ஜும்ஆ பயான்

வாரந்தோறும் வெள்ளிமேடைக்காக அள்ளித் தரமுடியாவிட்டாலும் கிள்ளித் தந்துள்ளேன்

ISLAMIC BABY NAMES

மழலைகளுக்கான மனங்கவர்ந்த பெயர்கள் பொருளுடன்

MOULANA ALHAJ S S AHAMED BAQAVI

'மஸ்ஜித் இந்தியா'(கோலாலம்பூர், மலேசியா) தலைமை இமாம் அவர்களின் சிந்தை அள்ளும் சீரிய உரைகள்

மனதைக் கவரும் மழலையர் நிகழ்ச்சிகள்

சூடான விவாதங்கள், சுவையான உரைகள்,பட்டிமன்றம்,பல்சுவைப் போட்டிகள்

உலமாக்களின் உயரிய வலைதளங்கள்

வலைப் பதிவுகளில் வலம் வரும் அருமையான ஆலிம்களின் ஆணித்தரமான பதிவுகள்

01 மார்ச், 2014

அற்புதத் திருமறை அல்குர்ஆன் (வீடியோ)

மவ்லானா அல்ஹாஜ் எஸ்.எஸ்.அஹ்மது பாகவி ஹழ்ரத் கிப்லா
(தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா.)
அவர்களின் ஜும்ஆ உரை (28-02-2014) வீடியோ


22 பிப்ரவரி, 2014

கண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே

 قدم محمد عليه الصلاة والسلامகண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே
 திங்கள் இரசூலே உங்கள் அன்பை மனம் நாடுதே
கண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே

மக்க நகர் மண்ணாய்ப் பிறந்தேனா நானும் 
மஹ்மூதர் பாதம் தொடர்ந்தேனா நானும்-2
 என்றுலகில் காண்பேன் எங்கள் நபி நாதர்
 இனிதான தோற்றம் கண்டாலே ஏற்றம்-2

                                                                 (கண்கள் இரண்டும்)

மதினாவிலே ஓர் மரமாகினேனா
 மாநபிக்குத் தென்றல் காற்றும் தந்தேனா-2
அவர் கையில் ஏந்தும் வாளாகினேனா
 அன்னல் நபி அன்புக்கு ஆளாகினேனா-2

                                                                (கண்கள் இரண்டும்)

கஃபாவிலே ஓர் கல்லாகினேனா
 காப்பவனின் வீட்டில் உள்ளாகினேனா-2
 கடும்பசி தாங்கி கருணை நபி வயிற்றில் 
கட்டிய கல்லில் இடமாகினேனா-2

                                                          (கண்கள் இரண்டும்)

ஒட்டகமாய் உலகில் பிறந்தேனா நானும்
 உத்தம நபியை சுமந்தேனா நானும்
 பேரித்தங்கனியாய் கனிந்தேனா நானும்
பெருமானின் உமிழ் நீரில் கலந்தேனும் நானும்

                                                     (கண்கள் இரண்டும்)Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks