28 அக்டோபர், 2011

அரஃபா நோன்பு' - பிறை ஒன்பதிலா? அல்லது அரஃபாவில் ஹாஜிகள் கூடிய அன்றா?

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பிறையைக் கொண்டே நாட்கள் கணக்கிடப்படுகிறது. பிறைக் காண்பது என்பது, ஒரு இடம் அமைந்துள்ள அமைப்பு மற்றும் வானிலைகளை வைத்து இடத்திற்கு இடம் மாறுவதற்குதான் வாய்ப்புகள் அதிகமாக‌ இருக்கும் என்ற இந்த நியதி எக்காலமும் மாறாதவை. நாம் எவ்வளவுதான் விஞ்ஞானத்தில் விண்ணைத் தொட்டாலும் ஒரு நாளின் ஆரம்பத்தையும் முடிவையும் மாற்றி அமைக்கும் திறன், படைப்பினங்களாகிய‌ நமக்கில்லை. இது வல்ல நாயன் வகுத்துள்ள அமைப்பாகும்!

எனவேதான் முக்காலமும் பொருந்தக்கூடிய இம்மார்க்கத்தில் நபி(ஸல்)அவர்கள் அழகான முறையில் வழிகாட்டிச் சென்றுள்ளார்கள். ஆக, எந்த நோன்பாக இருந்தாலும் அவரவர் பகுதிகளில் பார்க்கும் பிறைக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்க வேண்டும் என்ற அண்ணல் நபியவர்களின் கட்டளையை நாம் கடைப்பிடிக்கத் தவறிவிடக் கூடாது. இதோ அந்தக் கட்டளை:

"பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்" என்று நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

        அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி);  நூல்:புகாரி(1906)

அதேபோல், பிறைப் பார்த்துதான் ஹஜ்ஜைக்கூட தீர்மானிக்க வேண்டும் என்றே இறைவனும் நமக்கு கட்டளையிட்டுள்ளான்.

பிறைகளைப் பற்றி (முஹம்மதே!)  உம்மிடம் கேட்கின்றனர். 'அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:189)

மேலும் அவரவர் பகுதிகளில் பார்த்த பிறைக் கணக்கின் அடிப்படையில்தான் இரண்டு பெருநாட்களையும் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்பதே நபிவழி என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
"நீங்கள் 'நோன்பு' என முடிவு செய்யும் நாள்தான் நோன்பாகும். 'நோன்புப் பெருநாள்' என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாளாகும். 'ஹஜ்ஜுப் பெருநாள்' என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும்" என்று நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
                   அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி); நூல்:திர்மிதீ

துல்ஹஜ் மாதம் முதல் பிறைக் கண்டதிலிருந்து 10 - ம் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும். இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஆக, அதற்கு முந்திய ஒன்பதாம் நாள்தான் அர‌ஃபா நோன்பு நோற்கவேண்டிய நாளாகும். ஏனெனில், அரஃபா நோன்பு பற்றி வரக்கூடிய ஹதீஸ்களில் 'ஒன்பதாவது நாள்'என்று தெளிவாகவே குறிப்பிடப்ப‌ட்டுள்ளது.


"நபி(ஸல்)அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபி(ஸல்)அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்" என்று ஹுனைதா இப்னு காலித்(ரலி)அறிவிக்கிறார்கள்.
                    நூல்கள்: அபூதாவூத், நஸாயி, அஹ்மத்

"துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்"  என்று அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
                         நூல்:முஸ்லிம்(2151)

அதேசமயம் 'ஒன்பதாம் நாள்' என்று குறிப்பிட்டு சொல்லாமல் 'அரஃபா நாள்' என்று நபி(ஸல்)அவர்கள் கூறியதாக சில ஹதீஸ்களும் காணப்படுகின்றன. அதையும் இப்போது பார்ப்போம்.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.             
                  அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி); நூல்:முஸ்லிம்(1977)

துல்ஹஜ் பிறைப் பார்த்த ஒன்பதாம் நாள் ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் கூடுவதால் அன்றைய தினத்திற்கு 'அரஃபா நாள்' என்று பெயர் வந்தது. மேற்கண்ட ஹதீஸில் நபி(ஸல்)அவர்கள், 'அரஃபா நாள்' என்று கூறியுள்ளார்கள். அதே சமயம் அந்த ஒன்பதாவது நாளுக்கு 'அரஃபா நாள்' என்று பெயர் சொல்லப்பட்டாலும், நோன்பு வைப்பதைப் பொறுத்தவரை அன்றைய தினத்தில் நோன்பு வைப்பதை நபி(ஸல்)அவர்கள் எவ்வாறு நமக்கு நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்?


      அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை விசாரித்து வருவதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. ஹாஜிகள் எப்போது அரஃபாவில் தங்குகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ளத் தேவையில்லை என்ற அடிப்படையில்தான், மதீனாவில் காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாள் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் நோன்பு நோற்றார்கள். நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் காலத்தில், மக்காவில் முதல் பிறைக் காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்து வர‌ வசதிகள் இருந்தும்கூட‌ நபி(ஸல்)அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை.
         எனவே அரஃபாவில் ஹாஜிகள் தங்கும் நாள் என்பது சவூதியில் பிறைப் பார்த்த கணக்குப்படி நமக்கு எட்டாம் நாளாகக்கூட‌ இருக்கலாம். நாம் அதைப் பின்பற்றத் தேவையில்லை. 'அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் கூடியதை உறுதி செய்துக்கொண்டு நோன்பு வையுங்கள்' என்று எங்குமே நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவுமில்லை. அதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. ஆக, மதீனாவில் வாழ்ந்த நபி(ஸல்)அவர்கள் அரஃபாவில் உள்ள நிலையைப் பின்பற்றத் தேவையில்லை என்று எவ்வாறு நடைமுறைப்படுத்திக் காட்டினார்களோ, அவ்வாறுதான் நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது, நாம் பிறைப் பார்த்த கணக்குப்படிதான் ஒன்பதாம் நாளில் அரஃபா நோன்பை நோற்க வேண்டும்.

      ஆக‌வே  இந்த அர‌ஃபா நோன்பை நோற்று அண்ணல் நபியவர்கள் கூறிய அந்த நன்மையை நாமனைவரும் அடைய எல்லாம் வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக!

நன்றி : http://payanikkumpaathai.blogspot.com/

26 அக்டோபர், 2011

துல்ஹஜ் முதல் பத்து நாட்கள்: சிறப்பும் செய்யவேண்டிய அமலும்

 குர்பானி


முத்தான முதல் பத்து நாட்கள்
அல்லாஹ் சத்தியம் பண்ணுகின்ற பத்து நாட்கள் ‘‘அதிகாலையின் மீதும் பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக” (பஜ்ர் - 01)
قال الله تعالي وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ وَالْوَتْرِ (3)عن جابر رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : {والفجر وليال عشر}عشر الأضحية والوتر يوم عرفة والشفع يوم النحر هذا حديث صحيح رواه الحاكم في المستدرك
روي ان الله اختار من السنة ثلاث عشرات:العشر الأخير من رمضان لما فيه من بركات ليلة القدر, وعشر الأضحي لما فيه من يوم التروية ويوم عرفة والأضاحي والتلبية والحج وأنواع المناسك, وعشر المحرم لما فيه من بركات يوم عاشوراء , قال الفقهاء رح لو قال رجل لله علي أن أصوم أفضل الأيام في سنتي هده بعد رمضان يجب عليه العشر الأول من دي الحجة 
  
துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்தநாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி(ஸல்அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரேஅல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்செய்வதை விடவுமாஎன நபித்தோழர்கள் கேட்டார்கள்அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும்அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள். ( புகாரி)

நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.  ( ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்
1- ஹஜ் உம்ரா:ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும் மேலும்ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்  புகாரி முஸ்லிம்
2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவதுபாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில்ஈடுபடுவது.
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر (ترمذي)

இந்த நாட்களில் ஒரு நாள் நோன்பு நோற்பது ஓராண்டு நோற்பதற்கு நிகராகும் .அதில் ஓர்இரவு வணங்குவது லைலத்துல் கத்ரு இரவில் வணங்குவதற்கு நிகராகும்அறிவிப்பு;அபூஹுரைரா (ரலி)
                                  -திர்மிதி.
இஃக்லாஸ் (மனத்தூய்மைஅதிகரித்தால் நன்மை இன்னும் அதிகமாகும்.
அனஸ்(ரலிகூறினார்கள்இந்த நாட்களில் ஒவ்வொரு நாளின் நோன்பும் ஆயிரம் நாட்களுக்குசமம்அரபா நாளின் நோன்பு பத்தாயிரம் நாட்களுக்கு சமம்.

3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காகஅந்த நாளுக்கு முந்திய வருடத்தின்பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் எனநான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள். (-முஸ்லிம்)
பி (ஸல்அவர்கள் கூறினார்கள்: ''சுவனத்தில் முத்து மாணிக்கம் மரகதம் பவளங்களால் ஆன ஒரு மாளிகை உண்டு''.
ஆயிஷா (ரலி): ''யா ரசூலல்லாஹ் அது யாருக்கு?''
நபி: ''அரஃபா நாளில் நோன்பு வைப்பவருக்கு!''
அரஃபா நாளில் நோன்பு வைத்தவருக்கு அன்று காலையில் அல்லாஹ் நன்மையின் வாசல்களில் 30ஐ திறக்கிறான்; தீமையின் வாசல்களில் 30ஐ அடைக்கிறான்.
உம்மு சலமா(ரலி) கூறுகிறார்கள்: ''அரஃபா நாள் நல்ல திருநாள்;
நன்மையும் அபிவிருத்தியும் நிறைந்த நாள்; அருளும் மன்னிப்பும் அமைந்த நாள்!''

இப்னு ஜாவிர்து(ரலி) கூறுகிறார்கள் : நானும் என் தோழரும் கல்வி தேடி பயணமாணோம். அரஃபா தினத்தின் மாலையில் லூத் நபி கூட்டத்தினர் அழிக்கப்பட்ட இடம் அடைந்தோம். யதார்த்தமாக அங்கு சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் புழுதி படிந்த முகத்துடன் ஒருவன் இருந்தான். தலையெல்லாம் மண்.
‘நீ யார்?’   அவன் மவுனமாக இருந்தான்.
‘நீ இப்லீஸா?'’  ‘'ஆமாம்!'’  ‘ஏன் இந்த கோலம்?’
''அரஃபா மக்களின் காட்சியைப் பார்த்துத்தான்! 50 ஆண்டுகளாக அவர்களை வழிகெடுத்து வைத்திருந்தேன். இன்;று அரஃபா தினம் அவர்களின் மீது அருள் இறங்கிவிட்டது பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன. இதை என்னால் சகிக்க முடியவில்லை.அதனால் என் தலைமீது நானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டேன்.
எனக்கு ஆறுதல் வேண்டுமல்லவா? ஆகவே இங்கு ஓடி வந்துவிட்டேன். இங்கு அழிக்கப்பட்ட இந்த மக்களை நினைத்து என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.''1         (நுஸ்ஹத்துல் மஜாலிஸ்)
4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதிபோன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது
துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்தநாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லைஆகவேலாஇலாஹா இல்லல்லாஹ் அல்லாஹஅக்பர் அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளைஅதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.   ( அஹ்மத்)
இப்னு உமர் (ரலி) ,அபூஹுரைரா (ரலிஆகிய இரு நபித்தோழர்களும்துல்ஹஜ் (மாதம் ஆரம்ப)பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும்கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.  (புகாரி)
பெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து பிறை 13ம்நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும் கூறுவது.
  • إِذَا دَخَلَتْ الْعَشْرُ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ فَلا يَمَسَّ مِنْ شَعَرِهِ وَبَشَرِهِ شَيْئًا".   ( رواه مسلم) 
குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ் 1 லிருந்து குர்பானி அறுக்கும்வரை தன் முடி நகம் களைய வேண்டாம் (முஸ்லிம்)
---------------------------------------------


 قال ابن جارود خرجت أنا وصاحب لي في طلب العلم فمررنا عشية عرفة على مدينة قوم لوط فقلت لصاجي ندخل هذه المدينة ونشكر الله على ما عافانا مما ابتلاهم به فبينما نحن نطوف اذ رأيت رجلا كوسجا أغبر الوجه فقلنا له من أنت فتغافل عنا فقلنا له لعلك إبليس قال نعم قلنا له من أين أقبلت قال هذا وجهي من عرفات كنت أشفيت صدري من قوم أذنبوامنذ خمسين سنة فنزلت الرحمة عليهم في هذا اليوم فجعلت التراب على رأسي أنظر هؤلاء المعذبين حتى يسكن غضبي..

22 அக்டோபர், 2011

பிற தளங்கள்


பயனுள்ள இஸ்லாமிய தளங்கள்

சிந்தனைச் சரம்: நல்லதொரு குடும்பம்

சிந்தனைச் சரம்: நல்லதொரு குடும்பம்: ஹஜ்ஜுப் பெருநாள் முடிந்துவிட்டால் கூட அதன் அடையாளங்கள் சட்டென்று மறைந்து விடுவதில்லை. மலர் வாடினாலும் மணம் வீசுவது போல அதன் வாசனை தொடர்ந்து ...

தமிழ் செய்தி ஊடகங்கள்

21 அக்டோபர், 2011

பிறந்த மண் -- சிறந்த மண்வாலிநோக்கம்http://tawp.in/r/1zcn
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இருப்பிடம்: வாலிநோக்கம்
, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9.163°′″N 78.646°′″Eஅமைவு: 9.163°′″N 78.646°′″E
நாடு;  இந்தியா
மாநிலம்; தமிழ்நாடு
மாவட்டம்; இராமநாதபுரம்
ஆளுநர்; கொனியேட்டி ரோசையா[1] [2]
முதலமைச்சர்; ஜெ. ஜெயலலிதா[3] [4] [5]
மாவட்ட ஆட்சியர்; அருண்ராய் [6]
பெருந்தலைவர்
நேர வலயம்; IST (ஒ.ச.நே.+5:30)


வாலிநோக்கம் (ஆங்கிலம்:Valinokkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், பரமகுடி வருவாய் கோட்டம், கடலாடி வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்
.
[அமைவிடம்;
தூத்துக்குடி நகரில் இருந்து வடகிழக்கே அன் அளவக 90 கி.மீ. தூரத்திலும் இராமநாதபுரம் நகரில் இருந்து தென்மேற்காக 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.


நிர்வாக அலகு

மாவட்டம்: இராமநாதபுரம்
வருவாய் கோட்டம்: பரமகுடி
வட்டம்: கடலாடி
வருவாய் கிராமம்: வாலிநோக்கம்
ஊராட்சி ஒன்றியம்: கடலாடி
ஊராட்சி மன்றம்(பஞ்சாயத்து):வாலிநோக்கம்
Valinokkam

From Wikipedia, the free encyclopedia
Valinokkam is a village in Ramanathapuram district in Tamil Nadu where the Graves of Hazart Imraan Ummayah
 Al Badawiyyah shaheed raziyallah Ta'ala anhu and Hazrat Sulthan Abdul Qadir Raziyallah anhu along with numbers
 of shuhadaas who were martyred along with Badhusha Sulthan Syed Ibrahim Shaheed of Erwadi is found.
 There are invisible graves of thousands of martyrs in valinokkam since it is one of the major location where the war
 between Arabs and pandiyas held. There is a Kattupalli in valinokkam where the graves of a few Shuhadaas
 (Martyrs) are found. Being in the sea shore, Valinokkam is famous for salt production. The Tamil Nadu Salt
  corporation started Salt production from Valinokkam in the year 1974.[1]

Contents

  [hide

[edit]Imran Shaheed

[edit]As a leader of Robbery gang

Ummayya Al Badawiyya was theleader of robbery gang before joining the troop of Shaheed Badhusha

[edit]Badusha's words a cause for change

An advice given by Hazrat shheed badhusha was the reason for the change in mind of Hazrat Imran shaheed to leave
 the robbery gang.

[edit]Major role in the war

Imran shaheedd played a very important role in the war held between Pandiyas and Arabs in 12th Century

[edit]Martyrdom-A never ending life and day to day Karaamaat

Badhusha Imran shaheed was martyred in the war which led to the start of a never ending life.

[edit]Village

The village is situated on a peninsula. Hence
 it played an essential role in the ancient
 wars which occurred in the region.
 Nice Masjid is said to have been constructed
 by Jinns, because nobody knows
 who constructed this masjid;
 even very old people can't answer.

[edit]

  • Specialities of Valinokkam

    beautiful beach & fish (Vanjiram or seela)Tamil Nadu Salt Corporation
  • Magnesium factory (shut down)
  • Dhargaas
  •  Badawiyyah shaheed raziyallah Ta'ala anhu and Hazrat Sulthan Abdul Qadir 
  • Ship breaking port
  • best madhrasas