30 ஜனவரி, 2012

அலைபேசியில் தமிழ் வாசிக்க


1. தங்கள் அலைபேசியில் தமிழ் வாசிக்க:  opera mini தரவிறக்கிடுங்கள். அதன் address bar ல் opera:config அல்லது config: என தட்டச்சுங்கள், வரும் settings பக்கத்தின் அடியில் Use Bitmap fonts for complex scripts என இருக்கும் அதற்கு yes என தேர்வு செய்து save செய்திடவும். இப்போது உங்கள் அலைபேசியின் opera mini உலவியில் தமிழ் பக்கங்களைப் படிக்க இயலும். அறிக opera mini தமிழில் படிக்க மட்டுமே உதவும். உங்கள் அலைபேசியில் தமிழ் மொழி உள்ளீடாக இருந்தால் மட்டுமே தமிழில் உங்களால் எழுத இயலும்.

2. தங்கள் கணினியில் இணைய இணைப்பின்றி தமிழ் எழுத:
 கீழ்காணும் மென்பொருள்களைப் பயன்படுத்தலாம்

i. Indian Language Input Tool: MSN ILIT for XP , Windows 7
viii. Google IME
ix. Azhagi
xi.Suratha save this page for offline use
xii. Tamil99 keyboard Softwares

3. இணைய இணைப்பில் தமிழ் எழுத:
கீழ்காணும் வழிகளை தெரிவு செய்யலாம்

a) Google Transliteration IME . தமிங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழுக்கு மாற்றிடலாம். இதை உங்கள் இணைய உலவியில் இணைக்கும் முறை help here
b) கூகிள் குரோம் உலவிக்கான Extension
c) பயர்பாக்ஸ் உலவிக்கான TamilVisai நீட்சி
d) யாஹூ Tamil99 தட்டச்சு Widget
e) Epic Browser தமிழ் ஆதரிக்கிறது
f) அதியன் Firefox PLugin

g) இணைய தமிழ் எழுதிகள் :
iii. UCedit
vii. Branah
viii. Pongu tamil
தமிழ் ட்விட்டர் portal கள்
xi. ThatsTamil

h) அலைபேசிக்கான தமிழ் எழுதிகள்:
i. Eegarai
ii. Yantram
அலைபேசியில் ஈகரை யந்திரம் போன்ற தமிழ் எழுதிகளை பயன்படுத்த ucweb mobile browser தான் சிறந்தது!
iii. TamilTweet
iv. Google’s Script Converter
இவை இரண்டும் opera mini ல் எளிதாக உள்ளன. 


27 ஜனவரி, 2012

டிவி நிஃமத்தே-3அருமையான பெரியவர்களே!
 பொறுமையான தாய்மார்களே!
 மன்பவுல் ஹசனாத் மதரசாவில் ஓதும்
 சிங்கக் குட்டிகளே தங்கக் கட்டிகளே ! டிவி ஒரு நிஃமத்துதான் என்று பேசவந்துள்ளேன்۔
 நடுவர் அவர்களே! சாமானியமாக கிடைக்காத பெரும் பாக்கியமெல்லாம் மிக லேசான முறையில் நமக்கு கிடைக்கச் செய்வது இந்த டிவி.
 என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம் சகோதரர்களே! மூன்று விஷயங்கள் இருக்கின்றன..அவற்றைக் கண்ணால் பார்த்துக்கொண்டிருப்பதே நன்மை என்று மாநபி (சல்) அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று என்ன? 


1. அருள்மறை குர்ஆன்: கண்ணால் பார்த்துக்கொண்டிருப்பதே நன்மை; அதை ஓதினாலோ அதைவிட நன்மை.
2. கஃபா:  கண்ணால் பார்த்துக்கொண்டிருப்பதே நன்மை; அதை வலம் வந்தாலோ அதைவிட நன்மை.
3. பெற்றெடுத்த தாய்: தாயைக் கண்ணால் பார்த்துக்கொண்டிருப்பதே நன்மை; அவளுக்கு பணிவிடை செய்தாலோ அதைவிட நன்மை. ஆக கஃபாவைக் கண்ணால் காண்பதே பெரும் பாக்கியம் என பெருமானார் (சல்) கூறியிருக்கிறார்கள்.


 நான் கேட்கிறேன் நடுவர் அவர்களே! உங்களைப் பார்த்துக் கேட்கிறேன்; கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்த்துக் கேட்கிறேன்; இதோ மேடையேறிப் பேசிய இந்த மேதாவிகளைப் பார்த்துக் கேட்கிறேன்: உங்களில் மக்காவுக்குச் சென்று கஃபாவைக் கண்ணால் கண்டவர் எத்தனை பேர்? கை தூக்குங்கள் பார்க்கலாம். இப்படிக் கேட்டால் ஏதோ ஒன்றிரண்டு பேர்தான் கை தூக்குவர். இல்லையென்றால் அதுவும் இல்லை. ஆனால் அதே கஃபாவை டிவியிலே பார்த்தவர்கள் கண்டு ரசித்தவர்கள் கைதூக்குங்கள் என்றால் நான் உள்பட நடுவர் உள்பட அத்தனை பேரும் கைதூக்குவோம். இப்போது சொல்லுங்கள் நடுவர் அவர்களே! உலகில் வாழும் அத்தனை மக்களுக்கும் கஃபாவைப் படம் பிடித்துக் காட்டுகிற இந்த டிவி முசீபத்தா?


அதுமட்டுமல்ல நடுவர் அவர்களே! அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வாரந்தோறும் வருகின்ற வசந்தங்கள் அவை. எத்தனையோ ஏழைகளின் வாழ்க்கையிலே ஏற்றம் பெறுகிற வாய்ப்பை மக்கள் அரங்கம் வழங்குகிறது.

 •  வறுமையிலே வாடி வதங்கும் வறியவர்கள்;
 •  படிப்பதற்கு பணம் இல்லாத பரம ஏழைகள்;
 •  தொழில் தொடங்க தோதில்லாமல் துவண்டு கிடப்பவர்கள்;
 •  முன்னுக்கு வரமுடியாமல் மூலையிலே முடங்கிக் கிடப்பவர்கள்
 இப்படி எத்தனையோ வறியவர்களுக்கு வாரி வாரி வழங்குகிறார்கள். அதுமட்டுமா? அந்த நிகழ்ச்சியிலே,

 •  உடல் ஊனமுற்றவர்கள்,
 •  கண் பார்வை இழந்தவர்கள்,
 •  காது கேளாதவர்கள்,
 •  ஏன் தாய் த்ந்தையை இழந்த அனாதைகள்கூட
 மேடையேறிப் பேசுகிறார்கள். எப்படி தெரியுமா? தங்களது வாழ்க்கையிலே அவர்கள் எப்படி முன்னுக்கு வந்தார்கள்? எதிர்ப்புகளை எப்படி சமாளித்தார்கள்? என்பதையெல்லாம் அவர்கள் சொல்லிக் காட்டும்போது அதைப் பார்க்கிற நமக்கெல்லாம் ஒரு நம்பிக்கை பிறக்கிறது.
உடல் ஊணமுற்ற அவர்களே வாழ்க்கையில் சாதிக்கிறபோது நன்றாக இருக்கிற நாம் ஏன் சாதிக்க முடியாது? இப்படியெல்லாம் ஒரு துணிவும் துணிச்சலும் ஏற்படுகிறது.. அரட்டை அரங்கத்தைப் பார்க்கிறபோது.! 


அதையெல்லாம் எங்கே பார்க்கிறாங்க இவங்க? அரட்டை அரங்கம் நடக்கும் பொழுது குறட்டை விட்டல்லவா தூங்குகிறார்கள்? அதனால்தான் அதன் அருமை தெரியவில்லை. 
 நடுவர் அவர்களே! இந்த 21-ம் நூற்றாண்டில் டிவியின் மூலம் எத்தனையோ நன்மைகளும் பலன்களும் கிடைத்துக்கொண்டிருப்பதை மறுக்க முடியுமா? ஆகவே டிவி என்பது சமுதாயத்திற்கு கிடைத்த ஒரு அற்புதமான நிஃமத்துதான் என்று கூறி என் உரைக்குத் திரையிடுகிறேன்


இது தொடர்பான இதர பதிவுகள்:23 ஜனவரி, 2012

அறிஞர்களின் பார்வையில் அண்ணல் நபி (ஸல்)உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராகமுகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும்வினாவையும் எழுப்பலாம். சமயஞ்   சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே.

                   -M.H.Hart, 'The 100! A ranking of the most influential persons in history' New York, 1978)

பத்ரு சஹாபாக்கள் பைத்து

قصيدة البدريين

10 ஜனவரி, 2012

இஸ்லாமியப் பார்வையில் லோக்பால் மசோதாமூலம்: ulama.in . தமிழில்: sadhak maslahi
ஜன் லோக்பால் மசோதா (Jan Lokpal Bill) அல்லது குடி மக்கள் காப்பு முன்வரைவு இந்தியாவில் ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை சித்தாந்ததில் முன்மொழியப்பட்ட ஒரு மசோதாஆகும்.
ஊழலுக்கு எதிரான குரல் மக்களிடமிருந்து எழவேண்டும் அதுவும் அதிகாரமிக்க அமைப்பாக ஒரு மக்கள் குழு அமைத்து அந்த குழுவின் மூலமாகவே ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முன்மொழியப்பட்ட சட்ட வரைவு நிலையில் உள்ள மசோதாதான் இந்த ஜன் லோக்பால் மசோதா. இந்தியாவில் அனைத்து மட்டங்களிலும் மலிந்திருக்கும் ஊழலை அறவே ஒழிக்கும் வகையில் அடிமட்ட ஊழியர் முதல் பிரதமர் வரை ஊழல் புரியும் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தும் தேர்தல் ஆணையம் போன்ற ஒரு தன்னிச்சையான அமைப்பை ஏற்படுத்துவதற்கு அடித்தளமிடுவதுதான் ஜன்லோக்பால்.( இது பற்றி மேலும் அறிய   இங்கே அழுத்தவும்)


இந்தியாவின் ஊழல் வரலாறு சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே அதாவது 1948ம் ஆண்டே தொடங்கிவிட்டது. ராணுவத்திற்கு ஜீப் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக இங்கிலாந்தில் இந்தியத்தூதராக இருந்த V.K. கிருஷ்ணமேனன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.ஆனால் அந்தக் குற்றச்சாட்டு விசாரிக்கப்படவேயில்லை. அன்று முதல் இன்று வரை 1981 போபர்ஸ் பீரங்கி பேர ஊழல், 1990 ஹர்ஷத்மேத்தா பங்குச்சந்தை ஊழல், 1996 கார்கில் சவப்பெட்டி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்காமன்வெல்த் போட்டிகள் ஊழல்ஆதர்ஷ் வீடு ஒதுக்கல் ஊழல் என ஊழல் தொடர்கதையாகி விட்டது
இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊழலுக்காக தண்டனை பெற்றஅமைச்சர்கள்உயர் அதிகாரிகள்நீதிபதிகள் ஒரு சிலர் மட்டுமே
ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள லோக்பால் மசோதா மூலமாக ஊழல் புகாருக்கு ஆளாகும் நபர்களுக்கு எதிரான வழக்குகளை ஆண்டு கணக்கில் இழுத்தடிக்க முடியாது.வழக்கு குறித்த புலனாய்வு ஓராண்டு காலத்திற்குள்ளாகவும்வழக்கு விசாரணை ஓராண்டு காலத்திற்குள்ளாகவும் முடிக்கப்பட்டுஇரண்டு ஆண்டு காலத்திற்குள் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்பட்டுவிடுவார்கள்.

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கோட்பாடு..
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقِيمُوا حُدُودَ اللَّهِ فِي الْقَرِيبِ وَالْبَعِيدِ وَلَا تَأْخُذْكُمْ فِي اللَّهِ لَوْمَةُ لَائِمٍ (ابن ماجة
''நெருங்கியன் நெருக்கமில்லாதவன் அனைவருக்கும் சமனீதியாக அல்லாஹ்வின் சட்டவரம்புகளை செயல்படுத்துங்கள். இதனால் தூற்றுபவர் தூற்றட்டும் அதைப் பற்றிக் கவலைப் படவேண்டாம்.''


 • பனூமக்ஸூம் கிளையிலுள்ள ஒரு பெண் திருடிவிட்டாள். விசாரித்த நபி (சல்) கையை வெட்ட உத்தரவிட்டார்கள். உறவினர்கள் உசாமா(ரலி)யை சிபாரிசுக்கு அனுப்பினார்கள். அவர் சிபாரிசு செய்தபோது நபி ஆவேசத்துடன் கூறினார்கள்:  அல்லாஹ்வின் சட்டவரம்புகளில் குறுக்கிட்டு வக்காலத்து வாங்குகிரீர்களா? அறிந்துகொள்ளுங்கள்: உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயம் அழிந்துபோனதெல்லாம் இதனால்தான்: வலியவன் திருடினால் விட்டுவிடுவார்கள்.வறியவன்  திருடினால் கையை வெட்டிவிடுவார்கள்.ஆனால் நான் என் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் அவரது கையை வெட்டுவதற்கும் தயங்கமாட்டேன்.
ஆட்சியாளராயிருந்தாலும் அதே சட்டம்தான்:
 • உமர்(ரலி)ஆட்சிக்காலத்தில் அம்ருப்னு ஆஸ் (ரலி) எகிப்தின் ஆளுநர். ஒருநாள் எகிப்து பிரஜை ஒருவர் மதீனா வந்து ஜனாதிபதியிடம் முறையிட்டார்: அமீருல் மூமினீன்! எங்கள் கவர்னரின் மகனுக்கும் எனக்கும் குதிரைப் பந்தயம். அதில் நான் முந்திவிட்டேன்.  நான் உயர் அதிகாரியின் மகன் என்னை முந்துகிறாயா?என்றுஆத்திரத்தில் என்னை சாட்டையால் விளாசிவிட்டார். ஜனாதிபதி உமர் -ரலி- கவர்னரையும் மகனையும் வரச் சொல்லி எகிப்துவாசியின் கையில் சாட்டையைக் கொடுத்து உன்னை அடித்ததுபோல் நீ திருப்பி அடி.என்றார்கள். அவர் அடித்தார்.
 இதுதான் லோக்பால் மசோதா. யார் செய்தாலும் தவறுதான் உடனடி தண்டனை வேண்டும். நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

 • ஊழல் செய்பவர்களை மற்றவர்கள் கண்டும் காணாதது போல் விட்டு விட்டால் அனைவரையும் பாதிக்கும்
இதற்கு நபி ஒரு உதாரணம் சொன்னார்கள்:
ஒரு கப்பலில் மேல்தளத்தில் ஒரு குழுவும் கீழ்தளத்தில் ஒரு குழுவுமாக பயனித்தனர். கீழ்தளத்திலுள்ளவர்கள் தண்ணீருக்காக மேலேதான் வரவேண்டும். ஒருனாள் அவர்கள் இப்படி யோசித்தனர் நாம் ஏன் அடிக்கடி மேல்தளம் சென்று தொந்தரவு கொடுக்கவேண்டும். நமக்கு கீழேதான் ஏராளமான தண்ணீர் ஓடுகிறதே..ஒரு ஓட்டையைப் போட்டு நமக்குத் தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்வோம். இந்நிலையில் மேல்தளத்தில் உள்ளவர்கள் நமக்கென்ன என்று பேசாமல் இருந்துவிட்டால் கப்பல் மூழ்கி அனைவரும் பலியாகவேண்டிவரும். அதுபோல தீமையைத் தடுக்காவிட்டால் அனைவருக்கும் ஆபத்து.
நாட்டில் வளம் இல்லமல் போவதற்கு காரணம் பாவங்களே.
ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النّاسِ (41الروم) أي بان النَّقْصَ في الزروعِ والثمار بسبب المعاصي. وقال أبو العالية: من عصى الله في الأرض فقد أفسد في الأرض, لأن صلاح الأرض والسماء بالطاعة
குற்றம் குறைந்தால் வானம் பூமியின் பரக்கத்துகள் பெருகும். அதனால்தான் ஈசா நபி மீண்டும்வந்தவுடன் தீமைகளை ஒழிப்பார்கள்.
إذا نزل عيسى بن مريم عليه السلام في آخر الزمان يَحْكم بهذه الشريعة المطهرة في ذلك الوقت من قتل الخنزير وكسرِ الصَّليب ووضعِ الجزية, (وهو تركها), فلا يقبل إلا الإسلام أو السيف, فإذا أهلك الله في زمانه الدجال وأتباعه ويأجوج ومأجوج, قيل للأرض: أُخْرُجي بركتَكِ, فيأكل من الرُّمانة الفِئَامُ من الناس ويستظلون بقحفها...

 அதன் பின் பரக்கத்துகள் பெருகும். பூமிக்கு சொல்லப்படும்: நீ உன் பரக்கத்துகளை வெளிப்படுத்து. அந்த நேரம் எல்லாமே வளமாகிவிடும் ஒரு மாதுளையை ஒரு ஜமாத்தே சாப்பிடும் அளவுக்கு பெரிதாக இருக்கும் அதன் தோலை குடையாக பிடித்து ஒரு கூட்டமே அதன் நிழலில் அமரலாம். ஒரு பிராணியின் பாலை ஒரு கூட்டமே ஆவல் தீர குடிக்கலாம். இந்த பரக்கத்திற்கு என்ன காரணம்? லஞ்சம் ஊழல் இல்லாத குற்றங்கள் இல்லாத நீதியான ஆட்சி அப்போது நடைபெறும்.
அரசு அதிகாரிகள் இலஞ்சம் பெறக் கூடாது:
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ اسْتَعْمَلْنَاهُ عَلَى عَمَلٍ فَرَزَقْنَاهُ رِزْقًا فَمَا أَخَذَ بَعْدَ ذَلِكَ فَهُوَ غُلُولٌ(ابوداود)


''ஊழியம் செய்வோர் ஊதியம் பெறலாம்; அதைவிட அதிகமாக எடுத்தால் அது ஊதியம் அல்ல; ஊழல்.''   (அபூதாவூது)


இப்னுல் லத்பிய்யா என்பவரை நபி வசூல் அதிகாரியாக நியமித்திருந்தார்கள். அவர் ஒப்படைக்கும்போது இது பொதுநிதி. இது எனக்கு மக்கள் கொடுத்த அன்பளிப்பு. என்று தனியாக பிரித்து எடுத்துக்கொள்வார். நபி மிம்பரில் ஏறி பயான் செய்தார்கள்: சிலபேர் இது பொதுநிதி. இது எனக்கு மக்கள் கொடுத்த அன்பளிப்பு. என்று தனியாக பிரிக்கின்றனரே. இது சரியா? நான் கேட்கிறேன்: அவர் இந்த வேலையில் இல்லாமல் அம்மாவீட்டிலோ அத்தாவீட்டிலோ உட்கார்ந்திருந்தால் இந்த அன்பளிப்பு எப்படி வரும்?


ஒரு மீனவன் இருந்தான். தினந்தோறும் மீன்பிடித்து குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தான். ஒரு நாள் பெரிய மீன் மாட்டியது. இதை நல்ல விலைக்கு விற்று குடும்பத்திற்கு தாராளமாக செலவழிக்கலாம் என்று வந்துகொண்டிருந்தான். வழியில் ஒருவன் இடைமறித்தான் அதை விலைக்கு கேட்டான்: இவனிடம் கொடுத்தால் பாதிவிலைதான் தருவான் என்று எண்ணி அவன் மறுத்தான். உடனே அவன் அந்த மீனவனை அடித்து துன்புறுத்தி வலுக்கட்டாயமாக மீனைப் பறித்துகொண்டு சென்றான். மீனவன் பத்துஆ செய்தான்:
அதன் விளைவு: அவன் மீனைப் பொறித்து சாப்பிட எடுத்தபோது அது வாயைப் பிளந்து அவனது கைவிரலைக் கவ்வியது. வசமாக கடித்தது. வேதனை தாங்கமுடியாமல் மருத்துவரிடம் ஓடினான்.அவர் சொன்னார்: விரலை வெட்டிவிடுவோம். இல்லையெனில் வேதனையும் விஷமும் உள்ளங்கைக்கும் பரவிவிடும்.விரல் துண்டிக்கப்பட்டது. அப்படியும் வேதனை உள்ளங்கைக்கு பரவியது. மீண்டும் மருத்துவரிடம் வந்தான். சரி உள்ளங்கையோடு போகட்டும்.அதை மட்டும் அறுத்து எடுத்துவிடுவோம். உள்ளங்கை எடுக்கப்பட்டது.அப்படியும் வேதனை கொடுங்கைக்குப் பரவியது. மீண்டும் மருத்துவரிடம் வந்தான். இதை அறுத்து நீக்காவிட்டால் தோள்பட்டைக்கும் பரவி விடும்'' என்றார்.கை முழுக்க நீக்கப்பட்டுவிட்டது. அப்படியும் வேதனை உடல் முழுதும் பரவியது. இனி மருத்திவரை நம்பி பயனில்லை; அல்லாஹ்விடம் மனமுருகி முறையிட்டான். பிறகு ஒரு மரத்தடியில் களைப்புடன் தூங்கினான். கனவில் யாரோ ஒருவரின் குரல் ஒலித்தது: தம்பி.. இப்படியே எதுவரை துண்டிக்கப்பட்டுக்கொண்டே இருப்பாய். போ! உன்னால் பாதிக்கப்பட்ட அந்த மீனவனிடம் சென்று அவனை திருப்திப்படுத்து. கனவு கலைந்ததும் ஓடினான். விசாரித்து மீனவனைக் கண்டுகொண்டான். மன்னிப்புக் கேட்டான். தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்தான். அந்த வினாடியே வேதனை எல்லாம் மறைந்தது. அன்றிரவு நிம்மதியாக உறங்கினான். காலையில் கண்விழித்துப் பார்த்தபோது என்ன ஆச்சரியம்! துண்டிக்கப் பட்ட இடத்தில் கை மீண்டும் பொருந்தி இருந்தது... ஆரோக்கியமாக! அல்லாஹ் மூசா நபிக்கு வஹீ இறக்கினான்; மூசா! ஒருவேளை அவன் அந்த மீனவனைத் திருப்திப் படுத்தியிருக்காவிட்டால் அவன் சாகும் வரை வேதனைப் படுத்தியிருப்பேன்.
லோக்பால் மசோதா முறையாக கடைபிடிக்கப்பட்டால் மக்களுக்கு ஏற்படும் வேறு நன்மைகள். (சிறுபான்மையினருக்கும்):-

அரசாங்க அலுவலகங்களில் ஒரு பணிக்காக ஒருவர் சென்றால்- உதாரணமாக சாதிச் சான்றிதழ் அல்லது ஓட்டுனர் உரிமம் பெறுவது- அதனை குறிப்பிட்ட காலவரையறைக்குள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் செய்து தர வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த அலுவலருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு,புகார் தாரருக்கு இழப்பீடும் வழங்கப்படும்.எனவே பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் தங்களது (வாக்காளர் அடையாள அட்டை,ரேஷன் கார்டு) விண்ணப்ப மனு மீதான நடவடிக்கை உரிய காலத்திற்குள் எடுக்கப்படாமல் தாமதமானாலோ அல்லது காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்ய மறுத்தாலோ லோக்பாலை அணுகலாம்.லோக்பால் அமைப்பு ஒரு மாத காலத்திற்குள் அதனை செய்து தரும்.மேலும் ரேசன் கடைகளில் உணவு பொருட்கள் எடை குறைத்து வழங்கப்பட்டாலோ அல்லது பஞ்சாயத்து அல்லது நகராட்சி அல்லது மாநகராட்சி நிதியை பயன்படுத்தி போடப்படும் சாலைகள் மோசமாக இருந்தாலோ அது குறித்து லோக்பாலிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். 

06 ஜனவரி, 2012

டிவி நிஃமத்தே!-1வாழ்த்துவதற்கு நாவையும் வணங்குவதற்கு சிரசையும் தந்த வல்ல இறைவனுக்கே புகழனைத்தும்!


சங்கடங்களை சகித்து தங்கடங்களைத் தகர்த்து சத்திய சன்மார்க்கத்தை சம்பூரனமாக்கிய சர்தார் நபி சல்லலாஹு அலைஹி வசல்லம் அவர்களின் மீதும் நபிவழி நடந்திட்ட நற்றவத் தோழர்கள் மீதும் வாஞ்சை மிக்க வலிமார்கள் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் உண்டாவதாக! 


தகுதிமிக்க தலைவர் அவர்களே! உறுதிமிக்க நடுவர் அவர்களே!!
எனது அணியில் பேச வந்திருக்கும் எழுச்சிமிக்க ஏந்தல்களே! எதிரணியில் அமர்ந்திருக்கும் ஏமாளிகளே! கோமாளிகளே!!


டி.வி என்பது உண்மையிலேயே பெரிய நிஃமத்துதான் என்று பேச வந்திருக்கிறேன். எதிரணியில் பேசும்போது சொன்னார்கள்: டி.வியிலே எந்த நன்மையும் இல்லை; எல்லாமே தீமைதான் என்று. இப்படி மூடலாகப் பார்த்துவிட்டு முடிவுக்கு வந்தால் எப்படி?


நடுவர் அவர்களே! பழாப்பழம் பார்த்திருக்கிறீர்களா பழாப்பழம்? இதை மூடலாகப் பார்த்தால் என்ன தெரியும்/ வெறும் முள்ளுதான் தெரியும். அதை ஆழமாக வெட்டித் திறந்து பார்த்தால் அதில் அழகான பழாச் சுளைகள் தெரியும். அதுபோல டி.வி என்றாலே ஒட்டுமொத்தமாக முசீபத்துதான் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். அதில் எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கு தெரியுமா?


நாட்டு நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள செய்திகள், அதிலும் 24 மணி நேர செய்திச் சேனல்கள் வந்த பிறகு கவலையே இல்லை நடுவர் அவர்களே!

அரசு நலத் திட்டங்களா..ஏழைகளுக்கு இலவச உதவி பற்றிய அறிவிப்புகளா.. விவசாயிகளுக்கு விஷேச சலுகைகளா ஆகிய அனைத்தும் அப்படியே பார்க்க உதவுகிறது. நடுவர் அவர்களே! இவங்க முன்னே பின்னே டிவி பார்த்திருந்தா நாட்டு நடப்பு தெரிஞ்சிருக்கும்; நாலு விஷயம் புரிஞ்சிருக்கும் அதையெல்லாம் எங்க பார்க்கிறாங்க?


அடுத்து டி.வி வந்து நம்மையெல்லாம் சோம்பேறியாகிவிட்டது என்று கூறினார். நடுவர் அவர்களே! கடுமையான கவலையில் மனம் சோர்ந்து இருக்கும் மனிதர்களுக்கு கூட பல டி.வி நிகழ்ச்சிகள் மன ஆறுதலைத் தருகின்றன.


உதாரணமாக, அசத்தப் போவது யாருன்னு ஒரு நிகழ்ச்சி. அதப் பார்த்துட்டு வாய்விட்டு சிரிக்காதவர்களே இல்லை. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். அதுபோல வாழ்க்கையிலே அடிபட்டு மிதிபட்டு பல சிக்கல்களிலே மாட்டிக்கொண்டுஅவதிப்படுகின்றவர்கள்கூட ஆனந்தத்தின் உச்சிக்கே போய்விடுகின்ற ஒரு நிகழ்ச்சிதான் அசத்தப் போவது யாரு!


சகோதரர்களே! கவலைதான் ஒரு மனிதனுக்கு அதிகமான வியாதிகளை உண்டாக்குகிறது என மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். நபியவர்கள் கூட கவலையைவிட்டு அதிக பாதுகாப்பு தேடியுள்ளனர் யானைக்கு தும்பிக்கை எப்படி அவசியமோ மனிதனுக்கு நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கையை தரும் எத்தனையோ நிகழ்ச்சிகள் டி.வியிலே உண்டு.
அதுமட்டுமா? அரசியல் முதல் ஆன்மீகம் வரை சித்த வைத்தியம் முதல் சீன வைத்தியம் வரை அனைத்தயும் பார்க்க உதவுவது டி.வி.


எனவே டி வி ஒரு நிஃமத்துதான் நிஃமத்துதான் என்று உறுதிபடக் கூறி அமர்கிறேன்.  அஸ்ஸலாமு அலைக்கும்.இது தொடர்பான இதர பதிவுகள்:

05 ஜனவரி, 2012

புனித ஹாஜிகள் பாராட்டு விழா

ஒப்பிலான்
oppilan
ஹாஜிகளுடன் ஜமாத் தலைவர் 
ப்பற்ற ஒப்பிலானில் 27.12.2011 செவ்வாய் கிழமை காலை 9.30 மணியளவில் கடலாடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையும் ஒப்பிலான் முஸ்லிம் ஜமாஅத்தும் இணைந்து புனித ஹாஜிகள் பாராட்டு விழா நடத்தியது.ஒப்பிலான் ஜமாத் தலைவர் ஜனாப் அப்துர் ரஹ்மான் அவர்கள், மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் ஜனாப் காதர் ஷம்சு ஆகியோர் தலைமை தாங்க
ஹாஜிகளுடன் ஜமாத் உதவித்தலைவர் 

ஒப்பிலான்  ஜமாஅத்தார்கள், வட்டார உலமா சபையினர்  & வட்டார அனைத்து  
ஜமாஅத்தார்கள் முன்னிலை வகிக்க, தரைக்குடி இமாம் மௌலவி  ஜாஹிர் ஹுசைன் மஸ்லஹி கிராஅத் ஓதி துவங்கிவைத்தார்.
கடலாடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் துணைச் செயலாலரும்,
 ஒப்பிலான் தலைமை இமாமுமான
மௌலவி அல்ஹாஃபிழ் சதக்கத்துல்லாஹ் 
மஸ்லஹி ஃபாழில் தேவ்பந்த் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

ஹாஜிகளுடன் ஜமாத் செயலாளர்

ஹாஜிகளுடன் ஜமாத் பொருளாளர்ஹாஜிகளை வாழ்த்தி உரையாற்றிய சங்கைக்குரிய அறிஞர் பெருமக்கள்:


ஷஹீது அரூஸி
மௌலவி கே.எஸ். எஸ். செய்யது இஸ்மாயீல் சிராஜி ஏர்வாடி தர்ஹா (தலைவர், கடலாடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை)
மௌலவி அல்ஹாஃபிழ் எஸ். ஷஹீது இப்ராஹீம் அரூஸி.  இமாம், சாயல்குடி (செயலாளர்,கடலாடி வட்டார ஜமாஅத்துல் உலமா 
மௌலவி அல்ஹாஃபிழ் ரூஹுல் அமீன் காஷிஃபி ஃபாழில் மழாஹிரி இமாம், கீழச்செல்வனூர் (பொருளாளர்,கடலாடி வட்டார உலமா சபை)
மௌலவி செய்யது இப்ராஹீம் ஜமாலி (ஆய்வாளர், மாவட்ட ஐக்கிய நலக் கூட்டமைப்பு, இராமநாதபுரம்)
மௌலவி உஸ்மான் மிஸ்பாஹி  இமாம், கடலாடி
மௌலவி ஜாஃபர் அலி ஃபைஜி இமாம், மரியூர்
மௌலவி ஹாஜா முஹ்யித்தீன் சிராஜி இமாம்,ஹனஃபி பள்ளி,நரிப்பையூர்
மௌலவி செய்யது சுலைமான் யூசுஃபி இமாம், ஷாஃபிஈ பள்ளி நரிப்பையூர்
oppilan
 சதக் மஸ்லஹி
மௌலவி அமானுல்லாஹ் மன்பஈ மதரசா ஆசிரியர்,ஷாஃபி பள்ளி,நரிப்பையூர் 
மௌலவி கியாசுத்தீன் இன்ஆமி  இமாம், இதம்பாடல்
மௌலவி அமானுல்லாஹ் மன்பயி  இமாம்,குருவாடி
மௌலவி மஹ்மூது மன்பஈ ஒப்பிலான்
மௌலவி சேக் சாஜித் அன்வாரி இமாம், மேலச்சிக்கல்
முஹம்மது இத்ரீஸ் ஆலிம் இமாம், வாலிநோக்கம்
தோட்டத்து லெப்பை ஆலிம் இமாம்,இராஜாக்கள்பாளையம்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பல ஆண்டுகளாக தொடர்ந்து ஹஜ் செய்துவரும் அனுபவம் வாய்ந்த அல்ஹாஜ் ஜபருல்லாஹ் (செயலாளர், ஜே.எம்.எஸ். அரபிக்கல்லூரி,மதுரை) அவர்கள் அற்புதமான சிறப்புரை நிகழ்த்தினார்கள்.


ரூஹுல் அமீன் காஷிஃபி
இறுதியாக புனித ஹாஜிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.கவுரவிக்கப்பட்ட ஹாஜிகள்:


ஒப்பிலான்:
UNWO ஜமாலி
அல்ஹாஜ் வைப்பாத்தான்
அல்ஹாஜ் ரஷீத் கான்- அல்ஹாஜ்ஜா பஷரியா,
அல்ஹாஜ் இப்ராஹீம்ஷா-அல்ஹாஜ்ஜா ரஹீமா பீவி
அல்ஹாஜ்ஜா சுப்ஹானி, அல்ஹாஜ்ஜா பரீதா, அல்ஹாஜ்ஜா ரஃபீக்கா


மாரியூர்:
அல்ஹாஜ் முஹம்மது சலீம்


வாலிநோக்கம்:
அல்ஹாஜ் ந.க. செய்யது இப்ராஹீம்-அல்ஹாஜ்ஜா பூஹானிதா பேகம்


நரிப்பையூர்:
அல்ஹாஜ் ஷம்சு இப்ராஹீம்-அல்ஹாஜ்ஜா ரசூல் பீவி
அல்ஹாஜ் முஹம்மது ஆசாத்- அல்ஹாஜ்ஜா ரஹ்மத் பீவி


கீழச்செல்வனூர்
அல்ஹாஜ் நைனா முஹம்மது- அல்ஹாஜ்ஜா ஜமாலியா பேகம்
அல்ஹாஜ் ஷம்சுத்தீன்- அல்ஹாஜ்ஜா காதர் பீவி


மேலச்சிக்கல்:
அல்ஹாஜ் காதர் சுல்தான்- அல்ஹாஜ்ஜா சித்தீக்கா பீவி


சிக்கல்:
அல்ஹாஜ் சுக்கூர்


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒப்பிலான் ஜமாஅத்தின் உதவித் தலைவர் ஜனாப் ஷாகுல் ஹமீது,  செயலாளர் ஜனாப் ஃபக்ருத்தீன்,  பொருளாளர்
ஜனாப் முஹம்மது ஃபாரூக் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். ஒப்பிலான் துணை இமாம் அல்ஹாஃபிழ் புரோஸ் கான் பம்பரமாகச் சுழன்று வந்தவர்களை விழுந்து விழுந்து உபசரித்தார்.


விழாவுக்கு வந்திருந்த அனைத்து ஹாஜிகளும் ஜமாஅத்தினரும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டைப் பாராட்டி வட்டார உலமா சபையினருக்கும் ஒப்பிலான் ஜமாஅத்தினருக்கும் நன்றி செலுத்தி விடை பெற்றுக்கொண்டனர்.அல்ஹம்து லில்லாஹ்!

04 ஜனவரி, 2012

டி.வி. முசீபத்தே!-1நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் ஏகன் அல்லாஹ்வை ஏற்றிப் போற்றி என்னுரையைத் துவங்குகிறேன்۔
 ஏற்றமிகு சலவாத்தும் சலாமும் ஏந்தல் நபி(சல்) அவர்களின் மீதும் எழுச்சிமிக்க தோழர்கள் வாஞ்சைமிக்க வலிமார்கள் மீது உண்டாவதாக.

டி.வி. நிஃமத்தா? முசீபத்தா? என்று கேட்டால் பல மணி நேரம் பட்டிமன்றம் நடத்தித்தான் முடிவுக்கு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. முழுமையான ஒவ்வொரு முஃமினும் அடித்து சொல்வார்கள்: டி.வி. ஒரு முசீபத்துதான் என்று. சமுதாய நலனில் அக்கறை கொண்ட அத்தனை பேரும் அழுத்திச் சொல்வார்கள்: டி.வி. ஒரு ஆபத்து என்று.
இதை நான் சொல்லவில்லை.. புகழ்பெற்ற பல பத்திரிக்கைகள் ஒப்புக்கொள்கிற உண்மை நடுவர் அவர்களே!

வார்னிங்! டி வி கேன்பி ஹசடஸ் டூ சில்ட்ரன்ஸ் '' எச்சரிக்கை! டி.வி. குழந்தைகளுக்கு ஒரு பெரிய ஆபத்து!'' என்ற தலைப்பில் அமெரிக்கப் பத்திரிக்கை ஒன்றில் சமீபத்தில் ஒரு செய்தி வந்தது. அதில் ஒரு அதிர்ச்சியான ஆய்வை வெளியிட்டிருந்தார்கள்:

 •  டி.வி பெற்றோர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
 • தொடர்ந்து டி.வி. பார்ப்பதினாலும் கண்ட கண்ட காட்சிகளைக் காண்பதினாலும் பிள்ளைகளின் மனவளர்ச்சி பல்வேறு வகைகளில் பாதிக்கப் படுகிறது.
 •  அவர்களின் பொன்னான நேரமெல்லாம் டி.வியின் முன்னேயே கழிந்துவிடுகிறது.
 அதுமட்டுமா? டி வி வந்த பிறகு சுறுசுறுப்பான பிள்ளைகள்கூட சோம்பேறியாகிவிட்டனர்.
குழந்தைகள். எப்படி இருக்கவேண்டும்? பாரதியார் அழகாகப் பாடினார்:
    ஓடி விளையாடு பாப்பா-நீ
    ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
    கூடி விளையாடு பாப்பா-ஒரு
    குழந்தையை வையாதே பாப்பா
ஓடி விளையாடச் சொன்னார் பாரதியார். அனால் இன்று ஓடி விளையாடுவதை விட்டு விட்டு குழந்தைகள் பல மணி நேரம் டி வி முன்னே அமர்ந்து விடுகின்றனர். அதிலும் நல்ல படம் என்றால் மலம் ஜலத்தைக் கூட அடக்கிக்கொண்டு அமர்ந்து விடுகின்றனர்.

நடுவர் அவர்களே! இந்த சுட்டி டி வி வந்து பட்டி தொட்டி எல்லாம் குட்டிப் பசங்களை குட்டிச் சுவராக்கிவிட்டது.

 • மாயாஜாலம் என்ற பெயரில் நம்பமுடியாத பல கற்பனைக் காட்சிகளை அடிக்கடி காண்பித்து ஒன்றும் அறியாத சின்னஞ்சிறு குழந்தைகளை பொய்யான உலகில் தள்ளுகிறார்களே.. இதெல்லாம் தேவைதானா?
 • சக்திமான் என்ற தொடர் வெளிவந்தபோது அதன் பின்னணியில் ஏற்பட்ட விபத்துகள் கொஞ்சமா நஞ்சமா? பத்திரிக்கையில் பார்த்திருப்பீர்கள்; படித்திருப்பீர்கள் எவ்வளவு தூரத்திலிருந்து விழுந்தாலும் பரவாயில்லை..சக்திமான் பறந்து வந்து நம்மைக் காப்பாற்றிவிடுவார் என்று நம்பி எத்தனை குழந்தைகள் மாடியிலிருந்து கீழே விழுந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டன? பரிதாபமாய்ப் பலியான பச்சிளங் குழந்தைகளின் உயிர்களுக்கு என்ன பதில்கூறப் போகிறீர்கள்?

ஆகவே டி வி என்பது பல விபரீதங்களை ஏற்படுத்தும் முசீபத்தே! முசீபத்தே!!
-------------------------

சுட்டி டிவியில் சில நேரம் சில கண்றாவியும் உண்டு அது என்ன?   இங்கே பார்க்கவும்
இது தொடர்பான இதர பதிவுகள்:

01 ஜனவரி, 2012

அழிவு நாளின் அடையாளங்கள்
மகளின் தயவில் தாய்
أَنْ تَلِدَ الْأَمَةُ رَبَّتَهَا، وَأَنْ تَرَى الْحُفَاةَ الْعُرَاةَ الْعَالَةَ أَصْحَابَ الشَّاءِ يَتَطَاوَلُونَ فِي الْبُنْيَانِ 
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பது. அதாவது தாய் மகளின் தயவில் வாழும் அவல நிலை ஏற்படுவது
நூல்: புகாரி 4777, 50

பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, 
ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி
வாழ்வார்கள் ( புகாரி)
குடிசைகள் கோபுரமாகும்

 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَطَاوَلَ النَّاسُ بِالْبُنْيَانِ


இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர்.
இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டார்கள்.
நூல் : புகாரி 7121
விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்

 مِنْ أَشْرَاطِ السَّاعَةِ، أَنْ يَقِلَّ الْعِلْمُ، وَيَظْهَرَ الْجَهْلُ، وَيَظْهَرَ الزِّنَا،


யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் (புகாரி 80, 81, 5577, 6808, 5231)


கொலைகள் பெருகுதல்

 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْكَذِبُ، وَيَتَقَارَبَ الْأَسْوَاقُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَيَكْثُرَ الْهَرْجُ "، قِيلَ: وَمَا الْهَرْجُ؟ قَالَ: " الْقَتْلُ "


கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் (புகாரி 85, 1036, 6037, 7061)


தகுதியற்றவர்களிடம் பொறுப்பு

 فَإِذَا ضُيِّعَتِ الْأَمَانَةُ فَانْتَظِرِ السَّاعَةَ، قَالَ: كَيْفَ إِضَاعَتُهَا؟ قَالَ: إِذَا وُسِّدَ الْأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرِ السَّاعَةَ "


அமானிதம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபிகள்
நாயகம் அவர்கள் கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர்
கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு
காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று
விடையளித்தார்கள்.
நூல் : புகாரி 59, 6496

பாலை வனம் சோலை வனமாகும்

 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضَ، حَتَّى يُهِمَّ رَبَّ الْمَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ، وَحَتَّى يَعْرِضَهُ، فَيَقُولَ الَّذِي يَعْرِضُهُ عَلَيْهِ لَا أَرَبَ لِي 

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும்
கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது
நூல் : முஸ்லிம் 1681

காலம் சுருங்குதல்
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَقَارَبَ الزَّمَانُ فَتَكُونُ السَّنَةُ كَالشَّهْرِ، وَالشَّهْرُ كَالْجُمُعَةِ، وَتَكُونُ الْجُمُعَةُ كَالْيَوْمِ، وَيَكُونُ الْيَوْمُ كَالسَّاعَةِ، وَتَكُونُ السَّاعَةُ كَالضَّرَمَةِ بِالنَّارِ
காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று)ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒருவிநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.
நூல் : திர்மிதீ 2254)


நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ وَتَكْثُرَ الزَّلَازِلُ۔۔۔

 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَرَوْا عَشْرَ آيَاتٍ: طُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، وَيَأْجُوجَ وَمَأْجُوجَ، وَالدَّابَّةَ، وَثَلَاثَةَ  خُسُوفٍ: خَسْفٍ بِالْمَشْرِقِ، وَخَسْفٌ بِالْمَغْرِبِ، وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ، وَنَارٌ تَخْرُجُ مِنْ قَعْرِ عَدَنَ تَسُوقُ النَّاسَ أَوْ تَحْشُرُ النَّاسَ، فَتَبِيتُ مَعَهُمْ حَيْثُ بَاتُوا، وَتَقِيلُ مَعَهُمْ حَيْثُ قَالُوا

பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ 
 ( நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,
12079, 12925, 13509.)

நெருக்கமான கடை வீதிகள்
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْكَذِبُ، وَيَتَقَارَبَ الْأَسْوَاقُ
கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்
நூல்: அஹ்மத் 10306

பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
 وَتَكْثُرَ النِّسَاءُ، وَيَقِلَّ الرِّجَالُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ 
பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின்
அடையாளமாகும் 
நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

ஆடை அணிந்தும் நிர்வாணம்
رب كاسيات عاريات
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல்
தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.
நூல் : முஸ்லிம் 3971, 5098

உயிரற்ற பொருட்கள் பேசுவது
وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُكَلِّمَ السِّبَاعُ الْإِنْسَ، وَيُكَلِّمَ الرَّجُلَ عَذَبَةُ سَوْطِهِ، وَشِرَاكُ نَعْلِهِ، وَيُخْبِرَهُ فَخِذُهُ بِمَا أَحْدَثَ أَهْلُهُ بَعْدَهُ

விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு
வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது 
நூல்: அஹ்மத் 11365

பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ قَوْمٌ يَأْكُلُونَ بِأَلْسِنَتِهِمْ، كَمَا يَأْكُلُ الْبَقَرُ بِأَلْسِنَتِهَا 
தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும்வரை யுக முடிவு நாள் ஏற்படாது .
நூல்: அஹ்மத் 1511

சாவதற்கு ஆசைப்படுதல்
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ بِقَبْرِ الرَّجُلِ، فَيَقُولَ: يَا لَيْتَنِي مَكَانَهُ،


இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது (புகாரி 7115, 7121)

இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْبَعِثَ دَجَّالُونَ كَذَّابُونَ قَرِيبٌ مِنْ ثَلَاثِينَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ
ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது ( புகாரி 3609, 7121)

முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்
'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள்
பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால்
நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது
யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான்
குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள்.( புகாரி 3456)

யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا الْيَهُودَ حَتَّى، يَقُولَ: الْحَجَرُ وَرَاءَهُ الْيَهُودِيُّ يَا مُسْلِمُ هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ 


யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த
யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன்
ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும் .( புகாரி 2926)

கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்' ( புகாரி 5179)

யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்
காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி. (புகாரி 7119)

கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ رَجُلٌ مِنْ قَحْطَانَ يَسُوقُ النَّاسَ بِعَصَاهُ "


(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால்
மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது 
(புகாரி 3517, 7117)

செல்வம் பெருகும்
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضَ، حَتَّى يُهِمَّ رَبَّ الْمَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ، وَحَتَّى يَعْرِضَهُ، فَيَقُولَ الَّذِي يَعْرِضُهُ عَلَيْهِ لَا أَرَبَ لِي


செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது (۔புகாரி 1036, 1412, 7121)
ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்
கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று
எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான். ( புகாரி 1424)

மாபெரும் யுத்தம்
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَقْتَتِلَ فِئَتَانِ دَعْوَاهُمَا وَاحِدَةٌ 


இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள். ( புகாரி 3609, 7121, 6936)

பைத்துல் முகத்தஸ் வெற்றி

யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!


1. எனது மரணம்


2. பைத்துல் முகத்தஸ் வெற்றி


3. கொத்து கொத்தாக மரணம்


4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்
திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு


5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்


6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.
அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12ஆயிரம் பேர் இருப்பார்கள்.  புகாரி 3176

மதீனா தூய்மையடைதல்
துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்
தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது
(நூல் : முஸ்லிம் 2451)

அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை
யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்
இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும (முஸ்லிம் 3546)

மாபெரும் பத்து அடையாளங்கள்
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.


1 - புகை மூட்டம்


2 - தஜ்ஜால்


3 - (அதிசயப்) பிராணி


4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது


5 - ஈஸா (அலை) இறங்கி வருவது


6 - யஃஜுஜ், மஃஜுஜ்


7 - கிழக்கே ஒரு பூகம்பம்


8 - மேற்கே ஒரு பூகம்பம்


9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்


10 - ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது 
நூல்: முஸ்லிம் 5162.

அல்லாஹ் நம் அனைவரையும் இந்த சோதனைகளிலிருந்து பாதுகாப்பானாக. ஆமீன்!
                                             ----------------------
இது தொடர்பான பிற பதிவுகள்