25 செப்டம்பர், 2011

Nikkah song திருமணப் பாடல்


இரண்டு மனங்கள் இணைந்து நடக்கும் இனிய திருமணம்
எந்த நாளும் கமழ வேண்டும் வாழ்வில் நறுமணம்
பதினாறு செல்வம் பாக்கியம் பெற்று நீங்கள் வாழ்கவே
பாசத்தோடு வாழ்த்துகின்றோம் வாழ்க வாழ்கவே
                                                                            (இரண்டு)

ஆதம் நபியுடனே ஹவ்வாவும்
அருமை நபியுடனே ஹதீஜாவும்
வேதம் போற்றுகின்ற நபிமார்கள்
வெற்றியான வாழ்க்கை வாழ்ந்தது போல்
இரண்டு பேரும் இதயம் இணைந்து இன்பம் சூழவே
திரண்டு வந்து வாழ்த்துகிறோம் வாழ்க வாழ்கவே
                                                                            (இரண்டு)

மனைவியின் மகிமைதனை விளங்கிடுவோம்
மஹரை மனமுவந்து வழங்கிடுவோம்
நிகரில்லாத மணவாழ்க்கையிலே
தடையில்லாத இன்பம் அடைந்திடுவோம்
இரண்டு பேரும் இதயம் இணைந்து இன்பம் சூழவே
திரண்டு வந்து வாழ்த்துகிறோம் வாழ்க வாழ்கவே
                                                                            (இரண்டு)
Writted by sadhak maslahi

12 செப்டம்பர், 2011

oppilan madrasa prayer


ஜனகனமண....
--------------
அனுதினம் உனதருள் நாடினோம் இறையே
பாரினில் பாக்கியம் நீ தா!
பஞ்சம் முசீபத்து நோயணுகாமல்
பாதுகாத்திடு இறைவா
உந்தன் கலாமை என்றும் அறிவாய்
இதயத்தில் இருந்திடச் செய்வாய்
அருள்மறை வழிதனில் இருக்க
அண்ணல் நபிவழி நடக்க
நீயே துணை புரிவாயே
ஜனங்களில் எங்கள் பெற்றோர்களுக்கும்
பாரினில் பாக்கியம் நீ தா!
யா கரீம் யா ரஹீம்
யாரப்பல் ஆலமீன்

11 செப்டம்பர், 2011

ajmir oppilan


இந்த பட்டிமன்றத்தின் தலைப்பு உயர்ந்த வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பது
கல்வியா செல்வமா?
இது போன்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்துவது
காலத்தின் கட்டாயம். காரணம் இன்று கல்வி'பொருளாதாரம் இரண்டிலும் மிகவும் பின்தங்கியுள்ள சமுதாயம் இந்த சமுதாயம்தான்.
சச்சார் கமிட்டியின் அறிக்கையில் இது மிக தெளிவாக படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பட்டிமன்றம் மூலமாகவும் கல்வி மற்றும் பொருளாதார அவசியத்தை மக்களுக்கு உணர்த்தலாம் என்ற மேலான எண்ணத்தில்தான் இந்த பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

Nisha Oppilan

ஜமிலத்: கல்வியே


கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
கல்லாதவருக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு

இந்த செருப்பு வாங்கத்தான் உதவும் உங்க செல்வம்;
சிறப்பு வேணும்னா அதுக்கு கல்வி வேணும்..புரியுதா?

வானளாவக் கோட்டைக் கட்டியவர்களெல்லாம் இன்று
மண்ணுக்குள்ளே மாண்டு விட்டனர்.அவர்கள்
உரம் போட்டு வளர்த்த உடலெல்லாம் உக்கி மக்கி
ஊணாகி வீனாகிவிட்டன.
இதுதான் துன்யா! இதுதான் செல்வம்!

மற்ற செல்வம் அழியக்கூடியது;
கல்வி பெருகக் கூடியது.

'அதோ போராரே அவரு 5 வருஷத்துக்கு முன்னாடி10 லட்சம் வச்சிருந்தாரு எல்லாம் செலவாகி இப்பநம்மகிட்ட வந்து டீ குடிக்க 10 ரூபா இருக்கான்னு
கேக்கறாரு' என்று சொல்வதுண்டு.

ஆனால் இப்படிச் சொல்லக் கேட்டதுண்டா:
'அதோ போராரே அவரு 5 வருஷத்துக்கு முன்னாடிM,A பட்டதாரியா இருந்தாரு;எல்லாம் செலவாகி இப்பஎட்டாம் வகுப்புக்கு எறங்கி வந்துட்டாரு.
கல்வி எவ்வளவு செலவழித்தாலும் பெருகிக் கொண்டே இருக்கும்.
அதைத்தான் திருவள்ளுவர் அழகாக சொன்னார்:
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு
மாடல்ல மற்றயவை .
செல்வத்திற்கு உயர்வே கல்வியை வைத்துத்தான் .
ஃப்ராங்க்ளின் என்ற அறிஞன் சொன்னான்:
'' செல்வம் அது கல்விக்காக செலவழிக்கப் படுமானால் நல்ல பலனைத் தரும் ''
(இன்னும் பல தகவல்கள்.... வீடியோவைப் பார்க்க.! )

sadhak about madrasa oppilan


ஏற்றமான மதரஸாவிற்கு ஏழு அம்சத் திட்டம்

1.தீனியாத் பாடத்திட்டம்
2.தஜ்வீத் முறையுடன் குர்ஆன் ஓதும் பயிற்சி
3.நுழைவுப் படிவம்
4.நுழைவு மற்றும் மாதாந்திரக் கட்டணங்கள்(ரசீதுடன்)
5.சீருடை(மாணவர்களுக்கு ஜிப்பா மற்றும் பைஜாமா;
மாணவிகளுக்கு மக்கன்னா
6.குறைந்தது 1 மணி நேரப் பாடம்
7.20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்.

10 செப்டம்பர், 2011

Model makthab ஏழு அம்சத் திட்டம்

       
 •             தீனியாத் பாடத்திட்டம்
 • தஜ்வீத் முறையுடன் குர்ஆன் ஓதும் பயிற்சி
 • நுழைவுப் படிவம் (மாணவர்கள் பெயர் தந்தை பெயர் விலாசம் அடங்கிய குறிப்புகள்
 • நுழைவு மற்றும் மாதாந்திரக் கட்டணங்கள்
 • சீருடை.(மாணவர்களுக்கு ஜிப்பா பைஜாமா மாணவிகளுக்கு மக்கண்ணா)
 • குறைந்தது 1 மணிநேரப் பாடம்
 • 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர்

  மேலதிக விபரம்

   08 செப்டம்பர், 2011

   END OF IBNU THAIMIYYA

   uvais-ulama.blogspot.com: END OF IBNU THAIMIYYA: Allah made ibnu thaimiyya lapse into heresy and perdition. He made him blind and deaf . Many scholars informed that his deeds corrupt and h...