09 அக்டோபர், 2011

பாப்பா பாட்டு


சூரியன் உதிக்கும் முன்னாலே
சுப்ஹு தொழுகை தொழவேண்டும்

நண்பகல் உச்சி சாய்ந்தவுடன்
நன்றாய் ளுஹரைத் தொழவேண்டும்

மாலை நேரம் வந்தவுடன்
மாண்பாய் அஸரைத் தொழவேண்டும்

மெல்ல சூரியன் மறைந்தவுடன்
விரைவாய் மக்ஃரிப் தொழவேண்டும்

இரவுநேரம் வந்தவுடன்
இஷாவை இனிதாய் தொழவேண்டும்

ஒவ்வொரு நாளும் ஐவேளை
ஒழுங்காய் இறையைத் தொழவேண்டும்
----------------------------------------------------------------------------


இது தொடர்பான மற்ற பதிவுகள்: