلَيْسَ مِنَّا مَنْ أَفْسَدَ امْرَأَةً عَلَى زَوْجِهَا، وَلَيْسَ مِنَّا مَنْ أَجْلَبَ عَلَى الْخَيْلِ يَوْمَ الرِّهَانِ "

 لَيْسَ مِنَّا مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاحَ

 لَيْسَ مِنَّا مَنْ أَجْلَبَ عَلَى الْخَيْلِ يَوْمَ الرِّهَانِ، وَلَيْسَ مِنَّا مَنْ خَبَّبَ عَبْدًا عَلَى سَيِّدِهِ، وَلَيْسَ مِنَّا مَنْ أَفْسَدَ امْرَأَةً عَلَى زَوْجِهَا "

لَيْسَ مِنَّا مَنْ غَشَّ فِي الْبَيْعِ وَالشِّرَاءِ 

 لَيْسَ مِنا مَنْ وَسَّعَ اللَّهُ عَلَيْهِ ثُمَّ قَتَّرَ عَلَى عِيَالِهِ، وَهُمْ يَرَوْنَ رِيحَ الْقَتَارِ مِنَ الْجِيرَانِ، وَيَرَوْنَهُمْ يُكْسَوْنَ وَلا يُكْسَوْنَ 

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: شَكا رَجُلٌ إِلَى النَّبِيِّ الْعُزوبةَ، فَقَالَ: أَلا أَخْتَصِي؟ فَقَالَ: " لا، لَيْسَ مِنَّا مَنْ خَصَى أَوِ اخْتَصَى، وَلَكِنْ صُمْ وَوَفِّرْ شَعَرَ جَسَدِكَ "

 لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِالنِّسَاءِ مِنَ الرِّجَالِ، وَلا مَنْ تَشَبَّهَ بِالرِّجَالِ مِنَ النِّسَاءِ

 لَيْسَ مِنَّا مَنْ دَعَا إِلَى عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ قَاتَلَ عَلَى عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ مَاتَ عَلَى عَصَبِيَّةٍ


வெந்நீரின் பயன்கள்..தமிழில் ''வெந்நீர்'' எனப்படுவது ஆங்கிலத்தில் ''ஹாட் வாட்டர்'' என்றும், ஹிந்தியில் ''கரம் பானி'' என்றும் ஜப்பானிய மொழியில் ''ஹை-யை-யோ'' என்றும் அழைக்கப்படுகிறது. எந்த மொழிக்காரர்களாக இருந்தாலும் அனைவருக்கும் வெந்நீர் சுடும் என்பதே இதன் தனிச்சிறப்பாகும்.யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ''அவளுக்கு நல்லா வெந்நீர் போட வரும்...'' என்று நம்மில் பலர் நக்கல் அடிப்பதுண்டு.

உண்மையில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல்தான் அப்படி கிண்டல் செய்திருக்கிறோம். இதோ பாருங்கள்... வெந்நீரால் எத்தனை பலன்கள் என்று!

 • நெஞ்சு எரிச்சல் போகணுமா?
 • சதை குறையணுமா?
 • உடம்பு வலிக்கிறதா?
 • கால் பாதங்கள் வலிக்கிறதா?
 • மூக்கு அடைப்பா?
 • வெயிலில் அலைந்து தாகம் எடுக்கும் போது
 • ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு
 • திடீரென்று கடுமையான தலை வலியா?
 •  எல்லாவற்றிர்க்கும் வெந்நீரில் நிவாரணம் உண்டு.

நெஞ்சு எரிச்சல் போகணுமா?

ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை.... மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!


சதை குறையணுமா?


வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ''அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்'' என்று புலம்புவது கேட்கிறது!)


உடம்பு வலிக்கிறதா?


உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.


கால் பாதங்கள் வலிக்கிறதா?


எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.


மூக்கு அடைப்பா?


மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி! வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

வெயிலில் அலைந்து தாகம் எடுக்கும் போது


வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்.


திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்.


ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு


அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.


தரையை துடைக்கும் போது


அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!


திடீரென்று கடுமையான தலை வலியா?


தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.


சுறுசுறுப்புக்கு `சுக்கு வெந்நீர்'


தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.சென்னை போன்ற பெருநகரங்களிலும், மைக்ரோ ஃபேமிலி (micro family) எனப்படும் 3 அல்லது 4 பேரைக் கொண்ட தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது கானல் நீர் எனலாம்.


விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.


சுக்கு வெந்நீரானது கிராமங்களில் சிறு ஹோட்டல் போன்ற கடைகளில் கிடைக்கும். அல்லது வீட்டிலும் நாமே தயாரித்து பருகலாம்.


சிறிதளவு சுக்கினை சிறுசிறு துண்டுகளாக்கியோ அல்லது பொடித்தோ தண்ணீரில் கொதிக்க வைத்து, வெல்லம், பனங்கற்கண்டு அல்லது கருப்பு கட்டி (பனைவெல்லம்) ஆகிய ஏதாவதொன்றை தேவையான அளவுக்கு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.


சுக்கு உடன் சேர்த்து சாரணவேர், மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் சேர்த்து கஷாயம் தயாரித்தும் அருந்தி வந்தால் சளி, இருமல் போன்றவே நம்மை அண்டாமல் போயே போய் விடும். தொகுப்பு: அபூ ஸஃபிய்யாஹ்

வெந்நீரின் மஹாத்மியம் லிஸ்ட் போட்டு மாளாது... என்னது?! வெந்நீருக்கு இனி உங்கள் வீட்டில் தனியாக ஒரு பெரிய பாத்திரமே போடப் போகிறீர்களா...? குட் குட்!  

08 பிப்ரவரி, 2012

நல்ல தூக்கம் வேண்டுமா?

                                         -டாக்டர் ஆ. தாமரைச் செல்வன்


மனிதனுக்கு மிகவும் இன்றியமைதாது மூன்று.
1. உண்ண உணவு 2. உடுத்த உடை. 3. நல்ல தூக்கம்

நல்ல தூக்கம் மகிழ்ச்சியும் இருந்தால் மனிதன் மிகவும் இளமையாக இருப்பான். முதுரை அவனை நெருங்காது என்று மிகப் பெரும் தத்துவ ஞானி பிளாட்டோ கூறுகிறார்.. அது நூற்றுக்கு நூறு உண்மை. இது அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் வாகனம் கூட சில நேரங்களில் நிறுத்தப்பட்டு ஓய்வளிக்கப் படுகிறது. அவை உலோகத்தால் ஆனவைதானே என்று நினைத்து ஓய்வு தராவிட்டால் என்ஜின் பழுதாகிவிடும். அது போலவே நாள் பூராவும் மனதாலும் உடலாலும், மனிதன் உழைக்கிறான். அவனக்கு ஓய்வு என்கிற தூக்கம் கட்டாயம் தேவைப்படுகிறது. தூக்கத்தை குறைத்தாலும் அதிகப்படுத்தினாலும் உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுகிறது. இது அனைவரும் உணர்ந்த செய்தி.

மெத்தைய வாங்கினேன்

தூக்கத்தை வாங்கலை

என்ற பாடல் நம் காதுகளில் அடிக்கடி ஒலிக்கிறது. இதற்கு அர்த்தம்தான் என்ன? தூக்கமின்மைக்கு என்ன காரணம். தூக்கத்தின் அளவு மனிதனுக்கு அவரவர் வயதிற்கேற்ப மாறுபடுகிறது. பிறந்த குழந்தைக்கு 16 மணியிலிருந்து 20 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது.

வயது வந்தவர்களுக்கு 7 மணி முதல் 9 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது. வயதானவர்களுக்கு 5 மணி முதல் 6 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது. தூக்கமின்மைக்கான காரணங்களை மூன்று விதமாக பிரிக்கலாம்.


 • தவறான பழக்க வழக்கங்கள், சுகாதாரம் மற்றும் சூழ்நிலை.
 • மனநிலை காரணமாக
 • உடல் நோயின் காரணமாக

உணவில்லாமல் கூட மனிதன் ஓரிரு நாள் இருந்து விடலாம். ஆனால் ஒரு நாள் தூக்கம் கெட்டாலும் அதன் பாதிப்பு ஒரு வாரம் மனதையும் உடலையும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மருத்துவ அறிவியல் கூற்று.

 தூக்கமின்மை, தவறான பழக்க வழக்கங்கள், சுகாதாரம் மற்றும் சூழ்நிலை.


1۔தேநீர், காபி மதுபானங்கள், போதை பொருட்கள், புகை பிடிபோர் மற்றும் புகையிலையை வாயில் மென்று கொண்டிருப்போர் அவர்களுக்கெல்லாம் தூக்கம் என்பது குறைபாடாகவே இருக்கும். பாதிப்பை ஏற்படுத்தும் பல நோய்களை உண்டாக்கும். குறிப்பாக நரம்பு தளர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்துகிறது. ஆகவே மேற்கண்டவற்றை தவிர்க்கவும்.

2. நல்ல காற்றோட்டமில்லாத படுக்கையறை அதிக வெளிச்சம் உள்ள படுக்கை அறை, அதிக சத்தம் உள்ள படுக்கை அறைகளில் உள்ளவர்களுக்கு தூக்கமின்மை ஏற்பும். உதாரணமாக டேப்ரிக்கார்டர், தொலைக்காட்சிப் பெட்டி தொலைபேசி மற்றும் அலைபேசி படுக்கையறையில் வைத்துக் கொள்வதை தவிர்க்கவும். அவைகள் தூக்கத்தை கெடுக்கும்

3. இரவில் அதிகமான உணவு உண்பதாலும் குறிப்பாக 11 மணிக்கு மேல் உணவு அருந்திஇட்டு உடனடியாக உறங்கபோவது அல்லது உணவு உண்ணாமல் பட்டினியாக தூங்குவது தூக்கத்தை கெடுக்கும். பயத்தின் காரணமாகவும், தூக்கத்தை கெடுக்கும் அல்லது நாளைந்து நபர்களுடன் படுக்கையில் படுத்தாலும் சிலருக்கு தூக்கத்தை சிதறடிக்கும். நபர்களுக்கும் , அதிக உடல உழைப்பு உள நபர்களுக்கும் அதனால் ஏற்படும் அசதி உடல்வலி காரணமாக தூக்கம் சிரமப்படும்.

நல்ல சுகாதாரமற்ற படுக்கை, கடுமையான குளிர், கடுமையான வெயில் காணமாக தூக்கமின்மை ஏற்டும். பகலில் தூங்குபவர்களுக்கும் இரவு வேளை பணியில் ஈடுபடுபவர்களுக்கும் தூக்கம் பாதிக்கப்படும்.

  தூக்கமின்மை மனநிலை காரணமாக

தேர்வுக்கு போகும் மாணவ மாணவிகளுக்கும்,தேர்வில் தோல்வியுற்றமாண மாணவிகளுகும்தூக்கம் தடைபடும்.

காதலில் ஈடுபட்டிருப்பவர்கள், காதலில் தோல்வியுற்றவர்கள், நல்ல நண்பர்களை இழந்தவர்களுக்கும் தூக்கம் என்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

இரவில் மர்ம நாவல் படித்தவர்களுக்கும், திகலூட்டும் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கும் பயம் காரணமாக தூக்கமின்மை ஏற்படும். பெண்ணின் திருமணத்தை நடத்தவிருக்கும் பெற்றோகளுக்கும், புதிதாக புகுந்த வீடு செல்லும் மணப்பெண்ணுக்கும் தூக்கமின்மை ஏற்படும்.

பெற்றோர்களால், ஆசிரியர்களால் மற்றும் மேலதிகாரிகளால் தண்டிக்கப்பட்ட அல்லது பேச்சால் அவமானத்திற்கு உட்பட்ட நபர்களுக்கு தூக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

வியாபாரத்தில் நஷ்டமடைந்த அல்லது கூட்டாளியால் ஏமாற்றப்பட்ட நபர்களுக்கும் தூக்கமின்மை ஏற்படும். பரிசு சீட்டில் கோடி ரூபாய் பரிசு பெற்ற நபர் அல்லது ஒரு நம்பில் பரிசை இழந்த நபருக்கும் தூக்கமின்மை ஏற்பட வாய்ப்புண்டு.

கணவனை பிரிந்து வாழும் மனைவி அல்லது குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாட்டில் பணிபுரியும் கணவன்மார்களுக்கும் தூக்கமின்மை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வறுமையால் உள்ளவர் வறுமை காரணமாகவும், வசதி உள்ளவர் வருமான வரி அதிகாரியின் மேல் உள்ள பயம் காரணமாகவும் தூக்கமின்மை ஏற்படும்.

திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கும் ஆண்- பெண் இருபாலருக்கும், நன்றாகப் படித்து பட்டம் பெற்று வேலை கிடைக்காமல் இருக்கும் ஆண்-பெண் இருவருக்கும் தூக்கமின்மை ஏற்படும்.

மேற்கண்ட காரணங்களை கொண்டும், நோயாளிகளின் மனநிலை குணாதிசயங்களை கொண்டும் ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் மருந்து கொடுக்க நல்ல தூக்கம் நிச்சயம் ஏற்படும்.

 குழந்தைகளுக்கான தூக்கமின்மை ஏற்படக் காரணங்கள்:

1. இரவில் சரியான உணவு உண்ணாத தாலும், அல்லது அதிக உணவு உண்பதாலும்,

2. வயிற்றில் உள்ள கிருமிகள் காரணமாகவும்

3. படுக்கையறையில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதாஉம்

4. பயம் மற்றும் சத்தம் காரணமாக

5. அதிகமான படிப்பு, மூளைச் சோர்வு, தேர்வு பயம்.

6. தாய் தந்தை சண்டை காரணமாக

மேற்கண்ட காரணங்களை கொண்டும் நோயின் தன்மை நோயாளியின் மனநிலை அவர்களுக்கு ஏற்படும் கனவுகள் அவர்கள் படுக்கையில் படுக்கும் விதம் கொண்டும் ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் நல்ல தூக்கத்தை ஏற்படுத்த முடியும்.

 வயது வந்தவர்களுக்கு மற்றும் வயதானோருக்கு ஏற்படும் தூக்கமின்மைக்கான காரணங்கள்

1. சர்க்கரை நோயாலும் மற்றும் விந்துப்பை வீக்கத்தாலும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இரவில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிப்பதால் தூக்கம் கெடும்.

2. இரத்தக்கொதிப்பு மற்றும் இருதய நோய் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஏற்படும் சாவு பயம் காரணமாகவும் அதே சமயத்தில்அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் வெளிநாடு () வெளியூர் சென்று விட்டாலும் நோயாளிக்கு தூக்கமின்மை ஏற்படும்.

3. மனநிலை பாதிகப்பட்டவர் மற்றும் பல் வேறு காரணங்களால் ஏற்படும் மனச்சோவு மற்றும் அசதி காரணமாகவும் தூக்கமின்மை ஏற்படும்.

4. காக்கை வலிப்பு, இத்த சோகை, புற்றுநோய் போன்றபெரு நோய் உள்ளவர்களுக்கும் தூக்கமின்மை ஏற்படும்.

5. முதன்முறையாக கருவுற்ற கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாதவிடாய் கோளாறுகள் உள்ள பெண்களுக்கு தூக்கமின்மை ஏற்பட வாய்ப்புண்டு.

6. சொறி, சிரங்கு, சோரியாஸிஸ் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் இரவில் அதிகம் அரிப்பை ஏற்படுத்துவதாலும் தூக்கமின்மை ஏற்படும்.

7. தாம்பத்ய உறவில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாகவும் தூக்கமின்மை ஏற்படும்.

8. மூச்சு விட சிரம்ப்படும் கீழ்க்கண்ட நோய் உள்ளவர்கள்

ஆஸ்துமா, காசநோய் (TB), நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள்

இருதய சம்பந்தப்பட்ட இருதய இத்த குழாய்களில் அடைப்பு உள்ள நோயாளிகள்

ஈரல் வீக்கம், மஞ்சள் காமாலை

சிறுநீரக்க் கோளாறுகள்

வாயு தொந்தரவு மற்றும் மலச்சிக்கல்கள் உள்ள நோயாளிகளுக்கும் தூக்கமின்மை ஏற்படும்

 கனவுகள் :

கனவுகளை கொண்டு ஹோமியோபதி மருந்துகள் தேர்வு செய்யப்பட்டு நல்ல தூக்கத்தை ஏற்படுத்த முடியும். உதாரணமாக:

1. விபத்து நேர்வது போல

2. உயரத்திலிருந்து குதிப்பது போல

3. பாம்பு மற்றும் மிருகங்களை பற்றி கனவு

4. இறந்தவர் பற்றிய கனவு.

5. சதா கனவு மையம் (சினிமா பார்ப்பது போல)

6. ஆகாயத்தில் பறவைகளை போலவே பறப்பது போலான கனவு

7. தண்ணீர் குடிப்பது போலதாகம் எடுப்பது போலபசி எடுப்பது போலான கனவு.

8. சிற்றின்பக் கனவு.

9. தூக்கத்தில் சிரிப்பது, பேசுவது போல

10. தூக்கத்தில் பல்லை கடிப்பது

11. தூக்கத்தில் நடப்பது (Somanmzulism)

12. தூக்கத்தில் பயம் (Night Mare)

 படுக்கும் விதம் :

நோயாளிகள் படுக்கும் வித்த்தை கொண்டும் ஹோமியோபதி மருந்துகள் தேர்வு செய்யப்பட்டு நல்ல தூக்கத்தை ஏற்படுத்த முடியும்.

1. குப்புறப் படுத்தல்.

2. மல்லாந்து படுத்தல்

3. தலைமீது கை வைத்துப் படுத்தல்

4. தலைக்கு கீழே வைத்து படுத்தல்.

5. ஒரு கால் மீது மற்றொரு காலை போட்டு தூங்குதல்.

6. ஒரு காலை மடக்கி மற்றொரு காலை நீட்டிப் படுத்தல்

7. காலை அசைத்துக் கொண்டே தூங்குதல்

8. குளிர்காலத்தில் கூட போர்வையை பயன்படுத்தாமல் இருத்தல்.

9. வெயில் காலத்திலும் போர்வை தலைமூடி படுத்து உறங்குவது.

10. தலைக்கு இரண்டு மூன்று தலையணை வைத்து உறங்குவது

11. தலையணையில்லாமல் உறங்குவது.

மேற்கண்ட முறையில் படுக்கும் விதத்தை கொண்டு நோயாளிகளுக்கு ஹோமியோபதி மருந்துகள் கொடுக்கப்பட்டு வியாதிகள் குணப்படுத்தப்படுகின்றன என்பது உங்களுக்கு விந்தையாக இருக்கும்.

 நிறைவுரை

தூக்கமின்மை என்பது வியாதி கிடையாது. அது பல்வேறு வியாதி காரணமாக உண்டாகும் ஒரு குறிதான். அடிப்படை காரணத்தை அறிந்து நோயை கண்டறிந்து குணப்படுத்தினால் மட்டுமே தூக்கத்தை ஏற்படுத்த முடியும்.

நோய்நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நல்ல தூக்கம் வேண்டுவோர் இதன் அடிப்படையில், அருகில் உள்ள ஹோமியோபதி மருத்தவரை அணுகி பயன்பெற வேண்டுகிறேன்.

அனைவரும் நல்ல தூக்கத்தைப் பெற ஹோமியோபதி மருத்துவத்தை நாடி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்!

-தன்னம்பிக்கை.