01 நவம்பர், 2011

ஹாஜிகள்: மினிஸ்டர்கள் மினி 'ஸ்டார்கள்'

''ஹாஜிகளும் உம்ரீகளும்  அல்லாஹ்வின் தூதுக் குழுவினர். அவர்கள் கேட்டால் அல்லாஹ் தருவான்; அவர்கள் பரிந்துரை செய்தால் ஏற்றுக் கொள்வான்... .''
                                                               -(--நபிமொழி.)
                                         மினிஸ்டர்கள்  
நம் அமைச்சர்கள் (மினிஸ்டர்கள்)
மத்திய அரசிடம் சென்று
 நம் கோரிக்கைகளை எடுத்து வைப்பது போல
ஹாஜிகள்
 மத்திய பூமிக்குச் சென்று
 நமக்காகவும் துஆ செய்கிறார்கள்.
எனவே இவர்கள் அல்லாஹ்வின் அமைச்சர்கள்.

    மினி 'ஸ்டார்கள்'

ஸ்டார்கள் (கோள்கள்)
 சூரியனை நடுமத்தியில் வைத்து
 வலம் வருவது போல 
இவர்கள்
  கஅபாவை பூமியின்  நடுமத்தியில் வைத்து
 வலம் வருகிறார்கள்.
 எனவே இவர்கள் மினி 'ஸ்டார் கள்.