31 ஜூலை, 2011

மனிதன்-மரம்அறுபது வருடம் வாழும் மனிதன்
அழுதுகொண்டே பிறக்கிறான்
ஆனால்
சில மணிநேரம் வாழும் பூக்கள்
சிரித்துக்கொண்டே பூக்கின்றன

மனிதன் செத்தால்
வீட்டிலிருந்து காட்டுக்குப் போகிறான்


மரம் செத்தால்
காட்டிலிருந்து வீட்டுக்கு வருகிறதுவிறகுவிற்ற பணம்
மனிதன் செத்தால் பிணம்
 மரம் செத்தால் பணம்