30 டிசம்பர், 2011

2012ல் உலகம் அழியப்போகிறதா? டிசம்பர் 21, 2012
 ஏங்க…..உங்களுக்கு தெரியுமா டிசம்பர் 21, 2012 அன்னிக்கு உலகம் அழியப்போகுதாமே? அப்படின்னு உங்ககிட்ட யாராவது சொன்னா…..அடக்கொடுமையே அப்படியா? ஐய்யையோ….நான் இன்னும் ஒன்னுமே அனுபவிக்கலியே ! அப்படின்னு பொலம்புர கூட்டத்துல ஒருத்தரா இருப்பீங்களா இல்ல, ஆஹா….ஆரம்பிச்சிட்டாய்ங்கடா திரும்பவும்! ஏண்டா நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா? அதான் 2000-துல ஒருமுற இப்படியெல்லாம் பிட்டப்போட்டு படுத்திட்டீங்களேடா….அது போதாதா? அப்படின்னு கடுப்பாகிற கூட்டத்துல ஒருத்தரா இருப்பீங்களா? நீங்க எந்தக் கூட்டத்துல ஒருத்தரா இருந்தாலும் சரி, 2012-ல உலகம் அழியப்போகுதுன்னு ரொம்ப நாளா ஒரு பிட்டு, இன்டர்னெட்டுள சுத்திகிட்டு இருக்குங்கோவ்!
 இது ஒரு புரளி….புரளி….புரளி மட்டுமே! அப்படின்னு நான் சொல்லலீங்க! இந்த புறளியப்படிச்சுட்டு/பார்த்துட்டு உலக மக்கள்ல பல பேரு நாசாவைச் சேர்ந்த, உலகின் தலைசிறந்த விண்வெளி ஆய்வாளர் டேவிட் மோரிசனுக்கு மின்னஞ்சல் மழையா பொழிஞ்சாங்களாம்! அந்த மின்னஞ்சல் மழையில் தொப்பலா நனஞ்சி?! இம்ச தாங்காம இந்த புறளியில என்னதான் இருக்குன்னு கண்டுபிடிக்க ஒரு ஆய்வையே மேற்கொண்டதாகச் சொல்றாரு மோரிசன்.அந்த ஆய்வின் மூலம்தான் அது வெறும் புரளின்னு கண்டுபிடிச்சிருக்கார் அவர்!
சரி, அப்படி என்னதான் அந்த புரளின்னு கொஞ்சம் வெளக்கமாப் பார்போம் வாங்க. அதாவது, சமீபத்துல திடீர்னு இணையதளத்துல ஒரு புரளி கெளம்புச்சி. அது என்னன்னா, மாயன் நாள்காட்டி அப்படின்னு ஒரு நாள்காட்டி இருக்காம்.அந்த நாள்காட்டி இப்பொ நாம் பயன்படுத்துற “க்ரிகோரியன் காலண்டர்” மாதிரி இல்லையாம்.அது கிட்டத்தட்ட மூனு நாள்காட்டி ஒன்னா சேர்ந்த நாள்காட்டியாம் (சொல்லப்போனா இன்னும் நெறைய பிட்ட போடராங்கோ….!).இந்த மாயன் காலண்டர்லதான் டிசம்பர் 21, 2012 அன்னிக்கு உலகம் அழியப்போகுதுன்னு போட்டிருக்காம்.அதாவது, ஒரு பெரிய விண்வெளிக்கல் தாக்கி நம்ம பூமி சுக்கு நூறா ஒடஞ்சி தூள் தூளாகப் போகுதாம்!?


நன்றி: http://padmahari.wordpress.com

மாயன் காலண்டர் யென்பது என்ன? மாயர்கள் உருவாக்கியது மாயன் காலண்டர். கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தென் அமெரிக்காவில் வாழ்ந்த மக்கள். கட்டிடக்கலை, வானசாஸ்திரத்தில் வல்லவர்கள். கணித சூத்திரங்களில் கைதேர்ந்தவர்கள்.மாய மந்திரங்களில் மன்னர்கள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு: மாயன் காலண்டர்.
நுட்பமான கணிதவியல் பரிணாமங்களைக் கொண்டு துல்லியமாக வகுக்கப்பட்டுள்ளதாக நம்பப் படுகிறது.ஆனால், அந்த காலண்டர் கி.மு.3113-ல் தொடங்கி கி.பி. 2012-ல் முடிகிறது. இதுதான் இப்போது ஒரு பெரும் புயலை எழுப்பியுள்ளது.  கணிதக்கலையில் கைதேர்ந்த திறமைவாய்ந்த மாயர்கள் 2012 வுடன் ஏன் காலண்டரை முடித்தார்கள்? அப்படியானால் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது: 2012 உலகம் அழியப்போகிறது என்று. இப்படி ஒரு கதையை சிலர் ஜோடித்திருக்கிறார்கள்.

 இப்படித்தான் பீதியைக் கிளப்பி, எல்லோருக்கும் பேதியை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இண்டர்நெட் சைட்களில்.
உண்மை என்ன?

மாயன் எழுதிய காலண் டரின் தொடர்ச்சி கிடைக்காமற்போயிருக்கலாம். அல்லது காலண்டரின் தொடர்ச்சியை ஆரம்பிக் கும்முன் மாயன்மறைந்திருக்கலாம். யுத்தம் போன்ற காரணங்களால் காலண்டரைத் தொடர்ந்துகணிப்பதில் இடையூறை சந்தித்தி ருக்கலாம்.சிலர் பைபிளில் ஆதரம் இருப்பதாக கூறுகிறார்கள் உன்மையில் பைபிளில் 2012 ஐப் பற்றி இல்லவே இல்லை

பைபிளில் என்னதான் உள்ளது?
''பூமியில் மிகப்பெரும் போர் நடக்கும். அந்தப் போரின் முடிவில், கடவுள் பூமிக்கு வந்து ஆயிரம் ஆண்டு பூமியை ஆள்வார், அதற்குப் பிறகு இறந்த அனைவரும் மறு உயிர் பெற்று நல்லவர்கள் சொர்க்கத்திற்கும் கெட்டவர்கள் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள்''. இதுதாங்க!

யார், எப்போது சொன்னது?
பைபிள் புத்தகங்களில் கடைசியாக உள்ளது 'திருவெளிப்பாடு (அ) வெளிப்படுத்தல்' (Revelation). இதை எழுதியவராகச் சொல்லப்படுபவர் 'ஜான்'. காலம், கி.பி.1 அல்லது 2 ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எப்படி 'நாஸ்ட்ராடமஸ்' என்பவர் பல முன்னறிவுப்புகளை சொல்லிவிட்டுச் சென்றதாகக் கூறுகிறார்களோ, அதேபோல் உலகத்தின் இறுதிநாட்களைப் பற்றி 'கடவுள் தனக்கு சொன்னதாக' இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கூறிக்கொள்கிறார். இதில் 17 - ம் அதிகாரத்தில் மேற்கண்ட இறுதிப் போர் நடப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இதற்கு முந்தைய அதிகாரங்களில் பல சம்பவங்கள் நடக்கும் என்றும் முன்னறிவித்திருக்கிறார் ஜான்.
முந்தைய 16 அதிகாரங்களில் சொல்லப்பட்ட விசயங்கள் நடந்தால் மட்டுமே 17-ம் அதிகாரத்தில் வரும் விசயத்தையும் நாம் நடக்கும் என்று நம்ப முடியும். முதல் பதினாறு அதிகாரத்தில், ஏழு முத்திரைகளுள்ள சுருளேடு, புதிய இஸ்ரேல், ஏழு எக்காளம், அரக்கப்பாம்பும் இரு விலங்குகளும், நாடுகள் ஒன்றுதிரட்டப்படுதல்.... இப்படி பல விசயங்கள் நடக்கும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நடந்துவிட்டனவா? அல்லது நடந்துகொண்டிருக்கின்றனவா? என்று கேட்டால், அதற்குச் சரியான பதில் இல்லை. 


1843 ஏப்ரல் 3

இது மாதிரியான பீதி 1843 லேயே கிளம்பிவிட்டது. கிளப்பியவர் ஒரு பாதிரியார். பெயர் வில்லியம் மில்லர்.
அவர் என்ன சொன்னார்?
1843 ஏப்ரல் 3-ஆம் தேதி உலகம் அழியப் போகிறது இது என் துல்லியமான கணிப்பு என்றார். அதை நம்புவது போல அந்த வருடம் ஒரு வால்நட்சத்திரமும் தெரிந்தது. இதை நம்பி பலர் இருக்கிற சொத்தையெல்லாம் விற்று பணமாக்கி ஜாலி பண்ணினார்கள்.பிறகு குறிப்பிட்ட தேதியில் இங்கிலாந்தின் மலைக் குன்றுகளில் ஏறி உலக அழிவை எதிர்நோக்கி நின்றிருந்தார்கள். இன்னும் சிலர் உலக அழிவைக் காணப் பயந்தும் பின்னர் சொர்க்கத்தில் இடம் இல்லாமல் போய்விடும் என்று எண்ணியும் முன்கூட்டியே தற்கொலை செய்துகொண்டனர். ஆனால் அவர் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை

கி.பி.2000

இப்படித்தான் 1999ஆம் ஆண்டு முடிந்ததுமே உலகம் அழிந்துவிடும் என்று பலரும் டுமீல் விட்டுத் திரிந்தார்கள்.' நாஸ்ட்ரடாமஸ்' கணித்திருக்கிறார், அவரின் கணிப்பு பொய்யானதில்லை என்று அடித்துப் பேசினார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் பாகுபாடின்றி நடுநடுங்கி செத்தது உலகம். உலகம் தான் அழியப் போகிறதே என்ற எண்ணத்தில் பல்வேறு சமூகக் குற்றங்கள் நடந்தது. நம்மூர் கிராமப்புறங்களில் கூட இந்த பீதியைப் பயன்படுத்தி தென்னந்தோப்புகளிலும், கம்மாய்க்கரைகளிலும் பல பாலியல் குற்றங்கள் நடந்ததாக பத்திரிகைகளில் வாசித்திருக்கிறோம். 1999 முடிந்து எத்தனையோ வருடங்கள் கடந்துவிட்டது. நாமெல்லாம் செத்தா போய் விட்டோம்?

2126 ஆகஸ்டு 14

இன்னொரு கருத்து நிலவுகிறது: கி.பி.2126 ஆகஸ்டு 14-ந் தேதி உலகம் அழியப் போகிறது
இந்த கருத்தை சொல்லி இருப்பவர் சர்வதேச வானியல் ஆராய்ச்சி சங்கத்தின் நிபுணர் பிரையன் மார்ஸ்டென் என்பவர்.
அவர் கூறுவதென்ன?
ஒவ்வொரு ஆண்டும் 'ஸ்விப்டட்டில்' எனும் வால்நட்சத்திரம் பூமியைக் கடந்து செல்கிறது. வழக்கமான தனது பாதையில் சென்று கொண்டிருக்கும் இது 2126 ல் பூமிக்கு நேர்கோட்டில் வந்து பூமியில் பலமாக மோதும் அதனால் அணுகுண்டு வெடிப்பதைவிட பயங்கரமான பாதிப்புகள் ஏற்படும். பூமியில் பல மைல்களுக்கு பள்ளம் உண்டாகும். எரிமலைகள் வெடிக்கும். கடல் கொந்தளிக்கும் ஆறுகள் திசை மாறும். ஒட்டுமொத்தத்தில் உலகம் அழியும்.
இதில் நமது கருத்து என்ன?
நீங்கள் குறிப்பிடும் அந்த தேதியில் வால் நட்சத்திரம் மோதுவதோ பயங்கர நாசம் ஏற்படுவதோ நடந்தாலும் நடக்கலாம்.அதற்காக ஒட்டுமொத்த அழிவும் அப்போதுதான் என்பதை நிச்சயமாக சொல்ல முடியாது. 
ஏனெனில் இன்ன தேதியில்தான் என்று அறுதியிட்டு உறுதியாக யாரும் கூறமுடியாது; கூரவும் கூடாது 

 • 5 விஷயங்களைப் பற்றி அல்லாஹ் ஒருவனே அறிவான்

 مَفَاتِحُ الْغَيْبِ خَمْسٌ: إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ، وَيُنْزِلُ الْغَيْثَ، وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ، وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ 

 • அழிவு நாள் எப்போது? என்று ஏந்தல் நபியிடம் வினவப்பட்டபோது அதன் அடையாளங்களைப் பற்றியே சொன்னார்கள்:

சிறு அடையாளங்கள் 
إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ، وَيَثْبُتَ الْجَهْلُ، وَيُشْرَبَ الْخَمْرُ، وَيَظْهَرَ الزِّني 
منْ أَشْرَاطِ السَّاعَةِ، أَنْ يَقِلَّ الْعِلْمُ، وَيَظْهَرَ الْجَهْلُ، وَيَظْهَرَ الزِّنَا، وَتَكْثُرَ النِّسَاءُ، وَيَقِلَّ الرِّجَالُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ "
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ وَتَكْثُرَ الزَّلَازِلُ وَيَتَقَارَبَ الزَّمَانُ وَتَظْهَرَ الْفِتَنُ وَيَكْثُرَ الْهَرْجُ وَهُوَ الْقَتْلُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضُ "


அறிவு ஞானம் குறைந்துவிடும்; அறியாமை பரவிவிடும்; விபச்சாரம் பெருகும்; ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகமாவர் இறுதியில் 50 பெண்களுக்கு 1 ஆண் என்ற விகிதம் நிலவும். 
பூகம்பம் அதிகமாகும் நேரம் சுருங்கும்; குழப்பங்கள் பெருகும் கொலை அதிகமாகும்
குடி கும்மாளம் தாராளமாகும் பயங்கர தீமைகள் கூட பட்டவர்த்தனமாக பகிரங்கமாக நடக்கும்
இது போன்ற ஏரளமான சிறு அடையாளங்களைப் பட்டியலிட்டார்கள் இவை அனைத்தும் தற்போது தாரளமாக நடக்கிறது.
பெரிய அடையாளங்கள் 
 بَلَغَ عَبْدَ اللَّهِ بْنَ سَلَامٍ مَقْدَمُ رَسُولِ اللَّهِ الْمَدِينَةَ فَأَتَاهُ، فَقَالَ: إِنِّي سَائِلُكَ عَنْ ثَلَاثٍ لَا يَعْلَمُهُنَّ إِلَّا نَبِيٌّ، قَالَ: مَا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ وَمَا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ وَمِنْ أَيِّ  شَيْءٍ يَنْزِعُ الْوَلَدُ إِلَى أَبِيهِ وَمِنْ أَيِّ شَيْءٍ يَنْزِعُ إِلَى أَخْوَالِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ : " خَبَّرَنِي بِهِنَّ آنِفًا جِبْرِيلُ قَالَ فَقَالَ عَبْدُ اللَّهِ ذَاكَ عَدُوُّ الْيَهُودِ مِنَ الْمَلَائِكَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ : أَمَّا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ فَنَارٌ تَحْشُرُ النَّاسَ مِنَ الْمَشْرِقِ إِلَى الْمَغْرِبِ وَأَمَّا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ فَزِيَادَةُ كَبِدِ حُوتٍ وَأَمَّا الشَّبَهُ فِي الْوَلَدِ، فَإِنَّ الرَّجُلَ إِذَا غَشِيَ الْمَرْأَةَ فَسَبَقَهَا مَاؤُهُ كَانَ الشَّبَهُ لَهُ وَإِذَا سَبَقَ مَاؤُهَا كَانَ الشَّبَهُ لَهَا، قَالَ: أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ، "


அப்துல்லாஹ் இப்னு சலாம் ஆரம்பத்தில் ஒரு யூதப் பண்டிதர். நபியவர்கள் மதினா வந்திருக்கிரார்கள் எனக் கேள்விப் பட்ட அவர் உடனே விரைந்து வந்து நபியிடம் ''உங்களிடம் 3 வினாக்கள் வைப்பேன் அவைகளுக்கு நபியால்தான் விடை தர முடியும்
1.அழிவு நாளின் அடையாளங்களில் முதலாவது எது?
2.சொர்க்கத்தில் கொடுக்கப்படும் முதல் உணவு எது?
 சில குழந்தை தாயின் உருவத் தோற்றத்தையும் சில குழந்தை தந்தையின் உருவத் தோற்றத்தையும் பெறுவது எவ்வாறு?
நபியவர்கள் பதில் தந்தார்கள்: 
அழிவு நாளின் அடையாளங்களில் முதலாவது பயங்கரமான பெருந்தீ. அந்த தீ பரவி மக்களை கிழக்கிலிருந்து மேற்கு வரை துரத்தி ஒன்று சேர்க்கும்
இது போன்று இன்னும் சில அடையாளங்களையும் வேறு ஹதீசில் கூறியுள்ளார்கள்.  
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا، فَإِذَا رَآهَا النَّاسُ آمَنَ مَنْ عَلَيْهَا، فَذَاكَ حِينَ لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا، لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ "

 • இமாம் மஹ்தி (அலை) வருகை
 • தஜ்ஜாலின் வருகை மற்றும் குழப்பம்
 • அவனை அழிக்க இறைத் தூதர் ஈசா (அலை) வருகை அவர்களின் 40 ஆண்டு ஆட்சி 
 • யஃஜூஜ் மஃஜூஜ் யென்ற அதிசய மனிதர்கள் வருகை
 • ஒரு மலைக் குன்றிலிருந்து அதிசய மிருகம் வெளிப்பட்டு மனிதர்களிடம் உரையாடுதல்
 • மேற்கு திசையில் சூரியன் உதயமாகுதல்

இவை அனைத்தும் நடந்த பிறகுதான் உலகம் அழியும் 


 தற்பொழுது 2012-ல் உலகம் நிச்சயமாகஅழியாது என்பதில்தைரியமாக இருங்கள். ஆனால் வாழும் வரை இந்த பூமியைச் சரியான முறையில்வைத்திருக்க நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும். பூமியின் ஆயுளைக்குறைக்கும் வேலையைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் மரம்நடுவதும், இயற்கையைப் பேணுவதும், சச்சரவின்றி தியானம் செய்வதும், பகைமறப்பதும், தண்ணீரை அளவாகப் பயன் படுத்துவதும் அவசியமாகும்.
                                 ---------=---------------------------------------
இது தொடர்பான பிற பதிவுகள்:28 டிசம்பர், 2011

அன்றும் - இன்றும்


 • தல்ஹா (ரலி) அவர்களுக்கு நஃபில் தொழுகையில் பைரஹா தோட்டத்தின் நினைவு வந்ததால் அந்த தோட்டத்தையே வக்ஃபு செய்து விட்டார்கள். தொழுகைக்கு இடையூறென்றால் அப்படி ஒரு தோப்பே வேண்டாம் என்பது அவர்களின் நிலை. இன்று நமக்கு ஃபர்ளு தொழுகையில் கடை அல்லது தோட்டம் நினைவுக்கு வருமானால் அதை வக்ஃபு செய்யத் துணிவோமா?
 • ஆரம்பத்தில் சஹாபாக்கள் பசியின் காரணமாக தொழுகையில் நிற்கும்போது மயங்கி விழுந்தார்கள் . இன்று நாம் வயிறு நிரம்ப சாப்பிட்டதினால் ''உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு'' என்று உறங்கி தொழுகையை விட்டுவிடுகிறோம்.
 • சஹாபாக்கள் தொழுகை சஃப்பில் சிறிது நேரம் நின்று விசாலமான ரிஸ்கைப் பெற்றுக் கொண்டார்கள். இன்று நாம் ரேஷன் பலமணி நேரம் நின்றும் ஒரு கிலோ சர்க்கரை 2 லிட்டர் மண்ணெண்ணை பெறுகிறோம். தொழுகை சஃப்பில் நிற்க தயாரில்லை.
 • சஹாபாக்கள் நான்கு பைசா சம்பாதிக்க நாலாயிரம் மஸ்அலாக்களை விசாரித்தறிவார்கள். நாம் நாலாயிரம் ரூபாய் சம்பாதிக்க நான்கு மஸ்அலாக்களைக்கூட விசாரிப்பதில்லை.

 • சஹாபாக்கள் பைத்துல் முகத்தசை பார்வையை தாழ்த்தி நடக்கும்  ஒரு சுன்னத்தை உயிர்ப்பித்ததின் மூலம் இரத்தம் சிந்தாமல் வெற்றி கொண்டனர். இன்று பல லட்சம் பேர் இரத்தம் சிந்தி பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தி போர் புரிந்தும் அதை வெற்றிகொள்ள முடியவில்லை.
 •  அன்று ஒரு முஹத்திஸ் மையை உலர்த்த தான் வாடகைக்கு இருந்த வீட்டின் சுவற்றிலிருந்து ஒரு சிட்டிகை மண்ணைக் கூட எடுக்க பயந்தார்; இன்று வாடகை வீட்டில், வந்ததுமே வீடு எனக்கே சொந்தம் என்கின்றனர். எப்படியும் வெளியேற்றவேண்டுமானால் பகிடி கொடுக்காமல் ஒரு அடி கூட எடுத்து வைக்கமாட்டேன் என்கின்றனர்.
 • அன்று தஸ்பீஹ் ஓதியதால் உள்ளங்கள் பிரகாசம் அடைந்தன. இன்று தஸ்பீஹ்தான் பிரகாசிக்கிறது (ஏனெனில் அது ரேடியம் தஸ்பீஹ்) ஆனால், உள்ளங்கள் என்னவோ இருட்டாகவே கிடக்கிறது.
 • அன்றைய முஸ்லிம்கள் ஈமானுக்காக அரச பதவியையும் உதறித் தள்ளினார்கள். ஆனால் இன்று நாம் ஒரு பியூன் வேலைக்காக ஈமானையும் உதறித் தள்ள தயார். தட்டு கழுவும் வேலைக்காக தாடியை தவிர்க்கவும் தயார்.
 • அன்று சஹாபாக்கள் கடையிலும் அல்லாஹ்வை தியானித்தனர்.ஆனால் இன்று நாம் தொழுகையிலும் கடையைப் பற்றி நினைக்கிறோம்
 • சஹாபாக்கள் சபிக்கப்பட்ட பஜார்களையும் பள்ளியின் சூழ்நிலைபோல் மாற்றினார்கள். ஆனால் இன்று நாம் பள்ளிகளையும் பஜாரைப்போல் ஆக்கிவிட்டோம்;சந்தைக் கடைபோல் ஆக்கி சந்தி சிரிக்க வைத்துவிட்டோம்
 • அன்று காட்டில் ஆட்டிடையன்கூட அல்லாஹ் என்னைப் பார்க்கிறான் என்று பயந்து ஆட்டை மோசடியாக விற்கவில்லை. இன்று பள்ளிக்கு வந்தே செருப்பைத் திருடி விற்று வயிறு வளர்க்கின்றனர்.
 • அன்று இரவின் இருட்டில் தனிமையில் பாலில் தண்ணீர் கலக்க தாய் சொன்னபோதும் அல்லாஹ் பார்க்கிறான்;அப்படி செய்யக்கூடாது'' என ஒரு பெண் சொன்னாள்; இன்று பட்டப் பகலில் பலர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பாலில் தண்ணீரையல்ல; தண்ணீரில் பாலை கலந்துவிடுகின்றனர்.
 • அன்று ஒரு தாய், இறந்து போன தன் சின்னஞ்சிறு மகனை இரண்டு ரகஅத் தொழுது இறைஞ்சி எழுப்பிக் காட்டினார். இன்று நமது பிள்ளைகளை சுபுஹுக்கு எழுப்ப முடிகிறதா?
 • அன்று பெண்கள் வீட்டு வேலைகள் அனைத்தையும் சளைக்காமல் செய்துவிட்டு தனது ரப்பின் கடமைகளையும் நிறைவேற்றினார்கள். அதிகாலையிலேயே எழுந்து தஹஜ்ஜத் சுப்ஹு தொழுதுவிட்டு வீட்டுவேலைகளைக் கவனித்தார்கள். இன்று பெண்கள் இரவு முழுதும் டிவி சீரியல்களில் மூழ்கி இரவுகளை வீணாக்கி சுப்ஹு தொழுகையைக்கூட தவறவிட்டு காலை எட்டு மணிக்கு எழும் பரிதாப நிலை.26 டிசம்பர், 2011

ஃபேஸ்புக் என்னும் பேரபாயம்பெற்றோர்களே ஜாக்கிரதை !
ஒரு மகளின் நிர்வாண படம் அவளின் தந்தைக்கே மின்னஞ்சல் மூலம் வந்தால் எப்படி இருக்கும்?

 வந்தது கடந்த சில வாரங்களுக்கு முன்பு  பேஸ்புக் மூலமாக.

இனையதளத்தில் உலவுபவர்களுக்கு ஃபேஸ்புக் (Facebook) எனபது தெரியாமல் இருக்காது ஃபேஸ்புக் எனப்படும் சைத்தானின் மரணகுழியில் உலகத்தில் உள்ள இளைஞர்கள் குறிப்பாக பெண்கள் மூழ்கி கிடக்கிறார்கள். இதில் நாம் சமுதாயத்து பெண்களின் எண்ணிக்கை இஸ்லாமிய ஆண்களைவிட அதிகமாக உள்ளதுதான் பரிதாபம்

 கணவன் மட்டுமே பார்க்கும் தங்களின் அழகையும் அலங்காரத்தையும் விதம் விதமாக படம்பிடித்து ஃபேஸ்புக் தளத்தில் கடைவிரிதிருக்கிரார்கள் நம் தீன்குலபென்மனிகள். இதில் உறுப்பினராக இருக்கும் அனைவருமே பருவவயது பெண்கள் இதில் திருமணமான பெண்களும் அடங்குவர். இவர்கள் இந்த இணையதளத்தில் தங்களை விதவிதமாக அடிக்கி வைத்து காத்திருப்பது யாரோ ஒரு கண்ணுக்கு தெரியாத ஆண்மகனுக்காக மட்டுமே.

 இந்த கேடுகெட்ட இனையதளத்தில் உலவும் நாம் சமுதாய பெண்கள் நாசமாய் போன கதைகள் ஏராளம் ஏராளம். இந்த நட்பு வட்டாரத்தில் தங்களின் அனைத்து அந்தரங்ககளையும் ஒரு அந்நிய ஆடவனோடு அல்லது ஆடவர்களோடு பகிர்ந்துகொண்டு ஒரு வித இன்பம் அடைகிறார்கள இளம்பெண்கள் நாம் சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் பலர் இந்த சைத்தானின் ஆயுதத்தை கையில் ஏந்தியதன் மூலம் தூய வழியை தூக்கி எறிந்துவிட்டு நரகத்தின் வாசலை நோக்கி நெடும் பயணம் மேற்கொண்ட கதைகள் நிறையவே உள்ளன. அதுமட்டுமின்றி இந்த ஃபேஸ்புக் மூலமாக அறிமுகமாகும் சில நட்புகள் கேவலப்பட்டு நின்ற கதைகள் கூட உள்ளன 

சென்னை ஆலந்துறை சேர்ந்த திருப்பதி திருநின்றவூரை சேர்ந்த சித்திக் என்பவர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி நண்பனார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நண்பர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள் திருப்பதி தன் வீட்டுக்கு சித்தீக்கை அழைத்தார் சாப்பாடு முடிந்து நண்பர்கள் இருவரும் இரவு நன்றாக உறங்கினர் காலையில் எழுந்து பார்த்தால் சித்திகையும் காணோம் திருப்பதியின் செல்போனையும் காணோம் அத்தோடு திருப்பதியின் 2 பவுன் மோதிரத்தியும் எடுத்துக்கொண்டு கம்பி நீட்டிய சித்தீக்கை போலீசார் பிடித்து டின் கட்டிவிட்டார்கள்.


 இது ஒருபுறம் இருக்க,

 பெங்களுருவில் நடந்த விவாகரம் ஃபேஸ்புக் வலைதளத்தின் மீது வெறுப்பை உண்டாக்கியிருக்கிறது கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் வலைதளத்தில் அழகான இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின் நிர்வாண படங்கள் விதவிதமாக ஃபேஸ்புக்கில் உலாவந்தது. அதுமட்டுமின்றி அந்த படங்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் அனுப்பபட்டிருந்தன அத்தோடு இளம் பெண்களின் படங்கள் அவர்களின் தகப்பனாரின் ஈமெயில் முகவரிக்கும் அனுப்பப்பட்டு இருந்தன.இதில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்த பெங்களுருவாசிகள் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இதை ஆராய்ந்த சைபர் கிரைம் போலீசார் அந்த படங்கள் அனைத்தும் ஒட்டுவேலை செய்து போலியாக தயாரிக்கப்பட்டவை என்பதை கண்டுபிடித்தனர். இது சம்பந்தமாக ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் விசாரித்த போதுதான் ஃ பேஸ்புக்தளம் ஹேக் செய்யப்பட்டு களவாடப்பட்ட தகவல் வெளியானது. ஃபேஸ்புக் சர்வருக்குள் புகுந்த குற்றவாளிகள் சர்வரை முடக்கி அதில் இருந்த அழகான பெண்களின் கணக்குக்குள் நுழைந்து அவர்களின் முழு விபரத்தையும் அவர்களின் விதவிதமான புகைபடங்களியும் திருடி அந்த பெண்களின் தலையை மட்டும் எடுத்து தங்களிடம் இருந்த நிர்வாணபடத்துடன் இணைத்து அவர்களுக்கும் அவர்களின் காப்பாளர் பெயர் இருந்த முகவரிக்கும் அனுப்பிவைத்திருந்தது தெரியவந்தது.
 இதுபோன்று இழிசெயல்கள் தொடராமல் இருக்க ஃபேஸ்புக் இணையதளத்தில் தங்களின் விபரங்களையும் புகைப்படங்களையும் பதிய வேண்டாம் என பெங்களுரு சைபர் கிரைம் காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 நம் வீட்டுப் பெண் எந்நேரமும் கம்ப்யூட்டரில் உட்கர்ந்து படித்துகொண்டிருக்கிறாள் என பெருமைப்பட்டு அவள் களைத்துபோகாமல் இருக்க காபி போட்டுதரும் பெற்றோர்களே!

 உங்களின் பெண்பிள்ளைக்கு நீங்கள் வாங்கிக் கொடுக்கும் செல்போனையும் கம்யூடரையும் வைத்து அந்த பெண் என்ன செய்கிறாள் என்பதை கண்காணியுங்கள்

 ஃபேஸ்புக் வழியாக நரகத்திற்கான மரணகுழியை இப்போதே தோண்டிக்கொண்டிருக்கும் இளம்பெண்களை அந்த கேட்டை அகற்றி இறையச்சத்தை புகட்டுங்கள். இஸ்லாத்தின் கண்ணியத்தை எடுத்துரையுங்கள் மூமினாக வாழ்ந்து மூமினாக மரணிக்கும் அவளுக்கு கற்றுக்கொடுங்கள். ஃபேஸ்புக் என்னும் பேராபத்தில் இருந்து அவளை வெளியேற்றுங்கள், அவளை தீன்குலப்பெண்மணியாக மாற்றுங்கள்.

That soclai networking sites are a great way of striking up new friendships is nothing new – but a new survey carried out by magazines Shape and Men’s Fitness has revealed that almost four out five women and three and out five men agree that using Facebook and other services results in new couples having sex much sooner.
Around 1,200 people participated in the survey, and almost 80% of women, and 58% of men said thatsocial networks had helped them have sex in some way.
How do lovers stay in touch? According to the results, the text message is the first form of contact. And 70% of women, and 63% of men go on Google to find out information about potential partners. And if that wasn’t enough, apparently 72% of women admitted that after getting together with someone, they look up their boyfriend’s ex-girlfriends on Facebook.
Up until a few years ago, a good chat in a cafe would have been the best way to go about a break-up – but today, at least that 43% of women and 27% of men say that they have been dumped via social networks.
Whilst the survey reveals some interesting facts, the best thing is that singletons out there now know they can speed up the process of hooking up with somebody with the help of social networking sites – especially Facebook.

23 டிசம்பர், 2011

ஹாஜிகளுக்கு வரவேற்பும் பாராட்டு விழாவும்
இன்ஷா அல்லாஹ் வரும் 27-12-2011 செவ்வாய் காலை 9.30 மணியிலிருந்து பகல் 1-00 மணி வரை நமது ஒப்பிலான் தரீக்குல் ஜன்னா ஜும்ஆ பள்ளியில்
கடலாடி வட்டாரத்திலுள்ள ஊர்களிலிருந்து இவ்வருடம் ஹஜ்ஜுக்கு சென்ற சுமார் 20 புனித ஹாஜிகளுக்கு வரவேற்பும் பாராட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.


விழாவுக்கான ஏற்பாடுகளை கடலாடி வட்டார உலமா சபையினரும் ஒப்பிலான் ஜமாத்தினரும் தீவிரமாக செய்து வருகின்றனர். விழா சிறக்கவும் இனி வரும் காலங்களில் இதைவிட அதிகமான நபர்கள் ஹஜ்ஜுக்கு செல்லவும் தாங்கள் அனைவரும் துஆ செய்யுமாறு வேண்டுகிறோம்.

ரகசியத்தை உளரவேண்டாம்


முல்லாவின் புகழ் நாளுக்கு நாள் பெருகி வந்த காலகட்டம் அது.


இதன் காரணமாக அவருக்குப் பல சீடர்கள் சேர்ந்தனர். முல்லாவின் புகழ் மக்களிடையே அதிகரித்ததும் மன்னர் செவியிலும் முல்லாவின் புகழ் பற்றிய செய்தி  விழுந்தது. உடனே மன்னர் முல்லாவை அழைத்து அவருக்கு உரிய பதவியைக் கொடுத்தார்.

ஒரு நாள் முல்லாவின் நண்பர் ஒருவர், ''முல்லா! தங்களிடம் நீண்ட நாட்களாக ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்று  நினைத்திருந்தேன்,” என்றார்.


''அப்படியா! அது என்ன விஷயம்?” என்று கேட்டார் முல்லா.

ஒன்றுமில்லை முல்லா! உங்களை எல்லாரும் அறிஞர்  என்றும், தத்துவஞானி  என்றும் புகழ்கின்றனர். அரசர் உம்மை மதித்து உங்களுக்கு உயரிய பதவி அளித்துள்ளார். எப்படி இந்த அளவுக்கு தாங்கள் உயர்வு பெற்றீர்கள்?  இதன் ரகசியத்தை என்னிடம் கூறுவீர்களா?” என்று கேட்டார்.

உம்மிடம சொல்வதற்கு எந்தத் தடையும் இல்லை.ஆனால்,இந்த ரகசியத்தைக் கூறினால்நீங்கள் ஊர் முழுவதும் தண்டோரா போட்டு விடுவீர்கள்! என்றார் முல்லா.

அப்படியெல்லாம் செய்யமாட்டேன்,” என்றார் முல்லாவின் நண்பர்.

கண்டிப்பாக ஒருவரிடமும் இதைக் கூறமாட்டீர்களே?”

சத்தியமாகக் கூறமாட்டேன். இதனால் எவ்வளவு லாபம் கிடைப்பதாக இருந்தாலும்,நீங்கள் சொல்லும் ரகசியத்தை ஒருவரிடமும் கூறமாட்டேன்’’

 “”எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் யாரிடமாவது, நான் சொன்னதைக் கூறிவிட்டால்…?”
திரும்பவும் கேட்டார் முல்லா.

கண்டிப்பாக ஒருவரிடமும் நீங்கள் சொன்ன ரகசியத்தைக் கூறமாட்டேன்.
கோடி பொன் கொட்டிக் கொடுத்தாலும் இந்த ரகசியத்தை வெளிப்படுத்த மாட்டேன்,”என்றார் முல்லாவின் நண்பர்.

நண்பரே! நானும் உங்களைப் போலத்தான்.
ஒரு ரகசியத்தைக் காப்பாற்றுவதில் நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்ளோ, அப்படித்தான் நானும். கோடி கோடியாகப் பொருள் கொடுத்தாலும் என்னிடம் உள்ள ரகசியத்தை வேறு ஒருவருக்குஎந்த சந்தர்ப்பத்திலும் கண்டிப்பாக கூறமாட்டேன்,” என்றார் முல்லா.

விருந்து எனக்கா? இந்த சட்டைக்கா?''


முல்லா ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்; குறித்த நேரத்தில் விருந்துக்கு சென்றார். எளிமையான உடையில் இருந்ததால் வாட்ச்மேன் உள்ளே விடவில்லை. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அனுமதிக்கவில்லை.
 முல்லா திரும்பி சென்றார்; கடைக்குச் சென்று ஒரு அழகான டிப்டாப்பான உடையை வாடகைக்கு வாங்கி அணிந்துகொண்டு மீண்டும் விருந்துக்கு வந்தார்.இப்பொழுது வாட்ச்மேன் வாயெல்லாம் பல்லாக வாங்க வாங்க என்று வரவேற்றான்.
 உள்ளே சென்ற முல்லா விருந்தை எடுத்து தன் சட்டைப் பைக்குள் போட்டு ''சட்டையே ! இந்தா தின்னு'' என்று சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரும் ''என்ன முல்லா.. என்னாச்சு உங்களுக்கு?'' என ஏளனமாக கேட்டனர்.
 முல்லா சொன்னார்; ரொம்ப நல்லா சொன்னார்: ஆமா.. முதலில் எளிமையா வந்தேன்; எதுவும் கிடைக்கல.. டிப்டாப்பா வந்தேன்; எல்லாமே கிடச்சது. அப்படின்னா இந்த விருந்து எனக்கா? இந்த சட்டைக்கா?''

21 டிசம்பர், 2011

இஸ்லாமிய பார்வையில் ஆடை அலங்காரம்


 • ஆடை இல்லா மனிதன் அரை மனிதன்
 •  அன்னாசு பில்லிபாஸ் الناس باللباس  ஆடையை வைத்தே மனிதர்கள் மதிக்கப்படுகிறார்கள்
முல்லா ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்; குறித்த நேரத்தில் விருந்துக்கு சென்றார். எளிமையான உடையில் இருந்ததால் வாட்ச்மேன் உள்ளே விடவில்லை. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அனுமதிக்கவில்லை. முல்லா திரும்பி சென்றார்; கடைக்குச் சென்று ஒரு அழகான டிப்டாப்பான உடையை வாடகைக்கு வாங்கி அணிந்துகொண்டு மீண்டும் விருந்துக்கு வந்தார்.இப்பொழுது வாட்ச்மேன் வாயெல்லாம் பல்லாக வாங்க வாங்க என்று வரவேற்றான். உள்ளே சென்ற முல்லா விருந்தை எடுத்து தன் சட்டைப் பைக்குள் போட்டு ''சட்டையே ! இந்தா தின்னு'' என்று சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரும் ''என்ன முல்லா.. என்னாச்சு உங்களுக்கு?'' என ஏளனமாக கேட்டனர். முல்லா சொன்னார்; ரொம்ப நல்லா சொன்னார்: ஆமா.. முதலில் எளிமையா வந்தேன்; எதுவும் கிடைக்கல.. டிப்டாப்பா வந்தேன்; எல்லாமே கிடச்சது. அப்படின்னா இந்த விருந்து எனக்கா? இந்த சட்டைக்கா?''
 • ஆடையழகு அவசியம்தான்; அதற்காக ஆடையில் அனாச்சாரத்தைப் புகுத்தி கலாச்சாரத்தை மாற்றக்கூடாது 
தற்போதைய மாறி வரும் சூழ்நிலையால், இளைஞர்களையும் மற்றும் இளைஞிகளையும் டீ சர்ட் புரட்சியானது அவர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டு விட்டது. டீ சர்ட் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என்று ஆராய்ந்தால் மேலைநாட்டு கலாச்சாரம் என்று கூறலாம்

டீ சர்ட் சாதாரணமாக இருந்தால் பரவாயில்லை.. அதில் கூட என்னனென்ன அலங்கோலங்கள் இருக்கிறது என்பதினை நாம் பார்த்தால் கண்றாவியாக இருக்கும். பார்ப்பவர்களின் கண்களை கூசச்செய்யும் அளவிற்கு பல கலர்கள், பல கெட்ட கெட்ட வாசகங்கள், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், ரஸ்ஸிலின் போட்டோக்கள், பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என்று எல்லா நட்சத்திரங்களின் படங்கள் போட்டதாக இருக்கும். இது ஆண்கள் உடுத்தும் டீ சர்ட் என்பது மட்டுமில்லை, பெண்கள் உடுத்தும் டீ சர்ட்டிலும் இத்தகைய அலங்கோலங்கள் இருக்கத்தான் செய்யும்.
அது போல் ஜீன்ஸை எடுத்து கொண்டால், பல வண்ணங்கள்..பல வடிவங்கள்.. ஒரு பக்கம் கிழிந்து போய் இருக்கும் ஒரு பக்கம் கலர் மங்கிப்போய் இருக்கும். ஒரு வயதான முதியவர் தன்னுடைய பேரனிடம் இப்படி கேட்கிறார்.. என்ன பேரான்டீ. நீ வாங்கிட்டு வந்த பேண்ட் துணி (அவருக்கு ஜீன்ஸ் என்று சொல்ல தெரியவில்லை..) கிழிந்து தொங்குது.. அதற்கு பேரனின் பதில்.. போங்க.. தாத்தா.. உங்களுக்கு எப்பவும் ஒரு கிண்டல் தான்.. இது தான் இப்போது ஃபேஷன் தாத்தா என்பான்.
ஒரு இளைஞியிடம் ஒரு முதியோர்.. என்னபுள்ளையாக இருக்கிறாய் நீ.. ஆம்பிளை புள்ளை போடுற பேண்டை போட்டுக்கொண்டு திரிகிறாய்.. அந்த இளைஞியின் பதில்.. போங்க பெரிசு.. உங்க காலத்தில் இதுவெல்லாம் எங்கே கிடைத்தது.. எங்க காலம் வேற.. நாங்க நாகரீக காலத்தில் மாறி விட்டோம்.. இப்பாவெல்லாம் இது தான் எங்களுக்கு பிடிச்சு இருக்குது.. வேணும் என்றால் உங்களுக்கும் வாங்கி தரட்டா.. என்றுசொல்வாள்.. என்ன செய்வது.. காலங்கள் மாறிவிட்டது.. மாற்றங்கள் அவசியமானது தான். ஆனால் அது நாகரீகத்தினை குப்பைக்கு கொண்டு சென்றால் என்ன செய்வது..?..!
இதுமட்டுமல்லாமல், தற்போது பல கடைகளில் ஷார்ட்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அரைக்கால் டவுசர்கள் விற்பனைக்கு வந்து விட்டது. அதனையும் விரும்பி அணியக்கூடிய பலரை நாம் பார்த்து இருக்கலாம். அந்த ஆடையானது முழங்கால் தெரியக்கூடிய அளவிலும் மற்றும் தொடைகள் தெரியக்கூடிய அளவிலும் தான் இருக்கும். இத்தகைய ஆடைகளை அணியக்கூடியவர்கள் இளைஞிகளும் தான். ஆனால் இஸ்லாம் மார்க்கமோ இத்தகைய ஆடைகளை அணிவதை தடை செய்து உள்ளது. நாம் அணியும் ஆடையானது, நம்முடைய கணுக்கால் மேல் இருக்கவேண்டுமே தவிர கணுக்காலுக்கு கீழே இருக்கக்கூடாது என்றும், மற்றும் தொடைப்பகுதிகளையும் காலின் மற்ற பகுதிகளையும் மறைக்கக்கூடிய அளவிலும் தான் இருக்க வேண்டும். மானத்தை மறைக்கத்தான் ஆடையே தவிர மானத்தினை காற்றில் பறக்கவிடுவதற்கல்ல.
يا بني آدم قد انزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس  التقوى دالك خير (அல் அஃராஃப் 26)
இந்த வசனத்தில் ஆடை யென்பது 
1. மானத்தை மறைக்க வேண்டும்
2. ஓரளவு அழகாக இருக்கவேண்டும்
3. இதை விட மேலாக இறையச்சத்தை உண்டாக்க வேண்டும்
என்று கூறி இறையச்சம் என்ற ஆடைதான் சிறந்தது என்கிறான் இறைவன்.
எனவே ஆடை என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல; அது நமது உடலில் உள்ளத்தில் குணத்தில் சிந்தனையில் வாழ்வில் ஒரு மாபெரும் பிரதிபலிப்பை மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது.
 • உமர் (ரலி) அவர்கள் ஒருனாள் மஸ்ஜிதுன் நபவியில் குத்பா பிரசங்கம் நிகழ்த்த வந்தார்கள்.அலங்காரமான ஜுப்பா அணிந்திருந்தார்கள். குத்பா முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக அந்த ஜுப்பாவைக் கழற்றி எறிந்தனர்.''இதை இனி ஒருபோதும் அணியமாட்டேன்; ஏனெனில் இதை அணிந்தவுடன் உள்ளதில் அகம்பாவமும் ஆணவமும் உண்டாகிறது''என்றார்கள். 
மேற்படி வசனத்தின் அடிப்படையில் அறிஞர்கள் ஆடை என்றால் அதில் சில அம்சங்கள் அமைய வேண்டும் என்கிறார்கள். 
1. மானத்தை மறைக்க வேண்டும்
ஆடை அணிந்தும் மானம் மறையாமல் இருப்பதற்கு 3 காரணங்கள் இருக்கலாம்.
 • குட்டையாக சிறியதாக இருப்பது
 • மெல்லிசாக இருப்பது
 • மேடு பள்ளங்கள் தெரியும் அளவுக்கு இறுக்கமாக இருப்பது
மூன்றுமே தவறுதான்:
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது உம்மத்தில் பிந்திய காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள். அவர்கள் ஆடை அணிந்த நிர்வாணிகளாக இருப்பார்கள். அவர்களின் தலைகளின் மேல் ஒட்டகங்களின் திமில் போன்றவை (தலைமுடி வைக்கப்பட்டு) இருக்கும். அவர்களைச் சபியுங்கள். நிச்சயமாக அவர்கள் சபிக்கப்பட்ட வர்களே. (அல்லது சபிக்கப்பட வேண்டியவர்களே.) (அத்தபரானி)
رُبَّ كَاسِيَاتٍ فِي الدُّنْيَا عَارِيَاتٍ فِي الْآخِرَة 
மெல்லிய ஆடை அணியும் பெண்கள் தமது உடலின் வனப்பை, கவர்ச்சியை வெளிக்காட்டுபவர்களாவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக காட்சி தருபவர்களாவர் என்ற கருத்தையே நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸின் மூலம் சொல்கின்றார்கள் என இமாம்   ஸுயூத்தி கூறுகின்றார்கள்.
இவ்வாறு அரைகுறையாக ஆடை அணியும் பெண்களை எச்சரிக்கும் மற்றுமொரு ஹதீஸும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இரு பிரிவினர் நரகவாதிகள் ஆவர்(அவர்களுள்) ஒரு சாரார் மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பர். அவற்றைக் கொண்டு மக்களை அவர்கள் அடிப்பர். மறுசாரார் உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர். அவர்கள் (தீய வழியில்) செல்வதுடன் (பிறரையும்) தீய வழியில் செலுத்துவர். அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று காணப்படும். இத்தகையவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள். (முஸ்லிம்)  
பெண்களின்  ஆடை இறுக்கமானதாக உடலுடன் ஒட்டியதாக இருத்தல் கூடாது. மாறாக தளர்வாக, தாராளமானதாக, பெரிதாக இருத்தல் வேண்டும். ஆடை இறுக்கமாக இருந்தால் அது உடலமைப்பைக் காட்டும். இது பெண்ணுக்குரிய இஸ்லாமிய உடையின் நோக்கத்தைப் பாழ்படுத்தி விடும்.
பெண்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும்என்ற அல்குர்ஆனின் கட்டளை அருளப்பட்டபோது பெண்கள் தம் மெல்லிய ஆடைகளை கைவிட்டனர். தடித்த (கம்பளி போன்ற) துணிகளால் முந்தானைகளைத் தயாரித்துக் கொண்டனர் என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். (அபூதாவூத்)
 • ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு எகிப்திய ஆடையை உஸாமா (ரழி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். அவர் அதனை தனது மனைவிக்கு அணியக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள், நீர் அணியவில்லையா? என உஸாமாவிடம் கேட்டபோது, அதனை அவர் தனது மனைவிக்குக் கொடுத்து விட்டதாகக் கூறினார். அப்போது அன்னார், அதனை அணியும்போது அதனுள்ளே ஓர் உள்ளாடையை அணிந்து கொள்ளும்படி கூறும். ஏனெனில் அது அவளது உடலின் கட்டமைப்பை காட்டுவதாக இருக்குமோ என நான் அஞ்சுகின்றேன்என்றார்கள்.

2.وريشا அவலட்சணமாக இல்லாமல் ஓரளவு அழகாக இருக்கவேண்டும் 


قَالَ: " لا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ، وَلا يَدْخُلُ النَّارَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ "، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، الرَّجُلُ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنًا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ " إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ، الْكِبْرُ مَنْ بَطَرَ الْحَقَّ وَغَمَصَ النَّاسَ "

ணுஅளவும் உள்ளத்தில் பெருமை உள்ளவன் சுவனம் நுழையமுடியாது யென்று நபி (ஸல்) கூறியபோது ஒருவர் கேட்டார்: யாரசூலல்லாஹ்! ஒரு மனிதன் தன் ஆடை, செருப்பு அழகாக இருக்கவேண்டும் என விரும்புவது இயல்புதானே அதுவும் பெருமையா? ''இல்லை. அல்லாஹ் பேரழகன்; அவன் அழகை விரும்புகிறவன் (எனவே அதுவெல்லாம் பெருமையல்ல
 " كُلُوا وَاشْرَبُوا وَتَصَدَّقُوا وَالْبَسُوا وَلا سَرَفٍ، فَإِنَّ اللَّهَ سُبْحَانَهُ يُحِبُّ أَنْ يَرَى أَثَرَ نِعْمَتِهُ عَلَى عَبْدِهِ "
நன்றாக உண்ணுங்கள் பருகுங்கள் தானம் செய்யுங்கள் நன்றாக உடுத்துங்கள்; வீண்விரயம் செய்யாதீர்கள் அல்லாஹ் தஆலா தனது அடியார் மீது தன் நிஃமத்தின் பிரதிபலிப்பு தென்படுவதை விரும்புகிறான்
" كُلُوا، وَاشْرَبُوا، وَتَصَدَّقُوا، وَالْبَسُوا، غَيْرَ مَخِيلَةٍ وَلَا سَرَفٍ
நீ விரும்பியதை உண்; விரும்பியதை உடுத்து  ஆனால் வீண்விரயம் பெருமை இவை இரண்டும் இல்லாமல் பார்த்துக்கொள்!
பட்டு போன்றவை ஆண்களுக்கு ஆகாது ஏனெனில் அது பெண்களுக்கு வேண்டுமானால் அலங்காரமாக இருக்கலாம்; ஆண்களுக்கு ஆணவத்தை உண்டாக்கும்
 • " أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى فِي فُرُوجِ حَرِيرٍ ثُمَّ نَزَعَهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، صَلَّيْتَ فِيهِ ثُمَّ نَزَعْتَهُ؟، فَقَالَ: إِنَّ هَذَا لَيْسَ مِنْ لِبَاسِ الْمُتَّقِينَ "
 • حُرِّمَ لِبَاسُ الْحَرِيرِ وَالذَّهَبِ عَلَى ذُكُورِ أُمَّتِي، وَأُحِلَّ لِإِنَاثِهِمْ " ترمدي
 • " مَنْ لَبِسَ الْحَرِيرَ فِي الدُّنْيَا، لَمْ يَلْبَسْهُ فِي الآخِرَةِ، وَمَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا، لَمْ يَشْرَبْهُ فِي الآخِرَةِ، وَمَنْ شَرِبَ فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ فِي الدُّنْيَا، لَمْ يَشْرَبْ بِهَا فِي الآخِرَةِ، ثُمَّ قَالَ: لِبَاسُ أَهْلِ الْجَنَّةِ، وَشَرَابُ أَهْلِ الْجَنَّةِ، وَآنِيَةُ أَهْلِ الْجَنَّةِ
 • " مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ فِي الدُّنْيَا أَلْبَسَهُ اللَّهُ ثَوْبَ مَذَلَّةٍ يَوْمَ الْقِيَامَةِ  ثُمَّ تَلَهَّبُ فِيهِ النَّارُ
ஒப்பாகாதிருத்தல்
இன்றைய பல இளைஞிகள் கல்லுரிக்கு செல்கிறார்களோ இல்லை.. அவர்களுக்கு பிடித்தமான இளைஞர்களுடன் தான் அதிகம் சுற்றி வருகிறார்கள்அவர்கள் உடுத்தும் ஆடைகளை இவர்கள் உடுத்துவதும்இவர்கள் உடுத்தும் ஆடைகளை அவர்கள் உடுத்துவதும் இன்னொரு நாகரீகமாக மாறி விட்டதுஆண்கள் பெண்களை போல் ஒப்பனைகளை செய்வதையும்பெண்கள் ஆண்களை போல் ஒப்பனைகள் செய்வதையும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
 • ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல.’ (அஹ்மத், நஸாஈ, ஹாகிம்)

" لَعَنَ رَسُولُ اللَّهِ صلي الله عليه وسلم الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ " 
 • நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்குரிய ஆடைகளை அணியும் ஆண்களையும், ஆண்களுக்குரிய ஆடைகளை அணியும் பெண்களையும் சபித்தார்கள்.’ (அபூதாவுத், இப்னுமாஜா
 •  மூவர் சுவனம் புகமாட்டார்கள். அல்லாஹ் மறுமையில் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்கள் யாரெனில்) தனது பெற்றோருக்கு அநியாயம் செய்தவன், ஆண்களைப் போன்று நடந்து கொள்ளும் பெண், தனது மனைவி விபசாரத்தில் ஈடுபடுவதை அங்கீகரித்து அதற்கு ஒத்தாசையாக இருப்பவன் ஆகியோராவார்.(அஹ்மத், இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்)

ஆண்களின் ஆடை கரண்டைக்கு சற்று மேலாக இருக்கவேண்டும் 
 •  أَزُرَّةُ الْمُؤْمِنِ إِلَى أَنْصَافِ سَاقَيْهِ، لا جُنَاحَ عَلَيْهِ فِيمَا بَيْنَهُ وَبَيْنَ الْكَعْبَيْنِ، وَمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فِي النَّارِ، لا يَنْظُرُ اللَّهُ إِلَى مَنْ جَرَّ ثَوْبَهُ بَطَرًا "-(بيهقي)
 • ثَلاثَةٌ لا يُكَلِّمُهُمُ اللَّهُ وَلا يَنْظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلا يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ  قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَنْ هُمْ خَابُوا وَخَسِرُوا؟، فَأَعَادَهَا، فَقُلْتُ: مَنْ هُمْ؟ فَقَالَ: الْمُسْبِلُ، وَالْمَنَّانُ، وَالْمُنْفِقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ كَاذِبًا
கரண்டைக்கு கீழ் உள்ளது நரகிற்கு சொந்தம் அப்படி உடுத்துபவனை அல்லாஹ் மறுமையில் அன்பு கொண்டு பார்க்கமாட்டான்; பேசமாட்டான்; கடும் வேதனையும் உண்டு۔

தொப்பி அணிந்து அதற்கு மேல் தலைப்பாகை  
أَنَّ رُكَانَةَ صَارَعَ النَّبِيَّ  فَصَرَعَهُ النَّبِيُّ صلي الله عليه وسلم قَالَ رُكَانَةُ: وَسَمِعْتُ النَّبِيَّ صلي الله عليه وسلم يَقُولُ: " فرْقُ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُشْرِكِينَ الْعَمَائِمُ عَلَى الْقَلانِسِ "
நமக்கும் இணைவைப்பாளர்களுக்கும் வித்தியாசம் தொப்பி அணிந்து அதற்கு மேல் தலைப்பாகை கட்டுவதுதான் ( திர்மிதி، அபூதாவூத்، பைஹகீ)

சுன்னத்தான ஆடைகளை விரும்பி அணியவேண்டும் யாராவது ஏளனம் செய்தாலும் அதைப் பொருட்படுத்தக்கூடாது:

உதுமான் (ரலி) ஹுதைபியா உடன்படிக்கையின் பொழுது காஃபிர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்த புறப்பட்டனர். அப்பொழுது அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒரு யோசனை சொன்னார்: உங்களின் கைலி கரண்டைக்கு மேலே உள்ளது இதை மக்கா குறைஷிகள் ஏளனமாகப் பார்ப்பார்கள்.மதிக்கமாட்டார்கள்; ஆகவே சற்று கைலியை கரண்டைக்கு கீழே இறக்கிக் கட்டுங்கள்'' உதுமான் (ரலி) உடனே மறுத்தார்கள் ம்ஹூம்... இதுதான் நம் தோழர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள கைலி கட்டும் முறை.'' 

சிறந்த ஆடை எவை?
ஆண்களுக்கு வெண்மை:
" الْبَسُوا هَذِهِ الثِّيَابَ الْبِيضَ فَإِنَّهَا أَطْيَبُ وَأَطْهَرُ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ ("بيهقي)


عَنْ عَائِشَةَ، قَالَتْ: سُئِلَ رَسُولُ اللَّهِ عَنْ وَرَقَةَ، فَقَالَتْ لَهُ خَدِيجَةُ: إِنَّهُ كَانَ صَدَّقَكَ، وَلَكِنَّهُ مَاتَ قَبْلَ أَنْ تَظْهَرَ، فَقَالَ رَسُولُ اللَّهِ : " أُرِيتُهُ فِي الْمَنَامِ، وَعَلَيْهِ ثِيَابٌ بَيَاضٌ وَلَوْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ لَكَانَ عَلَيْهِ لِبَاسٌ غَيْرُ ذَلِكَ "،( ترمدي)


அறிவியலார் தரும் அற்புதமான தகவல்:
சூரியனிலிருந்து நம் உடலுக்கு தக்க வெப்பத்தை மட்டும் கிரகித்துக்கொண்டு தேவைக்கு அதிகமானதை ரிட்டன் செய்து விடுகிற தன்மை வெண்மைக்கு மட்டுமே உள்ளது 

 நபியவர்கள் சில நேரம் பச்சையும் அணிந்துள்ளனர் 
عَنْ أَبِي رِمْثَةَ، قَالَ: انْطَلَقْتُ مَعَ أَبِي نَحْوَ النَّبِيِّ  النَّبِيُّ صلي الله عليه وسلم فَرَأَيْتُ عَلَيْهِ بُرْدَيْنِ أَخْضَرَيْنِ "


-----------------------------------------------------------------------------------------------------
இது தொடர்பான இதர பதிவுகள்: